Advertisment

பண்டிகை காலத்தில் சமூகமயமாக்கலும் கோவிட்டும்

பண்டிகை காலமாக இருப்பதால், நீங்கள் சமூகமயமாக வேண்டிய நிலையில் இருப்பீர்கள். அதனால், கோவிட் -19 க்கு மத்தியில் பாதுகாப்பாக இருக்க நீங்கள் நினைவில் கொள்ளக்கூடிய சில குறிப்புகள் இங்கே.

author-image
WebDesk
New Update
Covid-19, Coronavirus news, Coronavirus transmission, Coronavirus transmission indoors, கொரோனா வைரஸ், சமூகமயமாக்கல், தடுப்பு நடவடிக்கைகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், கோவிட்-19, Covid transmission indoors, tamil Indian Express

கோவிட் -19 தொற்றுநோய் பரவலுக்கு மத்தியில், பண்டிகைகளின் போது நீங்கள் எவ்வாறு பழகுவீர்கள்? நீங்கள் வீட்டிற்குள் இருந்தால், அறை வசதியை நிர்வகிப்பதன் மூலமும், திறமையான காற்றோட்டத்தை உறுதி செய்வதன் மூலமும், கட்டாய முன்னெச்சரிக்கைகளைப் பின்பற்றுவதன் மூலமும் வைரஸின் பரவலைக் கட்டுப்படுத்தலாம்.

Advertisment

கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகாமல் பாதுகாப்பாக இருக்க நீங்கள் நினைவில் கொள்ளக்கூடிய சில குறிப்புகள் இங்கே தரப்படுகிறது.

publive-image

உள் அறைகள் கொரோனா வைரஸ் காற்று மூலம் பரவுவதற்கு சாத்தியமுள்ள இடங்கள் ஆகும்.

ஆனால், அறைகள், நல்ல காற்றோட்டத்துடன் கட்டாய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் வைரஸ் பரவலை நாம் சிறப்பாக கட்டுப்படுத்த முடியும்.

publive-image

அறைகள் மற்றும் வீடுகளின் ஜன்னல்களையும் கதவுகளையும் திறந்து விடுங்கள். அறையில், காற்றோட்டம் வெளியே செல்வதை உறுதி செய்யுங்கள்.

அதிக காற்றோட்டமும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு அறையில் குறைவாக இருப்பதால், தொற்றுநோய்க்கான ஆபத்து குறைவாக உள்ளது.

publive-image

உங்களுடைய காற்று சுத்திகரிப்பு இயந்திரத்தில் HEPA துகள் ஃபில்டர் இருப்பதை உறுதிசெய்யுங்கள். சில யு.வி. பாதுகாப்புடன் வந்துள்ளது. அவ்வப்போது காற்று ஃபில்டர்களை பழுதுபார்த்து வையுங்கள்.

உங்கள் ஸ்பிளிட் ஏசி-களை அணைத்து வையுங்கள். காற்றொட்டம் இருப்பதற்கு இடைவெளியில் ஜன்னல்கள் மற்றும் கதவுகளை திறந்து வையுங்கள்.

உங்கள் சீலிங் மின் விசிறியை அப்படியே விட்டுவிடுங்கள். மேலும், அதிக காற்றோட்டம் இருப்பது நல்லது.

காற்றை வெளியேற்றும் மின் விசிறிகளை (exhaust fans)சமையலறைகளிலும் குளியலறைகளிலும் வைக்கவும்.

publive-image

நீங்களும் உங்கள் விருந்தினர்களும் நோய் கட்டுப்பாட்டு மண்டலத்தில் இல்லை என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளவும்.

நான்கு அல்லது ஐந்து பேருக்கு மேல் உள்ள அறையில் இருந்து வெளியேறுங்கள். பாதிக்கப்பட்ட நபருடன் உட்கார்ந்திருப்பது காற்றோட்டத்தில் தொற்று அபாயத்தை அதிகரிக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

அறைக்குள் ஒரு மணி நேரத்திற்கு மேல் இருக்க வேண்டாம்.

publive-image

 

சானிடைஸரைக் கொண்டு அடிக்கடி சுத்தம் செய்துகொள்ளுங்கள்.

ஒரு முறை பயன்படுத்தக் கூடிய எளிதில் மக்கக் கூடிய உணவு பரிமாறும் பொருட்களை பயன்படுத்துங்கள். உணவு, தட்டுகள், குவளைகளை பகிர்ந்துகொள்ளாதீர்கள்.

பயணத்தின்போது மெனுவைத் திட்டமிடுங்கள். பஃபே முறைகளைத் தவிர்க்கவும்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"
Coronavirus Diwali
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment