Advertisment

சிக்கன் ஷவர்மாவில் ஷிகெல்லா… கேரள சிறுமியின் உயிரை பறித்த இந்த வைரஸ் என்ன செய்யும்?

Shigella Bacteria Shawarma kerala girl death: ஷிகெல்லா மிகவும் பொதுவான தொற்று அல்ல. ஆனால், அதை எளிதாக குணப்படுத்த முடியும். ஒருவேளை, மருத்துவரிடம் செல்வதில் தாமதம் ஏற்பட்டால் நிலைமை மோசமடையலாம். இந்த நோயினால், இளம் குழந்தைகள், பலவீனமான நோயெதிர்ப்பு சக்தி உள்ளவர்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர்.

author-image
WebDesk
New Update
சிக்கன் ஷவர்மாவில் ஷிகெல்லா… கேரள சிறுமியின் உயிரை பறித்த இந்த வைரஸ் என்ன செய்யும்?

Shigella Bacteria kerala: கேரள மாநிலம் காசர்கோட்டில் சிக்கன் ஷவர்மா சாப்பிட்ட 16 வயது மாணவி உடலநலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். மேலும், ஷவர்மா சாப்பிட்ட 30க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு உணவில் இருந்த ஷிகெல்லா பாக்டீரியா தான் காரணம் என்பதை கேரள சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

Advertisment

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தவர்களின் ரத்தம் மற்றும் மலத்தில் பாக்டீரியா இருப்பது உறுதி செய்யப்பட்டது.இச்சம்பவத்தில் அந்த உணவகத்தின் உரிமையாளரையும், ஊழியரையும் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

உணவு நச்சுத்தன்மையாக மாறுவது பொதுவானது தான். அவை பல நிலைகளில் ஏற்படலாம். ஆனால், ஷிகெல்லா பாக்டீரியா எவ்வளவு பொதுவானது? அதன் அறிகுறிகள் என்ன? மருத்துவரை எப்போது அணுக வேண்டும் போன்ற கேள்விகளுக்கான விடையை இங்கே காணலாம்.

ஷிகெல்லா பாக்டீரியா என்றால் என்ன?

ஷிகெல்லா, என்டோரோபாக்டர் பாக்டீரியா வகையை சேர்ந்தது. இது, மனிதர்களின் குடலில் வசிக்கக்கூடியது. குடலில் பாதிப்பை ஏற்படுத்துவதால், வயிற்றுப்போக்கு,வயிற்று வலி மற்றும் காய்ச்சல் போன்றவை ஏற்படக்கூடும்.

இந்த பாக்டீரியா எளிதில் பரவக்கூடியது என்றும், சிறிய அளவிலான பாக்டீரியா எண்ணிக்கை இருந்தாலே உடல்நலக்குறைவு ஏற்படும் என அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் (CDC) கூறுகிறது. இது உணவு மற்றும் நீரினால் பரவும் நோய்த்தொற்று ஆகும். சரியாக கழுவாத பழங்கள், காய்கறிகள் போன்ற அசுத்தமான உணவை உட்கொள்ளும் போது எளிதில் பரவக்கூடியது.

உதாரணமாக, உணவைத் தயாரிக்கும் ஒருவர் கழிப்பறை சென்ற பின்னர் கைகளை சரியாக கழுவாத பட்சத்தில், நோய்த்தொற்று பாதிக்கப்பட்ட உணவு மற்றும் தண்ணீர் வழியாக அது மற்றவர்களுக்கும் பரவ வாய்ப்புண்டு. அசுத்தமான நீரில் நீந்தினாலும் அல்லது குளித்தாலும் தொற்று ஏற்படலாம்

ஷிகெல்லா தொற்று எவ்வளவு பரவலாக உள்ளது?

டெல்லியில் இந்திரபிரஸ்தா அப்பல்லோ மருத்துவமனையில் பணியாற்றும் டாக்டர் சுரஞ்சித் சாட்டர்ஜி கூறுகையில், ஷிகெல்லா மிகவும் பொதுவான தொற்று கிடையாது. அசுத்தமான உணவுகளால் டைபாய்டு, காலரா போன்ற தொற்றுநோய்கள் ஏற்படுவதை தான் பார்த்திருப்போம். வயிற்றுப்போக்கு ஏற்படும் 100-ல் ஒருவருக்கு ஷிகெல்லா தொற்று பாதிப்பு இருக்கும் என்றார்.

பெரும்பாலும், கர்ப்ப காலத்திலும், ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளிடமும், பலவீனமான நோயெதிர்ப்பு சக்தி உள்ளவர்களிடமும் ஷிகெல்லா நோய்பாதிப்பு அதிகரிக்கிறது.

ஷிகெல்லா sonnei, ஷிகெல்லா flexneri, ஷிகெல்லா boydii,ஷிகெல்லா dysenteriae என மனிதர்களை தாக்கும் நான்கு வகையான ஷிகெல்லா பாக்டீரியாக்கள் உள்ளன. இதில், நான்காவது வகை மிகவும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும். ஏனெனில், அந்த தொற்று நச்சுத்தன்மை உருவாக்கக்கூடியது.

ஷகெல்லாவால் மக்கள் இறப்பது பொதுவானதா?

டாக்டர் சாட்டர்ஜி கூறுகையில், இந்த நோய் தொற்று காரணமாக உயிரிழப்பு ஏற்படாது. நோயாளிக்கு பலவீனமான நோயெதிர்ப்பு அமைப்பு இருந்தால் மட்டுமே சிக்கலாகும். இது சிகிச்சையளிக்கக்கூடிய தொற்று பாதிப்பு தான். நோயாளி சரியான நேரத்தில் மருத்துவமனைக்குச் சென்றால், வைரஸை கொல்லும் ஸ்டேஜ் 4 ஆன்டிபயாடிக்ஸ் மூலம் குணமாக்கிடலாம்.

வயிற்றுப்போக்கை ஏற்படுத்தும் பொதுவான நோய்த்தொற்றுகளுக்கு மருத்துவர்கள் நுண்ணுயிர் எதிர்ப்பிகளை பரிந்துரைக்கின்றன. அவை பொதுவாக ஷிகெல்லாவிற்கு எதிராகவும் வேலை செய்யக்கூடும் என்றார்.

பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் கழகத்தின் தொற்று நோய் ஆராய்ச்சி மையத்தின் இணைப் பேராசிரியர் டாக்டர் அமித் சிங் கூறுகையில், ஷிகெல்லா தொற்று மற்ற அனைத்து உறுப்புகளையும் பாதிக்கக்கூடிய நச்சுகளை அதிகளவில் உற்பத்தி செய்கிறது. ஆன்டிபயாடிக்ஸ் கொடுத்தபிறகும், பாக்டீரியாக்கள் உடலில் தொடர்ந்து பெருகினால், அது தொடர்ந்து நச்சுகளை உற்பத்தி செய்யும்,இது சிறுநீரகத்தை பாதிப்பது மட்டுமின்றி பல உறுப்பு செயலிழப்பு வழிவகுக்கும். சில சமயங்களில் மரணமும் ஏற்படலாம். இருப்பினும், பெரும்பாலான சந்தர்ப்பங்களில் இது நடக்காது. இந்த தொற்றின் இறப்பு 1% க்கும் குறைவாக உள்ளது என்றார்.

இந்த நோயினால், இளம் குழந்தைகள், பலவீனமான நோயெதிர்ப்பு சக்தி உள்ளவர்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர்.

வயிற்று பிரச்சினைக்கு எப்போது கவலைப்பட வேண்டும்?

ஒவ்வொரு முறையும் உங்களுக்கு வயிற்றுபோக்கு ஏற்படும் போது மருத்துவர் அல்லது மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை என டாக்டர் சாட்டர்ஜி கூறுகிறார். அதேசமயம், வயிற்றுபோக்குடன் சேர்த்து அதீத காய்ச்சல், மலத்தில் ரத்தம் அல்லது தொடர்ந்து வாந்தியெடுத்தல் போன்ற பிரச்னை இருந்தால், நிச்சயம் மருத்துவரிடம் ஆலோசிக்க வேண்டும்.

கடுமையான வயிற்றுப்போக்கு அதாவது 20க்கும் மேற்பட்ட முறை கழிவறை செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டால், மருத்துவரை சந்திப்பது நல்லது. லேசான வயிற்றுப்போக்கு உள்ள நோயாளி மருத்துவரிடம் செல்வதற்கு முன் மூன்று முதல் நான்கு நாட்கள் வரை காத்திருக்கலாம்.

ஷவர்மா சாப்பிட்டு உயிரிழந்த கேரளா மாணவி, உரிய நேரத்தில் மருத்துவ சிகிச்சை பெறாதது தான் காரணம் என டாக்டர் சாட்டர்ஜி தெரிவித்தார்.

என்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்?

உணவு உண்பதற்கு முன்னும் பின்னும் கைகளை நன்றாகக் கழுவ வேண்டும். கழிவறை சென்றுவிட்டு வந்த பிறகு, கைகளை கழுவ வேண்டும். நீங்கள் குடிக்கும் தண்ணீர் சுத்தமாகவும், பழங்கள் மற்றும் காய்கறிகள் புதியதாகவும் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

பால், கோழி மற்றும் மீன் போன்ற பொருட்கள் எளிதில் பாதிக்கப்படலாம். அவற்றை சரியான வெப்பநிலையில் வைத்து சமைக்க வேண்டும் என டாக்டர் சிங் கூறினார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Kerala
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment