Advertisment

உக்ரைன் போர்; கச்சா எண்ணெய் விலை உயர்வு, இந்திய பொருளாதாரத்தை எவ்வாறு பாதிக்கும்?

ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையிலான பதற்றம் காரணமாக கடந்த இரண்டு மாதங்களாக எண்ணெய் விலை உயர்ந்து வருகிறது. உக்ரைனில் போர் தொடுக்க ரஷ்ய அதிபர் புதின் அனுமதி அளித்துள்ளதால், பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை இன்று பீப்பாய் 100 டாலரை தாண்டியது. இது இந்தியப் பொருளாதாரத்தை எப்படிப் பாதிக்கும்?

author-image
WebDesk
New Update
உக்ரைன் போர்; கச்சா எண்ணெய் விலை உயர்வு, இந்திய பொருளாதாரத்தை எவ்வாறு பாதிக்கும்?

Sandeep Singh , Karunjit Singh

Advertisment

Ukraine invasion: How jump in crude prices will impact Indian economy: உக்ரைனில் உள்ள டான்பாஸ் பகுதியில் ராணுவ நடவடிக்கைக்கு அங்கீகாரம் அளித்து ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அறிவித்ததைத் தொடர்ந்து, செப்டம்பர் 2014க்குப் பிறகு முதல் முறையாக வியாழன் அன்று ப்ரெண்ட் கச்சா எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு $100ஐத் தாண்டியது. வியாழன் அன்று ராணுவ நடவடிக்கை அறிவிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே, உக்ரைனின் தலைநகரான கிய்வில் விடியற்காலையில் வெடிச்சத்தம் கேட்டது.

மேற்கத்திய நாடுகள் இந்த நடவடிக்கையை "தூண்டப்படாத" மற்றும் "நியாயமற்ற" தாக்குதல் என்று குறிப்பிட்டாலும், கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது மற்றும் பங்குச் சந்தைகள் உலகளவில் வீழ்ச்சியடைந்துள்ளன. டிசம்பர் 1, 2021 முதல் கச்சா எண்ணெய் விலை $70.4 ஆக வர்த்தகம் செய்யப்பட்டு வந்தநிலையில் தற்போது, 40 சதவீதம் உயர்ந்து $101.2 (காலை 10.10 மணி IST) ஆக உள்ளது, ​​BSE இன் பெஞ்ச்மார்க் சென்செக்ஸ் 1,750 புள்ளிகளுக்கு மேல் சரிந்து 55,504 ஆக குறைந்து (காலை 10.10 மணி IST) மற்றும் நாளின் முடிவில் 55,148 ஆக இருந்தது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூபாய் 40 பைசா அல்லது 0.5 சதவீதம் சரிந்து 75.1 ஆக உள்ளது.

ஜனவரி முதல் பிப்ரவரி வரையிலான காலக்கட்டத்தில், FPIகள் இந்திய பங்குகளில் இருந்து 51,703 கோடி ரூபாயை வெளியேற்றியுள்ளன.

கச்சா எண்ணெய் விலை ஏன் உயர்ந்தது?

உக்ரைனில் ரஷ்யாவின் படையெடுப்பு மற்றும் உக்ரைனில் உள்ள டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் ஆகிய பிரிவினைவாத பகுதிகளுக்கு புதின் படைகளை அனுப்பியதைத் தொடர்ந்து, கச்சா எண்ணெய் விநியோகத்தில் இடையூறுகள் ஏற்படும் என்ற அச்சத்தால் இந்த அதிகரிப்பு முதன்மையாக ஏற்பட்டுள்ளது.

உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு உலகளாவிய கச்சா விநியோகத்தை சீர்குலைப்பது மட்டுமல்லாமல், அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் பொருளாதாரத் தடைகளுக்கும் வழிவகுக்கும். உலகின் இரண்டாவது பெரிய எண்ணெய் உற்பத்தியாளரான ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையிலான பதட்டத்தைத் தொடர்ந்து, விநியோகம் குறித்த கவலைகளால் கடந்த இரண்டு மாதங்களாக எண்ணெய் விலைகள் அதிகரித்து வருகின்றன.

ஓமிக்ரான் அலை தணிந்த பிறகு உலகப் பொருளாதாரம் திறக்கப்பட்டு இயல்பு நிலைக்கு வந்ததைத் தொடர்ந்து தேவைக்கும் வழங்கலுக்கும் இடையே வளர்ந்து வரும் ஏற்றத்தாழ்வு குறித்தும் கவலை இருந்து வருகிறது.

தேதியிடப்பட்ட ப்ரெண்ட் கச்சா எண்ணெய் விலை அல்லது குறிப்பிட்ட தேதிகளில் விநியோகிக்கப்படும் வட கடல் கச்சா எண்ணெய் சரக்குகளின் விலை ஏற்கனவே ஒரு பீப்பாய்க்கு $100ஐத் தாண்டிவிட்டது. எஸ்&பி குளோபல் பிளாட்ஸ் நிறுவிய தேதியிட்ட ப்ரெண்ட் பெஞ்ச்மார்க் பிப்ரவரி 16 அன்று ஒரு பீப்பாய்க்கு $100.8 ஐ எட்டியது, இது செப்டம்பர் 2014 க்குப் பிறகு அதன் அதிகபட்ச அளவு.

இந்த விலை உயர்வு இந்தியப் பொருளாதாரத்தை எப்படிப் பாதிக்கும்?

பணவீக்க தாக்கம் இருக்கும். இந்தியா தனது எண்ணெய் தேவையில் 80% க்கும் அதிகமாக இறக்குமதி செய்கிறது, ஆனால் அதன் மொத்த இறக்குமதியில் இந்தியா பயன்படுத்தக் கூடிய எண்ணெய் இறக்குமதியின் பங்கு சுமார் 25% ஆகும். அதிகரித்து வரும் எண்ணெய் விலைகள் நடப்புக் கணக்கு பற்றாக்குறையை பாதிக்கும். நடப்பு கணக்கு பற்றாக்குறை என்பது இறக்குமதி மற்றும் ஏற்றுமதி செய்யப்படும் பொருட்கள் மற்றும் சேவைகளின் மதிப்புகளுக்கு இடையிலான வேறுபாடு ஆகும்.

இதையும் படியுங்கள்: ரஷ்ய படையெடுப்பு; வான்வெளியை மூடிய உக்ரைன்; இந்தியர்களை மீட்கும் விமான திட்டத்தின் நிலை என்ன?

கச்சா எண்ணெய் விலை உயர்வு, எல்பிஜி மற்றும் மண்ணெண்ணெய் மீதான மானியத்தை அதிகரிக்கவும், மானியக் கட்டணத்தை உயர்த்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

கச்சா எண்ணெய்யின் விலை உயர்வு நுகர்வோரை எவ்வாறு பாதிக்கிறது?

2021 ஆம் ஆண்டில் நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் அதிகரித்ததற்கு கச்சா எண்ணெய் விலை உயர்ந்ததுதான் காரணம். நவம்பரில் மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை லிட்டருக்கு ரூ.5 மற்றும் ரூ.10 குறைத்ததால் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் சரிந்தன. மேலும் பெரும்பாலான மாநிலங்கள் மதிப்பு கூட்டப்பட்ட வரியை குறைத்து பெட்ரோல் மற்றும் டீசல் விலையை இன்னும் குறைத்தன.

தேசிய தலைநகரில் தற்போது பெட்ரோல் மற்றும் டீசல் முறையே லிட்டருக்கு ரூ.95.3 மற்றும் ரூ.86.7 ஆக விற்பனை செய்யப்படுகிறது. நவம்பரில் வரிக் குறைப்புகளுக்குப் பிறகு, எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்கள் விலைகளைத் திருத்தவில்லை, நவம்பர் தொடக்கத்தில் ப்ரெண்ட் கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய்க்கு சுமார் $84.7 இல் இருந்து டிசம்பர் தொடக்கத்தில் $70 க்குக் கீழே சரிந்தது. நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் கச்சா எண்ணெய் விலை சரிந்ததன் முழுப் பலனையும் நுகர்வோர் பெறாவிட்டாலும், இப்போது கச்சா எண்ணெய் விலை உயர்ந்தால், எரிபொருள் விலை உயரக்கூடும்.

முதலீட்டாளர்களின் உணர்வு மற்றும் சந்தைகளில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தலாம்?

கச்சா எண்ணெய் விலை உயர்வுக்கு ஏற்ப கடந்த சில நாட்களாக முதலீட்டாளர்களின் மனநிலை பாதிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு போர்ட்ஃபோலியோ முதலீட்டாளர்கள் நிகர விற்பனையாளர்களாக மாறி, ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களுக்கு இடையில் இந்திய பங்குகளில் இருந்து 51,703 கோடி ரூபாயை வெளியேற்றியுள்ளனர், இது பங்குச் சந்தைகளில் சரிவு மற்றும் ஏற்ற இறக்கத்திற்கு வழிவகுத்தது.

ஜனவரி 12 அன்று ஒரு பீப்பாய்க்கு 73.8 டாலரிலிருந்து டாலருக்கு எதிராக ரூபாய் 1.7% சரிந்து வியாழன் அன்று 75.09 டாலரை எட்டியது.

புவிசார் அரசியல் அக்கறையால் சந்தைகள் சமீப காலத்தில் நிலையற்றதாக இருக்கும் என்று நிதி மேலாளர்கள் கூறுகின்றனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Ukraine Explained Crude Oil Prices
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment