Advertisment

குடிமக்கள் கட்டாயம் தெரிந்துக் கொள்ள வேண்டியது.. ஆர்டிஐ என்றால் என்ன?

குடும்ப சொத்தில் தனக்கு உரிமை இருக்கிறதா? என்பதை மிக துல்லியமக தெரிந்துக்கொள்ள முடியும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
rti online

rti online

rti online : RTI தகவல் அறியும் உரிமைச் சட்டம் (Right to Information Act) என்பது, குடிமக்கள் தாங்கள் தெரிந்துகொள்ள விரும்பும் மத்திய, மாநில அரசு அலுவலகங்களின் நிலைத்தகவல்களை உரிமையுடன் கேட்டுப்பெற வழிவகுக்கும் முக்கியமான சட்டம் ஆகும். 2005-ம் ஆண்டு நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்ட இந்தச் சட்டத்தின் மூலம் குடிமக்களுக்கு என்னென்ன பயன்கள், எப்படி பெற வேண்டும்? பெண்களுக்கு இருக்கும் சிறப்பு சலுகைகளை என்னென்ன போன்ற அனைத்து விதமான தகவல்களையும் இந்த கட்டுரையில் தெரிந்துக் கொள்ளுங்கள்.

Advertisment

நாட்டின் எந்தவொரு குடிமகனும் கேள்வி எழுப்பலாம். நெருக்கடி, சிக்கல்கள் நிறைந்த சூழ்நிலைகளில் கூட தகவல் அறியும் உரிமை சட்டம் (ஆர்டிஐ) மிகவும் உதவுகிறது. ஜனநாயகம் எவ்வளவு முக்கியமோ (ஆர்டிஐ) அவ்வளவு முக்கியமானது. கேள்வி கேட்கும் உரிமை மக்களுக்கு இருக்கு என்பதை அடிக்கடி ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள்.

விண்ணப்பதாரர்கள், தமிழ், ஆங்கிலம், சிங்கள மொழிகளில் தகவல்களை பெற்றுக்கொள்ளலாம். இந்த சட்டத்தின் கீழ், அமைச்சுக்கள், துறைகள், பொது நிறுவனங்கள், உள்ளூராட்சி அதிகாரிகள், அரசிடம் இருந்து கணிசமாக நிதி பெறும் அரச சார்பற்ற தன்னார்வ தொண்டு அமைப்புக்கள், உயர் கல்வி நிறுவனங்கள், நீதிமன்றங்கள், தீர்ப்பாயங்கள் ஆகிய நிறுவனங்கள் தகவல்களை வழங்க வேண்டும்.

ஆயினும் தேசத்தின் பாதுகாப்பு, பொருளாதாரம், வெளிநாட்டு வர்த்தக ஒப்பந்தங்கள் தொடர்பான பேச்சுவார்த்தை, தனி நபர்களின் தகவல்கள், மருத்துவ அறிக்கைகள் உள்ளிட்ட சில தகவல்களை பெற தடை உள்ளது.

ஆர்டிஐ சட்டத் திருத்த மசோதா:

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் கடந்த 2005ம் ஆண்டு தகவல் அறியும் உரிமை சட்டம் (ஆர்டிஐ) அறிமுகப்படுத்தப்பட்டது. அதில் திருத்தம் செய்யும் வகையில், எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்களுக்கு இடையே ஆர்டிஐ சட்டத் திருத்த மசோதா மக்களவையில் கடந்த ஜூலை மாதம் 21 (2019) ஆம் தேதி நிறைவேற்றப்பட்டது.மத்திய, மாநில அரசுகளின் தகவல் ஆணையர்களின் ஊதியம், பணிக்காலம், இதர மானியங்கள் குறித்து மத்திய அரசு முடிவு செய்ய இந்த மசோதா வழிவகுக்கிறது.

மக்களவையில் இதுக் குறித்து நடைப்பெற்ற விவாதத்தில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்த வாக்கெடுப்பில் 218 வாக்குகள் ஆர்டிஐ மசோதாவுக்கு ஆதரவாகவும் 78 வாக்குகள் எதிராகவும் பதிவானதால் சபாநாயகர் ஓம் பிர்லா மசோதாவை நிறைவேற்றினார்.

how to apply rti : ஆர்டிஐ இணைய தளம்:

இதற்காக மத்திய அரசு இணைய தளத்தை உருவாக்கியுள்ளது.அதே நேரம் தமிழக அரசிடம் துறை சார்ந்த மற்றும் செலவிடப்படும் நிதி குறித்த தகவல்களை பெற விரும்பும் பட்சத்தில் தமிழக மக்கள் கடிதம் மூலமாகவே விண்ணப்பிக்க வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். ஏனென்றால் தமிழக அரசு தகவல் அறியும் உரிமை சட்டத்திற்கு என்று தனி இணைய தளம் கிடையாது.

எடுக்கும் நாட்கள்:

தகவல் அறிவும் உரிமை சட்டத்தின் கீழ் தகவல் வேண்டி ஒருவர் சம்மந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள ஆர்டிஐ அலுவலரிடம் விண்ணப்பித்தால் , மனுதாரருக்கு பதில் மனு சென்றடைய சுமார் 60 நாட்கள் எடுக்கிறது.

ஆர்டிஐ பயன்கள்:

தகவல் அறியும் உரிமையினை பயன்படுத்தி அரச நிறுவனங்கள், அரச பிரதிநிதிகள், அரசியல்வாதிகளிடம் மக்கள் கேள்விகளைக் கேட்டு தெளிவினைப் பெற்றுக்கொள்வதோடு இதன் மூலம் நாட்டிற்குள் அரச நிறுவனங்கள், அரசியல்வாதிகளிடம் இருந்து ஊழல், லஞ்ச முறைகேடு என்பன தூரமாக்கப்படும்.

இந்த சட்டத்தை அமல்படுத்துவதன் மூலம் தேசத்தின் அதிகாரத்தை பாதுகாக்கும் சகல தகவல்களும் சிறந்த முறையில் அமலுக்குக் கொண்டுவரப்படுகின்றன.

மக்கள் நலனுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தீர்மானங்களின் ரகசியங்களை ஏற்ற வகையில் வெளிப்படுத்துவதற்கான சிறந்த முறையை, தகவல் அறியும் உரிமை கொண்டுவருகிறது.

ஆர்டிஐ மனு அனுப்பும் முறை:

எந்த அரசு அலுவலகத்தில் தகவல் வேண்டுமோ, அந்த அலுவலகத்தின் பொதுத் தகவல் அதிகாரிக்கு (PIO - Public Information Officer) உங்கள் கேள்விகள் மற்றும் சந்தேகத்தை அனுப்ப வேண்டும். பொதுத் தகவல் அதிகாரி என்பவர், ஒவ்வொரு அரசுசார் நிறுவனங்களின் செய்தித் தொடர்பு ஒருங்கிணைப்பாளர்.

‘பெறுநர்’ முகவரியில், ‘பொதுத் தகவல் அதிகாரி’ எனக் குறிப்பிட்டு, எந்த அலுவலகமோ, அதன் பெயரையும் முகவரியையும் குறிப்பிட்டு, அந்த தபாலில் 10 ரூபாய்க்கான நீதிமன்ற கட்டண முத்திரை வில்லை (court fee stamp) ஒட்டி அனுப்ப வேண்டும். தமிழ்நாட்டில் இருக்கும் மத்திய அரசு நிறுவனங்களிடம் தமிழிலேயே மனு அனுப்பி, தமிழிலேயே பதில் தரச்சொல்லிக கோரிக்கையும் வைக்கலாம்.

உங்களது ஆர்டிஐ விண்ணப்பத்தை வெற்றிகரமாக எழுதி/தயாரித்து விட்டீர்கள். உங்களது விண்ணப்பத்தை அதற்கான கட்டணத்துடன் பின்வரும் இரண்டு வழிகளில் எதன் மூலமாகவாவது அனுப்பலாம்.

1) தபால் மூலமாக: அனுப்பவேண்டிய அரச அலுவலகத்தின் தலைமைக் கணக்கு அதிகாரியின் பேருக்க ரூ. 10/- வரையோலை அல்லது வங்கியாளர் காசோலை அல்லது ரூ. 10/- க்கு கோர்ட் ஸ்டாம்ப் எடுத்து உங்களது மனுவுடன் இணைத்து தபால் மூலம் அனுப்பலாம்.

2) நேரடியாக: நீங்களே நேரடியாகவோ அல்லது மற்றொருவர் மூலமாகவோ சம்பந்தப்பட்ட அலுவலகத்திற்கு நேரில் சென்று அங்கே உங்களது மனுவை அளித்து, அதற்கான கட்டணத்தைப் பணமாக அதே அலுவலகத்தில் நேரடியாகச் செலுத்தலாம்.

பெண்களுக்கு இருக்கும் பயன்கள்:

1. குடும்ப சொத்தில் தனக்கு உரிமை இருக்கிறதா? என்பதை மிக துல்லியமக தெரிந்துக்கொள்ள முடியும்.

2. வேலை வாய்ப்பு பற்றி தெரிந்துக் கொள்ளலாம்.

3. விதவை பெண்கள் பென்ஷன் விவரம் குறித்து அறியலாம்.

Rti
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment