மும்பை, டெல்லி: Serological சர்வே முடிவுகளை புரிந்து கொள்வது எப்படி?

டெல்லியில்23.48 சதவீதம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

டெல்லியில்23.48 சதவீதம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
மும்பை, டெல்லி: Serological சர்வே முடிவுகளை புரிந்து கொள்வது எப்படி?

Amitabh Sinha

டெல்லி, மும்பையில் மேற்கொள்ளப்பட்ட இரண்டு வெவ்வேறு சீரம்–பரவல் தொடர்பான ஆய்வு முடிவுகள் செவ்வாய்க்கிழமையன்று  அறிவிக்கப்பட்டது. பரிசோதித்தவர்களில், 25 சதவீதத்திற்கும் குறைவான மக்களிடம் கொரோனா வைரஸ்-தொடர்புடைய ஆன்டிபாடிகள் கண்டறியப்பட்டதாக ஆய்வுகள் தெரிவித்தன. இந்த இரண்டு நகரங்களில் வாழும் மொத்த மக்கள் தொகையில், சுமார் 25 சதவீதம் பேர் ஏற்கனவே கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்  என்பதை அறிய முடிகிறது.

Advertisment

ஒருவரின் ரத்தத்தில் உள்ள சீரத்தில் ஐஜிஜி (IgG) ஆன்டிபாடிகளும், தொற்றும் உள்ளனவா என்பதை கண்டறிவதன் மூலம், ஒரு குறிப்பிட்ட மக்கள்தொகையில் பெருந்தொற்று பரவலை மதிப்பீடு செய்வதற்கான முக்கிய சான்றினை  இந்த ஆய்வு அளிக்கிறது. ஒரு சமூகத்தில் நோயுற்ற அனைவர்க்கும்  மருத்துவ பரிசோதனையை மேற்கொள்ள முடியாது. மேலும் , கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட பெரும்பாலானோர் அறிகுறியற்ற நிலையில் உள்ளனர். எனவே, ஒரு இடத்தில் பாதிக்கப்பட்டவர்களின் உண்மையான எண்ணிக்கையை மதிப்பிடுவதற்கு சீரம்–பரவல் தொடர்பான ஆய்வை  மேற்கொள்கின்றனர்.

நோய்க்கிருமியால் பாதிக்கப்பட்ட  ஒவ்வொருவரும் (அறிகுறிகள் கொண்ட/ அறிகுறியற்ற), ஆன்டிஜெனுடன் பொருந்தக்கூடிய ஆன்டிபாடிகளை உருவாக்குகின்றன. இந்த ஆன்டிபாடிகள் அனைத்தும்  ஒருவரின் நோய் நோயெதிர்ப்பு மண்டலத்தில் நீண்ட காலத்திற்கு(சில மாதங்களுக்கு) சேமித்து  வைக்கப்படும்.  எனவே, கொரோனா தொடர்பான குறிப்பிட்ட ஆன்டிபாடிகளைக் கண்டறிவதன்  மூலம் அந்த நபர் ஒரு கட்டத்தில் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என்று அறிய  முடிகிறது.

கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

நோய்ப் பரவலின் உண்மையான அளவை மதிப்பிடுவது பல காரணங்களுக்காக முக்கியதத்துவம் பெறுகிறது. நோயைக் கட்டுப்படுத்தப் பயன்படுத்த வேண்டிய சிகிச்சை முறை, பெருந்தொற்ற்று சமூகத்தில் ஏற்படுத்தும் தாக்கம், இறப்பு விகிதம், அதிக ஆபத்துடைய மக்களுக்கு தேவையான தடுப்பு நடவடிக்கைகள் குறித்த புரிதலை அளிக்கிறது.

Advertisment
Advertisements

எடுத்துக்காட்டாக, டெல்லியில் கொரோனா உறுதிபடுத்தப்படும் விகிதம் 14.9 சதவீதமாக உள்ளது. அதாவது சோதனைக்கு உட்படுத்தப்பட்டவர்களில் 14.9 சதவீதம் பேருக்கு கொரோனா உறுதியாகிறது. ஆனால் அனைவருக்கும் சோதனை உட்படுத்தப்படுவதில்லை. அதற்கு  வாய்ப்பும் இல்லை. தற்போது,  ஒரு மில்லியன் மக்கள் தொகைக்கு ஒரு நாளுக்கு 140 மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட்ட வருகின்றன எனபதை இந்த இடத்தில் நினைவு படுத்திக்கொள்ள வேண்டும். எனவே, 14.9 சதவீத எண்ணிக்கை நோய்ப் பரவலின் பிரதிநிதித்துவமாக இருக்க முடியாது. உதாரணமாக, டெல்லியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஏராளமான நபர்கள் அறிகுறிகள் ஏதும் இல்லாமல் இருக்கிறார்கள் என்பது சமீபத்திய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது.

தில்லி தேசிய தலைநகர பிராந்திய அரசுடன் இணைந்து தேசிய நோய் கட்டுப்பாட்டு மையம் மேற்கொண்ட இந்த ஆய்வில் ,21,387 மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, பரிசோதிக்கப்பட்டன. ஆய்வு முடிவின்படி டெல்லியில், ஐஜிஜி ஆன்டிபாடிகள் பரவல் விகிதமானது 23.48 விழுக்காடு என்று கண்டறியப்பட்டது. அதாவது, டெல்லியில்23.48 சதவீதம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மும்பையைப் பொறுத்த வரையில், 9,590 மாதிரிகள்  பரிசோதிக்கப்பட்டு, 24.3 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று கண்டறியப்பட்டது.

மாதிரி அளவீட்டின் தாக்கம், மாதிரியின் பிரதிநிதிதத்துவ தன்மை  , மக்கள் தொகையில் நோய் எவ்வளவு சீராக பரவுகிறது என்பதைப் பொறுத்து, ஆய்வில் பெறப்பட்ட எண்களை ஒட்டுமொத்த மக்கள்த்தொகைக்கு எவ்வளவு சிறப்பாக விரிவுபடுத்த முடியும் என்பதற்கான பதில் அமைகிறது.

இதற்கிடையில், ஜூன் 1ம் தேதியில் இருந்து, முதல் முறையாக கடந்த திங்களன்று 1,000 க்கும் குறைவான கொரோனா  பாதிப்பை பதிவு செய்த டெல்லி, செவ்வாயன்று 1,349 புதிய நோய்ப் பாதிப்புகளை கண்டறிந்தது.

publive-image

ஆனால்,  செவ்வாயன்று ஆந்திர மாநிலம் 5,000 புதிய பாதிப்புகளை பதிவு செய்தது. 8.5 சதவீத தினசரி வளர்ச்சி விகிதத்துடன் தற்போது நாட்டில் வேகமாக வளர்ந்து வரும் ஆந்திராவில் மொத்த நோய்த் தொற்று எண்ணிக்கை 58,000-ஐத் தாண்டியது. கடந்த ஒரு வாரத்தில் மாநிலத்தின் மொத்த கேசலோடில் கிட்டத்தட்ட 45 சதவீதம் சேர்க்கப்பட்டுள்ளது.

ஒடிசா முதல் முறையாக 1,000 க்கும் மேற்பட்ட கொரோனா பாதிப்புகள் நேற்று பதிவாகின. 20,000-க்கும் அதிகமான பாதிப்பைக் கொண்ட அம்மாநிலத்தின் தினசரி வளர்ச்சி விகிதம் 4.2 சதவீதமாக உள்ளன.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Corona Virus Corona

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: