உள்துறை அமைச்சர் அமித் ஷா, புதன்கிழமை (மே 24) செய்தியாளர்களிடம் பேசுகையில், “புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தின் வரவிருக்கும் திறப்பு விழாவில், மக்களவை சபாநாயகர் இருக்கைக்கு அடுத்ததாக தமிழகத்தில் இருந்து வரலாற்றுச் சிறப்புமிக்க செங்கோலை பிரதமர் நரேந்திர மோடி நிறுவுவார்” என்றார்.
மேலும், “செங்கோல் என்ற தமிழ் வார்த்தை ‘செம்மை’ என்பதில் இருந்து தோன்றியது. அதாவது நீதியை குறிப்பதாகும். மேலும், செங்கோல் சுதந்திரத்தின் வரலாற்று சின்னமாகும்.
ஏனெனில் இது ஆங்கிலேயர்களிடமிருந்து இந்தியர்களுக்கு அதிகாரத்தை மாற்றுவதைக் குறிக்கிறது” என்று அமித் ஷா ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
தமிழ்நாட்டின் ஆதினம் மூலம் பண்டித ஜவஹர்லால் நேரு, ஆகஸ்ட் 14, 1947 இரவு சுமார் 10:45 மணிக்கு செங்கோலை ஏற்றுக்கொண்டார்.
து ஆங்கிலேயர்களிடமிருந்து நம் நாட்டு மக்களுக்கு அதிகாரம் மாற்றப்பட்டதற்கான அறிகுறியாகும்,” என்று அவர் கூறினார்.
நேருவுக்கு ஏன் செங்கோல் கொடுக்கப்பட்டது?
அதிகாரபூர்வ ஆவணத்தின்படி, சுதந்திரத்திற்கு சற்று முன்பு, இந்தியாவின் கடைசி வைஸ்ராய் மவுண்ட்பேட்டன், நேருவிடம் “ஆங்கிலேயரிடமிருந்து அதிகாரத்தை இந்தியக் கைகளுக்கு மாற்றுவதைக் குறிக்கும் சடங்கு” பற்றி நேருவிடம் கேட்டார்.
விரைவில் பதவியேற்கவிருக்கும் பிரதமர், இந்தியாவின் கடைசி கவர்னர் ஜெனரலாக இருந்த சி ராஜகோபாலாச்சாரியிடம் ஆலோசிக்கச் சென்றார், அவர் சோழ சாம்ராஜ்யத்தின் போது நடத்தப்பட்ட ஒரு விழாவைப் பற்றி அவரிடம் கூறினார். அதில் ஒரு மன்னரிடமிருந்து இன்னொருவருக்கு அதிகாரம் மாற்றப்பட்ட முறையை பற்றி கூறினார்.
பொதுவாக செங்கோல் அதிகாரப் பரிமாற்றத்திற்காக பயன்படுத்தப்பட்ட சின்னம். ‘செங்கோலை’ ஒரு மன்னரிடமிருந்து அவரது வாரிசுக்கு ஒப்படைப்பதாகும்” என்று ஆவணம் சுட்டிக்காட்டுகிறது.
புதிதாக முடிசூட்டப்பட்ட ஆட்சியாளருக்கு தனது குடிமக்களை நியாயமாகவும் நியாயமாகவும் ஆள்வதற்கான கட்டளையுடன் செங்கோல் வழங்கப்படும் என்றும் அது கூறியது.
செங்கோல் எப்படி உருவாக்கப்பட்டது?
நேரு ஒப்புக்கொண்டவுடன், ராஜாஜி செங்கோல் ஏற்பாடு செய்யும் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். அதன்பிறகு, தமிழகத்தின் தஞ்சை மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற மடமான திருவாவடுதுறை ஆதீனத்தை உதவிக்காக அணுகினார்.
தொடர்ந்து, செங்கோல் உற்பத்தியை சென்னையைச் சேர்ந்த “வும்மிடி பங்காரு செட்டி” நகைக்கடைகளிடம் ஒப்படைத்தார்.
வும்மிடி எத்திராஜுலு மற்றும் வும்மிடி சுதாகர் ஆகிய இருவரால் இது உருவாக்கப்பட்டது. இருவரும் இன்னும் உயிருடன் இருக்கிறார்கள், மேலும் செங்கோல் ஐந்தடி நீளம் கொண்டதாகவும், நீதியைக் குறிக்கும் ஒரு ‘நந்தி’ சின்னம் மேலேயும் பொறிக்கப்பட்டது.
செங்கோல் எப்படி நேருவிடம் ஒப்படைக்கப்பட்டது?
ஆதீனத்தின் துணைத்தலைவர், நாதஸ்வரம் கலைஞர் ராஜரத்தினம் பிள்ளை மற்றும் ஓதுவார் (பாடகர்)” உட்பட மூன்று பேர், தமிழகத்தில் இருந்து புதிதாக தயாரிக்கப்பட்ட செங்கோலை எடுத்துச் சென்றனர்.
ஆகஸ்ட் 14, 1947 அன்று நடந்த இந்த விழாவின் போது, ஆதீனத் துணைத் தலைவர் மவுண்ட்பேட்டன் பிரபுவிடம் செங்கோலைக் கொடுத்தார், பின்னர் அதை திரும்பப் பெற்றார்.
பின்னர் “பண்டிட் ஜவஹர்லால் நேருவின் வீட்டிற்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, அவரிடம் ஒப்படைக்கப்பட்டது. அப்போது தமிழில் பாடல்கள் பாடப்பட்டன.
விழாவின் போது இசைக்கப்பட்ட பாடல் 7 ஆம் நூற்றாண்டின் தமிழ் துறவி திருஞான சம்பந்தரால் இயற்றப்பட்ட பாடல் ஆகும். இந்நிகழ்ச்சியில் இந்தியாவின் முதல் ஜனாதிபதியாக பதவியேற்கவுள்ள டாக்டர் ராஜேந்திர பிரசாத் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“