Advertisment

Explained : மகாராஷ்ட்ராவில் ஜனாதிபதி ஆட்சி நீக்க பயன்படுத்திய 'விதி 12' என்றால் என்ன ?

மத்திய சட்ட அமைச்சர் பிரசாத் இது குறித்து கூறுகையில் , " தேசியவாத காங்கிரஸ் சட்டமன்றக் கட்சியின் தலைவராக இருக்கும் அஜித் பவார்,எந்தவொரு கட்சியுடனும் இணைவதற்கான  நியாயமான உரிமையைக் கொண்டிருக்கிறார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Explained : மகாராஷ்ட்ராவில் ஜனாதிபதி ஆட்சி நீக்க பயன்படுத்திய 'விதி 12' என்றால் என்ன ?

உச்சநீதிமன்றம், நேற்று (ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 24 ) நடந்த விடுமுறை நாள் அமர்வில், கீழ் சொல்லப்பட்டுள்ள உரிய ஆவணங்களை சமர்பிக்க   இன்று காலை 10.30 மணி வரை அரசுக்கு அவகாசம் அளித்தது :

Advertisment

(i)  மகாராஷ்ட்ராவில் அமலில் இருக்கும் ஜனாதிபதி ஆட்சியை ரத்து செய்ய மகாராஷ்டிரா ஆளுநர் பகத் சிங் கோஷ்யரி பரிந்துரைத்த கடிதம், தேவேந்திர ஃபட்னாவிஸை ஆட்சியமைக்க அழைத்த கடிதம்.

(ii) சட்டமன்ற உறுப்பினர்களின் பெரும்பான்மை ஆதரவு தனக்கு  உண்டு என்று நிரூபிக்க ஃபட்னாவிஸ் ஆளுநருக்கு சமர்ப்பித்த கடிதம்.

ஜனாதிபதியின் ஆட்சி ரத்து அறிவிக்கப்பட்டவுடன், ஆளுநர் கோத்யாரி முதல்வர், துணை முதல்வர் பதவியை நியமித்தது பெரும் சர்ச்சைகளாக வருகின்றது.

எனவே கூடுதலாக, ஜனாதிபதி ஆட்சி  ரத்து செய்யப்பட வேண்டும் என்று ஜனாதிபதிக்கு பரிந்துரைத்த  மத்திய அமைச்சரவைக் கூட்டத்தின் விவரங்கள், அதன் நேரம் , பங்கேற்பாளர்கள் போன்ற விவரங்களையும் காங்கிரஸ் கோரியுள்ளது.

யூனியன் அரசாங்களின் டிரான்ஸாக்சன் ஆஃப் பிசினஸ் விதியில் உள்ள ஒரு சிறப்பு பிரிவை  ( விதி 12 ) மத்திய அரசு தற்போது பயன்படுத்தியுள்ளது. அந்த சிறப்பு பிரிவின் பிரகாரம், பிரதமர் தேவை என்று கருதுவாரானால், அமைசச்சரவை ஒப்புதல் இல்லாமல், ஒரு மாநிலத்தின் அமலில் இருக்கும்  ஜனாதிபதியின்  ஆட்சியை திரும்ப பெறலாம்.

 ‘விதி 12’ இதை பற்றி ?

இந்திய அரசின் டிரான்ஸாக்சன் ஆஃப் பிசினஸ் விதி 1961, நடைமுறையில் இருக்கும் விதிமுறைகளை மீறி தன்னிச்சையாக செயல்படும் அதிகாரத்தை அனுமதிக்கின்றது.

publive-image

எவ்வாறாயினும், விதி 12-ன் கீழ் எடுக்கப்பட்ட எந்தவொரு முடிவிற்கும் அமைச்சரவை பிந்தைய ஒப்புதலை வழங்கப்பட  வேண்டும்.

விதி 12 எந்த சூழ்நிலையில் பயன்படுத்தப்படுகிறது?

விதி 12 பொதுவாக அரசாங்கத்தின் முக்கிய முடிவுகளுக்காக  பயன்படுத்த படாது.  கடந்த காலங்களில் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை திரும்பப் பெறுதல், புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவது போன்ற விஷயங்களில்  பயன்படுத்தப்பட்டது.

இருப்பினும், கடைசியாக ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை ஜம்மு-காஷ்மீர், லடாக் ஆகிய இரு யூனியன் பிரதேசங்களாக கடந்த அக்டோபர் 31ம் தேதி உருவாக்கம் செய்ததற்கு விதி 12 பயன்படுத்தப்பட்டது

பல்வேறு மாவட்டங்களை இரண்டு யூனியன் பிரதேசங்களாக    பிரிக்கும் வகையில் அன்றைய தினம் ஜனாதிபதி வெளியிட்ட பிரகடனங்கள் விதி 12 ன் கீழ் வெளியிடப்பட்டன. நவம்பர் 20 ம் தேதி தான் இந்த ஜனாதிபதி  பிரகடனத்திற்கு அமைச்சரவை பிந்தைய ஒப்புதலை அளித்தது.

எனவே, மகாராஷ்டிரா விஷயத்தில் என்ன நடந்தது?

பெயர் தெரிவிக்க விரும்பாத ஆதாரங்களின் கூற்றுப்படி,   "தேசியவாத காங்கிரஸ்  கூட்டணியால் அரசாங்கம்  அமைப்பதற்கான எண்ணிக்கை பிஜேபிக்கு இருப்பதாக ஆளுநர் கோஷ்யாரிக்கு  அறிவிக்கப்பட்டது. ஆளுநரும், பாஜக கொடுத்த ஆவணங்களை  சரிபார்த்தார். ஆளுநர் மாளிகை வெள்ளிக்கிழமை இரவு முழுவதும் ஜனாதிபதியின் ஆட்சியை ரத்து செய்வதற்கு தேவையான பரிந்துரைகளைத் தயாரிக்கும் பணிகளை  வேகப்படுத்தின"  என்று கூறினார்.

சனிக்கிழமை அதிகாலை 5.47 மணிக்கு, மகாராஷ்ட்ராவில்  ஜனாதிபதி ஆட்சியை ரத்து செய்யும் அறிவிப்பு அரசாங்க அரசிதழில் வெளியிடப்பட்டிருக்கிறது. எனவே, 5.47 மணிக்கு முன்னரே ஜனாதிபதி  இதற்கான கையொப்பம் இட்டிருக்கிறார் என்பதை இதன் மூலம் நம்மால் உணர முடிகிறது.

காலை 7.50 மணிக்கு புதிய முதலமைச்சரும் துணை முதல்வரும் பதவியேற்றனர்.

என்ன நடக்கிறது என்று அரசாங்கத்தில் இருப்பவர்களுக்கு  கூடத் தெரியவில்லை ?

விதி 12ன் பயன்படுத்தி மகாராஷ்ட்ராவில் ஜனாதிபதி ஆட்சியை ரத்து செய்த  நடவடிக்கையைப் பார்க்கும் பொழுது, பாஜகவில்  இருக்கும் உயர்மட்ட தலைவர்களுக்கும் , இது குறித்த தகவல்கள் தெரிவிக்கப்படவில்லை  என்பது விளங்குகிறது.  உண்மையில் சொல்ல வேண்டும் என்றால், பல உயர்மட்ட அமைச்சர்கள் டெல்லிக்கு வெளியே தான் இருந்தனர். அமைச்சரவைக் கூட்டத்திற்கும் அன்று கலந்து கொள்ள அவர்களாலும் முடிந்திருக்காது.

சிங்கப்பூரிலிருந்து திரும்பிய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் லக்னோவில் இருந்தார். சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி,  ராஞ்சியில் நடந்த பேரணியில் உரையாற்றிய பின்னர் நாக்பூர் சென்றிருந்தார். ராஜ்நாத் மற்றும் கட்கரி இருவரும் பாஜக நாடாளுமன்ற வாரிய உறுப்பினர்கள் என்பது குறிபிடத்தக்கது.

மத்திய சட்ட அமைச்சர் பிரசாத் அவர்களிடம்,  அமைச்சரவை ஒப்புதல் இல்லாமல் ஜனாதிபதியின் ஆட்சியை ரத்து செய்வது குறித்து கேட்ட போது, “அனைத்து முடிவுகளும் சரியான சட்ட நடைமுறைக்கு பின்னர் எடுக்கப்பட்டுள்ளன. பிரதமருக்கு சிறப்பு அதிகாரங்கள் உள்ளன. அமைச்சரவையின் பிந்தைய ஒப்புதலுக்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.   எல்லாம் ஒழுங்காக இருக்கிறது,” என்றார்.

உச்சநீதிமன்றம் கோரியுள்ள ஃபட்னாவிஸ் ஆளுநருக்கு எழுதிய கடிதம் பற்றி ?

மத்திய சட்ட அமைச்சர் பிரசாத் இது குறித்து கூறுகையில் , " தேசியவாத காங்கிரஸ் சட்டமன்றக் கட்சியின் தலைவராக இருக்கும் அஜித் பவார்,எந்தவொரு கட்சியுடனும் இணைவதற்கான  நியாயமான உரிமையைக் கொண்டிருக்கிறார், தேவேந்திர ஃபட்னாவிஸ் பாஜக சட்டமன்றக் கட்சியின் தலைவராவார். தங்களுக்கு பெரும்பான்மை இருப்பதாகக் கூறும் இவர்களை ஆளுநர் ஆட்சியமைக்க அழைப்பது  முற்றிலும் சட்டபூர்வமானது," என்றார்

இருந்தாலும், சனிக்கிழமை மாலை பொழுதே,  சட்டமன்றக் கட்சித் தலைவர் பதவியில் இருந்து அஜித் பவார் நீக்கப்பட்டார். அரசாங்கம் உச்சநீதிமன்றத்திற்கு இதற்கு என்ன பதில் சொல்ல போகிறது  என்பதை பொறுத்துதான் பார்க்க வேண்டும்.

Maharashtra
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment