அதிமுகவில் சசிகலா மீண்டும் இணையும் ஒப்பந்தம் எப்படி இருக்கும்?

சசிகலா அதிமுகவுக்கு திரும்புவது தமிழக அரசியலில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும், சசிகலாவின் அரசியல் மறு வருகை நடந்தால் அதிமுக அனைத்து தலைவர்கள் இடையே என்ன ஒப்பந்தம் நடக்கும் என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

sasikala re entry into aiadmk, aiadmk, sasikala,சசிகலா, அதிமுக, ஓ பன்னீர்செல்வம், ஓபிஎஸ், ஈபிஎஸ், எடப்பாடி பழனிசாமி, ops, eps, tamilnadu politics

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில், 4 ஆண்டுகள் சிறை தண்டனையை முடித்து பெங்களூரு சிறையில் இருந்து பிப்ரவரி மாதம் வெளியே வந்த சசிகலா, சட்டமன்றத் தேர்தலின் போது அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்தார். அப்போது, சசிகலா அதிமுகவுக்கு தலைமை தாங்குவார் என அவருடைய ஆதரவாளர்கள் எதிர்பார்த்த நிலையில் அவர் ஏன் அப்படி செய்தார் என்பது குறித்து தெளிவில்லை.

இருப்பினும், சமீபத்தில், சசிகலா கட்சிக்கு உரிமைகோரியதோடு அதிமுகவை வலிமைப்படுத்த முயற்சிப்பதாக தெரிவித்தார். சசிகலா அக்டோபர் 17ம் தேதி தன்னை ‘அதிமுக பொதுச் செயலாளர்’ என்று அறிவிக்கும் கல்வெட்டு திறக்கப்பட்டது.

சசிகலாவின் அரசியல் வாழ்க்கை

ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியாக அறியப்பட்ட சசிகலா, 1980களின் பிற்பகுதியில் இருந்து டிசம்பர் 5, 2016ம் ஆண்டு அவர் இறக்கும் வரை, 2011 ஆம் ஆண்டு ஜெயலலிதாவுடன் ஏற்பட்ட மோதலால் பதவியில் இருந்து நீக்கப்பட்ட 6 மாதங்கள் தவிர, கிட்டத்தட்ட எல்லா நாட்களிலும் ஜெயலலிதாவுடன் இருந்தார்.

நல்ல காலமோ அல்லது கெட்ட காலமோ, கட்சியின் கொள்கைகள் அல்லது அரசியல் முடிவுகள், கூட்டணிகள் அல்லது அரசியல் உத்திகள் மாற்றம் மற்றும் நிரூபிக்கப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகள் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் என ஜெயலலிதா செய்த எல்லாவற்றிலும் சசிகலா உடனிருந்தார் என்பது தெளிவாகத் தெரிந்தது.

தேர்தல் பொறியமைப்பில், அரசு நியமனங்கள் மற்றும் முக்கியமான அரசியல், சாதி, சமூகங்களின் உத்திகளில் எல்லாம் சசிகலா நேரடிப் பங்கு வகித்தார். கட்சியில் ஓ பன்னீர்செல்வமாக இருந்தாலும் சரி, எடப்பாடி பழனிசாமியாக இருந்தாலும் சரி, அவர்களுக்கு கட்சியில் உயர்மட்ட பதவி, அமைச்சரவையில் பதவி உயர்வு ஆகியவை சசிகலா இல்லாமல் நடக்கவில்லை. இருப்பினும், சசிகலா எப்போதும் எந்த ஒரு பொதுக்கூட்டத்திலும் அல்லது எந்த ஊடகத்திலும் பேட்டி அளிக்காமல் பேசாமல் திரைக்குப் பின்னால் இருந்தார்.

இறுதியாக, ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பிறகு, அவர் கட்சியின் தலைவராக – அதிமுக செயல் பொதுச் செயலாளராக உருவெடுத்தபோது, ​​மாநில அரசியலில் அவர் வளர்த்துவிட்ட அதே நபர்களிடமிருந்து எதிர்ப்பை சந்தித்தார்.

அவருடைய விசுவாசத்திற்காக சசிகலாவால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓ. பன்னீர்செல்வம்தான் முதல் எதிர்ப்புக் கொடியை உயர்த்தினார். இருப்பினும், சசிகலா அவரை நம்பிக்கை வாக்கெடுப்பில் தோற்கடித்து, அவரை முதலமைச்சர் பதவியில் இருந்து வெளியேற்றி, மற்றொரு தீவிர விசுவாசியான பழனிசாமியை 2017ம் ஆண்டின் தொடக்கத்தில் முதலமைச்சராக அமர்த்தினார். இவை அனைத்தும் அவர் சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறைக்குச் செல்வதற்கு முன்பு நடந்தது.

முன்பு பன்னீர்செல்வம் என்ன செய்தாரோ அதையேதான் சசிகலா சிறையில் இருந்தபோது பழனிசாமியும் செய்தார். அவர் சிறையில் அடைக்கப்பட்ட சில மாதங்களுக்குப் பிறகு, பெரும்பான்மை எம்.எல்.ஏ.க்களின் ஆதரவைப் பெற்றிருந்த பழனிசாமி தலைமையிலான அதிமுக தலைமையால் சசிகலா அதிமுகவிலிருந்து வெளியேற்றப்பட்டார், மேலும், பழனிசாமி பலவீனமான பன்னீர்செல்வத்துடன் கைகோர்த்தார். ஆனால், அவர் மத்தியில் ஆளும் சக்திவாய்ந்த பாஜகவால் ஆதரிக்கப்பட்டார்.

தற்போது, சசிகலா ​​சிறையிலிருந்து வெளியே வந்து சுமார் ஒன்பது மாதங்களுக்குப் பிறகு, 2024 மக்களவைத் தேர்தலில் கட்சியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்ல மீண்டும் அரசியலுக்கு வருவேன் என்று பேசியுள்ளார்.

சக்திவாய்ந்த பழனிசாமி மற்றும் ஓரங்கட்டப்பட்ட ஓ. பன்னீர்செல்வம் – அதிமுக தலைமை சசிகலாவை ஏற்குமா?

பல போராட்டங்களையும் சமரசங்களையும் கண்ட கட்சியாக இருப்பதால், சசிகலா விரைவில் அதிமுகவுக்கு திரும்பினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

சசிகலா, பன்னீர்செல்வத்துடன் ஏற்கனவே சமரசம் செய்துவிட்டதாக கட்சி மற்றும் சசிகலா முகாமில் உள்ள நம்பகமான வட்டாரங்கள் இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் தெரிவித்தன. “ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பிறகு, பாஜகவால் தனக்கு எதிராகக் கிளர்ச்சி செய்ய ஓ.பன்னீர்செல்வம் நிர்ப்பந்திக்கப்பட்டதை சசிகலா அறிவார். விடுதலையான பிறகு தனிப்பட்ட முறையில் சந்தித்துப் பேசினார்” என்று சசிகலாவின் நெருங்கிய உதவியாளர் தெரிவித்தார்.

சசிகலாவை மீண்டும் கட்சியில் சேர்ப்பது குறித்து கட்சித் தலைமை மற்றும் தலைமை நிர்வாகிகள் முடிவு செய்வார்கள் என்று பன்னீர்செல்வம் கூறியபோது இந்தக் பேச்சுகள் நம்பகத் தன்மையைப் பெற்றுள்ளது.

இதுவும் அதிமுகவில் ஏற்பட்டுள்ள மோதலை வெளிப்படுத்துகிறது. சசிகலா மீண்டும் கட்சிக்கு திரும்புவதற்கான வாய்ப்பை நிராகரிக்க பன்னீர்செல்வம் மறுத்தபோது, ​​பழனிசாமியும் அவரது முகாமும் தொடர்ந்து அத்தகைய பேச்சுக்களை எதிர்த்தனர்.

எதுவும் நடக்கலாம் என அதிமுக வட்டாரங்கள் தெரிவித்தன. மூத்த தலைவர்கள், பழனிசாமியும் சசிகலா மீண்டும் வருவதை எதிர்க்கலாம். ஆனால், அது ஒரு ஒப்பந்தம் பற்றிய தெளிவுடன் மாறக்கூடும் என்று கூறினார்.

“நீங்கள் பொறுத்திருந்து பாருங்கள். டெல்லியில் இருந்து விரைவில் இது தொடர்பான செய்தியை பழனிசாமி பெறுவார். அவருடைய அதிகாரம் அப்படியே இருந்தால், அவரும் ஒப்புக்கொள்ளலாம்” என்று பழனிசாமிக்கு நெருக்கமான மூத்த தலைவர் ஒருவர் கூறினார்.

சசிகலாவின் மறு வருகை நடந்தால் என்ன ஒப்பந்தம் நடக்கும்?

அதிமுகவின் அரை டஜன் தலைவர்களும், சசிகலாவின் சில நெருங்கிய கூட்டாளிகளும், அவர் கட்சிக்கு திரும்புவது, பழனிசாமி மற்றும் ஓ. பன்னீர்செல்வத்தின் முக்கிய தலைமைத்துவத்தை பாதிக்காத உடன்படிக்கையாக இருக்கும் என்று கூறியுள்ளனர். சசிகலா மீண்டும் சேர்க்கப்பட்டு வழிகாட்டியாக செயல்படலாம்; இருப்பினும், அத்தகைய பேரத்தில் அவருடைய அக்கா மகன் டிடிவி தினகரன் உடனடியாக பாதிக்கப்படுவார் என்று அந்த மூத்த தலைவர் கூறினார்.

“சசிகலா தொடர்ந்து திரைமறைவில் செயல்படும் அதே வேளையில், கட்சியின் முகமாக பழனிசாமி தொடரட்டும், தினகரன் அதிமுகவின் கனிமொழியாக மாறக்கூடும். அவரை ராஜ்யசபா பதவியுடன் டெல்லிக்கு அனுப்பலாம். இதுவே பழனிசாமியின் முன் இருக்கும் பெரிய வாய்ப்பு” என்கிறார் ஒரு மூத்த தலைவர்.

அதிமுகவின் மற்றொரு மூத்த தலைவர் சசிகலா திரும்புவதில் முழு உடன்பாடு இருப்பதாக கூறினார். ஆனால், ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தினகரன் எங்களை நடத்திய விதம் மறக்க முடியாதது. அவர் தன்னை ஒரு சக்திவாய்ந்த தலைவராக அறிமுகப்படுத்த முயற்சித்தாலும், அவரது வெற்றி ஆர் கே நகர் இடைத்தேர்தலில் மட்டுமே இருந்தது. பின்னர், அவர் தனது விளையாட்டை இழந்தார், செந்தில் பாலாஜி உட்பட அனைத்து சக்திவாய்ந்த நெருங்கிய உதவியாளர்களையும் இழந்தார். இது சசிகலாவுக்கும் தெரியும்” என்றார்.

அதிமுகவின் மற்றொரு மூத்த தலைவர், சசிகலா கட்சிக்கு திரும்புவதில் முழு உடன்பாடு இருப்பதாகக் கூறினார். ஆனால், ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தினகரன் எங்களை நடத்திய விதம் மறக்க முடியாதது. அவர் தன்னை ஒரு சக்திவாய்ந்த தலைவராக அறிமுகப்படுத்த முயற்சித்தாலும், அவரது வெற்றி ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் மட்டுமே இருந்தது. பின்னர், அவர் தனது செல்வாக்கை இழந்தார். செந்தில் பாலாஜி உட்பட அனைத்து சக்திவாய்ந்த நெருங்கிய ஆதரவாளர்களையும் இழந்தார். இது சசிகலாவுக்கும் தெரியும் என்றார்.

தன்னுடன் நின்றவர்களைக் காக்காத சர்வாதிகாரி என்று தினகரனைச் சொன்னாலும், அவர் ஒரு தலைவருக்கான நபர், சசிகலா குடும்பத்தில் அவர் மட்டும்தான் அத்தகைய நபர் என்பதை கட்சியில் யாரும் மறுக்கவில்லை. “அவர் சசிகலாவின் மறு வருகையை எளிதாக்கட்டும், அவர் விலகி இருக்கலாம், டெல்லிக்குச் செல்லலாம் அல்லது அதிகாரம் குறைந்த பதவியை வைத்துக் கொள்ளலாம். எப்படியும் அவர் தனது எதிர்காலத்தை நம்பலாம். ஏனெனில், அவரது வயது நீண்ட காலத்திற்கு அவருக்கு சாதகமாக இருக்கும். அவர் பழனிசாமிக்குப் பிறகு முதல் தலைவராக இருக்க முடியும்” என்று அதிமுக மூத்த தலைவர் கூறினார்.

சசிகலாவின் உடனடி திட்டம் என்ன?

சசிகலா வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மதுரை மற்றும் ராமநாதபுரத்தில் கட்சி நிர்வாகிகளை சந்திக்கிறார். அவருடைய நெருங்கிய உதவியாளர்கள் கூறுகையில், இரண்டு நிகழ்வுகளும் வெறும் வருகைகளாக இருக்கும், பெரும்பாலும் பேச்சு இல்லாமல், ஒவ்வொரு இடத்திலும் சுமார் 1,000 பேர் கூடுவார்கள் என்று தெரிவித்தனர்.

ஓ. பன்னீர்செல்வம் ஏற்கனவே சசிகலாவின் மறுவருகை குறித்து பொதுவெளியில் தெரிவித்துள்ள நிலையில், இது தொடர்பாக பாஜகவிடம் இருந்து உத்தரவு கிடைத்தால், பழனிசாமியும் ஒப்புக்கொள்வார் என்று சசிகலா தரப்பு எதிர்பார்க்கிறது.

சென்னையில் உள்ள ஜெயலலிதா நினைவிடம் மற்றும் மறைந்த எம்.ஜி.ஆரின் இல்லத்தில் கடந்த இரண்டு நிகழ்வுகள் சென்னையில் அமமுக கட்சியினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், தினகரனின் அமமுக நடத்தும் நிகழ்ச்சிகளில் சசிகலா கலந்து கொள்ள மாட்டார் என்பது தெளிவாகும் வரை. “அதிமுக கொடியை அவர் பயன்படுத்துவதை உறுதி செய்துகொண்டு, தன்னை செயல் பொதுச்செயலாளராக தொடர்ந்து முன்னிறுத்துவார்” என்று சசிகலாவுக்கு நெருக்கமான தலைவர் ஒருவர் தெரிவித்தார்.

தினகரனுக்கு சசிகலா இல்லாத நேரத்தில் அதிமுகவை சொந்தமாக கைப்பற்ற முடியாமல் போனதை நினைவுபடுத்தும் சசிகலாவுக்கு நெருக்கமான தலைவர், அவரை சிறிது காலம் விலகி இருந்து, கட்சியில் தனக்குரிய இடத்தை உறுதி செய்து, தேர்தல் அரசியலில் எந்த பதவிகளையும், பொறுப்பையும் கோராமல், அவர்களை வழிநடத்தி வழிகாட்டுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Explained news here. You can also read all the Explained news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Sasikalas re entry into aiadmk could be possible deal with ops and eps

Next Story
கோவிட்-19 இன் புதிய AY.4.2 வைரஸ் திரிபு கவலை அளிக்குமா?New AY 4 2 lineage of Covid 19, delta sublineage of covid 19, new COVID variants, AY.4.2., AY.4.2 lineage, COVID evolutionary, கோவிட் 19, புதிய ஏஒய்.4.2 வைரஸ் பரம்பரை, கொரோனா வைரஸ், புதிய பிறழ்வு, coronavirus, new variants, covid 19 research
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express