உதித் மிஸ்ரா, இந்தியன் எக்ஸ்பிரஸ் டெபுடி அசோடியேட் எடிட்டர்,
RSS chief Mohan Bhagwat’s Vijayadashami address: நாக்பூரில் ராஷ்டிரிய ஸ்வயம் சேவக் சங்கத்தின் தொண்டர்களிடம் வருடாந்திர விஜயதசமி விழா கூட்டத்தில் பேசிய ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், நாடு எதிர்கொள்ளும் சில முக்கிய சவால்களையும் கோடிட்டுக் காட்டினார். மேலும், இந்தியாவை புகழ்பெற்ற வளமான நாடாக மாற்றுவதற்கு நம்முடைய இறுதி இலக்காக இந்திய சமுதாயமும் பொருளாதாரமும் மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும் என்று கூறினார்.
2019 தேர்தல் காட்டியது என்ன?
2019 மக்களவைத் தேர்தல் முடிவுகளை திரும்பிப் பார்ப்பதன் மூலம் மோகன் பகவத் தனது உரையைத் தொடங்கினார். பாஜகவின் 2014 ஆம் ஆண்டு வெற்றி “முந்தைய அரசாங்கத்திற்கு எதிரான அதிருப்தியிலிருந்து பிறந்த ஒரு எதிர்மறை அரசியல் அலையின் வெறும் விளைவாக இருந்ததா” அல்லது இந்தியர்கள் “ஒரு குறிப்பிட்ட திசையில் உள்ளே செல்ல வேண்டும் என்று மனது வைத்திருந்தார்களா” என்பதுதான் 2019 தேர்தலுக்கு முந்தைய முக்கிய கேள்வியாக இருந்தது என்று அவர் கூறினார்.
ஜம்மு காஷ்மீர்: நீண்ட தூரம் செல்ல வேண்டும்
மோகன் பகவத் பேசுகையில் “மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த ஆட்சி 370வது பிரிவை திருத்தி ஜம்மு காஷ்மீருக்கு ஒரு சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த நடவடிக்கையானது எதிர்பார்ப்புகளை நிறைவேற்றவும் நாட்டின் நலன்களுக்காக மக்களின் உணர்வுகளையும் விருப்பங்களையும் மதிக்கவும் தைரியம் உள்ள ஆட்சி என்பது மீண்டும் ஒரு முறை நிரூபிக்கப்பட்டுள்ளது.
ஆனால், இந்த வரிசையில் இன்னும் பலவற்றைச் செய்ய வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். 370 வது பிரிவின் செல்வாக்கின் கீழ் மறுக்கப்பட்ட நீதி மீட்கப்பட்டால் மட்டுமே இந்த முயற்சி பலனளிக்கும். ஏற்பட்ட அநீதிகள் முடிவுக்கு வரப்படுகின்றன. அநியாயமாக விரட்டியடிக்கப்பட்ட நமது காஷ்மீர் பண்டிதர்கள் மீண்டும் கொண்டு வரப்பட்டு புனர்வாழ்வளிக்கப்பட்டு பாதுகாப்பாகவும், அச்சமற்றவர்களாகவும், தேசபக்தர்களாகவும், இந்துக்களாகவும் இருக்க அனுமதிக்கப்படும்போது அது நடக்கும்.” இந்த உறுதியான தீர்மானம் சிக்கலான பிராந்தியத்தில் பாஜக அரசு எந்த திசையில் செல்லக்கூடும் என்பதைக் குறிக்கிறது.
நிலவில் தரை இறங்குதல்
இதுவரை ஆராயப்படாத பிராந்தியமான சந்திரனின் தென் துருவத்தில் சந்திராயனின் விக்ரம் தரையிறங்கி முடிந்தபின் இந்திய விஞ்ஞானிகள் உலகளாவிய கைதட்டல்களை வென்றதாக அவர் கூறினார்.
பல நெருக்கடிகள்
இந்த சாதனைகள் காரணமாக இந்தியர் சோம்பேறியாக இருக்கக்கூடாது என்று அவர் எச்சரித்தார். “ஏனெனில் நமக்கு முன் சில நெருக்கடிகள் உள்ளன. அவை சமாளிக்கப்பட வேண்டும்.” என்றார்.
எல்லையைத் தாண்டி அச்சுறுத்தல்
அவர் முதலில் நமது எல்லைகளில் உள்ள அச்சுறுத்தலை சுட்டிக்காட்டினார். ஒரு பெரிய பாதுகாப்பு ஸ்தாபனம் தோன்றியுள்ளதை கூறினார். மேலும் அவர், முன்பை விட பாதுகாப்பு விழிப்புணர்வு சிறப்பாக இருந்த போதிலும், “நில எல்லைகளில் காவலர்கள், சோதனைச் சாவடிகளின் எண்ணிக்கை மற்றும் கடல் எல்லையில், குறிப்பாக தீவுகளில் கண்காணிப்பு ஆகியவற்றை அதிகரிக்க வேண்டும்” என்று அவர் கூறினார்.
உள்ளேயே எதிரிகள்
ஆனால், அவருடைய முக்கிய கவலை நாட்டுக்குள்ளிருந்து வெளிப்படும் அச்சுறுத்தல் பற்றி அவர் பேசியதில் வெளிப்பட்டது. “பல சிக்கல்களை ஏற்படுத்தும் முகவர்கள் இந்த அமைப்பில் வாழ்கின்றனர். கடந்த சில ஆண்டுகளில், பாரதத்தின் சிந்தனை செயல்முறையின் திசையில் ஒரு மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஆனால், பலர் இதை விரும்பவில்லை. தொடர்ந்து சிதைக்கிறார்கள் அரசாங்கத்தின் நல்ல அர்த்தமுள்ள கொள்கைகளைக்கூட தவறாக அர்த்தப்படுத்துகிறனர்.
இது சம்பந்தமாக, ஒரு சமூகம் மற்றொரு சமூகத்தைத் தாக்கும் சம்பவங்கள் சில சமயங்களில் வேண்டுமென்றே இட்டுக்கட்டப்பட்டு சிதைத்து எப்படி வெளியிடப்படுகின்றன என்பதை அவர் சுட்டிக்காட்டினார். இருப்பினும் ஆதரவு கோருவதற்கு எந்த ஒரு தரவும் இல்லாமல் இது போன்ற சம்பவங்களில் ஒருதலை பட்சமாக இருக்கவில்லை. மேலும், இரு தரப்பிலிருந்தும் சம்பவங்கள் நடப்பதாக தகவல்கள் உள்ளன. எப்படியிருந்தாலும் இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபட்ட மக்களை சங்கம் ஒருபோதும் ஆதரிக்கவில்லை. சங்கம் அது போன்ற ஒவ்வொரு சம்பவத்திற்கும் எதிராக நிற்கிறது.” என்று அவர் வேகமாகக் கூறினார்.
இருந்தாலும்கூட, பாரதத்திற்கு அந்நியமாக இருந்த மரபுகளை குறிக்கும் “லிஞ்சிங்” (கும்பல் தாக்குதல்) போன்ற சொற்களால் இத்தகைய சம்பவங்களை முத்திரை குத்துவதன் மூலம் நம் நாட்டையும் ஒட்டுமொத்த இந்து சமுதாயத்தையும் இழிவுபடுத்துவதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன. மேலும், சிறுபான்மையினர் என்று அழைக்கப்படும் சமூகங்களிடைஏ அச்சத்தை உருவாக்குகின்றன” என்று தெரிவித்தார். அத்தகைய சதித்திட்டம் தீட்டப்படுகிறது என்பதை தனது பார்வையாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று அவர் வேண்டினார். இந்த காரணத்திற்காகவே அவர் தனது பார்வையாளர்களை “ஆத்திரமூட்டும் மொழியில் பேசுவதிலிருந்தோ அல்லது ஆத்திரமூட்டும் செயல்களில் ஈடுபடுவதிலிருந்தோ விலகி இருக்க வேண்டும்” என்று எச்சரித்தார். அவருடைய உரையின் பிற்பகுதியில் உள்ளேயே எதிரிகள் என்ற கருத்துக்கு திரும்பினார்.
பொருளாதாரம் குறித்து: அரசாங்கத்துடன் சாத்தியமான மோதல்
அது முடிந்த உடனே, அவர் இந்தியாவின் தற்போதைய பொருளாதார மந்த நிலை பற்றி பேசினார். இதில் அவர் போதுமான தரவுகள் இல்லாமல், இது அடிப்படையில் உலகளாவிய பொருளாதார மந்தநிலையின் விளைவு என்றும் அமெரிக்காவுக்கும் சீனாவிற்கும் இடையிலான வர்த்தக யுத்தம் காரணம் என்று குற்றம் சாட்டினார். பொருளாதார மந்தநிலைக்கு பங்களித்த உள்நாட்டு காரணிகளான, குறிப்பாக பணமதிப்பழிப்பு போன்ற அரசாங்கக் கொள்கைகள் எதையும் அவர் குறிப்பிடவில்லை.
பொருளாதார வளர்ச்சியை அதிகரிப்பதற்கான அரசாங்கத்தின் சமீபத்திய முயற்சிகளை அவர் பாராட்டிய அதே வேளையில், அவர் அந்நிய நேரடி முதலீட்டை ஈர்க்கும் நடவடிக்கைகளை எடுக்க அரசாங்கம் கட்டாயப்படுத்தப்பட்டதையும் பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்வதையும் கண்டனம் செய்தார். கொள்கை குறித்த இந்த நிலைப்பாடு அரசாங்கத்தின் அணுகுமுறைக்கு முற்றிலும் முரணானது. இது பிரதமர் நரேந்திர மோடி உலகளாவிய முதலீட்டாளர்களை அணுகுவதிலும், இந்தியாவில் முதலீடு செய்யும்படி அவர்களை வலியுறுத்துவதிலும் அவர்கள் ஒரு இடைவெளியைக் கண்டால் அவர் விஷயங்களைச் சரியாக அமைப்பதற்கான பாலமாக இருப்பார் என்று பார்க்கப்படுகிறது. பாஜக அரசாங்கம் பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்வதற்கும், மந்தமான பொருளாதாரத்தில் வரி வருவாயிலிருந்து வரும் பற்றாக்குறையை ஈடுசெய்வதற்கும் தீவிரமாக முயன்று வருகிறது. இது அன்னிய நேரடி முதலீடு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்யும் அரசாங்கத்தின் திட்டங்களுக்கு எதிராக ஆர்.எஸ்.எஸ் மற்றும் அதனுடன் தொடர்புடைய அமைப்புகளின் வலுவான அழுத்தம் ஆகும்.
கல்வியில் தீவிர மாற்றம் தேவை: ஸ்வயத்தின் முக்கியத்துவம்
பகவத் தற்போதைய பொருளாதார முட்டுக்கட்டை மற்றும் கொள்கை கலவையைப் பயன்படுத்தி “நாம் அடிப்படைகளுக்குச் சென்று சிந்திக்க வேண்டியது எப்படி என்பதை அடிக்கோடிட்டுக் காட்டினார். நம்முடைய தேவைகள், சுயவிவரம் மற்றும் நிபந்தனையை மனதில் கொண்டு நமது சொந்த பொருளாதார பார்வையை வகுக்க வேண்டும்…” என்றார். மேலும், அவர் உலகளாவிய பொருளாதார சிந்தனைக்கு பதில்கள் இல்லை என்று கூறினார். “சுதந்திரம் அடைந்த பல தசாப்தங்களுக்குப் பிறகும் இந்த ஸ்வயத்தைப் பற்றி சிந்திப்பதில் நாம் பின்தங்கியுள்ளோம். இதற்கு அடிப்படைக் காரணம் கல்வி முறைதான். அடிமை காலத்தில் நம்மை அடிமைகளாக வைத்திருக்க திட்டமிடப்பட்டது. சுதந்திரம் அடைந்த பிறகும் இது தொடர்கிறது” என்றார். “நம்முடைய மொழி (ஸ்வய பாஷா), எங்கள் உடையை (ஸ்வய பூஷா) மற்றும் நமது கலாச்சாரம் (ஸ்வய சமஸ்கிருதி) பற்றி பெருமை சேர்க்கும் வகையில் கடமைப்பட்ட கல்வி முறை நமக்கு தேவை” என்று அவர் கூறினார். அதனால்தான், பாடத்திட்டத்திலிருந்து ஆசிரியர்களுக்கு ஒரு தீவிர மாற்றத்தின் அவசியத்தை அவர் உணர்ந்தார். இதை வெறும் கட்டமைப்பு மாற்றங்கள் மூலம் மட்டுமே அடைய முடியாது என்று அவர் கூறினார்.
கலாச்சார சீரழிவை தடுத்து நிறுத்த வேண்டும்
கல்வி பிரச்னைகளைத் தாண்டி, மோகன் பகவத், தாய்மார்கள் மற்றும் சகோதரிகள் பாதுகாப்பாக இல்லாதது போன்ற காரணங்களுக்கு கலாச்சார சீரழிவு ஒழுக்கக்கேடான வாழ்க்கை முறையே காரணம் என்று கூறினார். இந்தியா எம்போதுமே தனது பெண்களை எப்படி வைத்திருந்தது என்பதை வாதிடுவதற்கு ஜோஹர் நடைமுறையை (அல்லது சதி, அது பெண்கள் தங்கள் கற்பைக் காப்பாற்றிக் கொள்வதற்காக எரியும் தீயில் குதித்ததை உள்ளடக்கியது) தடை செய்யப்பட்டதை நினைவு கூர்ந்தார். ஆனால், பெண்களுக்கு தங்களை பாதுகாத்துக்கொள்ள கற்பிக்க வேண்டியதன் அவசியத்தையும், ஆண்களில் நமது கலாச்சாரத்தின் புனிதத்தன்மையையும் கண்ணியத்தையும் ஊக்குவிப்பதன் அவசியத்தையும் அவர் கோடிட்டுக் காட்டினார்.