Advertisment

கேரளாவின் புதிய அமைச்சரவையில் ஷைலஜா டீச்சருக்கு இடம் இல்லை ஏன்?

ஷைலஜா சுகாதார அமைச்சராக இருந்த காலத்தில், பொது சுகாதார அமைப்பு முன்னெப்போதும் இல்லாத வளர்ச்சியை கேரளா கண்டது. குறிப்பாக அடிமட்டத்தில், இப்போது கேரள கோவிட்-19ஐ எதிர்த்துப் போராட உதவியது.

author-image
WebDesk
New Update
shailaja teacher, kerala, cpm, shailaja teacher exclusion in new cabinet, pinarayi vijayan, பினராயி விஜயன், கேரளா, ஷைலஜாவுக்கு புதிய அமைச்சரவையில் இடம் இல்லை, சிபிஎம், pinarayi vijayan new cabinet, no second term chance to any minister

பினராயி விஜயன் தலைமையிலான இரண்டாவது அமைச்சரவையில் சிபிஐ (எம்) செவ்வாய்க்கிழமை கட்சி வேட்பாளர்களை இறுதி செய்தபோது, மிகப்பெரிய ஆச்சரியம் என்னவென்றால், வெளியேறும் எல்.டி.எஃப் அரசாங்கத்தின் சுகாதாரத்துறை அமைச்சர் மூத்த தலைவர் கேகே ஷைலாஜா விடுபட்டிருந்தார். அவர் மட்டானூர் சட்டமன்றத் தொகுதியில் இருந்து 60,000 வாக்குகள் என்ற வரலாற்று சாதனை வித்தியாசத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Advertisment

ஷைலஜா விலக்கப்பட்டதால் சலசலப்பு

ஷைலஜா விலக்கப்பட்டது ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எல்.டி.எஃப்-ன் தேர்தல் வெற்றிக்கு முக்கிய காரணங்களில் ஒன்று சுகாதாரத் துறையில் அதன் குறிப்பிடத்தக்க சாதனைகள் ஆகும். குறிப்பாக நிபா வைரஸ் காய்ச்சல் பரவல், மற்றும் தற்போதைய தொற்றுநோய் நாட்களில் அதன் சாதனைகள் முக்கியமானவை. சுகாதார நெருக்கடி நாட்களில் ஷைலஜாவின் தலைமை பாராட்டப்பட்டது. அதுமட்டுமில்லாமல், அவர் சுகாதார அமைச்சராக இருந்த காலத்தில், பொது சுகாதார அமைப்பு முன்னெப்போதும் இல்லாத வளர்ச்சியை கண்டது. குறிப்பாக அடிமட்ட அளவில், இப்போது கேரளா கோவிட்-19ஐ எதிர்த்துப் போராட உதவியுள்ளது. ஒரு காலத்தில், கட்சி வட்டாரங்கள் பெண் தலைவரான இவரை பினராயி விஜயனின் அரசியல் வாரிசாக உயர்த்திக் காட்டியிருந்தது.

அடுத்த அமைச்சரவை பற்றிய அதிகாரப்பூர்வமற்ற பேச்சுவார்த்தைகளில் தொற்றுநோய் காலத்தில் ஷைலஜாவின் மிகவும் பாராட்டப்பட்ட தலைமையைக் கருத்தில் கொண்டு அவரை சிபிஐ (எம்) ஒருபோதும் விலக்கப்படவில்லை. தொற்றுநோய் நாட்களில் ஒரு நட்சத்திரமாக உயர்ந்த ஷைலஜா சுகாதார அமைச்சராக தொடருவார் என்று மக்கள் பெருமளவில் எதிர்பார்க்கின்றனர். இருப்பினும், செவ்வாய்க்கிழமை தான் விஜயன் தனது அடுத்த அணி உறுப்பினர்கள் குறித்து மனம் திறந்தார்.

எந்த அமைச்சருக்கும் இரண்டாவது பதவிக்காலத்தில் இடம் இல்லை

பினராயி விஜயன் அரசாங்கத்தின் இரண்டாவது இன்னிங்ஸில் ஷைலஜா விலக்கப்பட்டுள்ளார். இந்த அமைச்சரவை வியாழக்கிழமை பதவியேற்கவுள்ளது. கட்சி முடிவின் படி, முந்தைய எல்.டி.எஃப் அரசாங்கத்திலிருந்து எந்தவொரு அமைச்சருக்கும் இரண்டாவது முறை பதவியை வழங்கக்கூடாது. இதில் ஒரே விதிவிலக்கு கேப்டன் அந்தஸ்தை ஏற்றுக்கொண்ட விஜயன் மட்டும். ஷைலஜாவைத் தவிர, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மற்ற அமைச்சர்களான ஏ.சி.மொய்தீன் மற்றும் எம்.எம்.மணி ஆகியோரையும் கைவிட்டுள்ளது.

பினராயி விஜயனின் மேலாதிக்கம்

இந்த முடிவு கட்சியிலும் அரசாங்கத்திலும் விஜயனின் மேலாதிக்கத்தையும் கேள்வியே இல்லாதா செல்வாக்கையும் உறுதிப்படுத்துகிறது. தேர்தலில், தொடர்ச்சியாக இரண்டு முறை எம்.எல்.ஏ-வாக இருந்த எந்த ஒரு சிட்டிங் எம்.எல்.ஏ-வுக்கும் சீட் கொடுக்க வேண்டாம் என்று புரட்சிகர முடிவை பினராயி விஜயன் எடுத்திருந்தார். இது இரண்டாம் நிலை தலைவர்கள் உட்பட பல அமைச்சர்களை தேர்தல் களத்தில் இருந்து விலக்க வழிவகுத்தது. பல மூத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அமைச்சர்கள் இந்த நடவடிக்கையால் அடித்தளமாக இருந்தனர். இந்த முடிவு கட்சியின் பல பாரம்பரியமான கோட்டைகளில் கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்று கட்சி அனுதாபிகளும் தலைவர்களில் ஒரு பகுதியினரும் அஞ்சினர். ஆனால், முடிவுகள் வேறுவிதமாக நிரூபிக்கப்பட்டது.

இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த உத்தரவால் எல்.டி.எஃப் 140 இடங்களில் 99 இடங்களை வென்றது. பினராயி விஜயனின் உத்தி சிறப்பாக செயல்பட்டது என்பதை நிரூபித்துள்ளது. இந்த வெற்றி விஜயனுக்கு தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக புதிய முகங்களின் வருகையைக் கொண்டு வருவதற்கான நம்பிக்கையை அளித்துள்ளது.

தனிநபரைத் தாண்டி கட்சி கொள்கை

ஷைலாஜாவைத் தவிர்ப்பதன் மூலம், எந்தவொரு தனிப்பட்ட அமைச்சரின் சாதனைகள் மற்றும் பிம்பத்தின் அடிப்படையில் எல்.டி.எஃப் ஒரு வாக்கு வங்கி கட்டாயத்தைக் கோரவில்லை என்ற செய்தியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கொடுக்க விரும்புகிறது. அதற்கு பதிலாக, எல்.டி.எஃப் ஒட்டுமொத்த அரசாங்கத்தின் செயல்திறனை நம்பியுள்ளது. எனவே இரண்டாவது பதவிக்கான ஆணை எல்.டி.எஃப்.க்கு கட்டயாமாகி உள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இந்த முடிவு தலைவர்களின் பிரபலத்தைப் பொருட்படுத்தாமல் எந்தவொரு தனிநபருக்கும் மேலானது கட்சியும் கொள்கையும் என்பதை காட்டுகிறது. முந்தைய அரசாங்கத்தில் சுகாதாரத் துறையின் சாதனைகளுக்கு தனி அமைச்சராக இருந்த ஷைலஜாவுக்கு எந்த பெருமையையும் கொடுக்க கட்சி விரும்பவில்லை.

பொது உணர்வுகளுக்கு மிகக் குறைவான அங்கீகாரம்

இந்த முடிவு சமூகத்தின் செண்டிமெண்ட்களைப் பற்றி கட்சி குறைவாக கவலைப்படுகிறது என்பதற்கான செய்தி. ஷைலஜா சுகாதார அமைச்சராக தனது செயல்பாட்டுக்காக அரசியல் களம் முழுவதும் சமுதாயத்தில் விருதுகளை வென்றுள்ளார். கேரள சமுதாயத்தைப் பொறுத்தவரை, சுகாதார அமைச்சகத்தை வழிநடத்துவதற்கான இயல்பான வாய்ப்பை அவர் கவனித்தார். அவருக்கு இன்னொரு முக்கியமான இலாகா கிடைக்கும் என்று சிலர் எதிர்பார்த்தார்கள்.

பினராயி விஜயனுக்கான சவால்

தொற்றுநோயால் மாநிலம் பாதிக்கப்பட்டிருக்கையில், பினராயி விஜயன் தொடர்ந்து 2வது முறையாக காலடி எடுத்து வைக்கிறார். ஷைலஜாவுக்கு பிறகும், சுகாதாரத் துறையும் அதன் செயல்திறனும் சிவில் சமூகத்தின் கண்காணிப்பின் கீழ் இருக்கும். மேலும், புதிய சுகாதார அமைச்சரைக் கொண்டுவருவதற்கான அவரது முடிவு தவறாகப் போகாமல் பார்த்துக் கொள்வது பினராயி விஜயனின் பொறுப்பாகும்.

புதியவர்கள் மற்றும் அனுபவம் இல்லாத குழுவுடன் அரசாங்க இயந்திரத்தை மிகவும் திறமையாக வழிநடத்த முடியும் என்பதை பினராயி விஜயன் நிரூபிக்க வேண்டும். ஷைலஜாவை விலக்குவது விஜயனுக்கு ஒரு புதிய சவாலை அளித்துள்ளது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Kerala Pinarayi Vijayan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment