கடந்த நவம்பர் 21ம் தேதியன்று, கலிபோர்னியாவின் வாண்டன்பெர்க் விமானப்படை தளத்திலிருந்து பெருங்கடல் ஆராய்ச்சிக்காக வடிவமைக்கப்பட்ட சென்டினல் -6 மைக்கேல் ப்ரெய்லிச் செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட்டது.
கடந்த ஆகஸ்ட் மாதம் காலமான டாக்டர் மைக்கேல் ஃப்ரீலிச் என்பவரை நினைவு கூறும் விதமாக,சென்டினல் -6 மைக்கேல் ஃப்ரீலிச் செயற்கைக்கோள் என்று இதற்கு பெயரிடப்பட்டது. 2006-2019 வரை நாசா விண் இயற்பியல் பிரிவின் இயக்குநராக மைக்கேல் ஃப்ரீலிச் பணி புரிந்து வந்தார்.
கடலின் ஆழத்தைத் துல்லியமாகக் கண்டறிவதற்காக நாசாவின் Jason Continuity of Service (Jason-CS) என்ற விண்கலத் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த ஏவுகணை வின்னில செலுத்தப்பட்டது. பூமியின் காலநிலை தொடர்பான ஆராய்ச்சியில் இந்த திட்டம் முக்கிய அங்கமாக கருதப்படுகிறது. சென்டினல் -6 பி என்று அழைக்கப்படும் இரண்டாவது செயற்கைக்கோள் 2025 ஆம் ஆண்டில் விண்ணில் ஏவ நாசா திட்டமிட்டுள்ளது.
இது ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் (ஈஎஸ்ஏ), நாசா, யூமெட்சாட், அமெரிக்காவின் தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் (NOAA) , ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பிரான்சின் தேசிய விண்வெளி மையத்தின் பங்களிப்புகளுடன் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
செயற்கைக்கோளின் முக்கியத்துவம் என்ன?
" நான்காம் தலைமுறை தொழிநுட்பத்துடன் கூடிய பெருங்கடல் ஆராய்ச்சியை உறுதி செய்வதுடன், உலக சராசரி கடல் மட்டத்தில் அதிகரிப்பு குறித்த அளவீடுகளை வழங்கும்" என்று நாசா தெரிவித்தது.
1992 ஆம் ஆண்டு முதல், காலநிலை அமைப்பில் கடல் வெப்பம், கடல் நீரின் வெப்பநிலை மற்றும் கார்பன்-டை-ஆக்சைட் வேறுபாடுகளை புரிந்துகொள்ள விஞ்ஞானிகள் உயர் துல்லியமான ஆல்டிமீட்டர் எனும் தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறது.