எனர்ஹோடாரில் உள்ளது ஜபோரிஜ்ஜியா - இது உக்ரைனின் வடமேற்குப் பகுதியில் உள்ள நகரம். இது கார்கிவ் நகர் அருகில்ம் கீவ் நகருக்கு தென்கிழக்கே சுமார் 550 கிமீ தொலைவிலும் உள்ளது. இது ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின் நிலையம் மட்டுமல்ல, உலகின் 10 மிகப்பெரிய அணுமின் நிலையங்களில் ஒன்றாகும்.
ரஷ்யா - உக்ரைன் படைகளுக்கு இடையே நடந்த சண்டையைத் தொடர்ந்து ஜபோரிஜ்ஜியாவில் அமைந்துள்ள ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின் நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டதாக உக்ரைன் அரசு அவசர சேவை வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.
ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம், அனுமின் நிலைய வளாகத்தில் உள்ள ஒரு பயிற்சி கட்டிடம் தீப்பிடித்தது, அதிர்ஷ்டவசமாக, அணு உலைகள் தாக்கப்படவில்லை. இதுவரை உயர்ந்த கதிர்வீச்சு அளவுகள் எதுவும் இல்லை. எப்படி இந்த சம்பவம் நடைபெற்றது எவ்வாறு வெளிப்பட்டன மற்றும் தீ விபத்தால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து கவனித்து வருகிறோம் என்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த அணுமின் நிலையம் எவ்வளவு பெரியது?
எனர்ஹோடாரில் உள்ளது ஜபோரிஜ்ஜியா - இது உக்ரைனின் வடமேற்குப் பகுதியில் உள்ள நகரம். கார்கிவ் அருகேயும் கீவ் நகருக்கு தென்கிழக்கே சுமார் 550 கிமீ தொலைவில் உள்ளது இந்த நகரம். இது ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின் நிலையம் மட்டுமல்லாமல், உலகின் 10 மிகப்பெரிய அணுமின் நிலையங்களில் ஒன்று. இது உக்ரைனில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தில் ஐந்தில் ஒரு பங்கு மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது. இந்த அணுமின் நிலையத்தில் ஆறு VVER-1000 அழுத்தப்பட்ட இலகு நீர் அணு உலைகள் (PWR) உள்ளன. ஒவ்வொன்றும் 950 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்கிறது. மொத்த மின் உற்பத்தி 5,700 மெகாவாட் ஆகும். இது கூடங்குளம் அணுமின் நிலையத்தைவிட கிட்டத்தட்ட மூன்று மடங்கு பெரியது - இது 2,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் திறன் கொண்டது. இரண்டு செயல்பாட்டில் VVER-1000 அலகுகள் ஜபோரிஜ்ஜியாவில் உள்ளதைப் போலவே உள்ளன, ஆனால், இது புதுப்பிக்கப்பட்ட வகை ஆகும்.
ரஷ்யாவின் தாக்குதலைத் தொடர்ந்து ஜபோரிஜ்ஜியா அணுமின் நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டதை அடுத்து, உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி அணுசக்தி பேரழிவை தடுக்க ஐரோப்பாவிற்கு அழைப்பு விடுத்தார்.
தீயினால் என்ன ஆபத்துகள் ஏற்பட்டன?
ராய்ட்டர்ஸ் மூலம் சரிபார்க்கப்பட்ட அணுமின் நிலையத்தின் வீடியோவில், அணுமின் நிலைய வளாகத்தில் உள்ள ஒரு கட்டிடத்தின் அருகே ஷெல் மற்றும் புகை எழுவதைக் காட்டுகிறது. “ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின் நிலையமான ஜபோரிஜ்ஜியா அணுமின் நிலையம் மீது ரஷ்ய ராணுவம் எல்லாப் பக்கங்களிலிருந்தும் துப்பாக்கிச் சூடு நடத்துகிறது. ஏற்கனவே, தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அது வெடித்தால், அது செர்னோபிலை விட 10 மடங்கு பெரியதாக இருக்கும்! ரஷ்யர்கள் உடனடியாக துப்பாக்கிச்சூடு நடத்துவதை நிறுத்த வேண்டும். தீயணைப்பு வீரர்களை அனுமதிக்க வேண்டும். பாதுகாப்பு மண்டலத்தை நிறுவ வேண்டும் என்று உக்ரைன் வெளியுறவு அமைச்சர் டிமிட்ரோ குலேபா ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
ஜபோரிஜ்ஜியா அணுமின் நிலையத்தில் உள்ள அத்தியாவசிய கருவிகள் தீயினால் பாதிக்கப்படவில்லை என்று உள்ளூர் அதிகாரிகள் ஏஜென்சிக்கு தகவல் அளித்துள்ளதாக ஐ.நா.வின் அணு கண்காணிப்பு அமைப்பு ஐ.ஏ.இ.ஏ கூறியுள்ளது. ஜபோரிஜ்ஜியா அணுமின் நிலையத்தின் தளத்தில் ஏற்பட்ட தீ விபத்து அத்தியாவசிய உபகரணங்களை பாதிக்கவில்லை என்று உக்ரைன் ஐ.ஏ.இ.ஏ-விடம் கூறியுள்ளது. அணுமின் நிலைய பணியாளர்கள் இடம்பெயர்வு நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர் என்று சர்வதேச அணுசக்தி நிறுவனம் ஒரு ட்வீட்டில் தெரிவித்துள்ளது. ஜபோரிஜ்ஜியா அணுமின் நிலையத்தில் பின்னணி கதிர்வீச்சு அளவு மாறாமல் உள்ளது என்று அணுமின் நிலைய செய்தித் தொடர்பாளர் கூறியதாக ஆர்.ஐ.ஏ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அமெரிக்க எரிசக்தி செயலர் ஜெனிபர் கிரான்ஹோல்ம், அணு மின் நிலையத்தில், உயர் கதிர்வீச்சு அளவுகள் எதுவும் இல்லை என்றார். அமெரிக்க அதிபர் ஜோ பைடனும், அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியுடன் பேசி, தீ விபத்து குறித்த தகவல்களைப் பெற்றதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. பைடன் ஜெலென்ஸ்கி உடன் இணைந்து, “ரஷ்யா தனது ராணுவ நடவடிக்கைகளை அந்தப் பகுதியில் நிறுத்த வேண்டும். தீயணைப்பு வீரர்கள் மற்றும் அவசரகால நடவடிக்கை எடுப்பவர்கள் அந்த இடத்தை அணுக அனுமதிக்க வேண்டும” என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் கூறியுள்ளதை மேற்கோள் காட்டியுள்ளனர். அமெரிக்க எரிசக்தித் துறையின் அணுசக்தி பாதுகாப்புக்கான துணைச் செயலாளரிடமிருந்து நிலைமை பற்றிய விவரங்கலை உடனுக்குடன் பைடன் பெற்று வருகிறார்.
இதில் உள்ள ஆபத்துகள் என்ன?
தீ பரவினால் பிரச்சனை ஏற்படும். செர்னோபில் வெளியிட்ட கதிரியக்கத்தை போல இல்லாமல், இந்த அணுமின் உற்பத்தி நிலையம் கதிரியக்கத்தை உருவாக்க வாய்ப்பில்லை. ஆனால் இது ஃபுகுஷிமாவுக்கு முந்தைய அணுமின் நிலையம் என்பதால், பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் பணி நடவடிக்கைகள் புதிய VVER-அடிப்படையிலான அணுமின் நிலையங்களைப் போல வலுவாக இல்லை. அதைப் போன்ற ஒரு அணுமின் நிலையம் கூடங்குளத்தில் உள்ளது.
எரிபொருள் கலன் தாக்கப்பட்டாலோ அல்லது பாதிக்கப்பட்டாலோ மிகப்பெரிய பிரச்சனை என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இது பொதுவாக அணுமின் நிலையத்தின் கலவைக்கு அருகில் உள்ளது. அங்கு செலவழிக்கப்பட்ட - அல்லது பயன்படுத்தப்பட்ட - எரிபொருள் சேமிக்கப்படுகிறது. எரிபொருள் கலனிற்கான பாதுகாப்பு அம்சங்கள் பொதுவாக அணுமின் நிலையத்திற்கு இருப்பதைப் போல வலுவானது அல்ல.
அணுமின் நிலையத்தைத் தாக்குவதை நிறுத்துமாறு ரஷ்யப் படைகளை ஐ.ஏ.இ.ஏ வலியுறுத்தியுள்ளது. அணு உலைகள் தாக்கப்பட்டால் கடுமையான ஆபத்து ஏற்படும் என்று எச்சரித்துள்ளது. ஐ.ஏ.இ.ஏ தலைமை இயக்குநர் ரஃபேல் எம் கிராஸ்ஸி உக்ரைன் பிரதமர் டேனிஸ் ஷ்மைகல் மற்றும் உக்ரைனின் அணுசக்தி ஒழுங்குபடுத்துபவர் மற்றும் ஆபரேட்டருடன் ஜபோரிஜ்ஜியா அணுமின் நிலையத்தின் தீவிர நிலைமை குறித்து பேசுகிறார். படைகள் தாக்குதல் நடத்துவதை நிறுத்துமாறு முறையிட்டுள்ள அவர், உலைகளை தாக்கினால் கடுமையான ஆபத்து ஏற்படும் என எச்சரித்துள்ளார்” என்று செய்தி நிறுவனம் ட்வீட் செய்துள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.