உணவகங்கள் திறப்பு: கொரோனா முன் எச்சரிக்கை அம்சங்கள் எவை?

சில உணவகங்கள் சுகாதார நடைமுறைகளைப் பற்றி வாடிக்கையாளர்களுக்கு உறுதியளிப்பதற்காக தங்கள் சமையலறைகளை லைவ் ஸ்ட்ரீம் செய்ய திட்டமிட்டுள்ளன.

By: Updated: June 6, 2020, 09:05:27 PM

ஜூன் 8ம் தேதியில் இருந்து இயங்க இருக்கும் அலுவலகம், வழிபாட்டு இடங்கள், உணவகங்கள், வணிக வளாகங்கள், உணவு விடுதிகள் உள்ள இடங்களில் கொரோனா பரவுவதைக் கட்டுப்படுத்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கான நிலையான செயல்பாட்டு நடைமுறைகளை சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் சில நாட்களுக்கு முன்  வெளியிட்டது.

பொதுவாக, இந்தியாவிலும்/உலகளவிலும் மேற்கொண்ட   முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன?

முகக்கவசங்கள், கிருமிநாசினிகள், வெப்ப பரிசோதனைக் கருவிகள்: உலகம் முழுவதும், பெரும்பாலான உணவகங்களில் பணியாளர்களுக்கு முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது . பல  உணவகங்கள் நுழைவாயில் மற்றும் இருக்கைகளில் கை சுத்திகரிப்பான் மற்றும் வெப்ப பரிசோதனைக் கருவிகளை  நிறுவியுள்ளன. மேலும், சில உணவகங்கள் தங்கள்  ஊழியர்களின் தினசரி வெப்பநிலையை பரிசோதித்து வருகின்றது. மார்ச் மாதத்தில் உணவகங்கள் மீண்டும் திறக்கப்பட்ட சீனாவில், ஒரு ஷாங்காய் உணவகம் அதன் நுழைவாயிலில் ஒரு முழு உடல் கிருமிநாசினி நிலையத்தை நிறுவியது.

உடல் ரீதியான தூரம்: உலகின் பல உணவகங்கள்  தங்களின் இடங்களை மறுவடிவமைத்து,இருக்கையை 50 முதல் 30 சதவீதம் வரை குறைத்துள்ளன. இந்திய அரசு உணவகங்களில் 50 சதவீத வரம்பை நிர்ணயித்துள்ளது.

மேனெக்வின்ஸ், பொம்மைகள்: வர்ஜீனியாவில் ‘தி இன்’ எனும்  மிச்செலின் மூன்று நட்சத்திர அந்தஸ்து உணவகத்தில், சில இருக்கைகளில் ஆங்காங்கே மேனெக்வின்ஸ் பொம்மைகள் உட்கார வைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம்  வாடிக்கையாளர்கள் போதுமான இடைவெளியோடு உட்காந்திருப்பதை உறுதி செய்வதோடு, உணவகம் முழுமையான எண்ணிக்கையில் இயங்குவது போன்ற பின்பத்தையும்  உருவாக்குகிறது.

நன்றி forbes நாளிதழ் நன்றி forbes நாளிதழ்

 

ரோபோ ஊழியர்கள்: ஊழியர்களைக் குறைக்க, நெதர்லாந்தின் ஆர்ன்ஹென் நகரில் செயல்படும் மெக்டொனால்டு விற்பனை நிலையம் தானியங்கி சக்கர வண்டிகளைப் பயன்படுத்துகிறது. இத்தகைய, பரிசோதனை வெற்றியடைந்தால், உலகம் முழுவதிலும் உள்ள 180 விற்பனை நிலையங்களில் இந்த முயற்சி  நடைமுறைப்படுத்தப்படும்  என்று அந்த நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.

முன்னதாக, 2016 ஆம் ஆண்டு சீனாவில் செயல்படும் சில உணவகங்கள் முதன் முறையாக  சமைக்கும் ரோபோக்கள் உணவு பரிமாறும் ரோபோக்கள் ஆகியவற்றை பயன்படுத்தின. பெரும்பாலானா ரோபோக்கள் மனிதர்களைப் போல திறமையாக இல்லாத காரணத்தால் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.  தற்போதைய பெருந்தொற்று காலத்தில் , சில உணவகங்கள் ரோபோக் கருவிகளை ஒரு வாய்ப்பாக கருதுகின்றன. உதாரணமாக, நெதர்லாந்த் நாட்டின் ரெனெஸ் பகுதியில் அமைந்திருக்கும் தி ராயல் பேலஸில், வாடிக்கையாளர்களை வாழ்த்துவதற்கும் சேவை செய்வதற்கும் ரோபோக் கருவியை அறிமுகப்படுத்தியுள்ளது.

குறைந்தபட்ச மேற்பரப்பு தொடர்பு: இருக்கைகள்  மற்றும் கண்ணாடிப் பொருட்களை (இந்தியாவின்  நிலையான செயல்பாட்டு நடைமுறைகளில் கூறப்பட்டுள்ளது) தவறாமல் சுத்தப்படுத்துவதைத் தவிர, உலகளவில் உணவகங்கள்  வாடிக்கையாளர்கள் மற்றும் பணியாளர்கள் தொடர்பு கொள்ளும் மேற்பரப்பு பொருட்களின் எண்ணிக்கையைக் குறைக்க முயற்சிக்கின்றன. ஒற்றைப்பயன்பாடு  மெனுக்களைப் பயன்படுத்த இந்திய அரசு அறிவுறுத்தியுள்ள நிலையில், உலகெங்கிலும் உள்ள பல உணவகங்கள் மொபைல் போன்களின் வழியாக  டிஜிட்டல் மெனுக்களை  வழங்கி வருகின்றன.

இந்திய உணவகங்கள் : 
இந்தியாவில் பல உணவகங்கள் பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கத் தொடங்கியுள்ளன. இந்தியாவில் மெக்டொனால்டு நிறுவனத்தை நிர்வகிக்கும் வெஸ்ட் லைஃப் டெவலப்மென்ட்   கை சுத்திகரிப்பான், முகக்கவசம், வெப்பநிலை பரிசோதனை, நியமிக்கப்பட்ட தொலைதூர அடையாளங்கள் போன்ற 42 முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் கொண்ட சரிபார்ப்பு பட்டியலைக் தயாரித்துள்ளது.

சில உணவகங்கள் சுகாதார நடைமுறைகளைப் பற்றி வாடிக்கையாளர்களுக்கு உறுதியளிப்பதற்காக தங்கள் சமையலறைகளை லைவ் ஸ்ட்ரீம் செய்ய திட்டமிட்டுள்ளன. எடுத்துக்காட்டாக, தேசிய தலைநகரை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் இன்ஸ்டாப்பிசா (instapizza) நிறுவனம்  இந்த நடவடிக்கையை ஒரு மாதத்திற்கு முன்பு செயல்படுத்தியது. மற்ற உணவகங்கள் தங்கள் மெனுக்களை டிஜிட்டலாக்கி  வருகின்றனர்.

அனைத்து உணவகங்களும் மீண்டும் திறக்க விரும்பினால் நான்கு அடிப்படை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்  என்று இந்திய பொது சுகாதார அறக்கட்டளையின் நாள்பட்ட நோய்க் கட்டுபாட்டு மையத்தின் துணைத் தலைவரும் பேராசிரியருமான டி.பிரபாகரன் தெரிவித்தார். “முதலாவதாக சமூக விலகல் நெறிமுறை. இது இருக்கைக்குள்ளான    இடைவெளியை நிர்வகிப்பதன்  மூலமாகவும் (அ) குறைவான வாடிக்கையாளர்களை அனுமதிப்பதன் மூலமாகவும் உறுதிப்படுத்த முடியும். இரண்டாவது முகக்கவசத்தை கட்டாயமாக்குவது (வாடிக்கையாளர்கள் சாப்பிடும்போது தவிர). மூன்றாவதாக  வெப்பத் திரையிடல்; அறிகுறி இல்லாதவர்கள் மூலம் கொரோனா தொற்று பரவுதல் உண்மை என்றாலும், காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகளைக் கொண்டவர்களால் பெரும்பான்மையான நோய்த்தொற்றுகள் பரவுகின்றன. எனவே,அந்த வகையில், வெப்பத் திரையிடல் பயனுள்ளதாக இருக்கும். இறுதியாக, ஊழியர்களும், வாடிக்கையாளர்களும் அடிக்கடி சோப்புத் தண்ணீரில் கை கழுவுதலை உறுதி செய்தல்”என்று தெரிவித்தார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Explained News by following us on Twitter and Facebook

Web Title:Restaurants reopening in india and world mannequins dolls kitchens livestream

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X