Advertisment

வங்கி பங்குகளில் தற்போது முதலீடு செய்யலாமா?

அடுத்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு ஒருவர் நல்ல வங்கிகளில் முதலீடு செய்தால், நல்ல வருவாய் ஈட்டுவதற்கான அதிக வாய்ப்பு உள்ளது

author-image
WebDesk
New Update
Should you invest in bank stocks

 Sandeep Singh

Advertisment

Should you invest in bank stocks? : கடந்த 6 மாதங்களில், பிப்ரவரி மற்றும் மார்ச் மாதம் கண்ட சரிவுகளிலிருந்து சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி மெல்ல மெல்ல மீண்டு வந்துள்ளது. ஆனால் தொடர்ந்து வங்கி மட்டும் பங்கு சந்தைகளில் நிலையான இடத்தை பெறவில்லை. இந்த ஒரே ஒரு பிரிவு மட்டுமே கொரோனாவுக்கு முந்தையை நிலையை இன்னும் எட்டவில்லை. முதலீட்டு வாய்ப்புகளை வழங்குகிறதா அல்லது உண்மையாகவே தீவிரமான பிரச்சனைகளை சந்தித்து வருகிறதா வங்கித் துறை என்பதை விளக்குகிறது இந்த கட்டுரை.

புதன்கிழமை அன்று பாம்பேய் ஸ்டாக் எக்ஸேஞ்சில் சென்செக்ஸ் 40,707 புள்ளிகளுடன் நிறைவடைந்தது. இது ஜனவரி 31ம் தேதி 40,723 புள்ளிகளுடன் இது கிட்டத்தட்ட சமநிலையை எட்டுகிறது. சில துறைகள் ஜனவரி மாதம் கண்ட வளர்ச்சியை காட்டிலும் அதிக வளர்ச்சியை அடைந்துள்ளது. ஐ.டி மற்றும் சுகாதர துறைகளில் 38% மற்றும் 41% வரை வளர்ச்சியை எட்டியுள்ளது. Teck Index 26% வரை வளர்ச்சி அடைந்துள்ளது. ஆட்டோ, எஃப்.எம்.சி.ஜி மற்றும் வாடிக்கையாளர்களின் நுகர்வு ஜனவரி மாதத்தில் இருந்ததை காட்டிலும் 6% அதிகரித்துள்ளது. மிகவும் குறைவான செயல்திறன் கொண்ட இரண்டு துறைகளென்றால் அது வங்கியும் நிதிக் குறியீடும் தான். ஜனவரி 31ம் தேதி இருந்த அளவைக் காட்டிலும் 21% மற்றும் 19% முறையே குறைந்துள்ளாது. அது மட்டும் இன்றி மேலும் மெட்டல், மின்சாரம் மற்றும் டெலிகாம் குறியீடுகளும் 10% முதல் 15% வரை குறைந்துள்ளது. To read this article in English

வங்கிகளின் செயல்திறன் குறைந்திருக்க காரணங்கள் என்ன?

 
அத்தியாவசிய தேவைகள் மற்றும் சேவைகள் துறையை தவிர, கொரோனா பெருந்தொற்று அதற்கு பின்னான ஊரடங்கு உத்தரவுகள், மற்ற அனைத்து துறைகளையும் வெவ்வேறு வகைகளில் மார்ச் முதல் ஜூன் மாதம் வரை பொருளாதார ரீதியாக தாக்கியது. ஊரடங்கு தளர்வுகள் ஜூன் - ஜூலைகளில் கொண்டு வரப்பட்டு, பொருளாதார  செயல்பாடுகள் மற்றும் நுகர்வு தேவைகள் புத்துயிர் பெற துவங்கினாலும் கூட, பல்வேறு துறைகளில் இதன் தாக்கம்  இன்னும் ஆழமாக உள்ளது. சிறிய அளவிளான வணிகங்கள், புதிய தொழில்கள், வேலைகள், சுயதொழில் முனைவோர் மற்றும் சம்பளத்திற்காக வேலை பார்ப்பவர்களின் வருமானமும் பாதிக்கப்பட்டுள்ளது. அடுத்த இரண்டு காலாண்டுகளுக்கு வங்கிகளை இது பெரிய அளவில் பாதிக்கும் என்று பலரும் உணருகின்றனர்.
 
ஆறு மாதங்களுக்கு இ.எம்.ஐ. தடை ஆகஸ்ட் மாதம் 31ம் தேதியுடன் முடிவுக்கு வந்துள்ளது.  இ.எம்.ஐ.யில் இருந்து விலக்கு பெற்றவர்கள் தற்போது மீண்டும் தங்களின் மாதத்தவணைகளை மேற்கொள்ள வேண்டும். வணிகங்கள் பாதிக்கப்பட்டுள்ளதால், வேலைகள் இழப்பு ஏற்பட்டுள்ளது, வருமான நிலைகள் சுருங்கிவிட்டதால், டிசம்பர் 2020 உடன் முடிவடைய இருக்கும் இந்த காலாண்டில் வங்கிகள் செயல்படாத சொத்துக்கள் (NPAகள்) அதிகரிப்பதைக் காணக்கூடும் என்று துறைசார்  வல்லுநர்கள் அஞ்சுகின்றனர்.
 
இது தான் முதலீட்டாளர்களை வங்கி குறியீடுகளில் இருந்து விலக்கி வைக்கிறது. உண்மையில், வங்கித் துறைக்கு மியூச்சுவல் ஃபண்டுகள் மூலம் கிடைக்கும் ஒதுக்கீட்டின் அளவு  பிப்ரவரியில் 24.4% இருந்த அளவில் இருந்து  செப்டம்பரில் 17.8 சதவீதமாகக் குறைந்துள்ளது.
 
ஒரு பெரிய நிதியத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கூறுகையில், அசையா சொத்துக்களின் அதிகரிப்பு குறித்து கவலைகள் நிலவுவதால், நிதி மேலாளர்கள் புதிய பணத்தை வங்கிகளில் செலுத்த விரும்பவில்லை, அதற்கு பதிலாக ஐடி, பார்மா மற்றும் தொழில்நுட்பம் போன்ற துறைகளில் முதலீடு செய்கிறார்கள். நிறுவன முதலீட்டாளர்களால் புதிய நிதி ஒதுக்கீட்டைக் குறைப்பது வங்கிகளின் பங்கு விலையைக் கட்டுக்குள் வைத்திருக்கிறது.
 
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

ஆனால் முதலீட்டிற்கான வாய்ப்புகள் ஏதேனும் உள்ளதா?

ஜனவரியில் சென்செக்ஸில் விலை--சம்பாதிக்கும் (PE) விகிதம் 25.6 ஆக இருந்தது. அக்டோபரில் அது 29%. சென்செக்ஸ் ஏற்கனவே மிகவும் விலை உயர்ந்த மண்டலத்தில் வர்த்தகம் செய்து வருகிறது என்பதே இதன் பொருள். இதற்கு மாறாக, ஜனவரியில் வங்கித் துறையில் பி.இ. விகிதம் 32 ஆக பாம்பே ஸ்டாக் எக்ஸ்சேஞ்சில் இருந்தது. தற்போது 21% ஆக உள்ளது. இதன் பொறுள் ஜனவரியில் இருந்த பி.இ. விகிதத்தை காட்டிலும் இது குறைவாக உள்ளது. அல்லது பேங்குகளின் ஸ்டாக் ப்ரைஸ், அதன் சம்பாதிக்கும் நிலைகளை காட்டிலும் குறைவாக உள்ளது என்பதையே இது குறிக்கிறது, மேலும் பங்குகளின் விலை உயர்வதற்கும் வாய்ப்பு உள்ளது என்பதை காட்டுகிறது. அசையா சொத்து மதிப்புகளில் சில பிரச்சனைகள் இருக்கின்ற நிலையில், ஃபண்ட் மேனஜர்கள், இந்த துறை மிகவும் குறைவாக மதிப்பிடப்பட்டுள்ளாது என்று கருதுகின்றனர். மேலும் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகளையும் வழங்குகிறது. திறமையான முதலீட்டாளார்கள் வங்கி பங்குகளில் முக்கியமான நிலையை எட்ட துவங்கியுள்ளனர் என்றும் குறிப்பிட்ட திட்டங்களில் சில நிதி நிறுவனங்கள், முதலீட்டாளர்களை முதலீடு செய்ய அறிவுரை செய்து வருகின்றனர் என்று முன்னணி நிதி அமைப்பின் தலைவர் ஒருவர் கூறியுள்ளார். குறைவாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ள பிரிவுகளில் எஸ்.ஐ.பி.க்கள் துவங்கப்பட வேண்டும் என்றும் நாங்கள் நம்புகின்றோம். இந்த நேரத்தில், வங்கிகள் மற்றும் உள்கட்டமைப்பு துறை குறைவாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது என்ற் நம்புகின்றோம். முதலீட்டாளர்கள் இந்த துறைகளில் மூன்று முதல் 5 வருடங்களுக்கு எஸ்.ஐ.பி.க்கள் முதலீடு குறித்து யோசிக்க வேண்டும் என்று சங்கரன் நரேன் கூறியுள்ளார். NPAகள் உயரத் தொடங்கும் போது, நல்ல வங்கிகள் பலவீனமான சொத்துக்களை பிரிக்கும் ஒரு போக்கினை கொண்டிருக்கும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இது சிறந்த தரமான சொத்துக்களைக் கொண்ட சிறந்த வங்கிகளின் பங்கு விலை உயரும். அடுத்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு ஒருவர் நல்ல வங்கிகளில் முதலீடு செய்தால், நல்ல வருவாய் ஈட்டுவதற்கான அதிக வாய்ப்பு உள்ளது என்று நிதி மேலாளர்களிடையே ஒரு பரந்த உணர்வு உள்ளது.

முதலீட்டாளர்கள் கருத்தில் கொள்ள வேண்டிய மற்ற விஷயங்கள் என்ன?

பட்டியலிடப்பட்ட வணிக வங்கிகளுக்கான கடன் வளர்ச்சி சில காலமாக அழுத்தத்தில் இருந்து வருகிறது. ஆகஸ்ட் 2019ம் ஆண்டில் இருந்தே ஒற்றே இலக்குகளுக்கு சரிந்த இதன் அளவு தற்போது கொரோனா மற்றும் லாக்டவுனுக்கு பிறகு மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பொருளாதார நெருக்கடியின் காலங்களில் வங்கிகள் யாருக்கு கடன் வழங்குகின்றன என்பதில் வங்கிகள் மிகவும் எச்சரிக்கையுடன் நடந்து வருகின்றன. ஆகஸ்ட் 2020 ஆம் ஆண்டில், ஆண்டுக்கு ஆண்டு கடன் வளர்ச்சி 6% ஆக குறைந்துள்ளது, இது அக்டோபர் 2017 க்குப் பிறகு மிகக் குறைவானது. இருப்பினும், இது என்றென்றும் குறைவாக இருக்க முடியாது, அடுத்த சில காலாண்டுகளில் இது உயரும் என்று துறை சார் வல்லுநர்கள் கருதுகின்றனர். அவ்வாறு செய்யும்போது, வங்கிகளுக்கு விரைவான வளர்ச்சி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அசையா சொத்துகள் எனப்படும் என்.பி.ஏ வங்கி வர்த்தகத்தில் சிறு பங்கு மட்டுமே. என்.பி.ஏக்களின் அடிப்படையில் முதலீட்டாளர்கள் முதலீடு குறித்து முடிவுகள் ஏதும் மேற்கொள்ள தேவையில்லை. பொருளாதாரம் மீண்டும் மலரும் போது, சில தனியார் துறை முதலீடுகளும் வளர்ச்சி அடையும். அப்போது வங்கிகள் மிக சிறந்த பயனீட்டாளர்களாக இருப்பார்கள். தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Bank Account
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment