Anoop Ramakrishnan, N R Akhil, Manish Kanadje, Mridhula Raghavan
Share of women, youth in new Assemblies : 294 தொகுதிகளை கொண்ட மேற்கு வங்க சட்டமன்றத்தில் புதிதாத தேர்வு செய்யப்பட்டிருக்கும் பிரதிநிதிகள் 3 கட்சிகளை சார்ந்தவர்கள் மட்டுமே. கடந்த முறை 8 கட்சிகள் சட்டமன்றத்தில் இருந்த நிலையில் தற்போது மூன்று கட்சிகள் மட்டுமே உள்ளன. ஆனால் கேரளா மற்றும் தமிழகத்தில் நிலைமை நேர் எதிராக உள்ளது. கடந்த முறை 4 கட்சியின் பிரதிநிதிகள் மட்டுமே இருந்த நிலையில் தற்போது 8 கட்சிகள் உள்ளன. 2019ம் ஆண்டு 288 தொகுதிகளைக் கொண்ட மகாராஷ்ட்ரா மாநில சட்டமன்றத்தில் 15 கட்சிகளை சேர்ந்த பிரதிநிதிகள் இடம்பெற்றனர். தற்போது 140 தொகுதிகளை கொண்ட கேரளத்தில் மொத்தம் 16 கட்சிகளின் பிரதிநிதிகள் தற்போது சட்டமன்றத்தில் அடி எடுத்து வைக்கின்றனர்.
கடந்த சில மாநில சட்டமன்றங்களில் தனி ஒரு கட்சியாக பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கவில்லை. உதாரணம் பிகார் மற்றும் மகாராஷ்ட்ரா. மேற்கு வங்கம் மற்றும் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் முடிவுகளில் தனிக்கட்சியின் பெரும்பான்மை இம்முறை உறுதியாகியுள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் 213 தொகுதிகள் மற்றும் திமுக 133 தொகுதிகாள். அசாமில் 4 தொகுதிகளால் மேஜாரிட்டி இலக்கை இழந்தது. 126 தொகுதிகளில் 60 தொகுதிகளில் வெற்றி பெற்றது. கேரளாவில் மீண்டும் கூட்டணி அரசு அமையும்.
பாலினம் மற்றும் வயது அடிப்படையில் சட்டமன்றத்தில் இடம் பெற இருக்கும் நபர்களின் விகிதம் குறித்து இங்கே பார்ப்போம். கேரளாவில் கடந்த முறை 8 ஆக இருந்த பெண்கள் பிரதிநிதி எண்ணிக்கை இம்முறை 11 ஆக அதிகரித்துள்ளது. மேற்கு வங்கத்தில் மாறாமல் 40 ஆக உள்ளது. கடந்த முறை 41 ஆக இந்த எண்ணிக்கை இருந்தது. தமிழகத்தில் 21 ஆக இருந்த எண்ணிக்கை 12 ஆக குறைந்தது.
இது மாநிலத் தேர்தல்களில் தொடர்ச்சியான போக்காக இருந்து வருகிறது. 243 உறுப்பினர்களைக் கொண்ட பீகார் சட்டமன்றத்தில், கடந்த இரண்டு தேர்தல்களில் பெண் எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை பெரும்பாலும் மாறாமல் உள்ளது, 2015 இல் 28 பெண்கள் மற்றும் 2020 ல் 26 பெண்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மகாராஷ்டிராவில், 2014ல் 20 பேர் தேர்வு செய்யப்பட்ட நிலையில், 2019ல் 24 பெண்கள் சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
வயது அடிப்படையில் எம்.எல்.ஏக்கள்
மேற்கு வங்கத்தில் 25 முதல் 40 வயது பிரதிநிதிகளின் எண்ணிக்கை 14% அதிகரித்துள்ளது. கேரளா மற்றும் தமிழகத்தில் முறையே 9 மற்றும் 6% ஆக உள்ளது. 70 அல்லது அதற்கு மேற்பட்ட உறுப்பினர்களின் எண்ணிக்கை மறுமுனையில் தமிழகத்தில் அதிகரித்துள்ளது. 15 எம்.எல்.ஏக்கள் 70 முதல் 83 வயதுவரை உள்ளனர். திமுகவின் பொதுச்செயலாளர் துரைமுருகன் இருப்பதிலேயே வயது அதிகமானவர் என்று கூறப்படுகிறது. முன்னாள் முதலமைச்சர் வி எஸ் அச்சுதானந்தன் 97 வயதில் கேரள சட்டசபையில் மிகப் வயதான உறுப்பினராக இருந்தார்.
The authors are with PRS Legislative Research
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.