/indian-express-tamil/media/media_files/2025/03/18/pXL1AU4DKS7SjKvL2rXo.jpg)
நீதிக்கான சீக்கியர்களின் (SFJ) தலைவர் குர்பத்வந்த் சிங் பன்னுன். (The NYT)
காலிஸ்தான் ஆதரவு அமைப்பான சீக்கியர்களை (Sikhs for Justice (SFJ) வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பாக அறிவிக்குமாறு இந்திய அரசாங்கம் அமெரிக்காவிடம் கேட்டுக் கொண்டுள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் வட்டாரங்கள் தெரிவித்தன. பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் திங்கள்கிழமை (மார்ச் 17) புதுடெல்லியில் அமெரிக்க தேசிய புலனாய்வு இயக்குநர் துளசி கப்பார்டை சந்தித்து, அமெரிக்க மண்ணில் குர்பத்வந்த் சிங் பன்னுன் தலைமையிலான எஸ்.எஃப்.ஜே மேற்கொண்ட "இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகள்" குறித்த பிரச்சினையை எழுப்பிய பின்னர் இந்த தகவல் வந்துள்ளது.
இந்த அமைப்பைப் பற்றியும், வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பு (எஃப்.டி.ஓ - FTO) என்று அறிவிப்பதன் செயல்பாடுகளுக்கு என்ன அர்த்தம் என்பதையும் இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
நீதிக்கான சீக்கியர்கள் என்றால் என்ன?
நீதிக்கான சீக்கியர்கள் (எஸ்.எஃப்.ஜே - SFJ) 2007-ம் ஆண்டு அமெரிக்காவைச் சேர்ந்த 50-களின் முற்பகுதியில் இருந்ததாகக் கருதப்படும் ஒரு வழக்கறிஞரான குர்பத்வந்த் சிங் பன்னுன் என்பவரால் நிறுவப்பட்டது. அதன் வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளபடி, எஸ்.எஃப்.ஜே “இந்தியாவின் கட்டுப்பாட்டில் உள்ள பஞ்சாபில் அவர்களின் வரலாற்று தாயகத்தில் சீக்கிய மக்களுக்கு சுயநிர்ணய உரிமையை அடையவும், காலிஸ்தான் என்று பிரபலமாக அறியப்படும் ஒரு இறையாண்மை கொண்ட அரசை நிறுவவும் முயல்கிறது.
“வன்முறையை வேண்டுமென்றே பயன்படுத்துவது காலிஸ்தான் இயக்கத்தின் தலையாயப் பணியாக இருந்தது என்பதை வெளிப்படையாக உணர்ந்தே எஸ்.எஃப்.ஜே உருவாக்கப்பட்டது” என்று கனடா பத்திரிகையாளரும் ரத்தத்திற்கு இரத்தம்: ஐம்பது ஆண்டுகள் உலகளாவிய காலிஸ்தான் திட்டம் (2021) என்ற புத்தகத்தின் ஆசிரியருமான டெர்ரி மிலேவ்ஸ்கி 2023-ல் தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் கூறினார். பன்னுனின் குறிக்கோள் "வாக்குகள் தோட்டாக்கள் அல்ல" என்று மிலேவ்ஸ்கி கூறினார்.
அமிர்தசரஸின் புறநகர்ப் பகுதியில் உள்ள கான்கோட் கிராமத்தில் 1960-களில் பிறந்த பன்னுன், பஞ்சாபில் காலிஸ்தான் இயக்கம் மற்றும் தீவிரவாதம் உச்சத்தில் இருந்த காலத்தில் வளர்ந்தார். 1990-களில் பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் சட்டப் பட்டம் பெற்ற அவர், பின்னர் அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்தார்.
2000 களின் முற்பகுதியில் இருந்து அமெரிக்கா மற்றும் கனடாவில் உள்ள சீக்கிய புலம்பெயர்ந்தோர் மத்தியில் காலிஸ்தானுக்கான இயக்கத்தில் அவர் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். ஆனால், 2018-ம் ஆண்டில், “காலிஸ்தான் வாக்கெடுப்பு” என்று அழைக்கப்பட்டதன் மூலம், அவர் இன்றுவரை காலிஸ்தான் சார்பு முன்னணி நபராக உருவெடுத்தார்.
கேலிக்கூத்தான வாக்கெடுப்பு
இன்னும் நடந்து கொண்டிருக்கும் “2020 வாக்கெடுப்பு”, இதுவரை எஸ்.எஃப்.ஜே மேற்கொண்ட மிக முக்கியமான நடைமுறையாக இருக்கலாம். “இந்த பிரச்சாரம் சீக்கியர்களின் விருப்பத்தை உறுதிப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது… இந்தியாவிலிருந்து பஞ்சாப் பிரிவது தொடர்பாக...” என்று அதன் வலைத்தளம் கூறுகிறது. மேலும், இந்த விஷயத்தில் அதிகாரப்பூர்வ, ஐ.நா. மேற்பார்வையிடப்பட்ட வாக்கெடுப்பை கோரும் அதே வேளையில் முடிவுகள் ஐ.நா.வின் முன் சமர்ப்பிக்கப்படும் என்றும் கூறுகிறது.
இந்தப் வாக்கெடுப்பு நடைமுறையின்போது பெரும் வரவேற்பைப் பெற்றதாகக் கூறினாலும், இந்த செயல்முறை மிகவும் "கேலிக்குரியது" என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.
“சட்டங்களும் அடையாளத் தேவைகளும் கேலிக்குரியவை” என்று மிலேவ்ஸ்கி கூறியிருந்தார். “லண்டனில் எனக்கு ஒரு நண்பர் இருக்கிறார், அவர் வாக்களிக்கப் பதிவு செய்ய ஆன்லைனில் உள்நுழைந்து, ஏஞ்சலினா ஜோலியின் பெயரைப் பதிவிட்டு, வெற்றிகரமாக வாக்களித்துப் பதிவு செய்யப்பட்டார். பன்னுனும் அவரைப் போன்றவர்களும் வாக்கெடுப்பின் வெற்றியைப் பாராட்டி சீரற்ற, சரிபார்க்க முடியாத எண்களை வெளியிட்டனர்” என்று அவர் கூறினார்.
மேலும், இந்த வாக்கெடுப்பு, நான்கு மடங்கு பெரிய பாகிஸ்தான் மாகாணத்தையும், சீக்கிய மக்களின் வரலாற்று தாயகத்தையும் குறிப்பிடவில்லை, இந்த வாக்கெடுப்பு, இந்திய பஞ்சாபின் உரிமையை மட்டுமே குறிப்பிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. சீக்கிய நம்பிக்கையின் முன்னோடியான குருநானக்கின் பிறப்பிடம், பாகிஸ்தானில் உள்ள பஞ்சாபில் (நங்கனா சாஹிப்) உள்ளது. அதே போல், அவர் இறந்த இடமும் (கர்தார்பூர் சாஹிப்) பாகிஸ்தானில் உள்ளது. மேலும், தனது சீக்கிய சாம்ராஜ்யத்தை - லாகூரில் இருந்து ரஞ்சித் சிங் ஆட்சி செய்தார் என்று காலிஸ்தானியர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
பாகிஸ்தானால் ஆதரிக்கப்பட்டு நிதியளிக்கப்பட்ட பிரிவினைவாத இயக்கம், காலிஸ்தானின் எல்லைகளை எப்போதும் எப்படிக் கருதுகிறது என்பதோடு இது ஒத்துப்போகிறது. மிலேவ்ஸ்கி கூறியது போல்: “ஆரம்பத்திலிருந்தே, இது அரசியல் ரீதியாக வடிவமைக்கப்பட்ட எல்லையாக, கொஞ்சம் தந்திரமான வேலையாகத் தெரிகிறது - விரிவான மற்றும் லட்சியமான, ஆனால், ராட்க்ளிஃப் கோட்டின் கிழக்குப் பகுதியில் மட்டுமே.” உள்ளது.
வன்முறை பற்றி மாறுபட்ட பேச்சு
எஸ்.ஃபெ.ஜே-ன் சொல்லாடல், அரசியல் வன்முறை தொடர்பாக "புதிய தொடக்கம்" என்ற அதன் கூற்றுகளுக்கு முற்றிலும் மாறுபட்டது.
“‘புதிய தொடக்கம்’ பற்றிப் பேசத் தொடங்கிய பன்னுன் என்ன செய்கிறார்... கனடாவில் 'வாக்கெடுப்பு' பிரச்சாரத் தலைமையகத்திற்கு ஷஹீத் தல்விந்தர் சிங் பர்மர் வாக்காளர் மையம் என்று பெயரிட்டார்” என்று மிலேவ்ஸ்கி கூறினார். 1985-ம் ஆண்டு ஏர் இந்தியா குண்டுவெடிப்பின் மூளையாக இருந்தவர் பர்மர். இதில் 329 பேர் கொல்லப்பட்டனர். 2001-ம் ஆண்டு செப்டம்பர் 11 தாக்குதல்கள் வரை விமானப் பயங்கரவாதத்தின் மிக மோசமான சம்பவமாகும்.
“இது ஒரு தனி நிகழ்வு அல்ல... பயங்கரவாதிகள் எஸ்.எஃப்.ஜே-யின் தலைவர்களின் படங்களில் முற்றிலும் அவசியமான பகுதியாக இருந்துள்ளனர்... எஸ்.எஃப்.ஜே தங்களைத் தாங்களே முற்றிலுமாக முரண்படுத்திக் கொண்டுள்ளது” என்று மிலேவ்ஸ்கி கூறினார்.
பன்னுன் வன்முறை மூலம் மீண்டும் மீண்டும் அச்சுறுத்தியுள்ளார். சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம் (UAPA) தீர்ப்பாயத்தில் மத்திய அரசு சமர்ப்பித்த அறிக்கையின்படி - ஜனவரியில் எஸ்.எஃப்.ஜே-ஐ தடை செய்வதற்கான மத்திய அரசின் முடிவை தீர்ப்பாயம் உறுதி செய்தது - பன்னுனின் அமைப்பு இந்தியாவின் அரசியல் தலைவர்கள் (பிரதமர் நரேந்திர மோடி உட்பட), அரசு அதிகாரிகள் மற்றும் வெளிநாடுகளில் உள்ள அவர்களது குடும்பத்தினரைகூட பலமுறை அச்சுறுத்தியுள்ளது.
“போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய விவசாயிகளை ஆயுதபாணியாக்கி இந்தியப் படைகளுடன் சண்டையிட பன்னுன் தூண்டிவிட்டார். மேலும், ஆயுதங்கள் எல்லைக்கு அப்பால் இருந்து அவர்களை அடையும் என்று கூறினார். பழிவாங்குவதற்காக வெளிநாடுகளில் படிக்கும் காவல்துறை அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளின் குழந்தைகளின் பட்டியலை எஸ்.எஃப்.ஜே தயாரித்துள்ளதாகவும் உள்துறை அமைச்சகம் தீர்ப்பாயத்தில் சமர்ப்பித்துள்ளது...” என்று உள்துறை அமைச்சகம் தீர்ப்பாயத்தில் சமர்ப்பித்தது.
வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பு (எஃப்.டி.ஓ) என்று அறிவிக்கப்படுவதன் முக்கியத்துவம் என்ன?
இந்தியா பன்னுனை ஒரு பயங்கரவாதி என்று குறிப்பிடுகிறது, மேலும் யு.ஏ.பி.ஏ-ன் கீழ் எஸ்.எஃப்.ஜே-வை தடை செய்துள்ளது. தடையை வெளியிட்ட உள்துறை அமைச்சகத்தின் 2019 அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: “சீக்கியர்களுக்கான வாக்கெடுப்பு என்று அழைக்கப்படுவதன் போர்வையில், எஸ்.எஃப்.ஜே உண்மையில் பஞ்சாபில் பிரிவினைவாதம் மற்றும் போர்க்குணமிக்க சித்தாந்தத்தை ஆதரிக்கிறது, அதே நேரத்தில் வெளிநாட்டு மண்ணில் பாதுகாப்பான புகலிடங்களிலிருந்தும், பிற நாடுகளில் உள்ள விரோத சக்திகளால் தீவிரமாக ஆதரிக்கப்படுகிறது.” என்று கூறியுள்ளது.
பஞ்சாபில் மூன்று தேசத்துரோக வழக்குகள் உட்பட, பன்னுன் மற்றும் அவரது அமைப்புக்கு எதிராக இந்தியாவில் டஜன் கணக்கான வழக்குகள் உள்ளன. ஆனால், பன்னுன் வெளிநாட்டு மண்ணில் ஒரு வெளிநாட்டு குடிமகனாக இருப்பதால், புது டெல்லியால் எஸ்.எஃப்.ஜே-ன் செயல்பாடுகளைத் தடுக்க முடியவில்லை. இதனால்தான், அமெரிக்காவால் வெளிநாட்டு பயனங்கரவாத அமைப்பு என்று அறிவிக்க வேண்டும் என்று கேட்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கதாக இருக்கலாம்.
எளிமையாகச் சொன்னால், இப்படி வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பு என்று அறிவிப்பதன் மூலம் பன்னுனின் அமெரிக்காவை தளமாகக் கொண்ட அமைப்பை முடக்கிவிடும். அமெரிக்காவில் உள்ள ஒருவர் நியமிக்கப்பட்ட எஃப்.டி.ஓ-வுக்கு "பொருளாதார ஆதரவு அல்லது வளங்களை" வழங்குவது சட்டவிரோதமானது மட்டுமல்ல - இந்த சொல் பரவலாக விளக்கப்பட்டுள்ளது - அமெரிக்க நிதி நிறுவனங்கள் எஃப்.டி.ஓ வைத்திருக்கும் அல்லது கட்டுப்படுத்தும் சொத்துக்கள் சம்பந்தப்பட்ட அனைத்து பரிவர்த்தனைகளையும் தடுக்க வேண்டியிருக்கும்.
அல்கொய்தா, ஐ.எஸ்.ஐ.எஸ் (மற்றும் அதன் பல கிளைகள்), ஹமாஸ், இந்தியன் முஜாஹிதீன் மற்றும் ஜமாத் உத் தாவா உள்ளிட்ட 77 வெளிநாட்டு பயங்கரவாத அமைப்புகள் தற்போது பட்டியலில் உள்ளன.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.