Response to SARS CoV 2 after exposure to other coronaviruses Tamil News : கோவிட் -19-ஐ ஏற்படுத்தும் SARS-CoV-2-ஐத் தவிர, மக்கள் எதிர்கொள்ளும் பிற கொரோனா வைரஸ்களும் உள்ளன. அவற்றில் சில ஜலதோஷம் போன்ற குறைந்த கடுமையான நோய்களை ஏற்படுத்துகின்றன.
நேச்சர் கம்யூனிகேஷன்ஸில் வெளியிடப்பட்ட ஒரு புதிய ஆய்வில், நோயெதிர்ப்பு அமைப்பின் முந்தைய ஜலதோஷம் ஏற்படுத்தும் கொரோனா வைரஸ்கள், கோவிட் -19-க்கு நோய் எதிர்ப்பு சக்தியை எவ்வாறு பாதிக்கின்றன என்பதை விஞ்ஞானிகள் ஆராய்ந்தனர். கோவிட் -19 நோய்த்தொற்றின் போது, தூண்டப்பட்ட ஒரு க்ராஸ் - ரெஸ்பான்ஸ் கொரோனா வைரஸ் ஆன்டிபாடியை அவர்கள் கண்டுபிடித்தனர். பிந்தைய சோதனைகளில், ஆன்டிபாடி SARS-ஐ ஏற்படுத்தும் கொரோனா வைரஸான SARS-CoV-1-ஐ அது நடுநிலையாக்கியதைக் கண்டறிந்தனர்.
இந்த வகை க்ராஸ் - ரெஸ்பான்ஸ் ஆன்டிபாடி, நினைவக பி உயிரணுவில் தயாரிக்கப்படலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் தீர்மானித்தனர். இது, ஆரம்பத்தில் ஜலதோஷத்தை ஏற்படுத்தும் ஒரு கொரோனா வைரஸுக்கு வெளிப்படும். பின்னர், கோவிட் -19 நோய்த்தொற்றின் போது நினைவு கூரப்படுகிறது. மெமரி பி செல்கள் ஆரம்ப நோய் அச்சுறுத்தல்களை "நினைவில் கொள்கின்றன" மற்றும் அவை ரத்த ஓட்டத்தில் பரவக்கூடும். அச்சுறுத்தல் ஏதேனும் மீண்டும் தோன்றினால் அவை மீண்டும் செயல்பாட்டுக்கு அழைக்கத் தயாராக இருக்கும். இந்த உயிரணுக்கள்தான் ஆன்டிபாடிகளை உருவாக்குவதற்குக் காரணமாகின்றன.
இந்த கண்டுபிடிப்பு ஒரு பான்-கொரோனா வைரஸ் தடுப்பூசியின் வளர்ச்சியில் ஒரு முக்கியமான படியாக இருக்கலாம். இது, எதிர்காலத்தில் வெளிப்படும் கொரோனா வைரஸ்களிலிருந்து பாதுகாக்க முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் பரிந்துரைத்தனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil