scorecardresearch

இந்த ஆண்டு தீபாவளிக்கு தங்கம் வாங்குவது சரியான முடிவா?

தீபாவளிக்கு இன்னும் சில நாட்களே இருக்கின்ற காரணத்தினால் தங்கம் வாங்கும் போது அதிக விலை வரக்கூடாது என்று பலரும் கருதுகின்றனர்.

இந்த ஆண்டு தீபாவளிக்கு தங்கம் வாங்குவது சரியான முடிவா?

Should you buy gold this Diwali :  புதன்கிழமை அன்று உலகம் முழுவதும் புதிதாக 5 லட்சம் கொரோனா தொற்றுகள் உறுதிசெய்யப்பட்டது.  முதன்முறையாக இந்த அளவிற்கு தொற்று உறுதி செய்யப்படுவது இதுவே முதன்முறையாகும். தொடர்ந்து அதிகரித்து வரும் தொற்றுகள் மற்றும் உயிரிழப்புகள் கொரோனா வைரஸ் கட்டுப்படுத்துவது தொடர்பாக நிச்சயமற்ற தன்மையை உருவாக்கியதோடு மட்டுமல்லாமல் பங்குகள் மீது மீண்டும் அழுத்தத்தைக் கொண்டு வந்துள்ளது.  தங்கத்தில் முதலீடு செய்வது குறித்த கேள்வியை எழுப்பியுள்ளது.  தடுப்பூசி 2021 ஆம் ஆண்டின் பிற்பாதியில் தான் கிடைக்கும் என்றால் உலகமக்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடுவதற்கான கவலை தற்போது ஏற்பட்டுள்ளது. இதோடு மட்டுமல்லாமல் மேலும் குறைந்த வட்டி விகிதங்கள், அதிக அளவு பண வீக்கம் போன்றவை தங்கத்தின் விலையை உறுதியாக வைத்திருக்கும் பிற காரணிகளாக அமைந்து இருக்கிறது.  தீபாவளிக்கு இன்னும் சில நாட்களே இருக்கின்ற காரணத்தினால் தங்கம் வாங்கும் போது அதிக விலை வரக்கூடாது என்று பலரும் கருதுகின்றனர். தொடர்ந்து சொத்து ஒதுக்கீட்டின் ஒரு பகுதியாக தங்கத்தில் முதலீட்டை தொடர வேண்டும் என்றும் அவர்கள் விரும்புகின்றனர்.

இந்த கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க

தங்கத்தின் விலை எவ்வாறு ஆக உயர்ந்தது?

கடந்த வாரம் உலகம் முழுவதும் கொரோனா தொற்றின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. பல ஐரோப்பிய நாடுகள் மீண்டும் புதிதாக ஊரடங்கு உத்தரவுகளை பிறப்பித்துள்ளன. ஆகஸ்ட் மாதம் 2050 டாலராக இருந்த ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை அக்டோபர் மாதம் 1880 டாலர்களாக குறைந்தது. புதிதாக கொரோனா தொற்று அதிகரிக்கும் பட்சத்தில் தங்கத்தின் விலை உயர வாய்ப்புகள் அதிகம் உள்ளது.  இந்தியாவில் ஆகஸ்ட் மாதம் 10 கிராம் தங்கம் ரூ. 56,000  ஆக இருந்தது.  அக்டோபர் மாதம் அது ரூ.51,000 ஆக குறைந்தது.  வியாழக்கிழமை அன்று 10 கிராம் தங்கத்தின் விலை டெல்லியில் ரூ.50, 630க்கு விற்பனையானது.

அதே நேரத்தில் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா மற்றும் நிச்சயமற்ற தன்மை காரணமாக பங்கு வர்த்தகத்தில் ஏற்ற இறக்கங்கள் உருவாகியது.  வியாழக்கிழமை பிஎஸ்இ சென்செக்ஸ் 39,749.85 என்று நிறைவடைந்தது. ஆனால் அக்டோபர் மாதம் 21ஆம் தேதி 40, 707 ஆக இருந்தது.

மே மாதம் 2019 ஆம் ஆண்டிலிருந்து தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வந்தது.  ஒரு வருடத்தில் 50 சதவிகிதம் வரை அதன் விலை அதிகரித்தது. ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1,225 அமெரிக்க டாலர் என்று ஆரம்பித்த அதன் விலை தற்போது 1,880 டாலர்களாக உள்ளது. ஆகஸ்ட் மாதம் ஏழாம் தேதி இந்தியாவில் 10 கிராம் தங்கத்தின் விலை ரூ. 58,000க்கு விற்பனை செய்யப்பட்டது.

வருங்காலத்தில் தங்கத்தின் விலை உயருமா?

ரஷ்யாவின் தடுப்பூசிக்கான அறிவிப்பு ஆகஸ்ட் மாதத்தில் தங்கத்தின் விலையை வீழ்ச்சி அடைய வைத்தது என்றால், பல்வேறு நாடுகளில் மீண்டும் அறிவிக்கப்பட்டிருக்கும் ஊரடங்கு நடைமுறைகள் மற்றும் பொருளாதார மீட்பு, புவிசார் அரசியல் முன்னேற்றங்களில் நிச்சயமற்ற தன்மை ஆகியவை நீடித்திருப்பதால் விலை உயர வாய்ப்புகள் உள்ளது.

வரலாற்று ரீதியாக, நிச்சயமற்ற தன்மை மற்றும் பயம் அதிகரிப்பது மத்திய வங்கிகள் தங்கம் வாங்கும் வேகத்தை அதிகரிப்பதால் தங்கத்தின் விலைகள் உயர வழிவகுக்கும் மிகப்பெரிய காரணியாகும். இந்தியா சீனா எல்லை விவகாரம், சீனா – அமெரிக்கா வர்த்தக பதட்டங்கள் நிச்சயமற்ற தன்மைகளுக்கு வலு சேர்க்கிறது. 2023 வரை வட்டி விகிதங்கள் பூஜ்ஜியத்திற்கு அருகில் வைக்கப்படும் என்று அமெரிக்க பெடரல் ரிசர்வ் சமிக்ஞை செய்கிறது, இது டாலர் குறியீட்டை பலவீனமாக வைத்திருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இதன் விளைவாக தங்கத்தின் விலையை உறுதியாக வைத்திருக்க முடியும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

எனவே நீங்கள் தங்கத்தில் நீங்கள் முதலீடு செய்யலாமா?

முதலீட்டாளர்கள் தங்கத்தில் முதலீடு செய்யும் போது இது நீண்ட கால தலைமுறை சொத்து என்பதை மனதில் கொள்ள வேண்டும். இடைக்கால ஆதாயங்களுக்காக இதனை வாங்க கூடாது. தற்போது வேண்டுமானால் 10 கிராம் தங்கத்தின் விலை ரூ. 50 ஆயிரம் என்பது உயர்வாக தெரியலாம். ஆனால் இது சரியான முடிவு என்பதை ஒரு 20 வருடங்கள் கழித்து நீங்கள் தெரிந்து கொள்ளலாம். கடந்த 15 வருடங்களில் 10 கிராம் தங்கத்தின் விலை ரூ. 7000த்தில் இருந்து உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டுகளில் கண்டது போன்று எதிர்காலத்திலும் நிலைகள் இருக்காது. ஆனால் முதலீட்டாளர்கள் தங்கள் பணத்தில் 5 முதல் 10% வரை தங்கத்தில் முதலீடு செய்யலாம்.  எனவே, தீபாவளியைப் பொருட்படுத்தாமல், முதலீட்டாளர்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் (மாதாந்திர அல்லது காலாண்டு அடிப்படையில்) தங்கத்தில் முதலீடு செய்வதை தொடர வேண்டும். . எவ்வாறாயினும், தங்கத்தில் மொத்த தொகையை முதலீடு செய்வதைத் தவிர்க்க வேண்டும்.

நாணயங்கள் அல்லது பத்திரங்களில் முதலீடு செய்ய வேண்டுமா?

நகையாக தங்கம் வாங்கப்படவில்லை என்றால் ஒருவர் சவரன் கோல்ட் பாண்ட்களில் முதலீடு செய்யலாம். தங்கத்தின் விலை மாற்றத்திற்கு ஏற்ற வகையில் கேபிட்டல் அப்ரிசியேசன் வழங்கப்படும். 2.5% நிலையான கூப்பன்களை ஆண்டுக்கு ஒரு முறை காகித வடிவில் வழங்குவதால் அது பாதுகாப்பு குறித்த பிரச்சனைகளை கவனித்துக் கொள்கிறது. இந்த பத்திரங்களின் முடிவு காலம் 8 ஆண்டுகளாகும். ஆனால் பயனீட்டாளர் 5ம் ஆண்டுக்கு பிறகு வெளியேறிக் கொள்ளலாம்.

தங்க பத்திரங்கள் மூலமாக ஈட்டப்படும் வட்டி, பயனீட்டாளரின் வருமானத்தில் இணைக்கப்பட்டு அதற்கு குறைந்த அளவு வரியும் விதிக்கப்படும். முதிர்வடையும் காலத்தின் போது இதில் இருந்து கிடைக்கப்பெறும் மூலதன ஆதாயம் வரி விலக்கு பெற்றது. தங்கத்தை கையில் வைத்திருப்பதை காட்டிலும் இது கவர்ச்சியான விருப்பமாக அமைகிறது.

மியூச்சுவல் ஃபண்டுகளில் இருக்கும் கோல்ட் எக்ஸ்சேஞ்ச் ட்ரேடட் ஃபண்ட்கள் இதற்கு அடுத்து இருக்கும் மிகவும் முக்கியமான விருப்பமாகும். இந்த ஆண்டு முதலீட்டாளர்களுக்கு நல்ல வருவாயை இது ஈட்டிக் கொடுத்துள்ளது. ஏ.எம்.எஃப்.ஐ. தரவுகளின் படி gold exchange traded funds (ETFs) கீழ் இருக்கும் சொத்து மதிப்பு 13, 589 கோடியாகும்.

நாணயங்கள் என்று வரும் போது செய்கூலி 8% முதல் 15% வரை உள்ளது. 24 கேரட் 10 கிராம் தங்கத்தின் இன்றைய விலை ரூ. 51,500. எம்.எம்.டி.சி. – பி.ஏ.எம்.பி. 24 கேரட் 10 கிராம் தங்க கட்டியின் விலை ரூ. 56,400 ஆகும் (8.8% அதிகமாக உள்ளது)

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

செப்டம்பர் காலாண்டில் ஏன் தங்கத்தின் தேவை குறைந்தது?

செப்டம்பர் 2020 உடன் முடிந்த காலாண்டில் இந்தியாவின் தங்க தேவை 86.6 டன்கள். கடந்த ஆண்டு இதே நேரத்தில் தேவைப்பட்ட தங்கத்தின் அளவு 123.9 டன்கள். இது 30% குறைவு. அந்த காலாண்டில் தங்க தேவையின் மதிப்பு ரூ .39, 510 கோடியாக உள்ளது. கடந்த ஆண்டின் ரூ .41,300 கோடி என்ற மதிப்பில் இருந்து
4% குறைந்துள்ளது.

இந்தியாவில் மொத்த நகை தேவை கடந்த ஆண்டு 101.6 டன்னிலிருந்து 48% குறைந்து 52.8 டன்னாக இருந்தது. இருப்பினும், மொத்த முதலீட்டு தேவை 33.8 டன்னாக, 2019 செப்டம்பரில் 22.3 டன்னிலிருந்து 52% உயர்ந்துள்ளது. கோவிட் தொடர்பான இடையூறுகள் மற்றும் விலையில் ஏற்ற இறக்கம் ஆகியவற்றின் பின்னணியில் இந்தியாவின் செப்டம்பர் காலாண்டு தங்க தேவை 30% குறைந்து 86.6 டன்னாக இருந்தது. எவ்வாறாக இருப்பினும் இரண்டாம் காலாண்டைக் காட்டிலும் இது உயர்வாகவே உள்ளது. ஊரடங்கு தளர்வுகள் மற்றும் ஆகஸ்ட் மாதத்தில் குறைந்த விலை ஆகியவை தங்கம் வாங்குவதற்கு ஒரு சிறிய வாய்ப்பினை வழங்கியது.

ரிசர்வ் வங்கியின் தங்க முதலீடு நுகர்வோர்களுக்கு நம்பிக்கையை வழங்க வேண்டாமா?

இந்திய ரிசர்வ் வங்கி சட்டம், 1834 வெளிநாட்டு பண சொத்து மற்றும் தங்கத்தில் ரிசர்வ் வங்கி இருப்பு வைத்துக் கொள்ள சட்டப்பூர்வமான வழிமுறைகளை வழங்குகிறது. மார்ச் 2020 முடிவில் ஆர்.பி.ஐ 653.01 டன் தங்கத்தை வைத்திருந்தது. அதில் 360.71 டன்கள் பேங்க் ஆஃப் இந்தியா மற்றும் பேங்க் ஃபார் இண்டெர்நேசனல் செட்டில்மெண்டுஸிலும் வைத்திருந்தது. மீத தொகையை உள்நாட்டில் வைத்திருந்தது. ன வங்கி மற்றும் மீதமுள்ள தங்கத்தை உள்நாட்டில் வைத்திருந்தது. மதிப்பு அடிப்படையில் (டாலர்கள்), மொத்த அந்நிய செலாவணி இருப்புக்களில் தங்கத்தின் பங்கு 2019 செப்டம்பர் இறுதியில் சுமார் 6.14 சதவீதத்திலிருந்து 2020 மார்ச் இறுதியில் சுமார் 6.40 சதவீதமாக உயர்ந்துள்ளது. ரிசர்வ் வங்கியின் தங்க இருப்புக்களின் உண்மையான மதிப்பு 36.685 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது அக்டோபர் 16, 2020 நிலவரப்படி 30.578 பில்லியன் டாலர்களிலிருந்து, 7 மாதங்களில் 6 பில்லியன் டாலருக்கும் அதிகரித்துள்ளது.

மூலதன அபாயத்தை குறைக்க ஆர்.பி.ஐ. தங்கம், ஃபிக்சட் டெபாசிட் மற்றும் அமெரிக்க ட்ரெசரி பில்கள் போன்ற பல்வேறு இடங்களில் அந்நிய செலவாணியை ரிவர்ஸ் செய்துள்ளது. உண்மையில், உலகெங்கிலும் உள்ள பெரும்பாலான மத்திய வங்கிகள் தங்கள் முதலீட்டினை விரிவுபடுத்துவதற்கும் ஆபத்தை குறைப்பதற்கும் ஒரு மூலோபாயமாக அதிக அளவில் தங்க இருப்புக்களை வைத்திருக்கின்றன.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Explained news download Indian Express Tamil App.

Web Title: Should you buy gold this diwali