Advertisment

அரசாங்கத்தின் புதிய உடனடி செய்தி தளமான சாண்டஸ் என்றால் என்ன?

Sandesh instant messaging platform இந்த புதிய என்ஐசி தளத்தை மொபைல் எண் அல்லது மின்னஞ்சல் ஐடி உள்ள எவரும் பயன்படுத்தலாம்.

author-image
WebDesk
New Update
Sandesh the governments new instant messaging platform Tamil News

Sandesh instant messaging platform

What is Sandesh instant messaging platform Tamil News : தேசிய தகவல் மையம் வாட்ஸ்அப் வரிசையில் சாண்டஸ் என்ற உடனடி செய்தி தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. வாட்ஸ்அப்பைப் போலவே, இந்த புதிய என்ஐசி தளத்தை மொபைல் எண் அல்லது மின்னஞ்சல் ஐடி உள்ள எவரும் பயன்படுத்தலாம்.

Advertisment

இந்த உடனடி செய்தி தளத்தை என்ஐசி ஏன் அறிமுகப்படுத்தியது?

கோவிட் -19 பரவுவதைக் கட்டுப்படுத்த 2020 மார்ச்சில் நாடு தழுவிய லாக் டவுனைத் தொடர்ந்து, பெரும்பாலான ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலை செய்யும் போது மக்களிடையே பாதுகாப்பான தகவல்தொடர்புகளை உறுதி செய்வதற்கான ஒரு தளத்தை உருவாக்க வேண்டிய அவசியத்தை அரசாங்கம் உணர்ந்தது.

பாதுகாப்பு பயத்தைக் கருத்தில் கொண்டு, உத்தியோகபூர்வ தகவல்தொடர்புக்கு ஜூம் போன்ற தளங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க உள்துறை அமைச்சகம் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அனைத்து அரசு ஊழியர்களுக்கும் ஆலோசனையை வெளியிட்டது. கணினி அவசரநிலை பதிலளிப்பு குழு (Computer Emergency Response Team - செர்ட்-இன்), பாதுகாப்பு மற்றும் தனியுரிமை கவலைகள் குறித்து ஜூமுக்கு எதிராக ஓர் ஆலோசனையை வெளியிட்ட பின்னர் இது நிகழ்ந்தது.

அரசாங்க ஊழியர்களுக்காக மட்டுமே அர்ப்பணிக்கப்பட்ட ஒரு பாதுகாப்பான தகவல் தொடர்பு நெட்வொர்க்குக்கான யோசனை கடந்த நான்கு ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்த யோசனையை நிறைவேற்றுவது கடந்த ஆண்டில் துரிதப்படுத்தப்பட்டது என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

ஆகஸ்ட் 2020-ல், இந்தப் பயன்பாட்டின் முதல் பதிப்பை என்ஐசி வெளியிட்டது. அதன் பிறகு இந்தப் பயன்பாட்டை மத்திய மற்றும் மாநில அரசு அதிகாரிகள் "உள் மற்றும் வெளியே அமைப்புக்கு இடையேயான தகவல்தொடர்புக்கு" பயன்படுத்தலாம் என்று கூறியது. இந்த பயன்பாடு ஆரம்பத்தில் ஆண்ட்ராய்டு பயனர்களுக்காகத் தொடங்கப்பட்டது. பின்னர் இந்த சேவை iOS பயனர்களுக்கும் நீட்டிக்கப்பட்டது.

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மென்பொருளைப் பயன்படுத்துவதற்கான அரசாங்க மூலோபாயத்தின் ஒரு பகுதிதான் இந்தப் பயன்பாட்டின் அறிமுகம். ஆரம்பத்தில் அரசு அதிகாரிகளுக்கு மட்டுமே இது கொடுக்கப்பட்டது. இப்போது பொது மக்களுக்கும் வெளியிடப்பட்டுள்ளது.

சாண்டஸ் எனப்படும் இந்த உடனடி செய்தியிடல் பயன்பாடு, தற்போது சந்தையில் கிடைக்கும் பல பயன்பாடுகளைப் போன்ற இன்டெர்ஃபேஸை கொண்டுள்ளது. சாட் வரலாற்றை இரண்டு தளங்களுக்கு இடையில் மாற்றுவதற்கான வழி இல்லை என்றாலும், அரசாங்க உடனடி செய்தி அமைப்புகள் அல்லது ஜிம்ஸில் உள்ள சாட்களை பயனர்களின் மின்னஞ்சலில் காப்புப் பிரதி எடுக்கலாம்.

சந்தையில் உள்ள பிற உடனடி செய்தியிடல் பயன்பாடுகளைப் போலவே, ஜிம்ஸும் சரியான மொபைல் எண் அல்லது மின்னஞ்சல் ஐடியைப் பயன்படுத்தி பயனரை முதல் முறையாகப் பதிவுசெய்கிறது. குழுவில் இணைவது, செய்தி ஒளிபரப்பு, செய்தி பகிர்தல் மற்றும் இமோஜிகள் போன்ற அம்சங்களையும் இது வழங்குகிறது.

மேலும், கூடுதல் பாதுகாப்பு அம்சமாக, ஒரு செய்தியை ரகசியமாகக் குறிக்கப் பயனரை அனுமதிக்கிறது. செய்தியை மற்றவர்களுடன் பகிரக்கூடாது என்பதைப் பெறுநருக்குத் தெரியப்படுத்த அனுமதிக்கும் அம்சம் உள்ளது. இருப்பினும், ரகசிய குறிச்சொல் ஒரு பயனரிடமிருந்து மற்றொரு பயனருக்குச் செய்தி அனுப்பும் முறையை மாற்றாது.

இருப்பினும், இதிலிருக்கும் வரம்பு என்னவென்றால், பயனரின் மின்னஞ்சல் ஐடி அல்லது பதிவு செய்யப்பட்ட தொலைபேசி எண்ணை மாற்றப் பயன்பாடு அனுமதிக்காது. பயன்பாட்டில் பதிவுசெய்யப்பட்ட மின்னஞ்சல் ஐடி அல்லது தொலைபேசி எண்ணை மாற்ற விரும்பினால் பயனர் புதிய பயனராக மீண்டும் பதிவு செய்ய வேண்டும்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"

Whatsapp
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment