இந்தியர்கள் இப்போது உலகம் முழுவதும் 240 நாடுகளில் படிக்கிறார்கள் என்று வெளியுறவு அமைச்சகம் கடந்த மாதம் ராஜ்ய சபாவில் தெரிவித்தது. கனடா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகள் மாணவர்களின் விருப்பமான சிறந்த தேர்வுகளாக உள்ளன. ஆனால், மாணவர்கள் கணிசமான எண்ணிக்கையில் உஸ்பெகிஸ்தான், பிலிப்பைன்ஸ், ரஷ்யா, அயர்லாந்து, கிர்கிஸ்தான் மற்றும் கஜகஸ்தான் ஆகிய நாடுகளுக்கும் பயணம் செய்கின்றனர்.
ஜலந்தரைச் சேர்ந்த குடியேற்ற நிறுவனம் வழங்கிய அனுமதிக் கடிதங்கள் போலியானவை என நிறுவப்பட்டதை அடுத்து, சுமார் 700 இந்திய மாணவர்கள் கனடாவில் இருந்து நாடு கடத்தப்படுவதை எதிர்கொண்டுள்ளனர். அதிகமான இந்திய மாணவர்கள் வெளிநாட்டில் படிக்க விரும்புவதால், பலர் நேர்மையற்ற ஏஜெண்டுகளுக்கு இரையாகி வருகின்றனர்.
6 ஆண்டுகளில் உச்ச எண்ணிக்கை
இந்தியர்கள் இப்போது உலகம் முழுவதும் 240 நாடுகளில் படிக்கிறார்கள் என்று வெளியுறவு அமைச்சகம் கடந்த மாதம் ராஜ்யசபாவில் தெரிவித்தது. கனடா,
கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்குப் பிறகுதான் மாணவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கிறது. உயர்கல்விக்காக வெளிநாடு செல்லும் இந்தியர்கள் 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 2022-ல் 7.5 லட்சத்தை எட்டியதாக கல்வி அமைச்சகம் கடந்த மாதம் நாடாளுமன்றத்தில் தெரிவித்தது. 2022-ம் ஆண்டில் அமெரிக்காவில் அதிக சர்வதேச மாணவர்களைக் கொண்ட நாடாக இந்தியா சீனாவை விஞ்சியது.
சீராக உயரும் வெளிநாட்டில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை
உண்மையில், அரசாங்கத்தின் புள்ளிவிவரங்கள்படி, வெளிநாட்டில் படிக்கத் தேர்வு செய்யும் இந்தியர்களின் எண்ணிக்கை 2017-ல் 4.5 லட்சத்தில் இருந்து 2018-ல் 5.2 லட்சமாக உயர்ந்து 2019-ல் சுமார் 5.86 லட்சமாக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றுநோயின் விளைவாக 2020-ல் இந்த எண்ணிக்கை 2.6 லட்சமாக வீழ்ச்சியடைந்தது.
மாணவர்களின் விருப்பமான நாடுகள்
இங்கிலாந்து: பிரிட்டன் அரசு இணையதளத்தில் கிடைக்கும் புள்ளிவிவரங்களின்படி, 2022-ல் இந்தியர்களுக்கு 1.4 லட்சம் ஸ்பான்சர் படிப்பு விசாக்களை வழங்கியது. 2022-ம் ஆண்டில் இங்கிலாந்தால் படிப்பதற்காக விசாக்கள் வழங்கப்பட்ட இரண்டாவது பெரிய எண்ணிக்கையாக சீன மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் 2019-ல், இங்கிலந்து பட்டதாரி பாதை (graduate route) எனப்படும் படிப்புக்கு பிந்தைய பணி விசாவை அறிவித்தது. இது இந்தியாவைச் சேர்ந்தவர்கள் உட்பட சர்வதேச மாணவர்கள் தங்கள் படிப்பை வெற்றிகரமாக முடித்த இரண்டு ஆண்டுகளுக்கு எந்த ஒரு தொழில் அல்லது பதவியிலும் வேலை செய்ய அல்லது வேலை தேட அனுமதித்தது.
கனடா: 2019 ஆம் ஆண்டு நிலவரப்படி, கனடாவில் 2.2 லட்சத்திற்கும் அதிகமான இந்திய கல்வி விசா அனுமதி வைத்திருப்பவர்கள் உள்ளனர். இது கனடாவின் வெளிநாட்டு மாணவர் மக்கள் தொகையில் 34 சதவீதமாகும். 2021-ம் ஆண்டில், தொற்றுநோய் காரணமாக கனடா வெளிநாட்டவர் பயணம் செய்யத் தடையை விதித்ததால், பல இந்திய மாணவர்கள், குறிப்பாக பஞ்சாபில் இருந்து, ரஷ்யா, செர்பியா, கத்தார் மற்றும் துபாய் வழியாக அந்த நாட்டிற்குச் செல்ல முயன்றனர்.
2021-ம் ஆண்டில் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகியவை சர்வதேச மாணவர்களுக்கு தங்கள் எல்லைகளை மூடியது என்பதும் கனடாவிற்கு இந்திய மாணவர்களின் இடம்பெயர்வு அதிகரிப்பிற்கு பங்களித்தது என்று குடியேற்ற வணிக நிபுணர்கள் தெரிவித்தனர்.
உக்ரைன், சீனா: ரஷ்ய படையெடுப்பு உக்ரைனில் உள்ள சுமார் 18,000 இந்திய மருத்துவ மாணவர்களின் எதிர்காலத்தை நெருக்கடியில் ஆழ்த்தியுள்ளது. தொற்றுநோய் தாக்குதலுக்குப் பிறகு, சீனாவில் படிக்கும் சுமார் 23,000 இந்திய மருத்துவ மாணவர்கள் அந்த நாட்டிற்குத் திரும்ப முடியவில்லை என்று கூறப்படுகிறது. இருப்பினும், ஆகஸ்ட் 2022-ல் சீனா மாணவர் விசாக்களை அனுமதித்த நிலையில், அவர்களில் சுமார் 6,200 பேர் விசா பெற்றதாகக் கூறப்படுகிறது.
பிற நாடுகள்: இந்தியர்களுக்கான மாணவர் விசாக்களை தாராளமாக்க பல நாடுகள் இப்போது குறிப்பிட்ட முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.
2019-ல், பிரான்சில் 10,000 இந்திய மாணவர்கள் இருந்தனர்; 2025-ம் ஆண்டிற்குள் 20,000 இந்திய மாணவர்களை ஈர்ப்பதை அந்நாடு இலக்காகக் கொண்டுள்ளது. ஜூலை 2021-ல், முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட இந்திய மாணவர்கள் தடையின்றி நாட்டிற்கு செல்லலாம் என்று பிரான்ஸ் அறிவித்தது.
கிரீஸ் நாடு அதிகாரப்பூர்வமாக கிரீஸில் கல்வி (Study in Greece) தளத்தின் மூலம் இந்திய கல்வி நிறுவனங்களுக்கு அதன் விரிவாக்கத்தை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. 2022-2026 ஆண்டுக்கான கலாச்சார மற்றும் கல்வி பரிமாற்ற திட்டத்தில் இரு நாடுகளும் கையெழுத்திட்டுள்ளன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“