/tamil-ie/media/media_files/uploads/2020/06/image-56.jpg)
இந்தியாவில் பொது முடக்கநிலை குறித்த அறிவிப்பு பெரிதும் நிச்சயமற்ற தன்மையில் உள்ளது. இடம் மற்றும் துறை சார்ந்த நடவடிக்கைகளில் தளர்வுகள் குறித்த அறிவிப்பு இரண்டு மாதங்களுக்கு மேலாக நிச்சயமற்ற தன்மையில் அவ்வப்போது வெளியிட்டதால் பொருளாதார திட்டமிடல் பெரும் பின்னடைவை சந்தித்தது. இருப்பினும், சமீபத்திய வழிகாட்டுதல்கள் முந்தைய தளர்வுகளை தொடர்வதோடு மட்டுமல்லாமல், மீதமுள்ள கட்டுப்பாடுகள் எவ்வாறு, எப்போது திரும்பப் பெறப்படும் என்பதற்கான ஒரு வரைபடத்தையும் வழங்கியுள்ளன.
சமீபத்திய வழிகாட்டி நெறிமுறைகள் வணிக நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகள் மீண்டும் தங்கள் பொருளாதார நடவடிக்கையை தொடங்க அனுமதிக்கிறது. மாநிலத்துக்கு உள்ளேயும், மாநிலங்களுக்கு இடையேயும் சரக்குகளை கொண்டு செல்லவும், தனிநபர்கள் செல்லவும் இருந்த கட்டுபாடுகளை நீக்கியதன் மூலம் பொருளாதாரத்தின் ஒரு பெரிய பகுதி தற்போது இயங்கத் தொடங்கியுள்ளது.
கடந்த வாரம் மட்டும் ஐம்பதாயிரம் கொரோனா பாதிப்புகளை கண்டறிந்த நிலையில், நாட்டின் ஐந்தாவது பொது முடக்கநிலை குறித்த வழிகாட்டு நெறிமுறைகள் மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதற்கு,முந்தைய வாரத்தில் கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை 41,000 மாக இருந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது. இரயில் மற்றும் விமானப் பயண நடவடிக்கைகளுக்கு தொடர்ந்து தடைவிதிக்கப்பட்டிருந்தாலும், முடக்கநிலையை திறக்கும் பொறுப்பை தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களின் கைகளில் கொடுத்துள்ளது.( உதாரணமாக- கல்வி நிறுவனங்கள் மட்டத்தில் பெற்றோர் மற்றும் பிற தரப்பினரிடமிருந்து பெறப்படும் கருத்துக்கள் அடிப்படையில், கல்வி நிறுவனங்களைத் திறக்க அனுமதிக்கப்படும். )
அரசு அலுவலகங்கள் நீண்ட காலத்திற்கு முன்பே செயல்படத் தொடங்கினாலும், தனியார் நிறுவனங்களுக்கு இதுநாள் வரையில் கட்டுப்பாடுகள் இருந்து வந்தன. அனைத்து வகையான பொருளாதார நடவடிக்கைகள் மீண்டும் தொடங்குவதற்கான சாத்தியக் கூறுகளை தற்போது உருவாகியுள்ளது.
தொழிலாளர்களின் உடல்நலம் சமரசம் செய்யாமல், பொருளாதார நடவடிக்கையை எப்படி திட்டமிடலாம்? செயல்திறனை எப்படி அதிகரிக்கலாம்? என்று தீர்மானிக்கும் வாய்ப்பு தற்போது தான் தனியார் நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது. நிறுவனங்கள் பெரும்பாலும் இந்த வாரத்தில் இது குறித்த முறையான அறிவிப்பை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், பெரும்பாலான நிறுவனங்கள் தங்கள் செயல்பாடுகளை தற்போது அதிகரிக்க திட்டமிட்டுள்ளதால், சமூக விலகல் மற்றும் முகக்கவசம் அணிதல் குறித்து விழிப்புணர்வு தனிநபர்களுக்கு இருக்க வேண்டும். தங்களை மட்டுமல்ல, நண்பர்கள் மற்றும் சக ஊழியர்களை பாதுகாக்க கொரோனா கற்று தந்த புதுநடத்தை விதிமுறைகளை தனிநபர்கள் பின்பற்ற வேண்டும்.
புதிய வழிகாட்டு நெறிமுறைகள் கடந்த வார இறுதியில் வெளியிடப்பட்டதால் (மே - 30), பொருளாதார செயல்பாடுகளின் பயனை அனுபவிக்க இன்னும் ஒருவார காலம் எடுக்கும். மேலும், நிறுவனங்களும், பொது மக்களும் தங்கள் பணி/செயல்பாட்டுத் திட்டங்களை இறுதி செய்ய மாநில அளவிலான அறிவிப்புகளை எதிர்நோக்கியுள்ளனர். இதற்கிடையே, மதத் தலங்கள் ஹோட்டல்கள், உணவு விடுதிகள் மற்றும் பிற உபசரிப்பு சேவைகள் மற்றும் வணிக வளாகங்கள் செயல்படுவது தொடர்பான நிலையான செயல்பாட்டு வழிமுறைகளை மத்திய சுகாதார அமைச்சகம் இந்த வாரத்தில் வெளியிடயிருக்கிறது.
இதற்கிடையில், தேசியளவில் பொது முடக்கநிலையை அமல்படுத்திய விதத்தை இந்த வாரம் நாடாளுமன்றக் குழு ஒன்று விவாதிக்க இருக்கிறது. காங்கிரஸ் தலைவர் தலைமையிலான அனைத்து கட்சிகள் அடங்கிய குழுவின் கருத்துக்கள் நாட்டின் அரசியல் பட்டாசுகளை வெடிக்க வைக்கும் என்பதில் சந்தேமில்லை.
இந்த வாரம் தொடங்கும் தென்மேற்கு பருவமழை கொரோனா தடுப்பு நடவடிக்கையில் மேலும் சில சிக்கலை சேர்க்கும். குறிப்பாக மும்பை (மகாராஷ்டிரா) போன்ற மாநிலங்கள் தன்குந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையை தற்போதே முடுக்கி விடவேண்டும்.
கடந்த வாரத்தில் லடாக் பகுதியில் ஏற்பட்ட இந்தியா-சீனா துருப்புக்களுக்கு இடையிலான மோதல் நிலைப்பாடு இன்னும் தொடர்ந்தாலும், இராணுவ மற்றும் இராஜதந்திர உரையாடல் இன்றியமையாதது என பொது வெளியில் பேசப்பட்டு வருவது முன்னேற்றத்தைக் காட்டுகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.