Should you invest in gold? : கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக தங்கத்தின் விலை உயர்ந்து வருவதால் தற்போது இருக்கும் முதலீட்டாளர்கள், குறிப்பிடதக்க ஆதாயங்களுடன் வெளியேறுவதா என்ற குழப்பத்திலும் புதிய முதலீட்டாளர்கள் இந்த விலையில் முதலீடு செய்வதா என்ற சிந்தனையிலும் உள்ளனர்.
புதன் கிழமை, அமெரிக்கா ஃபெடெரல் ரிசர்வு, 2023 வரை வட்டி விகிதங்களை பூஜ்ஜியத்திற்கு அருகில் வைத்திருக்கும் என்று சமிக்ஞை செய்தது. டாலர் குறியீடு பலவீனமாக இருந்து அதிக பணவீக்கத்தை முன்னோக்கி நகர்த்துவதற்கு வழிவகுத்தால், கொரோனாவிற்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் வரை அல்லது உலக பொருளாதாரம் மீளும் வரை தங்கத்தின் விலைகள் உறுதியாக இருக்கக்கூடும் அல்லது உயரும் என்று பலர் நினைக்கிறார்கள்.
எப்படி தங்கம் விலை உயர்ந்தது?
மே 2019ம் ஆண்டில் இருந்து தங்கத்தின் விலை உயர்ந்த வண்ணம் இருக்கிறது. ஒரு வருடத்தில் 50% வரை உயர்ந்துள்ளது. ஒரு அவுன்ஸ் தங்கம் $1,250-ல் இருந்து $1,900 வரை உயர்ந்துள்ளது. இந்தியாவில் ரூ. 32 ஆயிரத்தில் இருந்து (10 கிராம் தங்கம்), அதே காலகட்டத்தில் ரூ, 52 ஆயிரம் வரை உயர்ந்துள்ளது. ங்கம் ஒரு இறக்குமதி செய்யப்பட்ட பொருள் என்பதால், இந்திய முதலீட்டாளர்கள் அனுபவிக்கும் வருமானத்தில் ரூபாயின் தேய்மானம் சேர்க்கப்பட்டுள்ளது.
டாலர் மதிப்பில் ஆகஸ்ட் 7ம் தேதி $2080 வரை விற்பனை ஆனது. இந்திய மார்க்கெட்டில் இதன் விலை அதே நாளில் ரூ. 58 ஆயிரம் வரை 10 கிராம் தங்கம் விற்பனை ஆனது. ரூ .2,000 பிரீமியத்தில் வர்த்தகம் செய்யப்பட்டதால், சந்தையில் இந்த விலைக்கு தங்கம் விற்பனை செய்யப்பட்டது. அப்போதிருந்து, சர்வதேச சந்தைகளில் விலை 7%மாகவும், இந்திய சந்தையில் 10%மாகவும் குறைந்துவிட்டன. இந்த காலகட்டத்தில் ரூபாய் ரூ .2 க்கும் அதிகமாக மதிப்பிடப்பட்டதால் இந்த வீழ்ச்சி இந்தியாவில் கூர்மையாக உள்ளது. சர்வதேச மட்டங்களில், உச்ச மட்டத்திலிருந்து விலை குறைந்த நிலையில் தங்கத்தின் பிரீமியம் இப்போது மறைந்துவிட்டது. தீபாவளி சமயத்தில் இந்தியாவில் தங்கத்தின் தேவை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஐந்து மாதங்களில் உயர்வுக்கு மிகப்பெரிய காரணம் கொரோனா தொற்றுநோய், வணிகங்கள் மற்றும் பொருளாதாரங்களில் கொரோனா நோய் தொற்றின் தாக்கம் மற்றும் உலகளாவிய மந்தநிலை குறித்து வளர்ந்து வரும் கவலை. எதிர்மறை வளர்ச்சி விகிதங்களைச் சுற்றியுள்ள கவலைகள் மத்திய வங்கிகளையும் பெரிய முதலீட்டாளர்களையும் தங்கத்தை நோக்கித் தள்ளியுள்ளன.
தங்கத்துடன் தலைகீழ் உறவைக் கொண்ட டாலரின் பலவீனம், தங்கம் விலை உயர மற்றொரு காரணம். மத்திய வங்கி ஃபெட் கட் விகிதங்களைக் குறைத்து, பொருளாதாரத்தை ஆதரிப்பதற்காக பெரும் அளவு பணப்புழக்கத்தை தங்கத்தில் செலுத்தியதால், டாலர் பலவீனமடைந்து தங்கம் விலை உயர்ந்தது.
பாரம்பரியமாக தங்கத்தை ஒரு சொத்தாக காணப்படுவதால், தங்கத்திற்கான முதலீட்டு தேவையும், அதிகரித்து வரும் நிச்சயமற்ற தன்மைக்கு ஏற்ப அதிகரித்து வருகிறது. காகித நாணயத்தின் விரிவாக்கம் பொதுவாக தங்க விலையை உயர்த்தவே முனைகிறது, கடந்த இரண்டு ஆண்டுகளில் சீனா மற்றும் ரஷ்யாவின் முன்னணி மத்திய வங்கிகளால் பெரிய கொள்முதல் மூலம் தங்கத்திற்கு அதிக விலைகள் ஆதரிக்கப்படுகின்றன.
தங்கம் தானாகவே பொருளாதார மதிப்பை உருவாக்கவில்லை என்றாலும், பணவீக்கம் மற்றும் பொருளாதார நிச்சயமற்ற தன்மைகளுக்கு எதிராக பாதுகாக்க இது ஒரு திறமையான கருவியாகும். ரியல் எஸ்டேட் மற்றும் பல கடன் விசயங்களுடன் ஒப்பிடும்போது இது விரைவாக பணமாக மாற்றப்படக்கூடியதாக இருக்கிறது.
விலைகள் மேலும் உயருமா?
பொருட்களை வர்த்தகம் செய்பவர்கள் மற்றும் வல்லுநர்கள், தங்கம் வலுவாக இருக்கும் என்ற நினைத்து வருகின்றனர். கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், ஃபெட் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு வட்டியை குறைவாகவே வைத்திருக்க விரும்புவதும் முக்கிய காராணமாகும்.
இந்த இரண்டு காரணங்களும், தங்கத்தின் விலையை நிலையாக வைத்திருக்க உருவாக்கப்பட்டுள்ளது. கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடிக்கப்பட்டால், தங்கத்தின் விற்பனை மீது ஒரு அழுத்தம் வரும் என்று, ஜியோஜித் ஃபினான்சியல் சர்வீசஸ் நிறுவனத்தின் தலைமை காமடிட்டி ஆராய்ச்சியாளர் ஹரீஷ் வி நாயர் அறிவித்துள்ளார்.
தங்கம் இப்போது இருக்கும் விலையை காட்டிலும் அதிக அளவிற்கு உயராது என்று ஜமால் மெக்லாய் இரண்டு மாதங்களுக்கு முன்பு அறிவித்தார். மக்கள் டாலர் விலை வீழ்ச்சி அடையும், அதனால் தங்கத்தின் விலை உயரும் என்று எண்ணி வருகின்றனர் என்றும் கூறியுள்ளார். “இப்போது அது குறைந்துவிட்டது. தற்போதைய நிலைகளிலிருந்து தங்கம் உயர டாலருக்கு ஒரு அடிப்படை நெருக்கடி இருக்க வேண்டும், நான் அதைப் பார்க்கவில்லை” என்று கூறியுள்ளார்.
தற்போது நீங்கள் தங்கத்தில் முதலீடு செய்யலாமா?
தற்போதைய அதிக விலை காரணமாக தங்கத்தில் வர்த்தகம் செய்வது நல்ல யோசனையாக இருக்காது என்றாலும், சில்லறை முதலீட்டாளர்கள் அவ்வப்போது தங்கத்தை வாங்கலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். முதலீட்டாளரின் ஒட்டுமொத்த சொத்து ஒதுக்கீட்டில் தங்கம் 5% முதல் 10% வரை இருக்க வேண்டும் என்று நிதித் திட்டமிடுபவர்கள் கூறுகின்றனர். சில்லரை வியாபாரிகள் மாதம் ஒரு முறை அல்லது மூன்று மாதங்களுக்கு ஒருமுறை தங்கம் வாங்கலாம். இது போன்ற சூழலில் தங்கத்தை மொத்தமாக வாங்குவதை தவிர்க்க வேண்டும் என்று கூறியுள்ளார் நாயர். நிதி ஆலோசகர்கள் தங்கத்தை குறுகிய கால சொத்தாக பார்க்கக்கூடாது என்று கூறுகிறார்கள். “தங்கம் ஒரு தலைமுறை சொத்து, இருபது வருடங்களுக்கு பிறகு நீங்கள் அதை எந்த விலையில் வாங்கினீர்கள் என்பது முக்கியமல்ல. மக்கள் தான் முதலீட்டாளர்கள், ஆனால் அவர்கள் நீண்ட கால சொத்தை வாங்கும்போது கூட அவர்கள் வர்த்தகர்களைப் போலவே நினைக்கிறார்கள், ”என்று CFA மற்றும் நிதி ஆலோசனை தளமான ஹேப்பினஸ் பேக்டரியின் நிறுவனர் அமர் பண்டிட் கூறினார்.
ஆர்.பி.ஐ. வட்டி விகிதங்களை குறைத்தது, சிறிய அளவிலான சேமிப்புகள் மற்றும் வைப்புநிதிகளின் வட்டி விகிதத்தின் சரிவுக்கு வழி வகுத்தது. தங்கம் வாங்குவதை 10 கிராமிற்கு ரூ. 50 ஆயிரம் என்று துவங்கலாம் என்று பலரும் கூறுகின்றனர். தற்போது ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை $1900ல் இருக்கிறது. 2021ம் ஆண்டு அது $2400 ஆக விற்பனை ஆகலாம் என்று எதிர்பார்க்கின்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
தங்கத்தில் எவ்வாறு முதலீடு செய்ய வேண்டும்?
நீங்கள் நகைக்காக வாங்காவிட்டால், முதலீடு தங்கப் பத்திரங்கள் மூலமாக இருக்க வேண்டும். முதலீட்டாளர்களுக்கு விலை மதிப்பீட்டை வழங்குவதோடு, அவற்றை வைத்திருப்பதில் ஆண்டுக்கு ஒரு நிலையான 2.5% கூப்பனையும் வழங்குகிறது. மேலும், அவை காகிதம் அல்லது டிமேட் வடிவத்தில் உள்ளன மற்றும் முதலீட்டாளரின் பெயரில் வழங்கப்படுகின்றன, இதனால் பாதுகாப்பைச் சுற்றியுள்ள கவலைகளை கவனித்துக்கொள்கின்றன.
தங்கப் பத்திரங்களில் ஈட்டப்பட்ட வட்டி வருமானத்தில் சேர்க்கப்பட்டு, ஸ்லாப் வீதத்திற்கு ஏற்ப வரி விதிக்கப்படும். அதே வேளையில், முதிர்ச்சியடையும் எந்த ஆதாயத்திற்கும் வரி இல்லை. எனவே இது தங்கத்தை வைத்திருப்பதை ஒப்பிடும்போது மிகவும் கவர்ச்சிகரமானதாக இருக்கும்.
தங்கப் பத்திரங்கள் முதிர்வு காலம் எட்டு ஆண்டுகள் ஆகும், ஆனால் முதலீட்டாளர்கள் ஐந்தாம் ஆண்டுக்குப் பிறகு வெளியேற முடியும். அதிக பணப்புழக்கத்தை வழங்க, பத்திரங்கள் வழங்கப்பட்ட பதினைந்து நாட்களுக்குள் பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்படலாம். மேலும் அவை வர்த்தகம் செய்யப்படலாம். இருப்பினும், வர்த்தக அளவுகள் இரண்டாம் நிலை சந்தையில் பணப்புழக்கத்தைப் பொறுத்தே அமைகிறது.
தங்கம் விலை சரிந்தால் என்ன செய்வது?
தங்கத்தின் விலை சரிவு குறித்து ஒருவர் உணர்ந்து செயல்பட வேண்டும். ஒரு குறிப்பிட்ட நீண்ட காலத்திற்கு பிறகு (2021க்கு பிறகு) தங்கத்தின் விலை குறையும் போது முதலீட்டாளர்கள் தங்கம், அமெரிக்க டாலர்கள், அரசு கடன் மற்றும் ஜப்பானிய யென் ஆகியவற்றில் இருந்து வெளியேறி ஸ்டாக், ரியல் எஸ்டேட் மற்றும் பங்கு சந்தைகளில் முதலீடு செய்வார்கள். ரிஸ்க் வகை சொத்துகள் விலை உயரும். அப்போது தங்கத்தின் விலை 2011-15 காலக்கட்டங்களில் இருந்து போல் குறைய துவங்கும். முதலீட்டாளர்கள் $1900 மற்றும் $1800 க்கு இடைப்பட்ட நடுத்தர மற்றும் குறைந்த கால அடிப்படையை ஆராய வேண்டும். $1800க்கு கீழ் குறைய துவங்கினால் இறங்கு முகத்தில் தங்கம் செல்ல துவங்குகிறது என்று அர்த்தம். ரிஸ்கை பொறுத்து எக்ஸிட் லெவல்கள் மற்றும் ஸ்டாப் லாஸ் லெவல்கள் இருக்கின்றன என்று 20 வருடத்திற்கும் மேலாக தங்க வர்த்தகத்தில் அனுபவம் பெற்ற வல்லுநர் ஒருவர் கூறுகிறார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.