Advertisment

மகளிர் ஒதுக்கீடு மசோதாவை எதிர்க்கும் சோசலிஸ்ட் கட்சிகள்; ‘பாப் கட் பெண்கள்’ கருத்தை பயன்படுத்துவது ஏன்?

மகளிர் ஒதுக்கீடு மற்றும் குட்டை முடி பெண்கள் குறித்த சோசலிசக் கட்சிகளின் மதிப்பீடு என்ன? RJD, சமாஜ்வாதி கட்சி மற்றும் JD(U) கட்சிகள் எந்த அடிப்படையில் மசோதாவை எதிர்த்தன, இப்போது ஏன் நிலைப்பாட்டை மாற்றியுள்ளனர்? ஏன் AIMIM இன்னும் எதிர்க்கிறது?

author-image
WebDesk
New Update
sharad and lalu

மறைந்த சரத் யாதவ் ஆர்.ஜே.டி தலைவர் லாலு பிரசாத்துடன். நீண்ட காலமாக சோசலிஸ்ட் கட்சிகள் பெண்கள் இடஒதுக்கீடு மசோதாவை கடுமையாக எதிர்த்து வந்தன. (எக்ஸ்பிரஸ் காப்பக புகைப்படம்)

ராஷ்ட்ரீய ஜனதா தளம் (RJD) மூத்த தலைவரும், பீகார் முன்னாள் அமைச்சருமான அப்துல் பாரி சித்திக், "உதட்டுச்சாயம் (லிப்ஸ்டிக்) மற்றும் தலைமுடியை பாப் கட் செய்த பெண்கள்" மகளிர் இடஒதுக்கீடு மசோதாவின் பலனைப் பெறலாம் என்று கூறி வெள்ளிக்கிழமை சர்ச்சையில் இறங்கினார். பீகாரின் முசாபர்பூரில் ஆர்.ஜே.டி.,யின் ஈ.பி.சி பிரிவால் ஏற்பாடு செய்யப்பட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பேசிய அப்துல் பாரி சித்திக், “பெண்களுக்கான இடஒதுக்கீட்டின் பலன்கள் ஈ.பி.சி மற்றும் ஓ.பி.சி பெண்களுக்குச் சென்றால், அது நன்றாக வேலை செய்யும். இல்லையெனில், லிப்ஸ்டிக் மற்றும் பாப்-கட் முடி கொண்ட பெண்கள் ஒதுக்கீட்டை எடுத்துக்கொள்வார்கள்,” என்று கூறினார்.

Advertisment

ஆங்கிலத்தில் படிக்க: RJD leader says quota will help women with ‘bob cut hair’: Why socialist parties have used ‘parkati mahilayein’ to oppose Bill

அவரது கருத்துகள் பின்னடைவைத் தூண்டிய பிறகு, அப்துல் பாரி சித்திக் மன்னிப்பு கேட்டார், கிராமப்புற பார்வையாளர்களுக்கு தான் சொல்ல வந்ததை விளக்குவதற்கு உதட்டுச்சாயம் மற்றும் முடி குறிப்பைப் பயன்படுத்தியதாக அவர் கூறினார்.

1997 ஆம் ஆண்டு மக்களவையில் இடஒதுக்கீடு தொடர்பாக பேசிய ஜே.டி(யு) தலைவர் சரத் யாதவின் இழிவான கருத்தை அப்துல் பாரி சித்திக்கின் கருத்துக்கள் எதிரொலிக்கிறது. சரத் யாதவ் பெண்கள் யாராக வேண்டுமானாலும் இருக்கலாம், ஆனால் குட்டை முடி கொண்ட பெண்கள் மட்டும் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று கூறினார்.

மகளிர் ஒதுக்கீடு மற்றும் குட்டை முடி கொண்ட பெண்கள் குறித்த சோசலிசக் கட்சிகளின் மதிப்பீடு என்ன? RJD, சமாஜ்வாதி கட்சி மற்றும் JD(U) ஆகிய கட்சிகள் எந்த அடிப்படையில் இந்த மசோதாவை எதிர்த்தன, இப்போது ஏன் அவர்கள் நிலைப்பாட்டை மாற்றியுள்ளனர்? ஏன் AIMIM இன்னும் எதிர்க்கிறது?

'பாப் கட் பெண்கள்’ மற்றும் மகளிர் ஒதுக்கீடு

லோக்சபா மற்றும் மாநில சட்டசபைகளில் பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவதற்கான மசோதா தொடங்கிய காலத்திலிருந்தே, அதை எதிர்ப்பதற்கான மிகக் கடுமையான காரணங்களில் ஒன்று, இடஒதுக்கீடு இடங்கள் உயர்சாதி மற்றும் உயர் வகுப்புப் பெண்களுக்குப் போய்விடும் என்ற அச்சமும், சட்டமன்ற அமைப்புகளில் பின்தங்கிய வகுப்பினரின் பிரதிநிதித்துவத்தைக் குறைத்துவிடும் என்பதாகும்.

ஒதுக்கப்பட்ட இடங்களுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண்களில் பலர் தங்களால் சுயமாக செயல்பட முடியாது என்றும், அவர்களைக் களமிறக்கிய ஆதிக்க வர்க்கங்களின் நிகழ்ச்சி நிரலை மட்டுமே முன்னெடுக்க கூடும் என்றும் விமர்சகர்கள் கூறியுள்ளனர். இதற்கு எதிராக, பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒருவர், நாடாளுமன்றம் அல்லது மாநில சட்டமன்றத்திற்கு வருவதற்கான மக்கள் ஆணையை வென்றால், சமூக நீதிக்கான காரணத்தை முன்னெடுப்பதில் சிறந்தது என்று வாதம் வைக்கப்பட்டது.

பணக்கார பின்னணியில் இருந்து, பிரபலமான குடும்பப் பின்னணிகளைக் கொண்ட பெண்கள், அதிக கல்வி மற்றும் வெளிப்பாட்டின் மூலம் இடஒதுக்கீட்டிலிருந்து பயனடைவார்கள், இதனால் பின்தங்கிய பின்னணியில் உள்ளவர்கள் சட்டமன்ற அமைப்புகளுக்கு வருவதை இன்னும் கடினமாக்கும் என்று விமர்சகர்கள் வாதிட்டனர்.

'பெண்கள்' மற்றும் 'பாப் கட் ஹேர்' கருத்துக்கள் இந்த வேறுபாட்டை வலியுறுத்துவதற்காகவே உள்ளன, இந்த பெண்கள் கிராமப்புற மற்றும் பின்தங்கிய பெண்களிடமிருந்து வெகு தொலைவில் இருப்பார்கள், இதனால் உண்மையில் அவர்களுக்கு நன்மை செய்ய வேலை செய்ய மாட்டார்கள் என்று கூறப்பட்டது.

SP, RJD, JD(U) போன்ற கட்சிகள் கூறியது என்ன?

இந்தக் கட்சிகள் அனைத்தும் ஒரே மாதிரியான கருத்தைத் தெரிவித்துள்ளன. தி இந்தியன் எக்ஸ்பிரஸ் முன்பு கூறியது போல், 2009 இல், "மறைந்த SP தலைவர் முலாயம் சிங் யாதவ், நாடாளுமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம், "[பெண்கள் இடஒதுக்கீடு] மசோதாவை தற்போதைய வடிவத்தில் நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது" என்று கூறினார். மேலும் அழுத்தி பேசிய அவர், “இடஒதுக்கீடு மூலம் சோனியா ஜி நாட்டின் தலைவர் ஆனாரா? இடஒதுக்கீடு காரணமாக மீரா குமார் இன்று மக்களவை சபாநாயகரானாரா?” என்றும் கேள்வி எழுப்பினார்.

பின்னர் 2010 இல், காங்கிரஸ் தலைமையிலான UPA-2 அரசாங்கம் மாநிலங்களவையில் மசோதாவை அறிமுகப்படுத்தியபோது, ​​SP மற்றும் RJD ஆகிய இரண்டும் உறுதியாக எதிர்த்தன. "நாங்கள் அதை பொறுத்துக்கொள்ள மாட்டோம்" என்று பாராளுமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் RJD தலைவர் லாலு பிரசாத் கூறினார், "நாட்டின் ஜனாதிபதி ஒரு பெண், மக்களவை சபாநாயகர் ஒரு பெண், காங்கிரஸ் தலைவர் மற்றும் UPA தலைவரும் ஒரு பெண். அவர்களில் யாரும் பெண்கள் ஒதுக்கீட்டின் மூலம் இங்கு வரவில்லை.” என்று அவர் கூறினார்.

தற்போதைய சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், “இந்த மசோதாவில் ஓ.பி.சி.,யினருக்கான ஏற்பாடு இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புவதால், தற்போதைய வடிவத்தில் மசோதாவை ஆதரிக்க மாட்டோம்என்று கூறியிருந்தார்.

SP, RJD மற்றும் JD(U) ஆகிய கட்சிகளும் தாங்கள் புதிய கட்சிகள் என்றும், அவர்களின் அடித்தளம் ஏழைகள் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் தொகுதிகளுக்கு அப்பால் இன்னும் விரிவடையாததால், ஒதுக்கப்பட்ட இடங்களில் பெண் வேட்பாளர்களை நிறுத்துவது கடினமாக இருக்கும் என்றும் வாதிட்டனர். பெண்களுக்கான இடஒதுக்கீடு அந்த இடங்களில் இந்த பிரிவினரின் உரிமையை பறிக்கும்.

இப்போது ஏன் இந்த நிலைப்பாட்டை மாற்ற வேண்டும்

நிதிஷ் குமாரின் கீழ் இருந்த JD(U) தான் தனது நிலைப்பாட்டை முதலில் மென்மையாக்கிக் கொண்டது, 2010 இல் இந்த மசோதாவை ஆதரிப்பதாக அறிவித்தது, இருப்பினும் ஒதுக்கீட்டிற்குள் உள் ஒதுக்கீடு அதன் "விருப்பமாக" இருந்தது. இம்முறை, பெண் வாக்காளர்களின் முக்கியத்துவம் அதிகரித்துள்ளதால், ஒரு முற்போக்கான சட்டத்தைத் தடுப்பதாகக் கருதப்படாமல் இருக்க, இந்த அனைத்துக் கட்சிகளும் மசோதாவை ஆதரித்தன, ஆனால் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீட்டிற்குள் பின்தங்கிய சமூகங்களைச் சேர்ந்த பெண்களுக்கு உள் ஒதுக்கீட்டைக் கோருகின்றன.

RJD இன் ஷியாம் ரஜக் முன்னதாக இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம், “பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை நாங்கள் ஆதரிக்கிறோம், ஆனால் சில திருத்தங்களுடன். தலித், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மை சமூகங்களைச் சேர்ந்த பெண்களுக்கு இடஒதுக்கீடு (உள் ஒதுக்கீடு) ஒதுக்கப்பட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். இடஒதுக்கீட்டை 33 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக உயர்த்துகிறீர்கள் என்றாலும்... எங்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை... ஆனால் இந்தப் பிரிவினருக்கு இடஒதுக்கீடு இல்லாமல்... பெண்களுக்கான இடஒதுக்கீட்டில் அர்த்தமில்லை.” என்று கூறினார்.

பா.ஜ.க.,வைச் சேர்ந்த மத்தியப் பிரதேசத்தின் முன்னாள் முதல்வர் உமாபாரதியும், ஓ.பி.சி சமூகம் இந்துத்துவக் கட்சிகளுக்குள் இருக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியும், அந்த சமூகம் எதிர்க்கட்சிகளுடன் தங்களை இணைத்துக் கொள்ளாமல் இருக்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தியும், மசோதாவில் OBC ஒதுக்கீட்டைக் கோரியுள்ளார்.

தற்போது, ​​2008 எல்லை நிர்ணயத்திற்குப் பிறகு, மக்களவையில் 412 பொது தொகுதிகள் உள்ளன, 84 தொகுதிகள் எஸ்.சி.,க்களுக்கும், 47 தொகுதிகள் எஸ்.டி.,களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன. புதிய மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் எல்லை நிர்ணயத்திற்குப் பிறகுதான் 33% இட ஒதுக்கீடு நடைமுறைக்கு வரும் என்று பா.ஜ.க அரசு கூறியுள்ளது, எனவே இறுதியாக பெண்களுக்கு எத்தனை இடங்கள் ஒதுக்கப்படும் என்பது தெளிவாகத் தெரியவில்லை.

பெண்கள் இடஒதுக்கீடு மசோதாவை AIMIM ஏன் எதிர்த்தது?

லோக்சபாவில் பெண்கள் இடஒதுக்கீடு மசோதாவுக்கு வந்த ஒரே எதிர்ப்பு இரண்டு AIMIM எம்.பி.க்களிடமிருந்து வந்தது.

கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசி, “நான் இந்தச் சட்டத்தை எதிர்க்கிறேன்... அதிகமான பெண்கள் நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்பதுதான் இந்த மசோதாவுக்கு அளிக்கப்படும் நியாயம். அதுதான் நியாயம் என்றால், இந்த சட்டமன்றத்தில் பிரதிநிதித்துவம் குறைவாக இருக்கும் ஓ.பி.சி மற்றும் முஸ்லிம் பெண்களுக்கு ஏன் அந்த நியாயம் வழங்கப்படவில்லை? முஸ்லீம் பெண்கள் மக்கள் தொகையில் ஏழு சதவிகிதம் என்பதை நாங்கள் அறிவோம், ஆனால் இந்த மக்களவையில் அவர்களின் பிரதிநிதித்துவம் 0.7 சதவிகிதம் மட்டுமே,” என்று கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

India Lalu Prasad Yadav
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment