Advertisment

15 நாட்களுக்கு மேல் போலீஸ் காவலுக்கு தடை விதித்த தீர்ப்பு; மறுபரிசீலனை செய்யும் சுப்ரீம் கோர்ட்; சட்டம் என்ன சொல்கிறது?

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எம்.ஆர்.ஷா மற்றும் சி.டி.ரவிக்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு, முதல் 15 நாட்களுக்கு மேல் போலீஸ் காவலில் காவலில் வைக்க அனுமதி இல்லை என்று கூறிய, 1992-ம் ஆண்டின் முக்கிய தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என ஏப்ரல் 10-ம் தேதி கூறியது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
police custody, laws about police custody, 15 days police custody, supreme court, indian express, express explained

15 நாட்களுக்கு மேல் போலீஸ் காவலுக்கு தடை விதித்த தீர்ப்பு; மறுபரிசீலனை செய்யும் சுப்ரீம் கோர்ட்;

ஒரு குற்றவாளியை கைது செய்யப்பட்ட முதல் தேதியிலிருந்து 15 நாட்களுக்கு மேல் போலீஸ் காவலில் வைக்கலாமா என்பது குறித்த தற்போதுள்ள நிலைப்பாட்டை மறுஆய்வு செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை (ஏப்ரல் 10) கூறியது.

Advertisment

நீதிபதிகள் எம்.ஆர்.ஷா மற்றும் சி.டி.ரவிக்குமார் அடங்கிய அமர்வு, உச்ச நீதிமன்றத்தால் 1992-ம் ஆண்டு வழங்கப்பட்ட முக்கிய தீர்ப்பை மறுஆய்வு செய்ய வேண்டும் என்று கூறியது. அந்த தீர்ப்பில், குற்றவாளியை கைது செய்யப்பட்ட முதல் 15 நாட்களுக்கு மேல் போலீஸ் காவலில் காவலில் வைக்க அனுமதிக்கப்படாது என்று கூறியது. உச்ச நீதிமன்றம் இண்த தீர்ப்பை ஏன் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கூறுகிறது. மறுபரிசீலனை செய்யப்பட்டால் என்ன மாற்றங்கள் ஏற்படும்?

என்ன வழக்கு?

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் வினய் மிஸ்ராவின் சகோதரர் விகாஸ் மிஸ்ராவை கூடுதலாக காவலில் வைக்கக் கோரி சி.பி.ஐ உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ், நம்பிக்கை மீறல் மற்றும் சதித்திட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் விகாஸ், ஏப்ரல் 16, 2021 முதல் ஏழு நாட்களுக்கு சிபிஐ காவலில் இருந்தார். இருப்பினும், விகாஸ் இரண்டரை நாட்கள் காவலுக்குப் பிறகு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. அவரது ஜாமீன் ரத்து செய்யப்பட்டு மீண்டும் வழக்கமான ஜாமீன் வழங்கப்படுவதற்கு முன்பு அவர் நீதிமன்ற காவலில் இருந்தார்.

விகாஸ் போலீஸ் காவலில் இருந்த போதிலும், முன்னதாக அவரை சி.பி.ஐ-யால் விசாரிக்க முடியாததால், விகாஸை புதிதாகக் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என்பது சி.பி.ஐ-யின் வாதம்.

குற்றம்சாட்டப்பட்டவர் கைது செய்யப்பட்ட நாளிலிருந்து 15 நாட்களுக்கு மேல் போலீஸ் காவலில் வைக்க அனுமதிக்கப்படாது என்று தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றத்தின் 30 ஆண்டு கால முன்னுதாரணத் தீர்ப்பை மேற்கோள் காட்டி விகாஸின் வழக்கறிஞர்கள், அவரை புதியதாக போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கக் கோருவதை எதிர்த்தனர்.

கைது செய்யப்பட்ட நாளிலிருந்து 15 நாட்களுக்குப் பிறகு ஒரு குற்றவாளியை போலீஸ் காவலில் வைக்க முடியாது என்று சி.பி.ஐ எதிரி அனுபம் ஜே. குல்கர்னி வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

விகாஸ் வழக்கில், உச்ச நீதிமன்றம் இறுதியில் அவரை 4 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.ஐ-க்கு அனுமதி வழங்கியது. “மேற்கண்ட உண்மைகள், சூழ்நிலைகள் மற்றும் இடைக்கால ஜாமீனை ரத்து செய்யும் போது கற்றறிந்த சிறப்பு நீதிபதியின் அவதானிப்புகளின் பார்வையில், அனுபம் ஜே. குல்கர்னி வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகள் அடங்கிய அமர்வு வழங்கிய 1992-ம் ஆண்டு தீர்ப்பை பரிசீலிக்க வேண்டும்” என்று உச்ச நீதிமன்றம் கூறியது.

உச்ச நீதிமன்றத்தின் 1992-ம் ஆண்டு தீர்ப்பு, தற்போதைய தீர்ப்பு என இரண்டு தீர்ப்புகளும் இரண்டு நீதிபதிகள் அடங்கிய அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது. எனவே, இப்போது இந்த வழக்கை உச்ச நீதிமன்றத்தின் ஒரு பெரிய அமர்வு இந்த பிரச்சினையை புதிதாக பரிசீலித்து சட்டத்தை தெளிவுபடுத்த வேண்டும்.

போலீஸ் காவல் பற்றி சட்டம் என்ன கூறுகிறது?

மாஜிஸ்திரேட்கள் இயந்திரத்தனமாக ஒவ்வொரு வழக்கிலும் போலீஸ் காவலை வழங்கினாலும், சிறப்புச் சூழ்நிலைகளில் மட்டுமே போலீஸ் காவலில் வைக்க சட்டம் அனுமதிக்கிறது. உத்தரவில் பதிவு செய்யப்பட வேண்டிய காரணங்களுக்காக ஒரு மாஜிஸ்திரேட்டால் போலீஸ் காவல் வழங்கப்படுகிறது.

குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவு 167, போலீஸ் காவல் எப்படி செயல்படுகிறது என்பதைக் கட்டுப்படுத்துகிறது. உண்மையில், இந்த ஏற்பாடு "இருபத்தி நான்கு மணி நேரத்தில் விசாரணையை முடிக்க முடியாத நடைமுறை" என்று தலைப்பிடப்பட்டுள்ளது. அதாவது 24 மணி நேரத்திற்கும் மேலாக காவலில் வைப்பது என்பது விதிவிலக்காக இருக்கும்.

குற்றவியல் நடைமுறைச் சட்டம் (CrPC)பிரிவு 167 (2) குற்றம் சாட்டப்பட்டவரை மொத்தமாக பதினைந்து நாட்களுக்கு மிகாமல் காவலில் வைக்க மாஜிஸ்திரேட் அளவில் பதவியில் இருப்பவருக்கு அதிகாரம் அளிக்கிறது.

இந்த விதி, 1992 அனுபம் குல்கர்னி வழக்கில், “சில அதீத ஆர்வமுள்ள மற்றும் நேர்மையற்ற காவல்துறை அதிகாரிகளால் பின்பற்றப்படும் முறைகளில் இருந்து குற்றம் சாட்டப்பட்டவர்களை பாதுகாக்கும் நோக்கம் கொண்டது” என்று உச்ச நீதிமன்றம் கூறியது.

கைது செய்யும் போது மட்டும் ஏன் போலீஸ் காவலுக்கு அனுமதி?

சி.ஆர்.பி.சி பிரிவு 167 என்ன கூறுகிறது என்றால், கைதானவர் 15 நாள் போலீஸ் காவலுக்குப் பிறகு, விசாரணைக் காலத்தில் நீதிமன்றக் காவலில் மட்டுமே இருக்க முடியும் என்று கூறுகிறது.

நீதித்துறை காவலில் ஒரு மாஜிஸ்திரேட் மேற்பார்வையின் கீழ் மத்திய சிறையில் வைப்பது ஆகும். அதேநேரத்தில், போலீஸ் காவல் என்பது குற்றம் சாட்டப்பட்டவரை விசாரிக்க அதிகாரிகள் காவல் நிலையத்தில் வைத்திருப்பார்கள்.

இந்த சட்டம் ஒரு தனிநபரின் சுதந்திரத்தை கட்டுப்படுத்தும் மாநிலத்தின் அதிகாரத்தை சவால் செய்கிறது. எனவே, காவல்துறை தங்களுக்கு பதினைந்து நாட்கள் மட்டுமே உள்ளது என்பதை அறிந்தால், அது விசாரணையை சரியான நேரத்தில் முடிக்க முயற்சி செய்யும். இருப்பினும், 15 நாள் காவலில் எடுத்து விசாரிப்பதற்கான விதி, விதிவிலக்கைப் பயன்படுத்தி வழக்கமாக தவிர்க்கப்படுகிறது.

குற்றம் சாட்டப்பட்டவர் வேறொரு வழக்கில் தொடர்புடையதாக இருந்தால், ஒரு தனி நடவடிக்கை காரணமாக 15 நாள்களுக்கு மேல் காவலில் எடுத்து விசாரிக்கத் தடை விதிக்கப்படாது. அப்போது, ஒரு வழக்கில் நீதிமன்றக் காவலில் இருந்தாலும், மற்றொரு வழக்கில் முறைப்படி கைது செய்யப்பட்டு, அவரை மீண்டும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நாடலாம். இதையடுத்து, மேலும் ஒரு 15 நாள் போலீஸ் காவல் விசாரணை நடைமுறைத் தொடங்கும்.

எடுத்துக்காட்டாக, ஆல் நியூஸ் இணையதளத்தின் இணை நிறுவனர் முகமது ஜுபைரின் வழக்கில், 15 நாள் போலீஸ் காவல் சுழற்சி தொடர மாநிலம் முழுவதும் பதிவு செய்யப்பட்ட பல வழக்குகள் பயன்படுத்தப்பட்டன. அவரை தொடர்ந்து காவலில் வைத்திருப்பதில் எந்த நியாயமும் இல்லை என்று கூறி, கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஜுபைருக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

15 நாள் காவலுக்குப் பிறகு என்ன நடக்கிறது?

குறிப்பிட்ட நாட்களுக்குள் விசாரணை முடிக்கப்படாவிட்டால், குற்றம் சாட்டப்பட்டவரை ஜாமீனில் விடுவிக்க குற்றவியல் நடைமுறைச் சட்டம் அனுமதிக்கிறது. இது பொதுவாக ‘இயல்பான ஜாமீன்’ அல்லது ‘சட்டப்பூர்வ ஜாமீன்’ என்று குறிப்பிடப்படுகிறது.

போலீஸ் காவலில் வைக்க முதல் வரம்பு 24 மணிநேரம் ஆகும். பின்னர், இதை ஒரு மாஜிஸ்திரேட் அதிகபட்சம் 15 நாட்களுக்கு நீட்டிக்க முடியும். பிரிவு 167(2) (ஏ) பதினைந்து நாட்களுக்கு மேல், குற்றம் சாட்டப்பட்ட நபரை காவல் துறையின் காவலில் அல்லாமல் காவலில் வைக்க அதிகாரம் அளிக்க மாஜிஸ்திரேட்டை அனுமதிக்கிறது. அவ்வாறு செய்வதற்கு போதுமான காரணங்கள் இருப்பதாக அவர் திருப்தி அடைந்தால், அந்த நபரை போலீஸ் காவலில் வைக்க அதிகாரம் அளிக்கிறது. இருப்பினும், அதுவும் 60-90 நாட்களுக்கு மேல் இருக்கக்கூடாது.

முக்கியமாக, விசாரணையை முடிக்க குற்றம் சாட்டப்பட்டவரை மேலும் காவலில் வைத்திருப்பது அவசியமானால், மாஜிஸ்திரேட் அதை அனுமதிக்கலாம். ஆனால், மரண தண்டனைக்குரிய குற்றங்களுக்கு 90 நாட்களுக்கு மேல் அல்லது ஆயுள் தண்டனை மற்றும் மற்ற எல்லா குற்றங்களுக்கும் 60 நாட்களுக்கு மேல் போலீஸ் காவலில் வைத்திருக்கக் கூடாது என்று கூறுகிறது.

1975-ம் ஆண்டு ‘மதபர் பரிதா எதிரி ஒரிசா மாநிலம்’ வழக்கின் தீர்ப்பில், உச்ச நீதிமன்றம் 60-90 நாட்களுக்குள் விசாரணையை முடிக்க முடியாவிட்டால், கடுமையான மற்றும் கொடூரமான குற்றங்களில்கூட குற்றம் சாட்டப்பட்டவர் ஜாமீனில் விடுவிக்கப்படுவார் என்று கூறியது.

இந்த ஏற்பாட்டின் நோக்கம், விசாரணை அமைப்பு சரியான நேரத்திற்குள் அதன் விசாரணையை விரைவாக முடிப்பதை உறுதி செய்வதாகும்.

Supreme Court
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment