Manoj C G
Simply Put: Electing a Congress president : 2019ம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற பொதுத்தேர்தலில் தோல்வி அடைந்ததற்கு பொறுப்பேற்கும் வகையில் ஜூலை மாதம் 3ம் தேதி அன்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்தார் ராகுல் காந்தி. காந்தி குடும்பத்தை சாராத ஒருவர் காங்கிரஸ் கட்சியின் தலைவராகலாம் என்று தன்னுடைய கடிதத்தில் குறிப்பிட்டிருந்த போதும் கூட, ஆகஸ்ட் மாதம் 11ம் தேதி அன்று காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி சோனியா காந்தியை இடைக்கால தலைவராக ஏற்றுக் கொண்டது.
ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகும் கூட காங்கிரஸ் கட்சி முழு நேர தலைவர் இல்லாமல் இயங்கிக் கொண்டிருக்கிறது. கடந்த ஆகஸ்ட் மாதம், சோனியா காந்தி மத்திய தேர்தல் பொறுப்பாளரை நியமிப்பதாக கூறியிருந்த நிலையில், தீர்மானம் ஒன்றை நிறைவேற்றினார்கள். காங்கிரஸ் காரிய கமிட்டி இந்த ஆண்டு மறுபடியும் ஜனவரி 22ம் தேதி அன்று கூடியது. வருகின்ற நான்கு மாநில சட்டமன்ற தேர்தல்கள் நிறைவுற்ற பிறகு தலைவருக்கான தேர்தலை வைத்துக் கொள்ளலாம் என்று கூறிவிட்டது.
தற்போது வரை மீண்டும் ராகுல் காந்தி கட்சியின் தலைவராக வருவாரா என்ற சந்தேகம் நிலவி வருகிறது. கட்சியை மறுகட்டமைப்பு செய்ய கடுமையான முடிவுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். மேலும் பல்வேறு மட்டங்களில் தேர்தல் தோல்விகளுக்கு சில தலைவர்களும் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும் என்றும் ராகுல் காந்தி அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். ஆனால் இதுநாள் வரை அப்படி யாரும் தங்களை குறிப்பிட்டுக் கொள்ளவில்லை.
காங்கிரஸ் கட்சியில் எப்போது தேர்தல் நடைபெற்றது?
ஏழு ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு 2017ம் ஆண்டு தேர்தல் நடைபெற்றது. 2010ம் ஆண்உ புராரியில் நடைபெற்ற அக்கட்சியின் 83வது திட்டக்கூட்டத்தில், ஒவ்வொரு ஐந்தாண்டிற்கு ஒரு முறை அக்கட்சியில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று தங்கள் கட்சியின் கொள்ள்கையில் மாற்றம் கொண்டு வந்தனர். ஆனால் அதற்கு முன்பு மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் கட்டாயம் என்று இருந்தது. அதே போன்று கட்சி தலைவரின் பணிக்காலமும் 5 ஆண்டுகளாக உயர்த்தப்பட்டது. 2015ம் ஆண்டு நடைபெற வேண்டிய தேர்தலை 2017ம் ஆண்டு நடத்தி முடித்தார்கள்.
காங்கிரஸ் கட்சியின் படி, பூத் மட்டங்களில் உள்ள முதன்மை கமிட்டியில் ஆரம்பித்து, காங்கிரஸ் கட்சியின் தலைவர் வரை தேர்தல் நடைபெற வேண்டும். ஆனால் பெரும்பாலும், தேர்தல்கள் தவிர்க்கப்பட்டு, கட்சியின் அனைத்து மட்டங்களிலும் ஒருமித்த கருத்து மூலம் தலைவர்களும் குழுக்களும் நியமிக்கப்படுகிறார்கள். ராகுலின் விஷயத்திலும், அவருக்கு போட்டியாளர் யாருமே இல்லை. எதிர்ப்பாளர்கள் யாருமின்றி தலைவராக அவர் தேர்வு செய்யப்பட்டார். வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான கடைசி தேதிகள், திரும்பப் பெறுதல், ஆய்வு போன்றவை மத்திய தேர்தல் ஆணையம் ஒரு விரிவான அட்டவணையை கொண்டு வந்துள்ளது. காங்கிரஸ் அரசியலமைப்பின் படி, “எந்தவொரு பத்து பிரதிநிதிகளும் கூட்டாக காங்கிரஸின் தலைவர் பதவிக்காக எந்தவொரு பிரதிநிதியின் பெயரையும் முன்மொழியலாம் ”
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
உண்மையிலேயே கடந்த 40 வருடங்களில் இரண்டு முறை மட்டுமே தேர்தல் நடைபெற்றது. 2000ம் ஆண்டில் சோனியா காந்தியை எதிர்த்து ஜிதேந்திர பிரசாதா போட்டியிட்டார். 7448 வாக்குகள் வித்தியாசத்தில், வெறும் 94 வாக்குகள் பெற்று தோல்வியுற்றார். 1997ம் ஆண்டு சீதாராம் கேஸ்ரி ஷரத்பவார் மற்றும் ராஜேஷ் பைலட்டை எளிதாக தோற்கடித்தார். 6244 வாக்குகளை பெற்றார் அவர். பவார் 882 வாக்குகளையும், பைலட் 354 வாக்குகளையும் பெற்றார். 2000ம் ஆண்டில் இருந்து சோனியா காந்தியும் ராகுல் காந்தியும் போட்டியாளார்களை எதிர்கொள்ளவில்லை.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
ஜூனில் என்ன நடக்கும்?
காங்கிரஸின் அரசியல் சாசனம் படி, “எந்த ஒரு எமெர்ஜென்சி காலத்திலும், தலைவர்களின் மரணம் அல்லது ராஜினாமாவின் போதும், அனைத்து இந்திய காங்கிரஸ் கட்சியில் கட்சியில் தேர்தல் மூலம் தலைவரை தேர்வு செய்வது நிலுவையில் உள்ள போது கட்சியின் மிக மூத்த பொதுச்செயலாளர், காரிய கமிட்டி ஒரு தலைவரை நியமிக்கும் வரை தலைவராக பொறுப்பு வகிப்பார்.
காரிய கமிட்டி சோனியாவை இடைக்கால தலைவராக நியமித்துள்ளது. மீதமுள்ள காலத்திற்கு ஒரு முழு நேர தலைவர் நியமிக்கப்பட வேண்டும். 2022ம் ஆண்டுக்குள் தேர்தல் காலம் நிறைவடைய உள்ளதால், புதிய தலைவர் வெறும் ஒன்றரை ஆண்டுகள் மட்டுமே பதவி வகிப்பார்.
பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் பிரதிநிதிகளால் தேர்வு செய்யப்பட்ட தலைவர் மற்றும் கட்சி தலைவர்கள் புதிய தலைவரை அனைத்திந்திய காங்கிரஸ் கமிட்டியே தேர்வு செய்யலாம் என்று கூறுகிறது. எனவே எலெக்ட்ரால் காலேஜ் என்பது ஏ.ஐ.ஐ.சி. உறுப்பினர்களால் ஆனது. 2017ம் ஆண்டு 9000 பி.சி.சி உறுப்பினர்கள் இருந்தார்கள். அனைத்திந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்கள் 1500 பேர் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.
காங்கிரஸ் அரசியல் அமைப்பின் படி, அனைத்திந்திய காங்கிரஸ் கமிட்டி என்பது ஒற்றை வாக்களிக்கும் முறைப்படி தங்களுக்குள் தேர்வு செய்யப்படும் 8 பி.சி.சி உறுப்பினர்களில் ஒருவரை கொண்டுள்ளது. சண்டிகர், அந்தமான் நிக்கோபர், தாத்ரா நாகர் ஹவேலி, தாம் அண்ட் டையூ, லட்சத்தீவுகளில் இருந்து தலா 4 உறுப்பினர்களை தேர்வு செய்வார்கள். நாடாளுமன்றத்தில் உள்ள கட்சி தலைவர், சட்டமன்றங்களில் உள்ள தலைவர்கள், கட்சி உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்றத்தில் உள்ள காங்கிரஸ் கட்சியினரால் தேர்வு செய்யப்பட்ட 15 நபர்கள் சிறப்பு பிரிவுகள் மூலமாக இணைந்து உறுப்பினர்களாக உள்ளனர்.
தலைவர் தேர்தல் ஏன் தாமதமாக உள்ளது?
கேரளா, தமிழகம், மேற்கு வங்கம், அசாம் மாநிலங்களில் நடைபெற இருக்கும் தேர்தலை கருத்தில் கொண்டு சி.டபிள்யூ.சி. தேர்தலை ஒத்திவைத்துள்ளது. ஆனால் இன்னும் பலர், காங்கிரஸ் கட்சியின் தலைவராக மீண்டும் பொறுப்பேற்க ராகுல் ஒப்புக்கொண்டாரா என்பதில் தெளிவு ஏதும் இல்லாமல் உள்ளனர்.
மக்களவை மற்றும் சட்டமன்றத் தேர்தல்களுக்கான கட்சி வேட்பாளர்களை இறுதி செய்யும் சி.டபிள்யூ.சி மற்றும் மத்திய தேர்தல் குழுவுக்கு தேர்தல்களை நடத்த ஜி -23 என பிரபலமாக அறியப்படும் செல்வாக்கு மிக்க தலைவர்கள் குழுவிலிருந்து தலைமைக்கு அழுத்தம் உள்ளது. சி.டபிள்யூ.சி கூட்டத்திற்குப் பிறகு, பொதுச் செயலாளர் (அமைப்பு) கே.சி.வேணுகோபால் கட்சி சி.டபிள்யூ.சி தேர்தலை நடத்தத் தயாராக இருப்பதாகக் கூறியிருந்தார், ஆனால் “காங்கிரஸ் தலைவர் தேர்தலும் செயற்குழுவும் ஒன்றாக இருக்க முடியுமா, அல்லது காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்குப் பிறகு , செயற்குழு தேர்தல் நடத்தப்படுமா என்பதில் இன்னும் தெளிவு கிடைக்க வேண்டும்.
இந்த தேர்தல்கள் ஏன் முக்கியமானவை?
உயர் நிர்வாக அதிகாரங்களை உடைய தலைவர்களைக் கொண்டிருக்கும் அமைப்பு இந்த சி.டபிள்யூ.சி ஆகும். இதில் கட்சி தலைவர், நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர், 23 உறுப்பினர்கள் அடங்குவர். அதில் 12 பேர் ஏ.ஐ.சி.சியால் தேர்வு செய்யப்பட்ட மீத உறுப்பினர்களை கட்சி தலைவர் தேர்வு செய்வார்.
கடந்த 50 ஆண்டுகளில், காங்கிரஸ் தலைவர்கள் கூறுகையில், உண்மையான தேர்தல்கள் சி.டபிள்யூ.சிக்கு இரண்டு முறை மட்டுமே நடத்தப்பட்டுள்ளன. இரண்டு சந்தர்ப்பங்களிலும், நேரு-காந்தி குடும்பத்திற்கு வெளியே ஒரு நபர் தலைமை வகித்தார் - பி வி நரசிம்ம ராவ் 1992 ஆம் ஆண்டு திருப்பதியிலும்,, 1997 கொல்கத்தாவில் ப்ளேனரியின் போது கேஸ்ரியும் இருந்தனர். ஏப்ரல் 1998 இல் காங்கிரஸ் தலைவரான சோனியா, எப்போதும் சி.டபிள்யூ.சி உறுப்பினர்களை பரிந்துரைத்தார். சி.இ.சி யும் நீண்ட காலமாக பரிந்துரைக்கப்பட்ட அமைப்பாக உள்ளது.
சி.டபிள்யூ.சி மற்றும் சி.இ.சி தேர்தல்கள் கட்சியில் ஆதரவளிக்கும் கலாச்சாரத்தை முடிவுக்குக் கொண்டுவரும் என்று ஜி -23 தலைவர்கள் நம்புகின்றனர். "கூட்டு சிந்தனை" மற்றும் நிறுவன விஷயங்கள், கொள்கைகள் மற்றும் திட்டங்கள் குறித்து முடிவெடுப்பதற்காக, நரசிம்மராவ் காலத்தில் உருவாக்கப்பட்ட சக்திவாய்ந்த காங்கிரஸ் நாடாளுமன்ற வாரியத்தை புதுப்பிக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரியுள்ளனர். சிடபிள்யூசி "காங்கிரஸ் தலைவர் மற்றும் ஒன்பது உறுப்பினர்களைக் கொண்ட ஒரு நாடாளுமன்ற வாரியத்தை அமைக்கும், அவர்களில் ஒருவர் நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருப்பார். காங்கிரஸ் தலைவர் குழுவின் தலைவராக இருப்பார் என்று கட்சியின் அரசியலமைப்பு கூறுகிறது.
சி.இ.சி., நாடாளுமன்ற வாரிய உறுப்பினர்களையும், மத்திய மற்றும் மாநில சட்டமன்றத்தின் வேட்பாளர்களை இறுதி செய்வதற்கும் தேர்தல் பிரச்சாரங்களை நடத்துவதர்கும் அனைத்திந்திய காங்கிரஸ் கமிட்டியால் தேர்வு செய்யப்பட்ட 9 நபர்கள் கொண்ட குழுவை உருவாக்கும். மற்றொரு வார்த்தையில், தேர்தலுக்கு முதலில் நாடாளுமன்ற வாரியத்தின் அரசியலமைப்பை சி.இ.சி. கோரும்.
கூட்டுத் தலைமையை உறுதி செய்வதற்கே இம்முயற்சி. இன்று காங்கிரசில், முதல் மற்றும் இறுதி வார்த்தைகள் காந்தி குடும்பத்தினருடையது. சி.டபிள்யூ.சியின் 25 உறுப்பினர்களில் 12 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டால், காங்கிரஸ் தலைவரால் அவர்களை விருப்பப்படி நீக்க முடியாது என்பது நம்பிக்கை. இவற்றில் பாதி நபர்களை தேர்வு செய்த பிறகு சி.டபிள்யூ.சி பின்னர் நாடாளுமன்ற வாரியத்தை அமைக்கும். சி.இ.சி.யின் பாதி உறுப்பினர்கள் இந்த நாடாளுமன்ற வாரியத்தில் உறுப்பினர்களாக இருப்பார்கள், மீதி உறுப்பினர்கள் ஐ.ஐ.சி.சியால் தேர்வு செய்யப்படுவார்கள்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.