மகாராஷ்ட்ரா சட்டப்பேரவை தேர்தலில் மஹா விகாஸ் அகாடி கூட்டணிக்கு பின்னடைவு; காரணம் என்ன?

காங்கிரஸ் சார்பில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்ட முன்னாள் ஆர்.எஸ்.எஸ். தலைவர் ரவீந்திர போயார் கடைசி நேரத்தில் தேர்தலில் போட்டியிட இயலாது என்று அறிவித்ததால் காங்கிரஸ் சுயேட்சை வேட்பாளருக்கு ஆதரவை வழங்கியது.

Vishwas Waghmode 

Legislative Council poll results : மகாராஷ்டிராவில் ஆளும் மகா விகாஸ் அகாடி கூட்டணிக்கு ஏற்பட்ட பின்னடைவில், செவ்வாய்க்கிழமை முடிவுகள் அறிவிக்கப்பட்ட அகோலா-புந்தானா-வாஷிம் மற்றும் நாக்பூர் சட்டப் பேரவைத் தொகுதிகளில் சிவசேனா – காங்கிரஸ் கூட்டணி தோல்வி அடைந்தது. இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்ற பாஜக விதர்பா பகுதியில் தன்னுடைய நிலையை அது உறுதிப்படுத்திக் கொண்டது.

உள்ளூர் தொகுதிகளில் 6 மகாராஷ்ட்ரா சட்டப்பேரவை தொகுதிகளுக்கான தேர்தலை டிசம்பர் 10ம் தேதி அன்று அறிவித்தது தேர்தல் ஆணையம். நான்கு தொகுதிகளில் போட்டியின்றி வெற்றியாளர்கள் உறுதி செய்யப்பட்டனர். இரண்டு தொகுதிகளில் பாஜகவும், காங்கிரஸ் மற்றும் சிவசேனா தலா ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றனர்.

அகோலா-புந்தானா-வாஷிம் தொகுதியில் மூன்று முறை வெற்றி பெற்ற சிவசேனா இம்முறை பாஜகவிடம் தோல்வியை தழுவியது. மூன்று முறை அங்கே வெற்றி பெற்ற கோபிகிஷன் பஜோரியா பாஜகவின் வசந்த் கந்தெல்வாலிடம் 109 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார்.

நாக்பூரில் பாஜகவின் சந்திரசேகர் பவன்குலே காங்கிரஸால் ஆதரிக்கப்பட்ட சுயேட்சை வேட்பாளர் மங்கேஷ் தேஷ்முக்கை தோல்வி அடைய செய்தார். காங்கிரஸ் சார்பில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்ட முன்னாள் ஆர்.எஸ்.எஸ். தலைவர் ரவீந்திர போயார் கடைசி நேரத்தில் தேர்தலில் போட்டியிட இயலாது என்று அறிவித்ததால் காங்கிரஸ் தேஷ்முக்கிற்கு ஆதரவை அளித்தது. பவன்குலே 176 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

அகோலா-புந்தனா-வாஷிம் தோல்வி துரதிர்ஷ்டவசமானது என்று சிவசேனா வட்டாரங்கள் தெரிவித்தன. 100 வாக்குகள் வித்தியாசத்தில் நாங்கள் வெற்றி பெறுவோம் என்று எதிர்பார்த்தோம் என்றும் அவர்கள் கூறினார்கள்.

இந்த தேர்தலில் வாக்களித்த 822 உள்ளாட்சி பிரதிநிதிகளில் 130 நபர்கள் சிவசேனாவை சேர்ந்தவர்கள். 191 பேர் காங்கிரஸ் கட்சியினர். 91 நபர்கள் சிவசேனா உறுப்பினர்கள். 242 பேர் பாஜகவினர். எம்.வி.ஏ. கூட்டணிப்படி வாக்குகள் கிடைக்கப்பெற்றிருந்தால் நாங்கள் மிகவும் எளிமையாக வெற்றி அடைந்திருப்போம் என்று சிவசேனா தலைவர்கள் கூறுகின்றனர். ஆட்சி மீதான எதிர்ப்பு மற்றும் உள்ளூர் அளவில் இருக்கும் வேறுபாடுகள் கூட இந்த தோல்விக்கு காரணமாக இருக்கலாம் என்று மற்றொரு தலைவர் கூறினார்.

காங்கிரஸ் கட்சிக்கு இந்த தோல்வி பெரும் சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக அக்கட்சியின் மாநில தலைவர் நானா பதோலுக்கு. ஆர்.எஸ்.எஸ்-ல் இருந்து விலகிய போயரை சுற்றி காங்கிரஸ் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த தேர்தலில் அவர் தந்திருக்க வேண்டிய பங்களிப்பை முறையாக செலுத்தவில்லை. அதனால் சுயேட்சை வேப்டாளருக்கு ஆதரவு தரும் சூழல் உருவானது என்று வட்டாரங்கள் கூறுகின்றன.

இருந்தாலும் மிகவும் தைரியமாக தோல்வியை எதிர்கொண்ட நானா, இந்த தொகுதியில் காங்கிரஸ் கட்சி எதையும் தோற்கவில்லை. காங்கிரஸ் பெற்ற வாக்குகளில் எந்த வித்தியாசமும் இல்லை. நம்முடைய வேட்பாளர் ஏழை. பாஜகவின் வேட்பாளர் நல்ல நிதி நிலைமையில் இருக்கிறார். 90 வாக்குகளுக்கு மேல் அவர் பெற்றிருந்த போதும் அனைத்து வேட்பாளார்களையும் ஒன்றாக வைத்திருக்க அவர்கள் குதிரை பேரம் நடத்த வேண்டி இருந்தது. இது உண்மையில் பாஜகவிற்கு ஏற்பட்ட தார்மீக ரீதியிலான தோல்வி என்று கூறினார்.

அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் மகாராஷ்ட்ரா உள்ளாட்சி தேர்தலில் இந்த இரண்டு இடங்களின் தோல்வி பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது என்று இரண்டு கட்சிகளும் நம்பிக்கை தெரிவித்துள்ளன. இந்த வாக்கெடுப்புகளில், உள்ளாட்சி அமைப்புகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளே வேட்பாளருக்கு வாக்களிக்கிறார்கள் தவிர மக்களுக்கு அல்ல என்று சிவசேனா கட்சி தலைவர் ஒருவர் கூறினார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Explained news here. You can also read all the Explained news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Setback for mva in legislative council poll results shiv sena

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com