பெண்களுக்கு எதிரான குற்றப்பின்னணி கொண்ட எம்பிக்கள் /எம்எல்ஏக்கள் அதிகம் கொண்ட கட்சிகளின் பட்டியலில், பாரதிய ஜனதா 21 பேருடன் முதலிடத்தில் உள்ளது. அதனைத்தொடர்ந்து காங்கிரஸ் (16), ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் (7), பிஜூ ஜனதா தள் (6) மற்றும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி (5) அடுத்தடுத்த இடங்களில் உள்ளது.
பெண்களுக்கு எதிரான குற்றப்பின்னணி கொண்ட எம்பிக்கள் / எம்எல்ஏக்கள் அதிகம் கொண்ட கட்சிகளின் பட்டியலை ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் மற்றும் தேசிய தேர்தல் கண்காணிப்பு அமைப்பும் இணைந்து தயாரித்துள்ளது. அதன் முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.
மக்களவையில் குடியுரிமை சட்டதிருத்த மசோதா நிறைவேற்றம்
அதன்படி, 2009 முதல் 2019 வரையிலான காலகட்டத்தில், மக்களவை தேர்தலில் போட்டியிடும் குற்றப்பின்னணி கொண்ட வேட்பாளர்களின் எண்ணிக்கை 231 சதவீதம் அதிகரித்துள்ளது. குற்றப்பின்னணி கொண்ட எம்பிக்களின் எண்ணிக்கத 9 மடங்கு அதிகரித்துள்ளது.
ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் கணக்கில் எடுத்துக்கொண்ட 4,896 பேரில் (776 எம்பிக்கள் மற்றும் 4120 எம்எல்ஏக்கள்) 4,822 பேர் ( 759 எம்பிக்கள் மற்றும் 4063 எம்எல்ஏக்கள்) தங்களது தேர்தல் பிரமாணப்பத்திரத்திலேயே குற்றப்பின்னணி கொண்டவர்கள் என்று குறிப்பிட்டுள்ளனர். இவர்களில் 76 (18 எம்பி/58 எம்எல்ஏக்களுக்கு) குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது.
கடந்த 5 ஆண்டுகளில் நடைபெற்ற சட்டசபை, மக்களவை மற்றும் மாநிலங்களவை தேர்தலில் 572 பேர் குற்றப்பின்னணி உள்ளது. ஆனால் யார் மீதும் குற்றம் நிரூபிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களில் 410 பேர் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள் எஞ்சிய 162 பேர் சுயேட்சை வேட்பாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பெண்களுக்கு எதிரான குற்றப்பின்னணி கொண்ட எம்பிக்கள் /எம்எல்ஏக்கள் அதிகம் கொண்ட கட்சிகளின் பட்டியலில், பாரதிய ஜனதா 21 பேருடன் முதலிடத்தில் உள்ளது. அதனைத்தொடர்ந்து காங்கிரஸ் (16), ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் (7), பிஜூ ஜனதா தள் (6) மற்றும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி (5) அடுத்தடுத்த இடங்களில் உள்ளது.
குற்றப்பின்னணி கொண்ட வேட்பாளர்களை தேர்தலில் நிறுத்திய கட்சிகளின் பட்டியலில் பாரதிய ஜனதா (66), காங்கிரஸ் (46), பகுஜன் சமாஜ் கட்சி (40), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (15), சிவசேனா (13) உள்ளது.
பெண்களுக்கு எதிரான குற்றப்பின்னணி கொண்ட எம்பிக்கள் / எம்எல்ஏக்கள் அதிகம் உள்ள மாநிலங்களின் பட்டியலில் மேற்குவங்கம் (16) முதலிடத்தில் உள்ளது. அடுத்தடுத்த இடங்களில் ஒடிசா மற்றும் மகாராஷ்டிரா (12), ஆந்திரபிரதேசம் (8), தெலுங்கானா (5) மற்றும் மத்தியபிரதேசம் (3) உள்ளன.
கடந்த 5 ஆண்டுகளில், குற்றப்பின்னணி கொண்ட வேட்பாளர்கள் அதிகம் களம் கண்ட மாநிலங்களின் பட்டியலில் மகாராஷ்டிரா (84), பீகார் (75), மேற்குவங்கம் (69), உத்தரபிரதேசம் (61), ஒடிசா (52), ஆந்திர பிரதேசம் (33) மற்றும் கர்நாடகா (26) உள்ளது.
ஆசிட் வீச்சு (IPC Sections 326A & 326B) பாலியல் பலாத்காரம் (Sections 375, 376, 376A, 376B, 376C, 376D & 376E) பெண்களை அடிமையாக நடத்துதல் (Section 354), பாலியல் துன்புறுத்தல் (Section 354A), பெண்கள் மீதான தாக்குதல் (Section 354B) பாலியல் தொடர்பான குற்றங்கள் (Section 354C) உள்ளிட்டவைகளை பெண்களுக்கு எதிரான குற்றங்களாக ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் (Association for Democratic Reforms (ADR)) வரையறுத்துள்ளது.
கடந்த 5 ஆண்டுகளில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் சார்பில் பாலியல் பலாத்கார வழக்கு பின்னணி கொண்ட 41 பேர் வேட்பாளர்களாக தேர்தலில் நிற்கப்பட்டுள்ளனர். இவர்களில் 9 பேர் (3 எம்பிக்கள் ; 6 எம்எல்ஏக்கள்) வெற்றி பெற்றுள்ளனர். 14 சுயேட்சை வேட்பாளர்கள் மீ்தும் பாலியல் பலாத்கார வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.