Udit Misra , Nushaiba Iqbal
Simply Put: The farmer — a field report : இந்தியாவின் வேளாண்துறையை சீர்திருத்தும் நோக்கில் இருக்கும் அரசின் தற்போதைய உந்துதல், இந்திய விவசாயத்துறை மீதான கருத்துகளை பிரித்து விவாதத்தை உருவாக்கியுள்ளது. இந்த விவாதங்களில் இரண்டு கருத்துகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. ஒன்று, இந்திய விவசாயத்துறை பெரிய அளவில் வருமான ஈட்ட முடியாதது. இரண்டு, விவசாயத்துறை அதிக அளவு அரசாங்கத்தால் கட்டுப்படுத்தப்பட்டு, சந்தைகளின் சுரண்டல்களில் இருந்து பாதுகாக்கப்படுகிறது. ”புதிய மசோதாக்கள் விவசாயிகள் தங்களின் விலைபொருட்களை எளிதில் விற்கவும், தனியார் நிறுவனங்களுக்காக எளிதில் உற்பத்தி செய்யவும் வழி வகுக்கிறது. இந்தத் துறையை தாராளமயமாக்குவதும், இந்திய விவசாயத்தை மிகவும் திறமையாகவும், விவசாயிகளுக்கு அதிக ஊதியம் கிடைப்பதையும் உறுதி செய்யும்” என்று இந்திய அரசு கருதுகிறது. இந்த சூழலில் இந்திய விவசாய துறையின் அடிப்படையை புரிந்து கொள்வது அவசியமாகிறது.
To read this article in English
பங்குகள், வருமானம் மற்றும் கடன்
சுதந்திரம் கிடைத்த பொழுதில், இந்தியாவில் 70% வேலைகள் (100 மில்லியனுக்கு சற்று குறைவானவர்கள்) விவசாயத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர். அப்போது விவசாயம் மற்றும் அதன் சார் துறைகள் மூலமாக இந்தியாவின் வருமானம் 54% -ஆக இருந்தது. ஆண்டுகள் செல்ல, நாட்டின் வருமானத்தில் விவசாயத்தின் பங்கானது குறைய துவங்கியது. 2019 - 20ம் ஆண்டில் 17% குறைவாகவே இருந்தது. (மொத்த மதிப்பு கூட்டப்பட்ட அளவுகளில்).
அதே போன்று விவசாயத்தில் தங்களை ஈடுபடுத்திக் கொண்ட மக்களின் எண்ணிக்கையும் 70%-ல் இருந்து 55% ஆக குறைந்துள்ளது. விவசாய வருமானத்தை இரட்டிப்பு செய்வதற்காக அமைக்கப்பட்ட குழுவின் 2017ம் ஆண்டு அறிவிப்பில், ”மொத்த உள்நாட்டு உற்பத்தியில் விவசாயத்தின் பங்களிப்பு விகிதம் குறைந்தாலும் கூட கிராமப்புற தொழிலாளர்கள் வேலைவாய்ப்புக்காக விவசாயத்தை நம்பியிருப்பது குறையவில்லை” என்று கூறியுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
விவசாய துறையில் இருக்கும் நிலமற்ற விவசாயிகளில் வறுமை உயர்ந்து வருகிறது என்பதை ஒரு முக்கியமான புள்ளிவிவரம் அறிவிக்கிறது. 1951ம் ஆண்டு 28%-மாக இருந்த இந்நிலை 2011ம் ஆண்டில் 55% ஆக உயர்ந்துள்ளது. விவசாயத்துறை சார்ந்து வாழும் மக்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே இருக்கின்ற சூழலிலும் கூட, சொந்தமாக வைத்திருக்கும் நிலத்தின் சராசரி அளவும் குறைந்துள்ளது. இந்தியாவில் உள்ள அனைத்து நில உரிமையாளர்களில் 86% நபர்கள் 1 ஹெக்டர் முதல் 2 ஹெக்டர் என்ர அளவில் தான் நிலம் வைத்துள்ளனர். விளிம்பு நிலையில் இருப்பவர்கள் 1 ஹெக்டருக்கும் குறைவாக, ஒரு கால்பந்தாட்ட மைதானத்தின் பாதி அளவு தான் நிலத்தை உரிமை கொண்டாடுகிறார்கள். விளிம்பு நிலையில் இருக்கும் நபர்களிடம் இருக்கும் சராசரி நில அளவு 0.37 ஹெக்டர் ஆகும்.
0.63 ஹெக்டருக்கும் குறைவாக இருக்கும் நிலத்தில் இருந்து வரும் வருமானம் வறுமை கோட்டிற்கு மேலே ஒருவரை வாழ வைக்காது என்று 2015ம் ஆண்டு ரமேஷ் சந்த், தற்போது நிதி ஆயோக்கின் உறுப்பினர், வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதுபோன்ற பல திறமையின்மைகளின் ஒருங்கிணைந்த முடிவு தான் பெரும்பாலான இந்திய விவசாயிகளை அதிக அளவு கடனுக்கு தள்ளியுள்ளது. 24 லட்சம் வீடுகளில் 40% மக்கள் 0.01 ஹெக்டர் அளவிற்கும் குறைவாக நிலம் வைத்திருப்பவர்கள் கடனில் சிக்கியுள்ளனர். இவர்களின் சராசரி கடன் தொகையானது ரூ. 31 ஆயிரம் ஆகும்.
இந்தியாவில் அதிக அளவில் விவசாயிகள் கடனில் இருப்பதற்கு, ஊதியம் கிடையாது, என்ற காராணம் முன்வைக்கப்படுகிறது. அட்டவணை மூன்று, வெவ்வேறு மாநிலங்களில் உள்ள ஒரு விவசாய குடும்பத்திற்கான மாத வருமான மதிப்பீடுகளையும், அகில இந்திய அளவில் இருக்கும் நபர்களின் எண்ணிக்கையையும் குறிப்பிடுகிறது. பிகார், மேற்கு வங்கம் மற்றும் உத்தரபிரதேசம் மாநிலங்களில் அதிக அளவில் விவசாயிகள் கடனில் இருக்கின்றனர் அதே நேரத்தில் அவர்களின் வருமானமும் குறைவாக இருக்கிறது. ஒப்பீட்டளவில் மிகவும் வளமான மாநிலங்களில் இருக்கும் விவசாயிகள் கூட அதிக அளவில் கடன்களை வாங்கியுள்ளனர்.
வாங்குதல் மற்றும் விற்பனை செய்தல்
விவசாயிகள் மற்றும் விவசாயிகள் அல்லாதோருக்கு இடையிலான வர்த்தக விதிமுறைகளை பார்க்கும் போது விவசாயிகளின் அவலநிலையை அறிந்து கொள்ள இயலும். வர்த்தக என்பது விவசாயிகள் உள்ளீடுகளுக்கு செலுத்தும் விலைகளுக்கும், விவசாயிகள் தங்களின் உற்பத்திக்காக பெறும் விலைகளுக்கும் இடையிலான விகிதமாகும் என்று ஜே.என்.யுவின் பொருளாதார பேராசிரியர் ஹிமான்ஷு கூறுகிறார். 100 என்பதை அளவுகோளாக கொள்வோம். டி.ஒ.டி. (Terms of trade) 100 புக்கிகளுக்கும் குறைவாக இருந்தால் விவசாயிகள் மிகவும் மோசமாக இருக்கிறார்கள் என்று அர்த்தம். Terms of trade 2004 - 2005 மற்றும் 2010 - 2011க்கான கால இடைவெளிகளில் 100 என்ற புள்ளியை தாண்டும் அளவில் அதிகரித்துள்ளது. ஆனால் அதன் பிறகு அப்படியே சரிவடைந்து மோசமானது.
விவாதத்தில் ஒரு முக்கிய மாறுபாடு குறைந்தபட்ச ஆதரவு விலை (minimum support prices) ஆகும். எம்.எஸ்.பி முறையை அரசாங்கம் நீக்கிவிடுமோ என்று பலரும் அச்சம் அடைகின்றனர். எம்.எஸ்.பி என்பது ஒரு விவசாயியிடமிருந்து உற்பத்தி பொருட்களை அரசாங்கம் வாங்க நிர்ணயிக்கப்படும் விலை. பல ஆண்டுகளாக, எம்.எஸ்.பி பல இலக்குகளை அடைந்துள்ளது. உணவு தானியங்களில் அடிப்படை தன்னிறைவை அடைவதற்குத் தேவையான முக்கிய பயிர்களை உற்பத்தி செய்வதை நோக்கி விவசாயிகளள் ஊக்குவிக்கப்பட்டனர். MSP கள் விவசாயிகளுக்கு "உத்தரவாதமான விலை" மற்றும் "உறுதிப்படுத்தப்பட்ட சந்தை" ஆகியவற்றை வழங்குகிறது. மேலும் விலைவாசி மாறுபாடுகளில் இருந்து விவசாயிகள் காப்பாற்றுகின்றனர். இது மிகவும் முக்கியமானது, ஏனெனில் பெரும்பாலான விவசாயிகளுக்கு போதுமான தகவல்கள் சென்று சேரவில்லை.
23 விலைபொருட்களுக்கு எம்.எஸ்.பி. அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் உண்மையிலேயே அரிசி, கோதுமை போன்ற சில விளைப்பொருட்கள் மட்டுமே கொள்முதல் செய்யப்படுகிறது. மாநிலங்களை பொறுத்து கொள்முதல் செய்யப்படும் உற்பத்தி பொருட்களின் அளவும் மாறுபடுகிறது. அதன் விளைவாக, விவசாயிகள், சந்தைகளில், எம்.எஸ்.பிக்கும் குறைவான அளவிலேயே வருமானம் பெறுகின்றனர்.
பிற முக்கிய கூறுகள்
வருமானம், கடன் மற்றும் கொள்முதல் மாநிலங்களுக்கு இடையே நடைபெறும் புலம் பெயர்வுடன் இணைக்கப்படுகிறது. அட்டவணை 6, அதிக அளவு இடம் பெயர்வுகளை கண்ட மாநிலங்களை பட்டியலிடுகிறது. இறுதியாக உணவு பொருட்கள் சேமிப்பது உட்பட இந்த சீர்திருத்தங்கள், உணவு பதப்படுத்துதல் துறையை மேம்படுத்தும் என்று அரசு நம்புகிறது. ஆர்.பி.ஐயின் ஆய்வு ஒன்று, இந்த துறையில் அதிக அளவு வேலை வாய்ப்பினையும், வருமானத்தையும் ஈட்ட முடியும் என்று கூறுகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.