Advertisment

ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் சந்திப்பில் வேறுபடும் முஸ்லிம் தலைவர்கள்

அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம், முஸ்லிம் சமூகத்துக்குள் நிற்கிற ஜாமியாத் உலெமா-இ-ஹிந்த் அல்லது அவர்களுடன் தொடர்பில் இருங்கள் என்று கூறியுள்ளது. ஜாமியத் உலமா-இ-ஹிந்த் கூறுகையில், இத்தகைய விமர்சனம் இந்த புள்ளியைத் தவறவிடுகிறது என்று கூறியுள்ளது.

author-image
WebDesk
New Update
ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் சந்திப்பில் வேறுபடும் முஸ்லிம் தலைவர்கள்

அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம், முஸ்லிம் சமூகத்துக்குள் நிற்கிற ஜாமியாத் உலெமா-இ-ஹிந்த் அல்லது அவர்களுடன் தொடர்பில் இருங்கள் என்று கூறியுள்ளது. ஜாமியத் உலமா-இ-ஹிந்த் கூறுகையில், இத்தகைய விமர்சனம் இந்த புள்ளியைத் தவறவிடுகிறது என்று கூறியுள்ளது.

Advertisment

சமீபத்தில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் மற்றும் சமூகப் பிரதிநிதிகள் நடத்திய சந்திப்பால் முஸ்லிம் அமைப்புகள் பிளவுபட்டுள்ளன. சிலர் உரையாடலுக்கான வாய்ப்பை வரவேற்றாலும், இது காலத்தின் தேவை என்று அழைக்கின்றனர். மற்றவர்கள் இந்த சந்திப்பு ஒரு மாயை என்பதை விட வேறு ஒன்றும் இல்லை என்று நினைக்கிறார்கள்.

கடந்த மாதம், முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் எஸ் ஒய் குரேஷி, டெல்லியின் முன்னாள் துணை நிலை ஆளுநர் நஜீப் ஜங், ஆர்.எல்.டி துணைத் தலைவர் ஷஹீத் சித்திக், அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தரும் ஓய்வு பெற்ற ராணுவத் தளபதியுமான ஜமீர் உதின் ஷா மற்றும் தொழிலதிபர் சயீத் ஷெர்வானி ஆகிய ஐந்து முக்கிய முஸ்லிம் சமூகத்தினர் மோகன் பகவத்தை சந்தித்தார்கள்., அங்கே இரு தரப்பினரும் பரஸ்பர கவலைகளை பகிர்ந்துகொண்டனர். மேலும், அவ்வப்போது இதுபோன்ற சந்திப்புகளை நடத்த முடிவு செய்தனர்.

கடந்த வாரம், மோகன் பகவத் இதைத் தொடர்ந்து அகில இந்திய இமாம் அமைப்பின் தலைமை இமாம் உமர் இலியாசியுடன் ஒரு மசூதியில் சந்திப்பை நடத்தினார். இந்த கூட்டத்திற்குப் பிறகு மோகன் பகவத்தை ‘ராஷ்டிர பிதா’ என்று குறிப்பிட்ட இலியாசி, தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம், இந்த பேச்சுவார்த்தை ‘மத நல்லிணக்கத்தை’ உருவாக்கும் என்று நம்புவதாகக் கூறினார்.

இந்த கேள்விகளை எழுப்பி, அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியத்தின் (ஏ.ஐ.எம்.பி.எல்.பி) செயற்குழு உறுப்பினர் காசிம் ரசூல் இல்யாஸ் இந்தியன் எக்ஸ்பிரஸிடம் கூறுகையில், மோகன் பகவத் மற்றும் ஆர்.எஸ்.எஸ் உண்மையில் முஸ்லிம் சமூகத்தை அடைய விரும்பினால், அவர்கள் ஏ.ஐ.எம்.பி.எல்.பி அல்லது ஜாமியத் உலமா-இ-ஹிந்த் அல்லது ஜமாத்-இ-இஸ்லாமி போன்ற - உண்மையில் செல்வாக்கு உடைய முஸ்லிம் சமூகதால் பின்பற்றப்படும் அமைப்புகளுடன் அவர்கள் தொடர்பில் இருப்பார்கள்.

“கடந்த 20 ஆண்டுகளில் பகவத் எங்களுடன் அல்லது இந்த அமைப்புகளுடன் தொடர்பு கொள்ளவில்லை” என்று இலியாஸ் கூறினார்.

ஆர்.எஸ்.எஸ் உடனான சந்திப்புகளில் எழுப்பப்பட்ட பிரச்சினைகள் குறித்தும் அவர் கேள்வி எழுப்பினார். “முஸ்லீம் சமூகத்திலிருந்து பகவத்தை சந்தித்த அனைவரும், இந்த சந்திப்புகள் சுமுகமானவை என்று கூறியுள்ளனர். ஆனால், உண்மை என்னவென்றால், கடந்த 8 ஆண்டுகளில் (மோடி அரசாங்கத்தின் கீழ்), இந்தியாவில் முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்பு பேச்சுக்கள், முஸ்லிம் இனப்படுகொலைக்கான வெளிப்படையான அழைப்புகள், முல்சிம் பெண்களுக்கு எதிரான கற்பழிப்பு அச்சுறுத்தல்கள், அத்துடன் ஹிஜாப் பிரச்னை மற்றும் ஞானவாபி போன்ற மசூதிகளைப் பற்றிய சர்ச்சை போன்ற பிரச்சினைகள் தொடர்பாக சர்ச்சைகள் நடந்துள்ளன. . பகவத் இந்த பிரச்சனைகளை பற்றி ஒருபோதும் அறிக்கைகளை வெளியிடவில்லை. ஆர்.எஸ்எஸ் வழிகாட்டியாக இருக்கும் பாஜக தலைமையிலான அரசும் இல்லை. முஸ்லீம் சமூகத்திற்கு எதிரான இந்த நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ் அறிவுறுத்தவில்லை. எந்த நடவடிக்கையும் எடுக்குமாறு அரசுக்கு அறிவுறுத்தவில்லை. அப்படியானால், இந்த நல்லெண்ணக் கூட்டங்கள் வெறும் வெற்று சைகைகள். “ஆர்.எஸ்.எஸ்-ஸின் அமைதியானது அதன் வெளிப்பாட்டை விட சத்தமானது.” என்று இலியாஸ் கூறினார்.

பகவத் சந்தித்த தலைமை இமாம் உமர் இலியாஸ், முஸ்லீம் சமூகத்திற்குள் சிறிய நிலைப்பாட்டை கொண்டவர் என்பதை பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இலியாஸ் அங்கீகரிக்கப்பட்ட இஸ்லாமிய அறிஞர்கூட இல்லை என்று ஒரு உறுப்பினர் கூறினார். இமாம்களுக்கு சலுகைகள் மற்றும் நன்மைகளை உறுதி செய்வதற்காக அவர் எப்போதும் அரசுக்கு ஆதரவாக இருப்பதாக மற்றொருவர் கூறினார்.

“இந்தியாவில் உள்ள மூன்று லட்சம் மசூதிகளில் அரை மில்லியன் இமாம்களை பிரதிநிதித்துவப்படுத்தும் "இந்தியாவின் மிகப்பெரிய முஸ்லீம் அமைப்பு” என்று அகில இந்திய இமாம் அமைப்பு கூறுகிறது.

பெயர் குறிப்பிட விரும்பாத முஸ்லீம் தலைவர் ஒருவர் கூறியதாவது: 1992ல் பாபர் மசூதி இடிக்கப்பட்ட போது, ​​காங்கிரஸை எப்போதும் ஆதரித்து வந்த இந்தியா முழுவதும் உள்ள முஸ்லிம் சமூகம் அக்கட்சியைப் புறக்கணித்தது. முஸ்லிம் சமூகத்தை மீண்டும் அதன் கட்டுக்குள் கொண்டுவருவதற்காக, அப்போதைய பிரதமர் பி.வி. நரசிம்ம ராவ், அகில இந்திய இமாம் அமைப்பை உருவாக்கிய இலியாசியின் தந்தை ஜமில் அகமது இலியாசியை அணுகினார். இமாம்களுக்கு சம்பளம் கொடுப்பதை அரசிடம் இருந்து பெற்று தந்தவர் ஜமீல் அகமது. மற்றபடி, இந்த சம்பளங்கள் அறக்கட்டளைகள் மூலமாகவும் நன்கொடைகள் மூலமாகவும் வழங்கப்பட்டன. அப்போதிருந்து, அகில இந்திய இமாம் அமைப்பு எப்போதும் ஆளும் கட்சியுடன் நெருக்கமாக உள்ளது. அவர்கள் சமூகத்தில் ஒரு இடத்தையும் பிடிக்கவில்லை.

உமர் இலியாஸ், உண்மையில், 2018 ஆம் ஆண்டு முதல் சந்திப்பிற்குப் பிறகு, பிரதமர் நரேந்திர மோடியையும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவையும் பல சந்தர்ப்பங்களில் சந்தித்துள்ளார். அவர் திரைப்பட நடிகர் அமிதாப் பச்சனுடன் மேடையைப் பகிர்ந்து கொண்டார் மற்றும் ஜகதீஷ் வாசுதேவ் (சத்குரு) மற்றும் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் உள்ளிட்ட முக்கிய இந்து ஆன்மீகத் தலைவர்களை சந்தித்தார்.

இருப்பினும், மற்ற தலைவர்கள், இலியாஸின் நற்சான்றிதழ் குறித்து சந்தேகங்களை எழுப்புவது அர்த்தமற்றது என்று கருதுகின்றனர். மேலும், ஆர்.எஸ்.எஸ் உடன் உறவுப் பாலம் கட்டுவது இப்போது தொடர்ந்து தாக்குதலுக்கு உள்ளாகி வரும் ஒரு சமூகத்திற்கு மிகவும் அவசியமானது என கருதுகின்றனர்.

ஜாமியத் உலமா-இ-ஹிந்த் செயலர் நியாஸ் அகமது ஃபாரூக்கி, “பகவத்தின் முயற்சியை வரவேற்கிறோம்” என்றார். “ஆர்.எஸ்.எஸ் முன்னரே வந்திருக்க வேண்டும். ஆர்.எஸ்.எஸ்-க்கு நாட்டில் வலுவான செல்வாக்கு உள்ளது; இந்த தாக்கம் சரியா தவறா என்பது வேறு விஷயம். ஆனால், ஆர்.எஸ்.எஸ் நாடு பிளவுபடுவதையும், ஒற்றுமையில்லாமல் இருப்பதையும் விரும்புகிறது என்று நாங்கள் நம்பவில்லை.” என்று கூறினார்.

மேலும், முஸ்லீம் சமூகம் உண்மையான பிரச்சினைகளில் கவனம் செலுத்த வேண்டும் என்று ஃபரூக்கி மேலும் கூறினார். “சமீபத்திய காலங்களில் எங்களின் முக்கிய கவலைகளில் ஒன்று முஸ்லிம்களின் பின்தங்கிய நிலை மற்றும் சமூகத்திற்கு குறிப்பாக கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வாய்ப்புகள் இல்லாதது. முஸ்லிம் சமூகம் மிகவும் திசைதிருப்பப்பட்டு மற்ற பிரச்சினைகளில் சிக்கியுள்ளது. அது முக்கியமானவற்றில் கவனம் செலுத்துவதில்லை. இந்த சந்திப்பு வெறுமனே அடையாள ரீதியாக இருந்தாலும், அது இன்னும் ஒரு படி முன்னேறியுள்ளது” என்று அவர் கூறினார்.

ஜாமியத் உலமா-இ-ஹிந்த்தின் இரு பிரிவுகளில் ஒன்றின் தலைவரான தாருல் உலூம் தியோபந்தின் அர்ஷத் மதானி மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பகவத்தை சந்தித்தார். “இந்த சந்திப்புகள் எப்போதும் நடந்துள்ளன, புதிதாக எதுவும் நடக்க இல்லை” என்று அவர் கூறினார். ஆர்.எஸ்.எஸ் தலைவருடனான தனது சந்திப்பு நல்ல சூழ்நிலையில் நடைபெற்றது. பகவத் முஸ்லிம்களுக்கு எதிராக இல்லை” என்று கூறினார்.

இருப்பினும், பகவத் உடனான சந்திப்பின் விவரங்களை வெளியிட மதானி மறுத்துவிட்டார்.

சமீபத்திய ஆர்.எஸ்.எஸ் கூட்டத்திற்கு எதிராக அதிகம் குரல் கொடுத்த முஸ்லிம் தலைவர்களில் ஏ.ஐ.எம்.ஐ.எம் தலைவர் அசாதுதீன் ஒவைசியும் ஒருவர். பகவத்தை சந்தித்த ஐவரையும் அவர் உயர்வகுப்பு முஸ்லீம்கள் என்று அழைத்தார்.

தி இந்தியன் எக்ஸ்பிரஸில் ஒரு கருத்துப் பகுதியில் அவர்கள் ஐந்து பேர் மீதும் சில குற்றச்சாட்டுகளை எடுத்துரைத்து, குரேஷி எழுதினார்: “நாங்கள் முஸ்லிம் சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறோமோ, இல்லையோ, எங்களை யாரும் தேர்ந்தெடுக்கவில்லை அல்லது நியமனம் செய்யவில்லை. ஆனால், நாமும் சமூகம்தான். எங்களுடைய கருத்துக்கள் மற்றும் அவதானிப்புகள் உள்ளன. இது எங்களின் தனிப்பட்ட முயற்சி. நாங்கள் உயர்சாதியா? ஒருவேளை… நாங்கள் படிப்பறிவில்லாதவர்கள் அல்ல. அடிப்படை உண்மைகளை நாங்கள் சமமாக அறிவோம்: கொலைச் சம்பவங்கள்; இனப்படுகொலைக்கு அழைப்பு விடுக்கிறது; கற்பழிப்புகள்; பொருளாதார புறக்கணிப்பு; வாக்களிக்கும் உரிமையை கேள்விக்குள்ளாக்குதல் மற்றும் வீடுகள் அல்லது வேலைகளைப் பெறுவதில் பாகுபாடு காட்டுதல்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

வரும் நாட்களில் இதுபோன்ற சந்திப்புகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக ஆர்.எஸ்.எஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஒரு வட்டாரம் கூறுகையில், “ஆர்.எஸ்.எஸ் 2002 முதல் முஸ்லீம் சமூகத்தை சென்றடைகிறது, எனவே, அதில் புதிதாக எதுவும் இல்லை (அந்த ஆண்டு, குஜராத் கலவரத்திற்குப் பிறகு, முஸ்லீம் ராஷ்ட்ரிய மஞ்ச் ஆர்.எஸ்.எஸ் மூலம் தொடங்கப்பட்டது). இப்போது நீங்கள் பார்ப்பது 20 வருட உழைப்பின் தாக்கத்தைத்தான். நிச்சயமாக, ஆர்.எஸ்.எஸ் மற்றும் முஸ்லீம் அமைப்புகள் இரண்டுமே இப்போது உரையாடலின் அவசியத்தை அதிகம் உணர்கின்றன, அதனால்தான், ஆர்.எஸ்.எஸ் தலைவரின் கூட்டங்கள் அதிகரித்திருப்பதைக் காண்கிறோம். பிரச்சனைகள் வரும்போது, ​​உரையாடல் ஒன்றே தீர்வுக்கான ஒரே வழி. நீங்கள் சந்திக்காவிட்டால், பிரச்சினைகளை எப்படி தீர்க்க முடியும்?'' என்று கேட்கிறார்.

என்ன மாறிவிட்டது என்பது பற்றி ஆர்.எஸ்.எஸ் வட்டாரம் கூறுகையில், “ஆர்.எஸ்.எஸ் இப்போது இந்து சமுதாயத்தின் பெரும் பகுதியை பிரதிநிதித்துவப்படுத்துகிறது. முன்னதாக, இந்துக்கள் மிகவும் ஒழுங்கமைக்கப்பட்ட முஸ்லீம் சமூகத்தைப் போலல்லாமல் ஒழுங்கற்றவர்களாகவும் ஒற்றுமையற்றவர்களாகவும் இருந்தனர். அப்போது ஆர்.எஸ்.எஸ்-ஸின் முன்னுரிமை இந்துக்களை அமைப்பதுதான். அதற்குப் பிறகுதான் மற்ற சமூகத்தினருடன் கூட்டங்களை நடத்தவும் உரையாடல்களை நடத்தவும் முடியும். எங்களுக்கு போதுமான பலம் இருந்தால் மட்டுமே அது முடியும்.” என்று கூறுகின்றனர்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Rss Mohan Bhagwat Muslim Rss
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment