Advertisment

Explained : டெல்லியை திணறடிக்கும் காற்றுமாசு: தீர்வு கிடைக்குமா?

Delhi air pollution : டில்லியில் காற்று மாசு மோசமான நிலையை எட்டியதை தொடர்ந்து, அங்கு அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது. பள்ளிகளுக்கு நவம்பர் நவம்பர் 5ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதுடன், கட்டுமான பணிகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
delhi pollution, graded response action plan, delhi pollution graded response action plan, delhi pollution explainer, delhi smog latest news, indian express news

delhi pollution, graded response action plan, delhi pollution graded response action plan, delhi pollution explainer, delhi smog latest news, indian express news, டில்லி, காற்று மாசு, பள்ளி, விடுமுறை, வாகன போக்குவரத்து பொது போக்குவரத்து

டில்லியில் காற்று மாசு மோசமான நிலையை எட்டியதை தொடர்ந்து, அங்கு அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது. பள்ளிகளுக்கு நவம்பர் நவம்பர் 5ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதுடன், கட்டுமான பணிகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Advertisment

டில்லியில், கடந்த சில தினங்களாக மாசு கலந்த பனிமூட்டம் நிலவி வருகிறது. இதனால் சாலை விபத்துக்கள், ரயில் தாமதம், விமானங்கள் தரையிறங்க முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது. மேலும் காற்று மாசு அளவு ஆபத்து அளவை அ எட்டி இருக்கிறது. இந்த நிலைமையை சமாளிக்க முடியாமல் அனைவரும் திணறும் நிலை டில்லியில் உருவாகி உள்ளது. மேலும் இந்த புகையால் டில்லியில் அனைத்து பகுதிகளும் பாதிக்கப்பட்டு இருக்கிறது. டெல்லியில் காற்று மாசின் அளவு 1010 புள்ளிகளை விட அதிகமாக இருக்கிறது.

டில்லியில் காற்றின் நிலை மோசமான நிலை (severe plus) அடைந்து இருக்கிறது. தீபாவளிக்கு பிறகு டெல்லியில் வரிசையாக காற்று அதிக அளவில் மாசுபட்டது. தற்போது அங்கு காற்று சுவாசிக்க முடியாத நிலையில் கடந்த 48 மணி நேரமாக இருக்கிறது. இதனால் தற்போது டில்லியில் மருத்துவ அவசர நிலை எனப்படும் medical emergency அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறது. உச்ச நீதிமன்ற கண்காணிப்பில் இயங்கும் டில்லி மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

Graded Response Action Plan என்றால் என்ன?

தலைநகர் டில்லியில் காற்று மாசுவின் அளவை குறைக்கும் பொருட்டு, அக்டோபர் 15ம் தேதி முதல் டில்லி அரசு Graded Response Action Plan திட்டத்தின்படி, தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த ஆண்டு முதல் முதன்முதலாக டீசல் ஜெனரேட்டர்களின் பயன்பாட்டை டில்லி மட்டுமல்லாது நேசனல் கேபிடல் ரீஜன் பகுதியிலும் அமல்படுத்தப்பட்டுள்ளது.

காற்று மாசு poor, very poor, severe plus என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது டில்லியில் காற்று மாசு severe plus என்ற நிலையை எட்டியுள்ளதால், odd-even வாகன போக்குவரத்து முறை அறிமுகப்பட்டுள்ளதோடு மட்டுமல்லாது நவம்பர் 5ம் தேதி வரை பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

GRAP பல்வேறு படிநிலைகள்

Severe+ or Emergency (PM 2.5 over 300 µg/cubic metre or PM10 over 500 µg/cu. m. for 48+ hours)

பாதுகாப்பு வழிமுறைகள்

டிரக் உள்ளிட்ட வாகனங்கள் டில்லியில் நுழைய தடை ( அத்தியாவசிய வாகனங்களை தவிர)

கட்டுமானப்பணிகள் நிறுத்தம்

தனியார் வாகனங்களில் odd/even போக்குவரத்து முறை

தேவைப்பட்டால் பள்ளிகளுக்கு விடுமுறை

Severe (PM 2.5 over 250 µg/cu. m. or PM10 over 430 µg/cu. m.)

செங்கல் சூளைகள், கிரசர்கள் இயங்க தடை

அனல் மின்சார உற்பத்திக்கு தடை

பொது போக்குவரத்தை ஊக்குவித்தல்

சாலைகளில் அவ்வப்போது தண்ணீரை தெளித்தல்

Very Poor (PM2.5 121-250 µg/cu. m. or PM10 351-430 µg/cu. m.)

டீசல் ஜெனரேட்டர்கள் இயக்க தடை

வாகன நிறுத்த கட்டணம் பன்மடங்கு அதிகரிப்பு

பஸ் மற்றும் மெட்ரோ ரயில் சேவைகளை அதிகரித்தல்

குளிரை போக்க நெருப்பு மூட்டாமல், எலெக்ட்ரிக் ஹீட்டர்களை பயன்படுத்த அறிவுறுத்தல்

இதய பிரச்னைகள் மற்றும் சுவாச பிரச்னைகள் உள்ளவர்களை வெளியில் நடமாட தடை

Moderate to poor (PM2.5 61-120 µg/cu. m. or PM10 101-350 µg/cu. m.)

குப்பை எரித்தால் அதிக அபராதம்

செங்கல் சூளைகள், கிரசர்கள் மூடல்

பட்டாசுகள் வெடிக்க தடை

சாலைகளில் இயந்திரங்களை கொண்டு தண்ணீர் தெளித்தல்

Delhi Air Pollution
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment