Advertisment

நாய்கள் இருக்கும் வீட்டில் மருத்துவ செலவு குறைவு : அமெரிக்கன் ஹார்ட் அசோசியேசன் வெளியிட்ட அறிக்கை

மற்ற மனிதர்களைக் காட்டிலும் 24% மரண வாய்ப்புகள் குறைவானவர்களாகவே இருக்கிறார்கள் நாய்களை வளர்ப்பவர்கள். 

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
risk of death following hospitalization lower for dog owners, american heart association

risk of death following hospitalization lower for dog owners

risk of death following hospitalization lower for dog owners : அமெரிக்கன் ஹார்ட் அசோசியேசன் என்ற பத்திரிக்கை ஒரு சூப்பரான ஆராய்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. ஒரு மனிதர் தன்னுடன் நாய் ஒன்றை வளர்த்து வந்தால் அவர் நீண்ட நாள் உயிர் வாழ்வாறாம். மேலும் மாரடைப்பு மற்றும் பக்கவாதத்தால் ஒரு வேளை அவர் பாதிக்கப்பட்டிருந்தாலும் அவர் விரைந்து குணமடையும் வாய்ப்புகள் நாய்களினால் அதிகம் என்று கூறப்பட்டுள்ளது.

Advertisment

ஸ்வீடன் நாட்டு தேசிய ஹெல்த் டேட்டாவில் இருந்து பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையில் 1.82 லட்சம் மாரடைப்பு வந்த நோயாளிகளில் வெறும் 6% மட்டுமே நாய்களை வைத்திருக்கின்றர். அதே போன்று பக்கவாதத்தால் பாதிக்கபப்ட்ட 1.55 லட்சம் மக்களில் 5% மட்டுமே நாய்களை வைத்திருக்கிறார்கள். மிகவும் மோசமான உடல் பிரச்சனைகளால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நோயாளிகளாக நாய்கள் வைத்திருப்பவர்கள் பெரும்பாலும் இருப்பதில்லை. காரணம் அவர்கள் தனிமையை உணர்வதில்லை அதே போன்று நாயை கவனிக்க அவர்கள் அதிக அளவில் உடல் உழைப்பை தர வேண்டியது உள்ளது.

மாரடைப்பு

மாரடைப்பால் மருத்துவமனையில் இருந்துவிட்டு வீடு திரும்பி தனியாக வாழும் மனிதர்களைக் காட்டிலும் நாய்களுடன் தங்களின் நேரத்தை செலவிடும் நோயாளிகள் 33% மரணத்தில் இருந்து தப்புகிறார்கள். அதே போன்று குடும்ப உறுப்பினர்களைக் காட்டிலும் 15% மரணிப்பதற்கான வாய்ப்புகள் நாய்களுடன் இருப்பவர்களுக்கு குறைவாகவே உள்ளது.

பக்கவாதம்

பக்கவாத சிகிச்சை முடிந்து வீட்டிற்கு திரும்பி தனியாக வாழும் மனிதர்களைக் காட்டிலும் 27% மரண வாய்ப்புகள் நாய்களுடன் வாழும் மனிதர்களுக்கு குறைவாகவே உள்ளது. அதே போன்று குடும்ப உறுப்பினர்களுடன் வாழ்பவர்களைக் காட்டிலும் 12% மரண வாய்ப்புகள் நாய்களுடன் வாழும் மனிதர்களுக்கு குறைவாக உள்ளது.

1950 முதல் 2019ம் ஆண்டு வரை 10க்கும் மேற்பட்ட ஆராய்ச்சியின் முடிவுகளை வைத்து இந்த முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆராய்ச்சிகள் அனைத்தும் ஸ்வீடன் மக்களிடம் மேற்கொள்ளப்பட்டது.  பொதுவாகவே மற்ற மனிதர்களைக் காட்டிலும் 24% மரண வாய்ப்புகள் குறைவானவர்களாகவே இருக்கிறார்கள் நாய்களை செல்லப்பிராணிகளாக வளர்ப்பவர்கள்.

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க

Sweden
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment