மூன்றாவது அணியை உருவாக்குவது குறித்த அரசியல் சலசலப்பு மீண்டும் வந்துவிட்டது. மூன்றாவது அணி பேச்சு மீண்டும் மீண்டும் வருகிறது; இந்த நேரத்தில் முக்கிய வேறுபாடு என்னவென்றால், இந்திய அரசியலில் அனுபவம் வாய்ந்த தலைவர்களில் ஒருவரான என்.சி.பி தலைவர் சரத் பவார் ஒரு முக்கிய பங்கு வகிப்பதாக பார்க்கப்படுகிறது.
மூத்த தலைவர் சரத் பவார் கடந்த இருபதாண்டுகளாக காங்கிரஸின் நெருங்கிய கூட்டாளியாக இருந்தபோதிலும், செவ்வாய்க்கிழமை (ஜூன் 22) புதுடெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் நடந்த கூட்டத்தில் காங்கிரஸின் எந்த உறுப்பினரும் கலந்து கொள்ளவில்லை.
ராஷ்டிர மன்ச் - ஒரு அரசியல் நடவடிக்கைக் குழுவாக 2018 இல் பல கட்சிகளின் தளமாக தொடங்கப்பட்ட பிறகு - சரத் பவாரின் வீட்டில் சில எதிர்க்கட்சித் தலைவர்களின் கூட்டம் கூடியதை அடுத்து, ஒரு எதிர்க்கட்சி கூட்டத்தைச் சுற்றி அரசியல் உற்சாகம் திங்களன்று (ஜூன் 21) தூண்டப்பட்டது.
ராஷ்டிர மஞ்ச் யாவர்?
காங்கிரஸ் மூத்த தலைவர் மனிஷ் திவாரி மற்றும் முன்னாள் அரசியல் ராஜதந்திரி கே.சி. சிங் ஆகியோரின் சிந்தனையாக இந்த மன்ச் இருந்தது. முன்னாள் மத்திய அமைச்சரும் முன்னாள் பாஜக தலைவருமான யஷ்வந்த் சின்ஹா (இப்போது திரிணாமுல் காங்கிஸில் இருக்கிறார்), முன்னாள் ஐக்கிய ஜனதா தளம் தலைவர் பவன் வர்மா மற்றும் முன்னாள் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் தினேஷ், முன்னாள் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் திரிவேதி (இப்போது பாஜகவில் இருக்கிறார்) ஆகியோரால் இந்த யோசனைக்கு முறையான வடிவம் அளித்து 2017ம் ஆண்டு இறுதியில் ஒரு தளமாக உருவாக்கப்பட்டது.
இந்த தலைவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட இந்தியாவின் கருத்தை பகிர்ந்து கொண்ட மற்றும் எந்தவொரு அமைப்பிலும் அரசியல் இயக்கங்களிலும் அங்கம் வகிக்காத எழுத்தாளர்கள், கலைஞர்கள், தொழிற்சங்கத் தலைவர்கள், மற்றும் பத்திரிகையாளர்கள் போன்ற புகழ்பெற்ற ஆளுமைகளை ஒன்றிணைப்பதற்கான ஒரு தளத்தை அமைப்பதே இந்த அமைப்பின் ஆரம்ப யோசனையாக இருந்தது.
அரசியல் நடவடிக்கைக் குழு முறையாக ஜனவரி, 2018-ல் தொடங்கப்பட்டது. வெளியீட்டு நிகழ்வில், காங்கிரஸை முன்னாள் மத்திய அமைச்சர் ரேணுகா சவுத்ரி பிரதிநிதித்துவப்படுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் திரிவேதி, வர்மா, என்.சி.பி எம்.பி. மஜீத் மேமன், ஆம் ஆத்மி கட்சி எம்.பி. சஞ்சய் சிங், முன்னாள் குஜராத் முதல்வர் சுரேஷ் மேத்தா, ஆர்.எல்.டி தலைவர் ஜெயந்த் சவுத்ரி மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர்கள் சோம் பால், ஹர்மோகன் தவான் மற்றும் சத்ருகன் சின்ஹா ஆகியோர் கலந்து கொண்டனர்.
அப்போது, யஷ்வந்த் சின்ஹா, ராஷ்டிர மன்ச் ஒரு கட்சி சாராத அரசியல் நடவடிக்கைக் குழுவாக இருக்கும். இது எந்தவொரு குறிப்பிட்ட கட்சிக்கும் எதிராக இருக்காது. ஆனால், இது தேசிய பிரச்சினைகளை முன்னிலைப்படுத்த வேலை செய்யும் என்று கூறியிருந்தார்.
ராஷ்டிர மஞ்ச் தொடங்கியது முதல் என்ன செய்தது?
இந்த குழு பாஜக எதிர்ப்பு குரல்களை அணிதிரட்ட முயற்சிக்கிறது. அதன் உறுப்பினர்கள் டெல்லியில் மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் கமல் மொரர்காவின் இல்லத்தில் சந்தித்தனர். பேராசிரியர் அருண்குமார் போன்ற பல அரசியல் சாராத நபர்கள் ராஷ்டிர மஞ்ச் விவாதங்களின் ஒரு பகுதியாக இருந்தனர்.
ஜனவரி 2020ல், சின்ஹா சி.ஏ.ஏ மற்றும் என்.ஆர்.சி.க்கு எதிராக போராட்டம் செய்ய ராஷ்டிர மஞ்ச் பதாகையின் கீழ் காந்தி சாந்தி யாத்திரையில் இறங்கினார். மார்ச், 2021இல், பாஜகவுடன் உறவுகளை முறித்துக் கொண்ட சின்ஹா, மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக திரிணாமுல் காங்கிரஸில் சேர்ந்தார்.
தேர்தலில் பாஜக தோல்வியைத் தொடர்ந்து, திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி ஒரு கூட்டாட்சி முன்னணிக்கு அழைப்பு விடுத்தார். டி.ஆர்.எஸ் தலைவரும் தெலங்கானா முதலமைச்சருமான கே.சந்திரசேகர் ராவ் இதே போன்ற ஒரு கருத்தை முன்னதாக முன்வைத்தார். கே.சி.ஆர் என்று பிரபலமாக அறியப்பட்ட சந்திரசேகர் ராவ், ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கை 2018ல் சந்தித்தார். ஆனால், பேச்சுவார்த்தைகள் பெரிதாக ஏற்படவில்லை. மேலும், இந்த கட்சிகள் 2019 மக்களவைத் தேர்தலில் தனித்து போட்டியிட்டன.
பாஜகவின் 2019ம் ஆண்டு மக்களவைத் தேர்தல் வெற்றி எதிர்க்கட்சியை அதிர்ச்சிக்குள்ளாக்கியது - பலர் இன்னும் திகைப்பில் இருக்கிறார்கள். கே.சி.ஆர் போன்ற மூன்றாவது முன்னணியின் இருந்தவர்களும் ஆதரவாளர்களும் மௌனமாகிவிட்டனர். சில சமயங்களில் முக்கிய சட்டங்கள் குறித்து நாடாளுமன்றத்தில் பாஜகவை ஆதரித்தனர். மூன்றாவது முன்னணியின் அசல் ஆதரவாளர்களான இடதுசாரி கட்சிகள் இனி அந்த யோசனையை மீண்டும் முன்னெடுக்க ஆர்வம் காட்டவில்லை.
செவ்வாய்க்கிழமை நடந்த கூட்டத்தின் முக்கியத்துவம் என்ன?
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் ஒரு பகுதியாக இருந்த என்சிபி, இப்போது மகாராஷ்டிராவில் காங்கிரஸ் - சிவசேனாவுடன் அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்கிற பின்னணியில் சரத் பவார் வந்ததன் காரணமாகவே பெரும்பாலும் இந்த உற்சாகம் ஏற்பட்டுள்ளது.
செவ்வாய்க்கிழமை மாலை நடந்த ராஷ்டிர மஞ்ச் கூட்டத்தைத் தொடர்ந்து, என்.சி.பி தலைவர் மஜீத் மேமன், சரத் பவார் அதை தொடங்கியிருந்தாலும் சரத் பவார் ஒருங்கிணைத்தார் என்பதை மறுத்தார்.
இந்த கூட்டம் காங்கிரஸை தவிர்த்து, பாஜக எதிர்ப்பு சக்திகளை அணிதிரட்டுவதற்கான ஒரு முயற்சி என்ற கருத்துகள் ஆதாரமற்றவை என்று மேமன் கூறினார்.
மகாராஷ்டிராவில் மகா விகாஸ் அகாதி கூட்டணி அரசுக்குள் உண்மையில் சில ஆரவாரங்கள் இருந்தாலும், ராஷ்டிர மஞ்ச் எங்கே பொருந்துகிறது?
பல அரசியல் நோக்கர்கள் இது ஆழம் பார்க்கும் முயற்சியாக இருக்கலாம் என்றும் இதன் மூலம் காங்கிரஸ் மற்றும் பாஜக இரு கட்சிகளுக்கும் ஒரு சமிக்ஞையை அனுப்பலாம். ராஷ்டிரமன்ச் இதுவரை அரசியல் உறுப்பினர்களுக்காக அவ்வப்போது தனது உறுப்பினர்களின் கூட்டங்களுக்கு தன்னை மட்டுப்படுத்திக் கொண்டுள்ளது.
பாஜக மீது எந்தவொரு ஒருங்கிணைந்த முயற்சியையும் எடுப்பதற்கு தேவையான தலைமையை காங்கிரஸால் வழங்க முடியவில்லை என்று பல எதிர்க்கட்சித் தலைவர்கள் நீண்டகாலமாக புகார் கூறி வருகின்றனர். எனவே இந்த நடவடிக்கை காங்கிரஸை தூக்கத்திலிருந்து எழுப்பும் நோக்கமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
பாஜகவை எதிர்க்கும் காங்கிரஸ் அல்லாத கட்சிகளை ஒருங்கிணைக்க காங்கிரஸ் கட்சி முன்முயற்சி எடுக்கும் வரை காத்திருக்காமல் கைகோர்க்க வேண்டும் என்று சில எதிர்க்கட்சித் தலைவர்கள் கருதுகின்றனர். காங்கிரஸ் விரும்பினால் இந்த குழுவில் சேரலாம் என்று அவர்கள் நம்புகிறார்கள்.
எவ்வாறாயினும், இது தலைமைத்துவம் பற்றிய கேள்வியை எழுப்புகிறது. இந்தியா முழுவதும் உள்ள காங்கிரஸ் இல்லாமல் பாஜக அல்லாத சக்திகள் உருவாக்கம் சாத்தியமில்லை என்று இடதுசாரி கட்சிகள் நம்புகின்றன. சில எதிர்க்கட்சி தலைவர்களுடன் ராஷ்டிர மஞ்ச் கூட்டத்தை நடத்திய பவாரின் முடிவு அரசியல் மனநிலையை அளவிடுவதற்கான ஒரு முயற்சியாகும்.
சரத் பவாரின் இருப்பு குறிப்பிடத்தக்கதாகும். மேலும் கூட்டத்தைக் கூட்ட உதவுகிறது. அவர் இந்தியாவின் மூத்த தீவிர எதிர்க்கட்சி அரசியல்வாதி. அரசியல் களம் முழுவதும் பெரும்பாலான தலைவர்களுடன் அவருக்கு நல்ல உறவுகள் உள்ளன. அவரது பரந்த நிர்வாக மற்றும் அரசியல் அனுபவத்தைப் பொறுத்தவரையில் பிரதமர் நரேந்திர மோடிக்கு சவாலான ஆளுமையாகக் காணப்படுகிறார். இருப்பினும், அவருடைய வயது பவாருக்கு சாதகமாக இல்லை - அவருக்கு ஏற்கனவே 80 வயது ஆகிவிட்டது. அடுத்த மக்களவைத் தேர்தலின் போது அவருக்கு 83 வயதாகி இருக்கும்.
இருப்பினும், சில எதிர்க்கட்சித் தலைவர்கள், பாஜகவை எதிர்க்கும் கட்சிகளை ஒன்றிணைக்க அவரால்தான் ஒருங்கிணைக்கும் பாத்திரத்தை வகிக்க முடியும் என்று நம்புகிறார்கள்.
இந்த கட்சிகளிடையே சீட் பகிர்வு மற்றும் சீட்டுகளை விட்டுக்கொடுத்தல் பிரச்சினையும் தந்திரமாக இருக்கிறது. ஆனால், பெரும்பாலான தலைவர்கள் கட்சிகளை ஒரே மேடையில் ஒன்றிணைப்பதுதான் முதல் படி என்று நம்புகிறார்கள்.
இதில் பிரசாந்த் கிஷோர் எங்கே பொருந்துகிறார்?
மம்தா பானர்ஜியின் வெற்றிக்குப் பிறகு, பிரசாந்த் கிஷோர் செல்வாக்கு மிக்கவராக இருக்கிறார். அவர் மீண்டும் தேர்தல் பிரச்சாரத்தை நிர்வகித்தார். அவர் பஞ்சாப் முதல்வர் மற்றும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கேப்டன் அமரீந்தர் சிங்குடன் நெருக்கமாக உள்ளார். திமுக மற்றும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிகளின் பிரச்சாரங்களை அவர் கையாண்டுள்ளார். மேலும், மு.க.ஸ்டாலின் மற்றும் ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டி ஆகிய இருவருடனும் அவர் திறந்த தொடர்பு கொண்டுள்ளார்.
கிஷோருக்கு அரசியல் நிலைப்பாடு குறைவாக உள்ளது. அவர் என்ன இருந்தாலும் ஒரு பின்னணியில் இருந்து செயல்படுபவர். ஆனால், சரத் பவார் தனது முக்கியத்துவத்தை கிஷோர் ஆபரேஷனுக்குக் கொடுத்ததும் அந்த குறைபாடு காணமல் போகும்.
பிரசாந்த் கிஷோர் கடந்த இரண்டு வாரங்களில் இரண்டு முறை சரத் பவாரை சந்தித்தார். அவர்கள் என்ன விவாதித்தார்கள் என்பது தெளிவாகத் தெரியவில்லை - இருப்பினும், ராஷ்டிர மஞ்ச் கூட்டத்தை நடத்துகிற பவாரின் முடிவு பிரசாந்த் கிஷோர் சந்தித்ஹ்ட இரண்டாவது நாளில் எடுக்கப்பட்டது.
பிரசாந்த் கிஷோர் செவ்வாய்க்கிழமை நடந்த கூட்டத்தில் பங்கேற்காமல் மூன்றாவது அணியை உருவாக்குவதற்கான சாத்தியமான முயற்சிகளில் இருந்து விலகிவிட்டார். அவர் ஒரு கட்டத்தில் ராகுல் காந்தியுடன் நெருக்கமாக இருந்தார். மேலும், 2017 உத்தரபிரதேச சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸின் பிரச்சாரத்தை நிர்வகித்து வந்தார்.
அத்தகைய ஒரு அணியை உருவாக்குவதன் மூலம் காங்கிரசுக்கு ஏதாவது கிடைக்குமா?
காங்கிரஸுக்கு ஒன்றும் கிடைக்காது. உண்மையில், கட்சியை எதிர்க்கட்சியாக வழிநடத்த முடியாது. சில கட்சிகளை மூன்றாவது அணியை உருவாக்குவதற்கான விருப்பத்தை ஆராய்வது என்பது காங்கிரசுக்கு மோசமான பார்வையாகும்.
பல கட்சிகள் தங்கள் சொந்த மாநில கோட்டைகளில் நிலைமையைக் கருத்தில் கொண்டு, காங்கிரசுடன் நட்பு கொள்வது கடினம் என்ற உண்மையை உணர்ந்துள்ளன. உதாரணமாக ஆம் ஆத்மி கட்சி, டி.ஆர்.எஸ், அகாலிதளம் மற்றும் பி.ஜே.டி ஆகியவை மாநில அளவில் காங்கிரஸ் கட்சிக்கு போட்டியாளர்களாக உள்ளனர். சமாஜ்வாடி கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி போன்ற சில கட்சிகள் காங்கிரஸிலிருந்து விலகி இருக்க விரும்புகிறார்கள்.
மூன்றாவது அணி சோதனை தோல்வியுற்றது என்று காங்கிரஸ் தலைவர்கள் வாதிடுகின்றனர் - மேலும் ஒரு எதிர்க்கட்சி அணி காங்கிரஸ் இல்லாமல் சாத்தியமில்லை என்று வாதிடுகிறார்கள். பரந்த எதிர்பின் ஒற்றுமை சாத்தியம் என்று அவர்கள் நம்புகிறார்கள். ஆனால், அவர்கள் காங்கிரஸுடன் மட்டுமே முன்னணியில் உள்ளனர். இருப்பினும், மாநில அளவிலான நட்புறவுகளில் மக்களவைத் தேர்தலுக்கான இடப் பகிர்வில் எவ்வாறு செயல்பட முடியும் என்று கற்பனை செய்வது கடினமாக இருக்கிறது.
மம்தா பானர்ஜி, சரத் பவார், அரவிந்த் கெஜ்ரிவால் போன்றவர்கள், நவீன் பட்நாயக் மற்றும் உத்தவ் தாக்கரே ஆகியோருடன் கைகோர்த்தால், அது காங்கிரசுக்கு மோசமான செய்தியாக இருக்கும்.
சிக்கலான எதிர்க்கட்சிகளின் தளம் மற்றும் பிராந்திய கட்சிகளின் அழுத்தங்கள் கடந்த காலங்களில் நம்பகமான மூன்றாவது அணியை உருவாக்குவதற்கு பெரும்பாலும் இடையூறாக உள்ளன; அதே காரணங்கள்தான் பாஜக எதிர்ப்பு கூட்டணி உருவாவவதற்கும் வருகிறது.
பவார் உண்மையிலேயே முயற்சி செய்தால் எதிர்க்கட்சிகளின் அரசியலில் ஒரு கவர்ச்சியான திட்டத்தின் தொடக்கமாக இருக்கும்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.