பொருளாதார மந்த நிலையில் வீடு வாங்குவது நல்லதா?

கோவிட்டால் உருவாகியிருக்கும் மந்தநிலையால் அதிகம் பாதிக்கப்படாத மற்றும் வசதியாக இருக்கும் நபர்கள் மட்டுமே வீட்டை வாங்கலாம்.

Should you buy a house now

Sandeep Singh

Should you buy a house now? :  சொத்துக்களின் விலை குறைந்து வருவது மற்றும் குறைவான வட்டி விகிதங்கள் போன்றவற்றால் ஒருவர் தன்னுடைய முதல்வீட்டினை வாங்க அல்லது பெரிய வீட்டிற்கு செல்ல முயற்சிக்கலாம். ஆனால் வீடு வாங்கும் போது ஒருவர் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக வருவாய் வீழ்ச்சி அடைந்து வருகின்ற நேரத்தில், சொத்து மதிப்புகள் குறைவாக இருக்கின்ற போது, மேலும் வாடகையும் குறைந்து வருகின்ற சூழலில். கொரோனா தொற்றால் உருவான பொருளாதார மந்த நிலையில் ஒருவர் கையில் பணப்புழக்கத்தை வைத்திருப்பது தான் முக்கியமே தவிர கூடுதல் பொறுப்புகளுக்கு செல்ல கூடாது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

வீடு வாங்கலாமா அல்லது வாடகை வீட்டிலேயே தங்கலாமா?

குறைந்த பட்சம் தங்கள் வேலை மற்றும் சம்பள நிலைகளை அப்படியே வைத்திருப்பவர்களுக்கும், சில காலமாக சொந்தமாக ஒரு வீட்டை வாங்க விரும்புவோருக்கும், ஒரு வீட்டை வாங்க இது ஒரு மிகச்சிறந்த நேரமாக இருக்கலாம். கடந்த 4-5 ஆண்டுகளில் சொத்து விலைகளில் ஏற்பட்ட திருத்தம் மற்றும் வட்டி வீதங்களின் கூர்மையான வீழ்ச்சி ஆகியவை அத்தகைய முடிவை ஆதரிக்கும் காரணிகளாக இருந்தால், ரெடி டூ மூவ் இன்வெண்டரி அதிக அளவில் சந்தையில் உள்ளன. தற்போதைய சந்தை சூழ்நிலையில் வாங்குவோர் நெகோசியேடிங் அதிகாரத்தை வைத்திருப்பது வீழ்ச்சியை மேலும் தூண்டுகிறது.

“நீண்ட காலமாக வாங்க காத்திருப்பவர்களுக்கு இது ஒரு சரியான நேரம். சுமார் 15 ஆண்டுகளில் முதல் முறையாக, ரியல் எஸ்டேட் சந்தை வாடிக்கயாளர்களுக்கான சந்தையாக மாறியுள்ளது. கடந்த 10-15 ஆண்டுகளில் பில்டர்கள் மற்றும் சப்ளையர்கள் கூறுவது தான் விதிமுறையாக இருந்தது. தற்போது ஒருவர் கடுமையாக பேரம் பேசி மேற்கோள் காட்டப்பட்ட விலையை விட குறைந்த விலையில் வீட்டைப் பெற முடியும் ”என்று ரியல் எஸ்டேட் ஆராய்ச்சி நிறுவனமான லியாஸ் ஃபோராஸின் நிறுவனர் மற்றும் எம்.டி. பங்கஜ் கபூர் கூறினார்.

பொருளாதார அழுத்தத்தில் இருக்கும் நபர்கள், அவர்களின் கையில் பணப்புழக்கம் மீண்டும் வரும் வரை வீடு வாங்கும் எண்ணத்தை தள்ளி வைப்பதே நலம். அவர்கள் வாடகை வீட்டில் இருக்கலாம். அல்லது வீட்டின் மாத வாடகையை குறைக்க பேரம் பேசலாம். கொரோனா பெருந்தொற்றின் காரணமாக தொடர்ந்து அதிகரித்து வரும் வேலையின்மை மற்றும் நகரங்களில் இருந்து வெளியேறி செல்லுதல் போன்ற காரணங்களால் சொத்து மதிப்பும், வாடகைகளும் தொடர்ந்து அழுத்ததில் தான் இருக்கும் என்பதால் ஒருவர் வாடகை வீட்டில் இருப்பது என்பது மிகச்சிறந்த முடிவாகவே இருக்கும்.

வாடகை vs சொத்து வாங்குதல் : என்னென்ன காரணங்களை கருத்தில் கொள்ள வேண்டும்?

வீடு வாங்கும் முடிவைக் கூட மிகவும் கவனத்துடன் எடுக்க வேண்டும். ஏன் என்றால் வாடகை வருமானமும் கூட குறைவாக இருக்கின்ற நேரத்தில் சொத்து அதிகமாக மதிப்பிடப்படலாம். எதிர்காலத்தில் அதன் கேப்பிட்டல் அப்ரிசியேசன் குறைவாக இருக்கும். எனவே நீங்கள் சொத்து வாங்க யோசித்து வைத்திருக்கும் இடத்தில் இன்னும் சில வருடங்களுக்கு அந்த சொத்து மதிப்பு அதே அளவில் தான் இருக்கும்.

வீட்டு வாடகையில் இருந்து கிடைக்கும் வருமானமானது 3.5%க்கும் அதிகமாக இருந்தால் ஒருவர் வீடு வாங்குவது குறித்து யோசிக்கலாம். பாதுகாப்பு உணர்வை தருகின்றது என்பதை தாண்டியும், வருங்கால கேப்பிட்டல் அப்ரிசியேசனை தர வேண்டும் என்றும் நினைத்து வீட்டினை வாங்க வேண்டும். ரெண்ட்டல் யீல்டு 2.5% குறைவாக இருக்கும் போது வீடு வாங்குவதற்கு பதிலாக ஒருவர் வாடகை வீட்டிலேயே இருந்துவிடலாம். குறைந்து வரும் ரெண்டல் யீல்ட் என்பது லோ கேபிட்டல் அப்ரிசியேசனை மேலும் அதிகரிக்கும். தற்போதைய சூழலோடு ஒப்பிட்டால், அதிகரித்து வரும் வேலை வாய்ப்பின்மையை கணக்கில் கொண்டும், மக்கள் நகரங்களில் இருந்து தங்களின் சொந்த ஊர் நோக்கி செல்வதாலும் மேலும் இந்த ரெண்டல் யீல்டுகள் குறைவாக இருக்கும்.

உதாரணத்திற்கு நீங்கள் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள வீட்டினை, 80 லட்சம் லோனுடன் வாங்குகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். 20 வருட கடனுக்காக 7.5% வட்டி விகிதத்தில் இக்கடனை வங்குகீர்கள். உங்களின் மாத தவணை 65 ஆயிரம் ரூபாய். ஒரு வருடத்திற்கு நீங்கள் கட்டும் தொலையானது ரூ. 7,80,000. இதே சொத்தில், இதே இடத்தில் நீங்கள் ஒரு வாடகை வீட்டில் இருக்கிறீர்கள் என்றால், ரெண்ட்டல் யீல்ட் என்பது 5% என்றால் வருடத்திற்கு ரூ. 5 லட்சம் செலவாகும். ரெண்ட்டல் யீல்ட் 2.5% மாக இருப்பின் வருடத்திற்கு ரூ. 2.5 லட்சம் ரூபாய் தருவீர்கள். இதன் பொருள் என்னவென்றால், ரெண்ட்டல் யீல்ட் 5% ஆக இருந்தால், சொத்து capital appreciation-ஐப் பெறும். ரெண்ட்டல் யீல்ட் 2.5% ஆக இருந்தால், சொத்து அதிகமாக மதிப்பிடப்பட்டுள்ளது என்பதோடு அதிக capital appreciation-ஐ நோக்கி செல்லாது.

எனவே, 2.5% அல்லது அதற்கும் குறைவான ரெண்ட்டல் யீல்டைக் கொண்ட ஒரு வீட்டை வாங்காமல் இருப்பது வாடிக்கையாளர்களுக்கு நல்லது. அதற்கு பதிலாக வாடகை வீட்டில் இருந்து கொள்ளலாம். வீட்டுக் கடனை ஈ.எம்.ஐ செலுத்துபவர்கள் ஒரு வருடத்தில் வீட்டுக் கடனின் வட்டி கூறுக்கு ரூ .2 லட்சம் வரை விலக்கு கோரலாம் என்றாலும், வாடகைக்கு தங்கியிருப்பவர்கள் வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்ட சம்பளத்தின் எச்.ஆர்.ஏ கூறுகளைப் பார்ப்பார்கள்.

முதலீட்டிற்காக ரியால்டி வாங்க வேண்டுமா?

Rental Yield குறைந்து வருவதற்கான வாய்ப்பு, கடந்த 10 ஆண்டுகளில் குறைந்த மூலதன பாராட்டு மற்றும் ரியல் எஸ்டேட் ஒரு liquid முதலீடு அல்ல என்பதால், சில்லறை முதலீட்டாளர்கள் ரியல் எஸ்டேட்டை முதலீட்டு நோக்கங்களுக்காக மட்டுமே வாங்காமல் இருப்பது புத்திசாலித்தனமாக இருக்கும்.

அதே வேளையில், எச்.என்.ஐ எனப்படும் ஹை நெட்-வொர்த் இண்டிவிஜூவல் (High Net Worth Individual) முதலீட்டாளர் ரியல் எஸ்டேட்டில் செய்து 20 முதல் 30% வரை தள்ளுபடியில் நிலத்தை வாங்கலாம். ஒரு சில்லறை முதலீட்டாளர் அந்த பணத்தை அதிக liquid asset-ல் முதலீடு செய்வது நல்லது. பொருளாதார மந்த நிலையை பொறுத்த வரையில், ரியல் எஸ்டேட் தான் முதலில் தன் மதிப்பை இழந்து இல்லிக்விட்டாக மாறும். தங்கம் அதன் மதிப்பை தக்க வைத்து, மிகவும் விலைமதிப்பற்றதாக மாறும் நிலை, பொருளாதார சிக்கல்கள் இருக்கும் நேரத்தில், ஏற்பட்டால், ரியல் எஸ்டேட் அதற்கு எதிராகவே செயல்படும். ரியல் எஸ்டேட் முதலீடுகள் மோசமான நேரங்களுக்கு அல்ல – மோசமான காலங்களில், அதை விற்பனை செய்யலாம்.

ரியல் எஸ்டேட் முதலீட்டிற்காக ஒருவர் கடன் வாங்கவே கூடாது ஏன் என்றால் வெறும் 2.5% – 4% வரை ரெண்ட்டல் யீல்டினை அளிக்கும் ஒரு சொத்திற்காக நீங்கள் 8% வரை வட்டி செலுத்த வேண்டிய நிலை உருவாகும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

தொற்றுநோயையும் மந்தநிலையையும் மனதில் கொள்ள வேண்டுமா?

பொருளாதார மந்தநிலை ஏற்பட்டிருக்கும் இந்த நேரத்தில் தான் சம்பள வேலைக்கு செல்பவர்கள் மற்றும் சுய தொழில் செய்பவர்கள் கையில் பணப்புழக்கம் குறைவதை உணர்கிறார்கள் மேலும் வருங்காலம் குறித்த நிச்சயமற்ற தன்மை உள்ளது. எனவே கூடுதல் பொறுப்பு என்பது மேலும் அழுத்தத்தை தான் தரும் என்பதை ஒருவர் உணர வேண்டும். கொரோனாவுக்கு மருந்தில்லாத சூழலில் தினம் நிறைய பேர் பாதிப்புக்கு ஆளாகும் சூழலில் ஒருவர் எந்தவிதமான அவசர தேவைக்கும் கையில் பணம் வைத்திருத்தல் அவசியமாகிறது.

தற்போதைய சூழலில் வீடு வாங்குதல் என்பது, ஒருவர் தன் கையில் இருக்கும் பணப்புழக்கத்தை டவுன் பேமெண்ட்டிற்காக கொடுப்பதற்கும், வருங்காலத்தில் பணப்புழக்கம் என்பது இன்னும் நிச்சயமற்ற தன்மையில் இருப்பது கடன் வடிவில் கூடுதல் பொறுப்பை உருவாக்கும். பொருளாதாரம் புத்துயிர் பெறுவதில் நியாயமான உறுதியும் இருக்கும்போது ஒரு வீட்டை வாங்குவதற்கான பெரிய முடிவை எடுப்பதே சிறந்ததாகும். எனவே, கோவிட்டால் உருவாகியிருக்கும் மந்தநிலையால் அதிகம் பாதிக்கப்படாத மற்றும் வசதியாக இருக்கும் நபர்கள் மட்டுமே ஒரு வீட்டை வாங்க வேண்டும். நிலைமை மேம்படும் வரை மற்றவர்கள் காத்திருக்கலாம்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get the latest Tamil news and Explained news here. You can also read all the Explained news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Should you buy a house now

Next Story
செப்டம்பரில் 26 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று; ஆகஸ்ட் இறுதி வரை 71% தொற்று அதிகரிப்புcoronavirus, covid 19 news, coronavirus news, coronavirus India, coronavirus india cases, coronavirus india cases state wise, கொரோனா வைரஸ், கோவிட்-19, தமிழ்நாடு, பீகார், மகாராஷ்டிரா, coronavirus active cases in india, coronavirus india cases explained, covid 19, india covid 19 cases, unlock 5.0, covid 19 lockdown, maharashtra, uttar pradesh, bihar tamil nadu
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com