Advertisment

குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த தொடங்கிய நாடுகள்

Covid Vaccine : உலகின் பல்வேறு நாடுகளும் குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்த துவங்கி உள்ளது.

author-image
WebDesk
New Update
Pfizer-BioNTech, Covid vaccine

12 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு Pfizer-BioNTech’s கோவிட்-19 தடுப்பூசியை பயன்படுத்த ஐரோப்பிய ஆணையம் வெள்ளிக்கிழமை அங்கீகாரம் வழங்கியது. அமெரிக்காவிலும், கனடாவிலும் இதேபோன்று குழந்தைகளுக்கு தடுப்பூசி போட அனுமதி வழங்கப்பட்டது.

Advertisment

உலகின் பல நாடுகளில் வயதான மற்றும் கொரோனா பாதித்த மக்களுக்கு தடுப்பூசி தேவைப்படும் சூழலில், பணக்கார நாடுகளில் இளம் பருவத்தினருக்கு தடுப்பூசி போடுவது கவலையை எழுப்பியுள்ளது. கோவாக்ஸ் திட்டத்திற்கு தடுப்பூசிகளை கொடுக்குமாறு உலக சுகாதார நிறுவனம் பணக்கார நாடுகளை வலியுறுத்தியுள்ளது.

குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்த ஒப்புதல் அளித்த அல்லது பரிசீலிக்கும் நாடுகளின் பட்டியல்:

ஐரோப்பிய யூனியன் நாடுகள்:

இத்தாலி Pfizer-BioNTech தடுப்பூசியை 12 முதல் 15 வயதுடையவர்களுக்கு செலுத்த மே 31 ஆம் தேதி ஒப்புதல் அளித்தது.

ஜூன் 7 முதல் 12-16 வயதுடைய குழந்தைகளுக்கு முதல் டோஸ் தடுப்பூசி வழங்க ஜெர்மனி திட்டமிட்டுள்ளது, அதே சமயம் போலந்து 12-15 வயதுடையவர்களுக்கு தடுப்பூசி செலுத்த உள்ளது.

ஜூன் மாதத்திற்குள் பிரான்ஸ் 16 முதல் 18 வயதுடையவர்களுக்கு தடுப்பூசியை போட தொடங்க உள்ளது. 12-15 வயதுடைய சிறுவர் சிறுமிகள் பள்ளி ஆண்டின் தொடக்கத்தில் தடுப்பூசி ஷார்ட்டை பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

லிதுவேனியாவின் பிரதமர் ஜூன் மாதத்திலிருந்து 12 வயதுடைய குழந்தைகளுக்கு தடுப்பூசி போட ஆரம்பிக்கலாம் என அறிவித்துள்ளதாக டெல்ஃபி செய்தி தளம் தெரிவித்துள்ளது.

எஸ்டோனியாவில் இலையுதிர்காலத்தில் இளைஞர்களுக்கு தடுப்பூசி போடத் தொடங்கலாம் என அரசு கூறியுள்ளதாக ERR பொது ஒளிபரப்பு செய்தி வெளியிட்டுள்ளது.

ரூமேனியாவின் பிரதமர் 12 வயதுடையவர்களுக்கு ஜூன் 1 முதல் தடுப்பூசி செலுத்தலாம் என கூறியுள்ளதாக ரேடியோ ப்ரீ ஐரோப்பா/ ரேடியோ லிபர்ட்டி தெரிவித்துள்ளது.

ஆஸ்திரியா செய்தி தளமான விண்டோபொனா வெளியிட்ட தகவலின்படி, ஆகஸ்ட் இறுதிக்குள் 12 முதல் 15 வயதுடைய 3,40,000 குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்த அந்நாட்டு அரசு இலக்கு வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹங்கேரி 16-18 வயது குழந்தைகளுக்கு மே மாத நடுப்பகுதியில் தடுப்பூசி போடத் தொடங்கியது என்று சின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஐரோப்பா

ஃபைசர் மே மாத நடுவில் 12-15 வயது குழந்தைகளுக்கு அதன் தடுப்பூசியைப் பயன்படுத்த பிரிட்டிஷின் ஒப்புதல் கோருவதாகக் தெரிவித்தது.

COVID-19 வைரஸால் தீவிரமாக நோய்வாய்ப்படும் அதிக ஆபத்து உள்ள குழந்தைகளுக்கு ஃபைசர் தடுப்பூசியை செலுத்த நார்வே பரிசீலிக்கக்கூடும் என்று விஜி செய்தித்தாள் தெரிவித்துள்ளது.

சுவிட்சர்லாந்தின் சுகாதார கண்காணிப்புக் குழு மே மாத தொடக்கத்தில் 12-15 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு பைசர் தடுப்பூசி செலுத்த ஒப்புதல் வழங்கியது.

மத்திய கிழக்கு நாடுகள்

இஸ்ரேல் ஜனவரி மாதத்தில் 16 முதல் 18 வயதுடையவர்களுக்கு தடுப்பூசி இயக்கத்தை தொடங்கியது. இந்த வாரம் அதை 12 முதல் 15 வயதுடையவர்களுக்கு நீட்டித்துள்ளது.

அவசர கால பயன்பாட்டிற்காக தடுப்பூசியை செலுத்த மே மோதத்தில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து ஜூன் 1 ஆம் தேதி முதல் 12-15 வயதுடையவர்களுக்கு பைசர் தடுப்பூசி போட தொடங்குவதாக துபாய் தெரிவித்துள்ளது.

ஆசிய பசிபிக்

சிங்கப்பூர் 12-18 வயதுடைய இளைஞர்களுக்கு ஜூன் 1 ஆம் தேதி முதல் தடுப்பூசி போட தொடங்க உள்ளது.

மே 28 அன்று ஜப்பான் 12 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு ஃபைசரின் தடுப்பூசி பயன்படுத்த ஒப்புதல் அளித்தது

மே 26 ஆம் தேதி பிலிப்பைன்ஸ் 12-15 வயது குழந்தைகளுக்கு அவசரகால பயன்பாட்டிற்கு ஃபைசர்-பயோஎன்டெக் தடுப்பூசியை அனுமதிக்க முடிவு செய்தது

அமெரிக்கா

மே 31 அன்று சிலி 12-16 வயதுடைய குழந்தைகளுக்கு ஃபைசர்-பயோஎன்டெக் தடுப்பூசி பயன்படுத்த ஒப்புதல் அளித்தது

நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் 12-15 வயதிற்குட்பட்டவர்களுக்கு ஃபைசர் தடுப்பூசி போட ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து, மே மாத நடுவில் அமெரிக்கா தடுப்பூசி போட தொடங்கியது.

மே மாத தொடக்கத்தில் கனடா 12-15 வயது குழந்தைகளுக்கு பைசர் தடுப்பூசியை பயன்படுத்த ஒப்புதல் அளித்தது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Corona Vaccine Pfizer
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment