scorecardresearch

ரிஷி சுனக் பற்றி அதிகம் அறியப்படாத 5 சுவாரஸ்யமான விஷயங்கள்

மன்னர் சார்லஸை விட ரிஷி சுனக் பணக்காரர்; கோகோ கோலா பிரியர்; ரிஷி சுனக் பற்றி அதிகம் அறியப்படாத 5 சுவாரஸ்யமான விஷயங்கள்

ரிஷி சுனக் பற்றி அதிகம் அறியப்படாத 5 சுவாரஸ்யமான விஷயங்கள்

இங்கிலாந்து பிரதமராகி உள்ள ரிஷி சுனக் “நம்மில் ஒருவர்” என்று நினைத்து பல இந்தியர்கள் உற்சாகமடைந்துள்ளனர். இணையம் வேடிக்கையான மீம்ஸ்களால் நிரம்பி வழிகிறது. அவை, 10 டவுனிங் ஸ்ட்ரீட்டிற்கு வெளியே பார்வையாளர்கள் விட்டுச் சென்ற காலணிகளைக் காட்டுகிறது (பல இந்தியர்கள் காலணிகள் அணிந்து வீடுகளுக்குள் நுழைவதில்லை); கதவில் ஒரு ஸ்வஸ்திகா (பண்டைய இந்து சுப அடையாளம், நாஜி கேலிச்சித்திரம் அல்ல); மற்றும் புதிய பிரதமரின் தோற்றம் முன்னாள் இந்திய இடது கை வேகப்பந்து வீச்சாளரான ஆஷிஷ் நெஹ்ராவை ஒத்துள்ளது.

இங்கிலாந்தின் 57வது பிரதமரைப் பற்றி நீங்கள் அறியாத அல்லது அதிகம் தெரியாத ஐந்து விஷயங்கள் இங்கே உள்ளன.

இதையும் படியுங்கள்: இங்கிலாந்து பிரதமராகும் ரிஷி சுனக்.. காத்திருக்கும் பொருளாதார, அரசியல் சவால்கள்

1.பிரதமர் ரிஷி சுனக் உண்மையில் ‘இந்தியர்’ அல்ல.

ரிஷி சுனக் தன்னை “இந்திய வேர்களை” உடையவன் என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால் நினைவில் கொள்ளுங்கள், அது சுதந்திரத்திற்கு முந்தையது, பிரிக்கப்படாத இந்தியா, இன்றைய இந்தியா அல்ல. அவர் 1980 இல் இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டனில் பிறந்தார், மேலும் தனியார் உறைவிடப் பள்ளியான வின்செஸ்டர் கல்லூரி மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்றார்.

இருப்பினும், இந்து மதத்தை பின்பற்றும் பிரிட்டனின் முதல் பிரதமர் ரிஷி சுனக் ஆவார். (பிரசாரத்தின் போது அவர் பசு-பூஜை செய்து வந்தார்.) பிரதமராகும் முதல் வெள்ளையர் இல்லாத நபராகவும் ரிஷி சுனக் இருப்பார்.

ரிஷி சுனக்கின் குடும்பம் பஞ்சாபி காத்ரி, இன்றைய பாகிஸ்தானில் உள்ள லாகூரின் வடக்கே உள்ள குஜ்ரன்வாலாவில் வேரூன்றி இருந்தது. குடும்பத்தின் வரலாற்றை அறிந்த நிபுணர்களின் கூற்றுப்படி, ரிஷி சுனக்கின் தாத்தா ராம்தாஸ் சுனக் 1935 இல் கென்யாவின் நைரோபிக்கு குடிபெயர்ந்தார், அங்கு அவர் ஒரு எழுத்தராக வேலைக்குச் சேர்ந்தார். ராம்தாஸின் மனைவி, அதாவது சுனக்கின் பாட்டி, குஜ்ரன்வாலாவைச் சேர்ந்தவர், அவர் 1937 இல் கென்யாவுக்குச் சென்றார்.

ராம்தாஸ் மற்றும் சுஹாக் ராணி சுனக் ஆகியோருக்கு ஆறு குழந்தைகள் இருந்தனர். அவர்களில் ஒருவரான ரிஷி சுனக்கின் தந்தை, யஷ்வீர், 1949 இல் நைரோபியில் பிறந்தார்.

யஷ்வீர் சுனக் 1966 இல் இளவயதில் லிவர்பூலுக்கு குடிபெயர்ந்தார். அவர் ரகுபீர் பெர்ரியின் மகள் உஷா பெர்ரியை மணந்தார், ரகுபீர் பெர்ரி பின்னர் தங்கன்யிகாவிற்கு (இன்றைய தான்சானியா) சென்றுவிட்டார். ரிஷி சுனக் 1980 இல் யஷ்வீர் மற்றும் உஷா சுனக் ஆகிய இரு மருந்தாளர்களுக்கும் பிறந்தார்.

2. 200 க்கும் மேலான ஆண்டுகளுக்குப் பின் பிரிட்டனின் இளம் பிரதமராக ரிஷி சுனக் இருப்பார்.

ரிஷி சுனக்-க்கு வயது 42. ரிஷி சுனக்கை விட குறைந்த வயதில் பிரதமரான ஒரே ஒருவர் வில்லியம் பிட் தி யங்கர் ஆவார். வில்லியம் பிட் பிரதமரானபோது அவருக்கு வயது 24, அவர் 1783 ஆம் ஆண்டில் 24 வயதில் கிரேட் பிரிட்டனின் கடைசி பிரதமரானார் மற்றும் 1801 வரை ஆட்சியில் இருந்தார், பின்னர் 1804 இல் கிரேட் பிரிட்டன் மற்றும் அயர்லாந்து அடங்கிய ஐக்கிய இராச்சியத்தின் முதல் பிரதமர் ஆனார்.

3. ரிஷி சுனக் ஆட்சிக்கு வந்தது நவீன காலத்தில் மிக வேகமாக இருந்தது.

ரிஷி சுனக் முதன்முதலில் மே 2015 இல் (ரிச்மண்ட், யார்க்ஸின்) எம்.பி ஆனார், தற்போது அக்டோபர் 2022 இல் பிரதமர் ஆகியுள்ளார். இது ஏழு ஆண்டுகளுக்கு சற்று அதிகமான காலகட்டத்தில் நடந்த வளர்ச்சியாகும். இந்தப் பயணத்தில், ரிஷி சுனக் கருவூலத்தின் முதன்மைச் செயலாளராகவும், பிரதமர் போரிஸ் ஜான்சனின் கீழ் கருவூலத்தின் அதிபராகவும் இருந்துள்ளார்.

டேவிட் கேமரூன் ஒன்பது ஆண்டுகளில் எம்.பி-யில் இருந்து பிரதமராகப் பதவியேற்றார். 2001 ஆம் ஆண்டு பாராளுமன்றத்தில் நுழைந்த டேவிட் கேமரூன் மே 2010 இல் பிரதமர் ஆகி 10 வது இடத்தைப் பிடித்தார். இருப்பினும் பிட் தி யங்கர் இரண்டே ஆண்டுகளில் பிரதமர் ஆனார்.

4. ரிஷி சுனக் (அவரது மனைவியின் சொத்துக்களைச் சேர்த்து) கிங் சார்லஸ் III ஐ விட (மனைவி ராணியின் சொத்துக்களைச் சேர்த்து) பணக்காரர்.

பிரதம மந்திரி சுனக் மற்றும் அவரது மனைவி அக்ஷதா மூர்த்தி ஆகியோரின் மொத்த சொத்து மதிப்பு 730 மில்லியன் பவுண்டுகள் என மதிப்பிடப்பட்டுள்ளது, இது மன்னர் சார்லஸ் III மற்றும் அவரது மனைவி ராணி கமிலா ஆகியோரின் மதிப்பிடப்பட்ட செல்வத்தை விட (£300 மில்லியன்-350 மில்லியன்) இருமடங்காகும்.

ரிஷி சுனக் மற்றும் அக்‌ஷதா மூர்த்தி உலகின் பல்வேறு இடங்களில் உள்ள நான்கு சொத்துக்களுக்கு சொந்தமானவர்கள், அவை £15 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ளதாக தி கார்டியன் அறிக்கை தெரிவித்துள்ளது. Infosys இல் அக்‌ஷதா மூர்த்தியின் 0.91% பங்குகள் (அவர் NR நாராயண மூர்த்தியின் மகள்) சுமார் £700 மில்லியன் மதிப்புடையதாகக் கருதப்படுகிறது.

5. பிரதமர் ரிஷி சுனக் ஒரு கோகோ கோலா பிரியர் (அடிமை)

ரிஷி சுனக் மார்ச் 2021 இல் இரண்டு பள்ளி மாணவர்களிடம் “கோகோ-கோலா பொருட்களை சேகரிப்பதாக” கூறினார், மேலும் அவர் “ஒரு கோக் அடிமை,…மொத்தமாக கோக் அடிமை”. குழந்தைகள் சிரிக்கும்போது, ​​​​”கோகோ கோலா அடிமை, பதிவுக்காகவே” என்று தெளிவுபடுத்த விரைந்தார். அவர் தனக்குப் பிடித்தமானது “மெக்சிகன் கோக்” என்று கூறினார், மேலும் ஒரு பார்வையாளர் அதை “அலுவலகத்திற்கு வெளியே ஒரு காட்சி” என்று விவரித்தார் என தி கார்டியன் செய்தி வெளியிட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Explained news download Indian Express Tamil App.

Web Title: Rishi sunak five things you did not know

Best of Express