Advertisment

உலகில் மிகவும் சக்திவாய்ந்த வெடிப்புகளைக் கண்டறியும்: புதிய சீன-பிரெஞ்சு செயற்கைக் கோள் உருவாக்கம்

பிரபஞ்சம் முழுவதும் காமா-கதிர் வெடிப்புகளைத் தேடுவதே செயற்கைக்கோளின் முதன்மை நோக்கம் ஆகும். அவை கண்டுபிடிக்கப்பட்டதும், செயற்கைக்கோள் அவற்றின் மின்காந்த கதிர்வீச்சு பண்புகளை அளந்து ஆய்வு செய்யும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
SVOM.jpg
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

சீனா மற்றும் பிரான்ஸ் இணைந்து உருவாக்கிய செயற்கைக்கோள் சிச்சுவான் மாகாணத்தில் உள்ள ஜிசாங் செயற்கைக்கோள் ஏவுதள மையத்தில் இருந்து சனிக்கிழமை (ஜூன் 22) விண்ணில் ஏவப்பட்டது. 

Advertisment

காமா-கதிர் வெடிப்புகளை (GRBs) ஆய்வு செய்வதற்கு இது மிகவும் சக்திவாய்ந்த செயற்கைக்கோள் ஆகும்,  அவை கருந்துளைகளின் பிறப்பு மற்றும் நியூட்ரான் நட்சத்திர மோதல்கள் போன்ற பிரபஞ்சத்தின் சில வெடிக்கும் நிகழ்வுகளின் விளைவாகும் என்று சீன தொலைக்காட்சி செய்திகள் கூறியுள்ளன. 

ஆங்கிலத்தில் படிக்க: Meet the new Sino-French satellite, which will detect the most powerful explosions in the universe

ஸ்பேஸ் வெரியபிள் ஆப்ஜக்ட்ஸ் மானிட்டர்  (SVOM) என அழைக்கப்படும் இந்த விண்கலம் வானியல் ஆய்வுகளில் முக்கிய பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.  இது சீனா மற்றும் பிரான்ஸ் இணைந்து உருவாக்கிய முதல் வானியல் செயற்கைக்கோள் ஆகும். 2018 ஆம் ஆண்டில், இரு நாடுகளும் இணைந்து கடல்சார் செயற்கைக்கோளை உருவாக்கி ஏவியது. எஸ்.வி.ஓ.எம் திட்டம் குறித்து இங்கு பார்பபோம்.  

ஆனால் முதலில், காமா-கதிர் வெடிப்புகளை ஏன் ஆய்வு செய்ய வேண்டும்?

ஜி.ஆ.ர்பி (GRB-கள்) மிகவும் ஆற்றல் வாய்ந்த காமா கதிர்களின் வெடிப்புகள் ஆகும், இது ஒரு வினாடியிலிருந்து பல நிமிடங்கள் வரை நீடிக்கும். அவை பிரபஞ்சத்தின் தொலைதூர பகுதிகளில் நிகழ்கின்றன, மேலும் "சூரியனின் ஒளிர்வை விட ஒரு குவிண்டில்லியன் (10 மற்றும் 18 பூஜ்ஜியங்கள்) மடங்கு அதிகமாக வெடிக்கும்" என்று நாசா தெரிவித்துள்ளது.

இரண்டு வகையான ஜி.ஆர்.பிகள் உள்ளன, short GRBs and long GRBs. ஆகும்.  குறுகிய GRBகள் இரண்டு நியூட்ரான் நட்சத்திரங்கள் அல்லது ஒரு நியூட்ரான் நட்சத்திரம் மற்றும் கருந்துளை ஆகியவற்றின் மோதலின் விளைவாகும், இதன் விளைவாக கருந்துளை ஏற்படுகிறது.  

அவை இரண்டு வினாடிகளுக்கும் குறைவாகவே நீடிக்கும். சில நேரங்களில், குறுகிய GRBகள் கிலோனோவாக்களால் பின்தொடர்கின்றன - ரசாயன கூறுகளின் கதிரியக்க சிதைவால் உற்பத்தி செய்யப்படும் மின்காந்த கதிர்வீச்சின் (அல்லது ஒளி) வெடிப்புகள். இந்த சிதைவு தங்கம், வெள்ளி மற்றும் பிளாட்டினம் போன்ற கனமான தனிமங்களை உருவாக்க வழிவகுக்கும் என்று நாசா தெரிவித்துள்ளது.

பெரிய அளவிலான நட்சத்திரங்களின் வெடிப்பு மற்றும் மரணங்கள் காரணமாக நீண்ட GRBகள் உருவாகின்றன. இவை இரண்டு வினாடிகள் அல்லது அதற்கு மேல் நீடிக்கும்.

பெரிய நட்சத்திரங்களின் வெடிப்பு, தொலைதூர விண்மீன் திரள்களில் கருந்துளைகள் உருவாக்கம் மற்றும் அவை பிரபஞ்சத்தை எவ்வாறு வடிவமைக்கின்றன போன்ற நிகழ்வுகள் தொடர்பான தகவல்களை எடுத்துச் செல்லும்போது விஞ்ஞானிகள் GRB-களை ஆய்வு செய்கின்றனர்.

எஸ்.வி.ஓ.எம் என்ன செய்யும்?

பிரபஞ்சம் முழுவதும் உள்ள GRB-களை தேடுவதே SVOM-ன் முதன்மை நோக்கமாகும். அவை கண்டுபிடிக்கப்பட்டதும், செயற்கைக்கோள் அவற்றின் மின்காந்த கதிர்வீச்சு பண்புகளை அளந்து ஆய்வு செய்யும். 

இது பிரபஞ்சத்தின் பரிணாமம் மற்றும் ஈர்ப்பு அலைகள் பற்றிய மர்மங்களைத் திறக்க வெடிப்புகளைப் பயன்படுத்தும் (விஞ்ஞானிகள் ஈர்ப்பு அலைகள் மற்றும் GRB கள் இரண்டும் நியூட்ரான் நட்சத்திரங்களின் மோதலில் இருந்து உருவாகின்றன என்பதை கவனித்துள்ளனர்). 

"காமா-கதிர் வெடிப்புகளின் தடயங்களை செயற்கைக்கோள் கண்டறிந்தவுடன், அது ஒரு நிமிடத்திற்குள் தகவலை தரைக் கட்டுப்பாட்டுக்கு அனுப்பும்…அந்த அறிவிப்பைப் பெற்ற பிறகு, தரைக்கட்டுப்பாடு உலகெங்கிலும் உள்ள தரைக்கட்டுப்பாடு அடிப்படையிலான கண்காணிப்பு நிலையங்களுக்கு தெரிவிக்கும். இவை விண்கலத்துடன் ஒருங்கிணைந்த கண்டறிதல்”என்று சீன அறிவியல் அகாடமியின் தேசிய வானியல் ஆய்வகத்தின் விஞ்ஞானியும், SVOM மிஷனின் சீன முதன்மை ஆய்வாளருமான வெய் ஜியான்யான் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

SVOM-ன் அம்சங்கள் என்ன?

930 கிலோ எடையுள்ள செயற்கைக் கோள் நான்கு பேலோடுகளைக் கொண்டுள்ளது.  இதை 2 சீன நாட்டவர்கள் மற்றும் 2 பிரான்ஸ் நாட்டவர்கள் சேர்ந்து உருவாக்கியுள்ளனர். 

பிரெஞ்சுக்காரர்கள் ECLAIRகள் மற்றும் MXT தொலைநோக்கிகளை உருவாக்கியுள்ளனர், இது GRB களைக் கண்டறிந்து கைப்பற்றும். சீனர்களால் உருவாக்கப்பட்ட காமா ரே பர்ஸ்ட் மானிட்டர் (GRB), GRB களின் ஸ்பெக்ட்ரத்தை அளவிடும். சீனர்களால் உருவாக்கப்பட்ட காணக்கூடிய தொலைநோக்கி (VT), GRBக்குப் பிறகு உடனடியாக வெளிப்படும் உமிழ்வைக் கண்டறிந்து கண்காணிக்கும்.

இந்த செயற்கைக்கோள் 625 கிமீ உயரத்தில் 96 நிமிட சுற்றுப்பாதையில் குறைந்த புவி சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

 

China France
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment