Advertisment

சமூக ஊடகக் கணக்குகளுடன் ஆதார் இணைப்பு; உச்ச நீதிமன்றம் எதிர்கொள்ளும் கேள்விகள்

Aadhaar-Social Media Linking: தனிநபர்களின் சமூக ஊடக கணக்கு சுயவிவரங்களில் ஆதார் இணைக்கக் கோரிய வழக்குகளை உச்ச நீதிமன்றம் ஜனவரி மாதம் முதல் விசாரிக்க உள்ளது. தனியுரிமை என்பது அடிப்படை உரிமை என்று 2017 ஆம் ஆண்டில் உச்ச நீதிமன்றம் ஒரு முக்கிய தீர்ப்பை அளித்த பிறகு, இது தனியுரிமை தொடர்பான உரிமை பற்றிய முதல் பெரிய சட்டப் பிரச்னையாக இருக்கும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
aadhaar linking, aadhaar social media linking, aadhaar, facebook, facebook aadhaar linking, supreme court aadhaar linking,சமூக ஊடகங்கள், ஆதார், ஃபேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ்அப், உச்ச நீதிமன்றம், supreme court aadhaar social media case, social media rules, social media rules, new social media rules

aadhaar linking, aadhaar social media linking, aadhaar, facebook, facebook aadhaar linking, supreme court aadhaar linking,சமூக ஊடகங்கள், ஆதார், ஃபேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ்அப், உச்ச நீதிமன்றம், supreme court aadhaar social media case, social media rules, social media rules, new social media rules

Social Media-Adhaar Linking: தனிநபர்களின் சமூக ஊடகக் கணக்கு சுயவிவரங்களில் ஆதார் இணைக்கக் கோரிய வழக்குகளை உச்ச நீதிமன்றம் ஜனவரி மாதம் முதல் விசாரிக்க உள்ளது. தனியுரிமை என்பது அடிப்படை உரிமை என்று 2017 ஆம் ஆண்டில் உச்ச நீதிமன்றம் ஒரு முக்கிய தீர்ப்பை அளித்த பிறகு, இது தனியுரிமை தொடர்பான உரிமை பற்றிய முதல் பெரிய சட்டப் பிரச்னையாக இருக்கும்.

Advertisment

நீதிமன்றம் கவனிக்கும் இரண்டு குறிப்பிடத்தக்க கேள்விகள்: ஆதார் சமூக ஊடகக் கணக்குகளுடன் கட்டாயமாக இணைப்பது ஒரு நபரின் தனியுரிமை மீறுகிறதா? இடைத்தரகரின் பொறுப்புக்கும் பேச்சு சுதந்திரத்துக்கும் இடையிலான சமநிலை மீறப்படுகிறதா? என்பதே அவை.

சூழல்

இந்த வழக்குகள் தொடர்பாக திங்கள்கிழமை மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் ஒரு பிரமாணப்பத்திரத்தை தாக்கல் செய்தது. அதில், “இணையம் ஜனநாயக அரசியலுக்கு கற்பனை செய்யமுடியாத இடையூறுகளை ஏற்படுத்தும் ஒரு சக்திவாய்ந்த கருவியாக உருவெடுத்துள்ளது.” என்றும் “விதிகளை திருத்தம் செய்வதற்கும் சமூக ஊடக தளங்கள் போன்ற இடைத்தரகர்களின் ஒழுங்குமுறைக்கான நடைமுறை விதிகளை அறிவிக்கவும் இன்னும் மூன்று மாதங்கள் ஆகும்” என்றும் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தது.

தகவல் தொழில்நுட்ப சட்டம் 2000, இடைத்தரகர்கள் என்பவர்களை வரையறை செய்துள்ளது. அதில், தொலைதொடர்பு சேவை வழங்குநர்கள், நெட்வொர்க் சேவை வழங்குநர்கள், இணைய சேவை வழங்குநர்கள், வலை ஹோஸ்டிங் சேவை வழங்குநர்கள், தேடுபொறிகள், ஆன்லைன் கட்டண தளங்கள், ஆன்லைன் ஏல தளங்கள், ஆன்லைன் சந்தை இடங்கள் மற்றும் சைபர் கஃபேக்கள் ஆகியோர் அடங்குவர். தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் 87வது பிரிவு மத்திய அரசுக்கு விதிகளை உருவாக்குவதற்கான அதிகாரத்தை வழங்குகிறது. தற்போது, 2011 இல் உருவாக்கப்பட்ட விதிகள் இடைத்தரகர்களை ஒழுங்குபடுத்துகின்றன.

வழக்குகள்

சென்னை, மும்பை, மத்திய பிரதேச உயர் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள இதுபோன்ற வழக்குகளை உச்சநீதிமன்றத்திற்கு மாற்றுமாறு பேஸ்புக், வாட்ஸ்அப் மற்றும் கூகிள் நிறுவனங்கள் முறையிட்டுள்ளன.

பயணர்கள் ஆதார் அட்டையை தங்கள் சமூக ஊடக கணக்குகளில் இணைப்பதற்கு கோரிய விலங்குகள் நல ஆர்வலர் அந்தோணி கிளெமென்ட் ரூபின், ஜனனி கிருஷ்ணமூர்த்தி ஆகியோரால் 2018 ஆம் ஆண்டில் தாக்கல் செய்யப்பட்ட இரண்டு பொது நல வழக்குகளை சென்னை உயர் நீதிமன்றம் விசாரித்தது. அதில் தனிநபர்களைக் கண்டுபிடிப்பதற்கான தகவல்களை வழங்குவதில் இடைத்தரகர்களுக்கு எதிராக ஒரு உத்தரவு பிறப்பித்தது. சமூக ஊடகக் கணக்குகளை ஆதார் உடன் இணைப்பதற்கான கோரிக்கை பின்னர் திரும்பப் பெறப்பட்டது.

அக்டோபர் 2018-இல் வழக்கறிஞர் சாகர் சூர்யவன்ஷி என்பவர் மும்பை உயர் நீதிமன்றத்தில், தேர்தலுக்கு முன்பு பணம் செலுத்தப்பட்ட அனைத்து ஆன்லைன் அரசியல் உள்ளடக்கங்களையும் 48 மணி நேரத்தில் தடை செய்யக் கோரி மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். பின்னர், சூர்யவன்ஷி உச்ச நீதிமன்றத்தின் நடவடிக்கைகளில் ஒரு வாதியாக இணையப்போவதாகக் உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துவிட்டு அவர் வழக்கை திரும்பப் பெற்றார்.

ஜூலை 2019 இல், வழக்கறிஞர் அமிதாப் குப்தா, மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றத்தில், ஆதார் மற்றும் இதர அடையாள ஆவணங்களைப் பயன்படுத்தி அனைத்து சமூக ஊடக பயன்பாட்டாளர்களையும் அடையாளம் காண வேண்டும் எனக் கோரி முறையிட்டார்.

இந்த வழக்குகள் அடிப்படை உரிமைகள், குறிப்பாக தனியுரிமை உரிமைகள், பேச்சு சுதந்திரம் தொடர்பான கேள்விகளுக்கு பதிலளிப்பதாக பேஸ்புக் வாதிட்டது. வெவ்வேறு உயர்நீதிமன்றங்கள் வழக்குகளைத் தனித்தனியாகக் கேட்டு முரண்பட்ட தீர்ப்புகளை வழங்கினால், குடிமக்களின் அடிப்படை உரிமைகள் பாதிக்கப்படலாம் என்று பேஸ்புக் வாதிட்டது.

தயாராகிவரும் புதிய வழிகாட்டு நெறிமுறைகள்

ஐ.டி சட்டத்தின் கீழ் இடைத்தரகர்களை ஒழுங்குபடுத்துவதற்கான புதிய வழிகாட்டுதல்கள் உள்ளன என்று மத்திய அரசு நீதிபதிகள் தீபக் குப்தா, நீதிபதி அனிருத்தா போஸ் அமர்வு முன்பு தெரிவித்தது.

“சமூக ஊடகங்களில் பல்வேறு செய்திகளும் உள்ளடக்கங்களும் பரவுகின்றன / பகிரப்படுகின்றன. அவற்றில் சில தீங்கு விளைவிக்கின்றன. சில செய்திகள் வன்முறையைத் தூண்டக் கூடியவை. அந்த செய்திகள் நாட்டின் இறையாண்மைக்கும் ஒருமைப்பாட்டிற்கும் எதிரான செய்திகளாக இருக்கலாம். சமூக ஊடகங்கள் இன்று அதிக அளவு ஆபாசப் படங்களுக்கான ஆதாரமாகிவிட்டன. குழந்தைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்துபவர்கள் சமூக ஊடகங்களை பெரிய அளவில் பயன்படுத்துகின்றனர். இடைத்தரகர்களால் நடத்தப்படும் பிற தளங்களைப் பயன்படுத்துவதன் மூலம் மருந்துகள், ஆயுதங்கள் மற்றும் பிற பொருள்களை விற்க முடியும்”என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

பொதுமக்களிடமிருந்து பதில்களைக் கோரி, இடைத்தரகர்களை ஒழுங்குபடுத்துவதற்கான சட்ட வரைவு விதிகளை ஜனவரி மாதம் தகவல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் வெளியிட்டது.

தனியுரிமையும் இறையாண்மையும்

ஐ.ஐ.டி சென்னை கணினி அறிவியல் பேராசிரியரான வி காமகோடியிடமிருந்து சென்னை உயர் நீதிமன்றம் பிரமாணப் பத்திரத்தை கோரியது. அதில் தேவைப்படும் போது மறைகுறியாக்கப்பட்ட செய்தியை திறப்பதற்கு இடைத்தரகருக்கு உதவும் தொழில்நுட்பத்தை வழங்க முடியும் என்று கூறினார். மறுபுறம், வாட்ஸ்அப், ஆட்சேபனைக்குரிய உள்ளடக்கத்தை உருவாக்கியவரை கண்டுபிடிப்பது சாத்தியமில்லை என்று சமர்ப்பித்துள்ளது. ஏனெனில் அது இருமுனை குறியாக்கத்தைக் கொண்டுள்ளது.

நீதிமன்றம் “குறியாக்கத்தை முறிப்பது எளிதில் கிடைத்தால், தனியுரிமையின் அடிப்படை உரிமையை தோற்கடிக்கக்கூடும் என்றும் செய்திகளை மறைகுறியாக்குவது சிறப்பு சூழ்நிலைகளில் செய்யப்படலாம் என்றது. ஆனால், ஒரு நபரின் தனியுரிமை தாக்கப்படுவதில்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும். ஆனால், அதே நேரத்தில், அரசின் இறையாண்மையும் ஒரு நபரின் கண்ணியமும் நற்பெயரும் பாதுகாக்கப்பட வேண்டும்.” என்று குறிப்பிட்டது.

Twitter Social Media Supreme Court Whatsapp Aadhaar Card Facebook
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment