புகையிலை, சிகரெட் பிடிப்பவர்கள்: இவர்களில் யாருக்கு கொரோனா வாய்ப்பு அதிகம்?

நான் ஒண்ணும் செயின் ஸ்மோக்கர் இல்லை, ஒரு நாளைக்கு ஒண்ணு அல்லது ரெண்டு சிகரெட் தான் புடிக்கிறேன். எனக்கும் அந்த பாதிப்பு வருமானு கேட்குறவங்களுக்கு நிச்சயமா...

உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் புகைபிடிப்பவர்களை எளிதில் தொற்றிக்கொள்வதற்கான வாய்ப்பு அதிகம் இருப்பதாக தெரியவந்துள்ளது. இந்த தகவலை, உலக சுகாதார நிறுவனமும் உறுதி செய்துள்ளது.

புகை பிடிப்பவர்களுக்கு அதிக தொற்று

புகைபிடிப்பவர்களின் நுரையீரல்கள் மற்றும் சுவாசக்குழல்கள் மிகுந்த பாதிப்பிற்குள்ளாகி இருப்பதால், அவைகள் எளிதில் நோய்த்தொற்று ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளன. இவர்கள், SARS CoV-2 வைரசினால் எளிதில் பாதிக்கப்படுவர் இந்த வைரஸ், மனிதர்களிடத்தில் சுவாசப்பாதையில் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. இதன் பாதிப்பு தொடர்ந்து அதிகரிக்கும் போது, சுவாசித்தலில் பிரச்சனைகள் ஏற்படுகின்றன. ஒருவருக்கு புதிதாக கொரோனா வைரஸ் தொற்று ஏற்படுகிறது என்றால், அவருடைய சுவாசப்பாதையில் ஏதோ பிரச்னை உள்ளது என்று அர்த்தம் என்று பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள போர்டிஸ் மருத்துவமனையின் துறை இயக்குனர் ஹர்மிந்தர் சிங் பன்னு தெரிவித்துள்ளார்.

புகை பிடிப்பவர்கள் இந்த தருணத்திலாவது தங்களது இந்த பழக்கத்தை கைவிடுவதன் மூலம், கொரோனா வைரஸ் தொற்று பரவலை ஓரளவிற்காவது கட்டுப்படுத்த முடியும் என்று அவர் மேலும் கூறினார்.

நான் ஒண்ணும் செயின் ஸ்மோக்கர் இல்லை, ஒரு நாளைக்கு ஒண்ணு அல்லது ரெண்டு சிகரெட் தான் புடிக்கிறேன். எனக்கும் அந்த பாதிப்பு வருமானு கேட்குறவங்களுக்கு நிச்சயமா வரும் என்பதுதான் பதில். ஒரு சிகரெட் குடிச்சாலும், ஒரு பாக்கெட் குடித்தாலும் பாதிப்பு என்னவோ நுரையீரல் மற்றும் சுவாசப்பாதையில் தான். சிகரெட் பிடித்தாலே, பாதிப்பு மிகவும் அபரிமிதமாகவே இருக்கும். கோவிட் 19 வைரசிற்கு புகைபிடிப்பவர்களை அதிகம் பிடிக்கும். அவற்றிற்கு செயின் ஸ்மோக்கர், அக்கேஷனல் ஸ்மோக்கர் என்ற பாகுபாடு எல்லாம் கிடையாது.

புகையிலை பயன்படுத்துவர்களை விட சிகரெட் குடிப்பவர்களை மட்டுமே கோவிட் 19 வைரஸ் அதிகம் பாதிக்கிறது. புகையிலையை பயன்படுத்துவதால், வாய் புற்றுநோய் போன்றவையே ஏற்படும், ஆனால், சிகரட் புகைப்பதனால், நுரையீரல் நேரடியாக பாதிப்படைகிறது. இதன்காரணமாக, கோவிட் 19 தொற்று எளிதில் ஏற்பட காரணமாகிறது.

லூதியானாவில் உள்ள கிறிஸ்டியன் மருத்துவ கல்லூரி மருத்துவமனை பேராசிரியர் டாக்டர் விகாஸ் லும்பா கூறியதாவது, கோவிட் -19 வைரஸ், இந்தியாவிற்கு வந்துள்ள புதிய வைரஸ் ஆகும். இதுதொடர்பான ஆய்வுகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன. கொரோனா வைரஸ் குடும்பத்திலிருந்து வந்துள்ள இந்த கோவிட்-19 வைரஸ், மனிதர்களிடையே சுவாச பிரச்னைகளை ஏற்படுத்துகின்றன. ஒருவர் எத்தனை ஆண்டுகளாக புகைபிடித்து வருகிறாரோ, அதன் விகிதம் அதிகரிக்க அதிகரிக்க, அவருக்கு நோய் தொற்று எளிதில் ஏற்படும் என்று அவர் கூறினார்.

புகைபிடிப்பதை கைவிடுங்கள்

புகைபிடிப்பதை இந்த நேரத்திலாவது கைவிடுவதன் மூலம், கோவிட் -19 நோய் தொற்றில் இருந்து நாம் காத்துக்கொள்ளலாம். புகைபிடிப்பவர்கள், அந்த பழக்கத்திலிருந்து சிறிது சிறிதாக விடுபடுவதன் மூலம், அவர்களின் நுரையீரல் மெல்ல மெல்ல சீரடையும். இதன்காரணமாக, அவர்கள் இந்த தொற்றிலிருந்து தங்களை காத்துக்கொள்ள முடியும்.

மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு, ரொம்ப மனஅழுத்தத்துல இருக்கேன், குழப்பமான மனநிலையில இருக்கேன், பயமா இருக்கு, ரொம்ப கோபப்பர்றேன் இதுபோன்ற சூழ்நிலைகளிலேயே, நாம் சிகரெட், மதுப்பழக்கம் உள்ளிட்டவைகளுக்கு அடிமை ஆகின்றோம். இதுபோன்ற சூழ்நிலைகளில், நாம் மருத்துவ பணியாளர்கள் அல்லது கவுன்சிலர்களை நாடி தீர்வு காணலாம் என்று உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.

என்னால் புகைபிடிப்பதை உடனடியாக நிறுத்திவிட முடியாது, அதனால் ஒரே ஒரு சிகரெட்டை மட்டும் புடிச்சுக்கிறேனே என்று சொல்பவர்களுக்கு கூட வேண்டாம் என்பதே எனது அறிவுரையாக இருக்கும். ஏனெனில், கோவிட் -19 தொற்று தற்போது மிக அபரிமிதமான அளவில் உள்ளது. இந்நிலையில், ஒரு சிகரெட் கூட உங்களின் வாழ்க்கைக்கு சாவு மணி அடிக்க காரணமாக அமைந்துவிடும். எனவே, புகைபிடிப்பதை முற்றிலும் கைவிடுவதன் மூலமே, இந்த தொற்று அபாயத்திலிருந்து நாம் நம்மை காத்துக்கொள்ள முடியும் என்று டாக்டர் ஹர்மிந்தர் சிங் பன்னு தெரிவித்துள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க..

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Explained News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close