பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு (EWS) 10 சதவீத இட ஒதுக்கீட்டை அறிமுகப்படுத்தும் 103வது அரசியலமைப்புத் திருத்தத்தை ஆதரிக்கும் வகையில் உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை (நவ.7) தீர்ப்பளித்தது.
இது, பொருளாதார அளவுகோல்களின் அடிப்படையில் மட்டுமே இடஒதுக்கீடு கோரப்பட முடியாது என்ற கடந்தகால தீர்ப்புகளுக்கு எதிராக உள்ளது.
இந்த இடஒதுக்கீடு பிரிவுகள் 15(4) மற்றும்/அல்லது 15(5) மற்றும்/அல்லது 16-ன் கீழ் உள்ளடக்கப்பட்ட வகுப்பு அல்லது வகுப்புகளுக்கு மட்டுமே பொருந்தும்.
எனினும், பொருளாதார நிலைமைகளால் பின்தங்கிய பிற பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்குவதற்கு இந்த நீதிமன்றம் தடை விதிக்கவில்லை எனவும் என்று நீதிபதி தினேஷ் மகேஸ்வரி கூறினார்.
103வது திருத்தமானது, பிரதிநிதித்துவத்தின் போதாமை மற்றும் "பின்தங்கிய நிலையைக் காட்ட வேண்டிய அவசியம்" ஆகியவற்றிலிருந்து வர்க்க அடிப்படையிலான இடஒதுக்கீட்டின் அவசியத்தை விலக்கி, தனிநபர்களின் வருமான அளவுகோல்களின் அடிப்படையில் 10 சதவீத ஒதுக்கீட்டை அனுமதிப்பதன் மூலம் பொருளாதாரத்துடன் தொடர்புடைய இடஒதுக்கீட்டிற்குப் பாதுகாப்பை வழங்கியுள்ளது.
இந்தத் சட்டத்திருத்தத்திற்கு எதிராக வாதிடும் வழக்கறிஞர் உச்ச நீதிமன்றத்தில், புதிதாக பாதுகாக்கப்பட்டுள்ள வகுப்பினர் (10 சதவீத EWSக்கு கீழ்) இடஒதுக்கீட்டிற்குத் தகுதி பெறுவதற்கு, போதுமான பிரதிநிதித்துவம் இல்லை.
மேலும், இதுபோன்ற இடஒதுக்கீடுகளுக்கு முடிவே இருக்காது, ஏனென்றால் மற்றவர்களை விட ஏழை மக்கள் எப்போதும் இருப்பார்கள் என்றார்.
இந்த நிலையில், திருத்தத்திற்கு எதிராக வாதிட்ட மூத்த வழக்கறிஞர் சஞ்சய் பரிக், 'பிற்படுத்தப்பட்டவர்கள்' என்பது 'வகுப்பு மக்களுக்கு' முன் இருக்க வேண்டும் என்பதைக் காட்ட, அரசியலமைப்புச் சபை விவாதங்களையும் மேற்கோள் காட்டினார்.
பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் அரசு அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றும், வரலாற்று அநீதி, களங்கம் மற்றும் பாகுபாடு காரணமாக பிரதான நீரோட்டத்தில் இருந்து ஒதுக்கப்பட்ட சமூக மற்றும் கல்வியில் பின்தங்கிய குழுக்களுக்கு மட்டுமே உறுதியான நடவடிக்கையின் பலன்களை வழங்க வேண்டும் என்றும் சட்ட வல்லுநர்கள் நினைத்தார்கள் என்றார்.
இந்த வழக்கில் தலைமை நீதிபதி யூயூ லலித் மற்றும் நீதிபதி ரவீந்திர பட் ஆகியோர் உறுதியான ஒத்த கருத்துகளை தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில், புதிய அளவுகோல்களுக்கான அடையாளங்காட்டி தனிநபர்கள் எதிர்கொள்ளும் பற்றாக்குறையை அடிப்படையாகக் கொண்டது. எனவே, தனிநபர் எந்த சமூகத்தைச் சேர்ந்தவர் என்பது பொருத்தமற்றது.
மேலும், புதிய 10 சதவீத இடஒதுக்கீட்டின்படி ஒருவர் எந்தச் சமூகம் அல்லது வகுப்பைச் சேர்ந்தவராக இருக்கலாம். அரசு அவர் அல்லது அவளது பின்னணியைக் கவனிக்காது என்பதே ஆகும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.