மறுஆய்வில் சபரிமலை தீர்ப்பு, காத்திருக்கும் சட்டப் போர்

உச்சநீதி மன்றத்தை பொறுத்த வரையில் ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட நீதிபதிகள் அடங்கிய அமர்வு தாமதமாகும் என்ற கருத்தும் உள்ளது.

By: November 17, 2019, 1:33:08 PM

APURVA VISHWANATH

சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் தரிசனம் செய்யலாம் என்று கடந்த வருடம் தீர்ப்பளித்த உச்சநீதி மன்ற தீர்ப்பு தற்போது மறு ஆய்வுக்கு உட்படுத்தப் பட்டிருக்கிறது.மத நடைமுறைகளின் அத்தியாவசியம் மற்றும் அரசியலமைப்பு ஒழுக்க நெறி போன்ற பரந்த பிரச்சனைகளை அதிக நபர்களை கொண்ட ஒரு அமர்வு ஆராயும் வரை சபரிமலை தொடர்பான தனது முந்தைய தீர்ப்பை ஒத்தி வைத்துள்ளது.

இதற்கு முன்பு எழுதப் பட்ட தீர்ப்பை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோக்காய் நீதிபதிகள் கான்வில்கர் மற்றும் இந்து மல்ஹோத்ரா போன்றவர்கள் எழுதினர். இந்த தீர்ப்பில் மாதவிடாய் வரும் வயதுடைய பெண்கள் சபரிமலை கோவிலுக்குள் நுழைவதை தடுக்கும் நடைமுறை இந்திய அரசியலமைப்பு சட்டத்துக்கு முரணாக இருப்பதாக நீதிபதிகள் குறிப்பிட்டிருந்தனர்.இது குறித்து விவாதங்கள் துவங்கிய நிலையில் இளம் பெண்களை சபரிமலைக்கு அனுமதிப்பதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் சீரானாய்வு மனுக்கள் தாக்கல் செய்யப் பட்டன. இதை விசாரித்த நீதிபதிகள் அமர்வு மதம் சார்ந்த பிரச்சனைகள், அரசியலமைப்பு விதிகள் குறித்து முடிவுகள் எடுக்க 5 க்கும் மேற்பட்ட நீதிபதிகள் அடங்கிய ஒரு அமர்வே முடிவெடுக்க முடியும் . எனவே ஏற்கனவே எழுதப் பட்ட தீர்ப்பு மீண்டும் பெரும்பான்மை நீதிபதிகள் அடங்கிய அமர்வால் மட்டுமே மறுஆய்வுக்கு உட்படுத்தப் பட முடியும் என தீர்ப்பளித்துள்ளது. அதே நேரத்தில் உச்சநீதி மன்றத்தை பொறுத்த வரையில் ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட நீதிபதிகள் அடங்கிய அமர்வு தாமதமாகும் என்ற கருத்தும் உள்ளது.

பொதுவாக இந்தியாவில் வழிபாட்டு தலங்களில் பெண்கள் நுழைவது என்பது சபரிமலையுடன் மட்டுமே இல்லை. தர்க்காவில் முஸ்லீம் பெண்கள் நுழைவது தொடர்பாகவும் பல்வேறு சர்ச்சைகள் ஏற்கனவே இருக்கின்றன. பார்சி இனத்தை சேர்ந்த ஒரு பெண் பார்சி அல்லாத ஒரு ஆணை திருமணம் செய்தால் அவர்களும் அவர்களது வழிபாட்டு தலமான அக்யாரிக்குள் நுழைவதும் அந்த மாதத்தில் கடைப்பிடிக்கப் பட்டு வருகிறது என்றும் நீதிபதிகள கூறியுள்ளனர்.

இது தவிர எதில்காலத்தில் விவாதிக்க வேண்டிய இன்னும் பல்வேறு சமூக பழக்க வழக்கங்கழும் நீதிமன்றம் முன்பு இருப்பதாக குறிப்பிட்டிருக்கும் நீதிபதிகள் அதற்கு பல்வேறு உதாரணங்களையும் கூறியுள்ளனர். இந்தியாவில் வாழும் தாவூதி போஹ்ரா எனும் இனத்தில் பெண்களின் பிறப்புறுப்பை சிதைக்கும் வழக்கம் உள்ளது. இந்த நடைமுறை அவர்களுடைய மதத்துக்கு உட்பட்டே நடப்பதாக கூறப்படுகிறது. இது குறித்து அரசியலமைப்பு சட்டமோ, நீதி மன்றமோ என்ன சொல்ல முடியும் என்பதும் இன்னும் முடிவு செய்யப் படவில்லை என்றும் நீதிபதிகள் தமது கருத்தை தெரிவித்துள்ளனர்.

இது போன்ற சர்ச்சைக்குரிய வழக்குகளை ஒன்றிணைக்க இந்திய தலைமை நீதிபதிக்கு அதிகாரம் உள்ளது. ஆனாலும் நீதிமன்றத்தில் முழு விசாரணைக்கு உட்படுத்தப் படாத ஒரு நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்துவது என்பது எளிதானது அல்ல. அதாவது பல்வேறு வழக்குகளை ஒன்றிணைத்தது ஒரு நீதிமன்ற உத்தரவை நீதி மன்றங்கள் பிறப்பிப்பது மிக அரிதானது. முஸ்லீம் பெண்கள் மசூதிக்குள் நுழைவது தொடர்பான வழக்கு நீதிபதி போப்டே தலைமையிலான இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன்பு காத்திருக்கிறது. பெண் பிறப்புறுப்பு சிதைவு தொடர்பான வழக்கும், பார்சி பெண்களின் அடிப்படை உரிமைகள் தொடர்பான வழக்கும் அரசியல் சாசன அமர்வுக்காக காத்திருக்கின்றன. இதில் வேதனையான விஷயம் என்னவென்றால் இந்த அமர்வுகள் இன்னும் அமைக்கப் படவே இல்லை என்பது தான்.

பெரும்பான்மை நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு ஏழு காரணிகளை கவனிக்க வேண்டியதுள்ளது. இதில் நீதிபதிகள் சமநிலையுடன் அரசியலமைப்பின் 25 மற்றும் 26 பிரிவுகளின் கீழ் மத சுதந்திரத்தை பிற அடிப்படை உரிமைகளுடன் இணைப்பது, சமத்துவ உரிமையுடன்செயல்படுவது ஒழுக்க நெறி மற்றும் அத்தியாவசிய மத நெறி முறைகள் குறித்த நீதிமன்ற முடிவுகளை மறுபரிசீலனை செய்வது போன்றனவற்றையும் அமர்வு கணக்கில் கொள்ளுவது வழக்கம்.

அரசியலமைப்பில் அறநெறி என்று தனியாகவும், அரசியலமைப்பு அறநெறி என்று தனியாகவும் வரையறுக்கப் படவில்லை. கடந்த 2018ம் ஆண்டு வழங்கப்பட்ட சபரிமலை தீர்ப்பில் அப்போதைய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தனது தீர்ப்பில் அரசியலமைப்பின் 25 வைத்து பிரிவில் அறநெறி என்பதை வரையறுத்தது. விதிகளுக்கு உட்பட்டு அனைத்து நபர்களும் மனசாட்சி படி சுதந்திரமாக செயல் பாடவும் தமது மதம் சார்ந்த விஷயங்களை வெளியிடவும், அவற்றை நடைமுறைப்படுத்தவும் உரிமை உண்டு என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த தீர்ப்பில் 25 ம் பிரிவு 1 ல் அடிப்படை உரிமைகளை மீறும் பொது அறநெறி என்ற சொல் இயற்கையாகவே அரசியலமைப்பு ஒழுக்கத்தை குறிக்கிறது என்பதையும் அரசியலமைப்பு என்பது நீதிமன்றங்களின் பார்வைக்குட்பட்டதாக இருக்க வேண்டும் என்பதையும் நினைவு படுத்த வேண்டும் என்றே குறிப்பிடுகின்றது.

இதைப் போன்றே கடந்த 2018 ல் இவர் ஹோமோசெக்ஸ் அரசியலமைப்பு சட்டப் படி தவறாகாது என்றும் இதை சமன் செய்ய வேண்டிய பொறுப்பு சமூகத்துக்கு உள்ளது என்றும் தனது தீர்ப்பில் சொல்லியிருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது. எந்த ஒரு மதம் சார்ந்த நம்பிக்கையையும் நீதி மன்றத்துக்கு கொண்டு வருவதை விட ஒரு மதத்தின் தலைவர் பொறுப்பில் விட்டு விடுவது நல்லது என்பதும் அரசியல் சாசன அமர்வின் முடிவாக இருக்கலாம் என்ற விமர்சனமும் இப்போது பரவி வருகிறது.

சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு இளம்பெண்களும் வரலாம் என்று உச்ச நீதிமன்றம் கொடுத்த தீர்ப்புக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்த போதும் மறு சீராய்வு படி உறுதியான நிலைப்பாடு எடுக்கலாம் என்றும் மறு சீராய்வில் பெரும்பான்மை நீதிபதிகளின் தீர்ப்பே இறுதியானது என்று சொல்லியிருப்பதும் இந்து மதத்தினரிடையே பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. உச்ச நீதி மன்றத்தின் இந்த நிலைப்பாடு ஒரு சட்டப் போரை உருவாக்கியிருக்கிறது என்பதே உண்மை.

தமிழில்: த.வளவன்

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Explained News by following us on Twitter and Facebook

Web Title:Sabarimala women entry supreme court verdict legal battle

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X