Advertisment

மீடியா ஒன் உரிமத்தை புதுப்பிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு: வழக்கு பின்னணி என்ன?

'சீல்டு கவர் நடைமுறை' மற்றும் 'தேசிய பாதுகாப்பு கோரிக்கையை மத்திய அரசு எழுப்பிய 'கேவாலியர் முறை' ஆகியவற்றையும் உச்ச நீதிமன்றம் விமர்சித்துள்ளது.

author-image
WebDesk
New Update
SC directs Media Ones licence to be renewed What is the case

இந்திய தலைமை நீதிபதி டி ஒய் சந்திரசூட் தலைமையிலான பெஞ்ச், அரசின் நடவடிக்கையை உறுதி செய்த கேரள உயர் நீதிமன்ற உத்தரவையும் ரத்து செய்து, உரிமத்தை நான்கு வாரங்களுக்குள் புதுப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

மலையாள செய்தி சேனல் மீடியா ஒன்னுக்கு ஒளிபரப்பு உரிமத்தை புதுப்பிக்க மறுத்த மத்திய அரசின் உத்தரவை உச்சநீதிமன்றம் புதன்கிழமை (ஏப்ரல் 5) ரத்து செய்தது.

முன்னதாக, ஜமாத்-இ-இஸ்லாமி-ஹிந்துடன் தொடர்பு இருப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் உள்துறை அமைச்சகத்தால் (MHA) பாதுகாப்பு அனுமதி மறுக்கப்பட்டது.

Advertisment

இதையடுத்து, இந்திய தலைமை நீதிபதி டி ஒய் சந்திரசூட் தலைமையிலான பெஞ்ச், அரசின் நடவடிக்கையை உறுதி செய்த கேரள உயர் நீதிமன்ற உத்தரவையும் ரத்து செய்து, உரிமத்தை நான்கு வாரங்களுக்குள் புதுப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

அப்போது, 'சீல்டு கவர் நடைமுறை' மற்றும் 'தேசிய பாதுகாப்பு கோரிக்கையை மத்திய அரசு எழுப்பிய 'கேவாலியர் முறை' ஆகியவற்றையும் உச்ச நீதிமன்றம் விமர்சித்துள்ளது.

என்ன வழக்கு

தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் ஜனவரி 31, 2022 அன்று மலையாள சேனலான மீடியாஒனின் ஒளிபரப்பு உரிமத்தை புதுப்பிக்க மறுத்துவிட்டது.

உரிமத்தை புதுப்பிப்பதற்கான கோரிக்கையை பரிசீலிக்கும் போது, உள்துறை அமைச்சகம் பாதுகாப்பு அனுமதியை வழங்க மறுத்ததன் அடிப்படையில் இது நடந்தது.

புதன்கிழமை வழங்கிய உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி, MHA, சேனல் விளம்பரதாரர்களான மத்யமம் பிராட்காஸ்டிங் லிமிடெட் மற்றும் ஜமாத்-இ-இஸ்லாமி ஹிந்த் ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்புகளை மேற்கோள் காட்டியது.

இதைத் தொடர்ந்து சேனல் ஒளிபரப்பு நிறுத்தப்பட்டது.

உயர்நீதிமன்றத்தில் நடந்தது என்ன?

மத்திய அரசின் இந்த நடவடிக்கையை எதிர்த்து சேனல் கேரள உயர் நீதிமன்றத்தை அணுகியது. உயர்நீதிமன்றத்தில் நடந்த விசாரணையின் போது, தேசிய பாதுகாப்பை கருத்தில் கொண்டு உரிமத்தை ரத்து செய்யும் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், பிப்ரவரி 9, 2022 அன்று, உயர் நீதிமன்றத்தின் ஒற்றை பெஞ்ச் சேனல் மீதான தடையை உறுதி செய்தது. மேல்முறையீட்டில், உயர் நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச், மார்ச் 2ல், தனி நீதிபதியின் உத்தரவை உறுதி செய்தது.

உயர் நீதிமன்றம் என்ன சொன்னது?

மாநிலத்தின் பாதுகாப்பு தொடர்பாக சில சிக்கல்கள் இருக்கும்போது, ​​அரசாங்கம் அனுமதியை புதுப்பிக்க மறுக்கும் சுதந்திரம் உள்ளது என்று உயர்நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச் குறிப்பிட்டது.

உளவுத்துறை மற்றும் பிற புலனாய்வு அமைப்புகளின் அறிக்கையின் அடிப்படையில், தாக்கல் செய்யப்பட்ட கோப்புகளில், பொது ஒழுங்கு அல்லது மாநிலத்தின் பாதுகாப்பை பாதிக்கும் சில அம்சங்கள் இருப்பதாக பெஞ்ச் கவனித்தது.

அதில், “மாத்தியமம் பிராட்காஸ்டிங் லிமிடெட் சில விரும்பத்தகாத சக்திகளுடன் சில தொடர்புகளைக் கொண்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

உச்ச நீதிமன்றத்தில் நடந்தது என்ன?

மார்ச் 15, 2022 அன்று, கேரள உயர் நீதிமன்ற உத்தரவை நிறுத்திய, உச்ச நீதிமன்றம் சேனலை மீண்டும் செயல்பட அனுமதித்தது.

அப்போது, உரிமத்தைப் புதுப்பிப்பதை மறுப்பதற்கான தேசிய பாதுகாப்புக் காரணங்கள் சீல் வைக்கப்பட்ட கவரில் உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதால், தங்களைத் தற்காத்துக் கொள்ள வாய்ப்பு வழங்கப்படவில்லை என்று சேனல் விளம்பரதாரர்கள் வாதிட்டனர்.

பத்திரிகை சுதந்திரத்தையும் உள்ளடக்கிய பேச்சு மற்றும் கருத்துச் சுதந்திரத்திற்கான அடிப்படை உரிமையானது, பிரிவு 19(2)ன் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள அடிப்படையில் மட்டுமே கட்டுப்படுத்தப்பட முடியும் என்றும், அந்த சேனல் நிரல் குறியீட்டை மீறியதாக எந்த குற்றச்சாட்டும் இல்லை என்றும் அது வாதிட்டது.

உச்ச நீதிமன்றம் என்ன சொன்னது?

சேனல் ஒளிபரப்பு உரிமத்தை ரத்து செய்த மத்திய அரசின் உத்தரவையும், அரசின் நடவடிக்கையை உறுதி செய்த உயர் நீதிமன்ற உத்தரவையும் உச்சநீதிமன்றம் புதன்கிழமை ரத்து செய்தது.

தொடர்ந்து, உயர் நீதிமன்றத்தில் கடைப்பிடிக்கப்பட்ட சீல் செய்யப்பட்ட கவர் நடைமுறை மற்றும் பாதுகாப்பு அனுமதியை மறுக்கும் வகையில் மத்திய அரசு "தேசிய பாதுகாப்பு கோரிக்கையை எழுப்பிய" "கவலையர் முறை" ஆகியவற்றையும் உச்ச நீதிமன்றம் விமர்சித்தது.

அப்போது நீதிபதி, “தேசிய பாதுகாப்பு என்ற சொற்றொடரை நீதிமன்றங்கள் வரையறுப்பது நடைமுறைக்கு சாத்தியமற்றது மற்றும் விவேகமற்றது என்று நாங்கள் கருதினாலும், தேசிய பாதுகாப்பு கோரிக்கைகளை காற்றில் இருந்து உருவாக்க முடியாது என்றும் நாங்கள் கருதுகிறோம்.

அத்தகைய அனுமானத்தை ஆதரிக்கும் பொருள் இருக்க வேண்டும். கோப்பில் உள்ள பொருள் மற்றும் அத்தகைய பொருளில் இருந்து எடுக்கப்பட்ட அனுமானம் எந்த தொடர்பும் இல்லை” எனத் தெரிவித்தார்.

இந்த வழக்கில், “சட்டத்தின் கீழ் வழங்கப்படும் குடிமக்களுக்கான தீர்வுகளை மறுக்க தேசிய பாதுகாப்பை ஒரு கருவியாக அரசு பயன்படுத்துகிறது. இது சட்டத்தின் ஆட்சிக்கு பொருந்தாது” எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

மேலும் உச்ச நீதிமன்றம், “சேனலுக்கு ஜமாத்-இ-இஸ்லாமி ஹிந்துடன் தொடர்பு இருப்பதாகக் கூறி பாதுகாப்பு அனுமதியை MHA மறுத்துள்ளது.

அமைப்பு தடை செய்யப்படாதபோது, அந்த அமைப்புடனான தொடர்புகள் நாட்டின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாடு, மாநிலத்தின் பாதுகாப்பு, வெளி மாநிலங்களுடனான நட்புறவு அல்லது பொதுமக்களுடன் நட்புறவு ஆகியவற்றை பாதிக்கும் என்று அரசு வாதிடுவது மிகவும் ஆபத்தானது” எனத் தெரிவித்தது.

இதையடுத்து, சேனல் பங்குதாரர்கள் JEIH க்கு அனுதாபம் கொண்டவர்கள் என்பதைக் காட்டுவதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்றும், "பாதுகாப்பு அனுமதியை மறுப்பதன் நோக்கம், முறையான குறிக்கோள் மற்றும் சரியான நோக்கம் இல்லை" என்றும் உச்ச நீதிமன்றம் மேலும் கூறியது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Supreme Court Justice D Y Chandrachud
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment