அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு பிரதமர் மோடியால் பூமி பூஜை புதன்கிழமை நடத்தப்பட்டது. அயோத்தியில் ராமர் கோயில் சோம்பூரர் கோயில் கட்டடக் கலைஞர்களால் கட்டப்படுகிறது. 30 ஆண்டுகளுக்கு முன்னர் பாபர் மசூதி இருந்த இடத்தை தேசபக்தர் சந்திரகாந்த் சோம்பூரர் தலைமையில் முதன்முதலில் பார்வையிட்டனர்.
சோமநாதர் கோயில் முதல் அயோத்தி கோயில் வரை கோயில் கட்டுபவர்களின் குடும்பம்
சந்திரகாந்த் சோம்பூரர் 77 வயதான இவர் அப்போதைய விஸ்வ இந்து பரிஷத் (வி.எச்.பி) தலைவர் அசோக் சிங்காலுடன் அந்த இடத்தை முதலில் பார்வையிட்டார். அதன் பிறகு, அவர் அயோத்தியில் உள்ள பகவான் ராம் லல்லாவுக்கு 30 ஆண்டுகளுக்கு முன்பு கோயில் பணிகளைத் தொடங்கினார். தொழிலதிபர் கன்ஷ்யம்தாஸ் பிர்லா அவரிடம் ராமர் கோயில் திட்டத்தை எடுத்துக் கொள்ளலாமா என்று கேட்டு அவரை அசோக் சிங்காலுக்கு அறிமுகப்படுத்தினார். சோம்பூரர் அப்போது பல பிர்லா கோவில்களில் பணிபுரிந்தார்.
அன்றிலிருந்து இன்று (ஆகஸ்ட் 5ம்) தேதி வரை, சோம்பூரர்களுக்கு நியமிக்கப்பட்ட இந்த திட்டம் அடிக்கல் நாட்டப்படுவதற்கு மிக நீண்ட காலம் எடுத்துக்கொண்டது என்று இந்தியாவிலும் வெளிநாட்டிலும் சுமார் 200 கோயில்களை கட்டியுள்ள சோம்பூரர்கள் கும்பத்தினர் கூறுகின்றனர்.
பொதுவாக பூமி பூஜை 2-3 ஆண்டுகளுக்குள் நடப்பதை நாம் பார்த்திருக்கிறோம்” என்று கூறிய சோம்பூரர் கூறுகிறார். ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டுவதை தொலைக்காட்சியில் நேரலையில் பார்க்கிறார்.
சோம்பூரருக்கு வயதாகி விட்டதால், கொரோனா வைரஸ் தொற்று நோய் காரணமாக அவர் அயோத்திக்கு செல்ல வேண்டாம் என்று முடிவு செய்துள்ளார். ஆனால், ராம ஜென்மபூமி கோயிலின் தளத் திட்டத்தை உருவாக்கிய அவரது மகன் ஆஷிஷ் (49) கோயிலைக் கட்டுவதற்கான ஒப்பந்தத்தை வழங்கிய லார்சன் & டூப்ரோ நிறுவனத்துடன் விவரங்களைத் தயாரிக்க அயோத்தியில் உள்ளார்.
1951 ஆம் ஆண்டில் இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவர் டாக்டர் ராஜேந்திர பிரசாத் திறந்து வைத்த குஜராத் கடற்கரையில் உள்ள பிரபாஸ் படானில் உள்ள சோமநாதர் கோயிலைக் கட்டிய அவரது தந்தை மற்றும் பெரிய தாத்தா பிரபா ஷங்கரிடமிருந்து கோயில் கட்டும் கலை ஆஷிஷுக்கு வந்துள்ளது.
பிரபாஷங்கருக்கு பத்மஸ்ரீ விருது அளிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார். அவருக்கு 51 வயதாக இருந்தபோது, பத்ரிநாத் கோயிலின் புனரமைப்பு திட்டத்திலிருந்து திரும்பிக்கொண்டிருந்தபோது அவருடைய மகன் பல்வந்திராயை ஒரு விபத்தில் இழந்தார்.
ஆனால், அவர்கள் குடும்பத்தைப் பொறுத்தவரை, சோமநாதர் கோயில் அவர்களின் இதயத்திற்கு மிக நெருக்கமாக உள்ளது. சோம்பூரர்கள் தங்கள் மூதாதையர்களுக்கு கோவில் கட்டும் கலையை தேவலோக கட்டிடக் கலைஞர் விஸ்வகர்மா அவர்களால் கற்பிக்கபட்டதாக நம்புகிறார்கள். பாவ்நகரின் பாலிதானா நகரத்திலிருந்து வந்த சோம்பூரர்கள், தங்களை ‘சந்திர மண்டல வாசிகள்’ (சோம் = சந்திரன் மற்றும் பூரா = நகரம்) என்று கருதுகின்றனர்.
அவர்களுடைய மூதாதையரான ராம்ஜி, பாலிதானாவின் ஷெத்ருஞ்சய் மலைகளில் ஜெயின் கோயில் வளாகத்தை கட்டினார். அவர் இதற்கு பம்பாயிலிருந்து ஒரு சர்க்கரை வணிகரால் நியமிக்கப்பட்டார் என்று சோம்பூரர் கூறுகிறார்.
அவர் எந்தவொரு முறையான கட்டிடக்கலை பள்ளிக்கும் செல்லவில்லை. அவர் அதை தனது தாத்தா, தந்தை மற்றும் சாஸ்திரங்களிலிருந்து கற்றுக்கொண்டார் என்று கூறுகிறார். ஆனால், அவருடைய மகன்களும் கோயில் திட்டத்தில் இணைந்த மற்றவர்களும் பயிற்சி பெற்ற பொறியாளர்கள் அல்லது கட்டடக் கலைஞர்கள் என்று கூறினார்.
பென்சில் ஓவியங்களுடன் தொடங்கிய 3 தசாப்த கால பணி
சோம்பூரர் முதன்முதலில் அயோத்தியில் உள்ள தளத்தில் உள்ள கர்பகிரஹத்துக்குள் சென்றபோது, எந்தவொரு கருவியையும் எடுக்க அனுமதிக்காததால் அதை தனது காலடிகளால் அளவிட்டுள்ளார். அந்த இடம் தடுப்புக்கு அப்பால் இருந்தது. மேலும், வருங்கால கோயிலுக்கான திட்டங்களை வடிவமைப்பதில் இருந்து கட்டடக் கலைஞர்களைத் தடுக்கப்பட்டிருந்தது. அதன்பிறகு, சோம்பூரர் முதன்மை பென்சில் வரைபடத்தை உருவாக்கினார். வரைபட காகிதத்தில் வல்லுநர்களால் வண்ண மை தீட்டப்பட்டது. சோமநாதர் கோயிலையும் கிருஷ்ணர் ஜென்மஸ்தானத்தையும் மதுராவில் கட்டியபோது சோம்பூரர் தனது தாத்தா பிரபாஷங்கருக்கு உதவி செய்ததைப் போலவே, ஆஷிஷும் 1993 இல் தனது தந்தையுடன் உதவிக்கு சேர்ந்தார்.
சோம்பூரர் கோயிலுக்கு 2-3 திட்டங்களை வகுத்திருந்தார், அவற்றில் ஒன்று வி.எச்.பி. ஒப்புதல் அளித்தது. பின்னர் கோயிலைக் கட்டும் பணியை மேற்கொண்டது. அதற்காக மரத்தில் ஒரு மாதிரி செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து வந்த கும்பமேளாவில், கூடியிருந்த சாதுக்களின் முன் அந்த மாதிரி வைக்கப்பட்டது. அதற்கு அவர்கள் ஒப்புதல் அளித்தனர்.
பாபர் மசூதி இடிக்கப்படுவதற்கு முன்னர், பிரதமர் பி.வி.நரசிம்மராவ் மசூதி இருக்கும்போதே ராமர் கோயிலுக்கு மாற்றுத் திட்டத்தை உருவாக்கலாமா என்று கேட்க அவரை அழைத்ததாக சோம்பூரர் நினைவு கூர்ந்தார்.
நரசிம்ம ராவின் சுயசரிதையில் ‘அயோத்தி, 6 டிசம்பர், 1992’ல் குறிப்பிட்டுள்ளபடி அந்த நேரத்தில் பிரதமர் அலுவலகத்தில் அயோத்தி செல் அமைக்கப்பட்டது. சோம்பூரர் மசூதியின் மூன்று குவிமாடங்களுடனும், அதன் பக்கத்திலுள்ள கோயிலுடனும் ஒரு மாதிரியை உருவாக்கினார். மதுராவில் உள்ள கிருஷ்ணர் ஜன்மாஸ்தானில் இருந்ததைப் போன்ற ஒரு ஏற்பாடு ஒன்றை உருவாக்கினார். ஆனால், வி.எச்.பி. பிடிவாதமாக இருந்தது என்று சோம்பூரர் தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் கூறினார். “கோயில் உண்மையான தளத்தில் கட்டப்படவில்லை என்றால், அது சரயு நதிக்கரையில் கட்டப்படுகிறதா அல்லது அகமதாபாத்தில் கட்டப்படுகிறதா என்பது எங்களுக்கு முக்கியமல்ல.
பாபர் மசூதி இடிப்பு நாட்டை மத வன்முறையில் மூழ்கடித்தது. இருப்பினும், கோவில் திட்டத்திற்கு ஒரு ஊக்கம் கிடைத்தது. இப்போது மசூதி இல்லை என்பதால், ராம் லல்லாவின் உண்மையான பிறப்பிடம் என்று நம்பப்படும் இடத்தில் கோவிலைக் கட்டும் வாய்ப்பு திறக்கப்பட்டுள்ளது.
1992 மற்றும் 1996க்கு இடையில், அயோத்தியில் உள்ள ‘காரியசாலா’வில் கோயிலின் பணிகள் முழுவீச்சில் நடந்தன. மேலும், கோயிலின் கூறுகள் வடிவமைக்கப்பட்டன. ஆனால், பின்னர், வி.எச்.பி-க்கு நிதி இல்லாமல் போய்விட்டது. அவர்கள் வழக்குகளில் ஈடுபட்டதால் வேலை மந்தமானது. அந்த கட்டத்தில், அந்த இடத்தில் 8-10 பணியாளர்கள் மட்டுமே இருப்பார்கள் என்று சோம்பூரர் நினைவு கூர்ந்தார். கடந்த நவம்பரில், உச்ச நீதிமன்றம் கோயில் கட்டுவதற்கு முழு நிலத்தையும் வழங்கிய பின்னர் நம்பிக்கை அதிகரித்தது.
சோம்பூரர் கடைசியாக சுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு அயோத்திக்குச் சென்றார். அவரது மகன்களான நிகில் (55), மற்றும் ஆஷிஷ் ஆகியோர் இந்த திட்டத்தை நிறைவேற்றியுள்ளனர். மேலும், சிவில் இன்ஜினியரான நிகிலின் மகன் அசுதோஷ் (28), தளங்களை பார்வையிடுதல் மற்றும் வீட்டுப் பள்ளி மூலம் கோயில் கட்டிடக்கலையில் இரண்டு ஆண்டுகள் பயிற்சி பெற்ற பின்னர் அவர்களுடன் சேர்ந்துள்ளார்.
ஆஷிஷின் திட்டங்களில் மும்பையில் உள்ள ஆன்டிலாவில் உள்ள அம்பானி வீட்டில் உள்ள தனியார் கோயிலும் உள்ளது. இந்த குடும்பத்தினர் நாட்டில் அக்ஷர்தாம் கோயில்களையும், இங்கிலாந்தில் நீஸ்டனில் உள்ள போச்சசன்வாசி அக்ஷர் புருஷோத்தம சுவாமிநாராயணன் (பிஏபிஎஸ்) சன்ஸ்தா கோயிலையும் கட்டியுள்ளனர். புதன்கிழமை ‘பூமி பூஜைக்கு’ அழைக்கப்பட்ட ஏழு துறவிகளில் BAPS-இன் தலைவர் மஹந்த் சுவாமியும் ஒருவர்.
இந்த கோயில் நாகர் 'ஷைலி'யில் திட்டமிடப்பட்டுள்ளது (இது ஒரு கோவில் கட்டிடக்கலை பாணி. அதில் கருவறைக்கு மேல் கோயில் கோபுரம் கட்டப்பட்டுள்ளது. முக்கிய பாணியாக திராவிட கட்டடக் கலையாக இருக்கும் இதில் கோபுரங்களும் அடங்கும்), இது முதலில் இருந்ததை விட மிகப் பெரியதாக திட்டமிடப்பட்டுள்ளது.
கூடல் மண்டபத்தின் தாழ்வாரங்களை நீட்டிக்க மேலும் மூன்று கோபுரங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. ஒரு கோபுரம் முன் புறத்திலும் 2 கோபுரங்கள் பக்க வாட்டுகளிலும் சேர்க்கப்பட்டுள்ளன. தூண்களின் எண்ணிக்கை அசல் திட்டத்தில் 166ல் இருந்து 366 ஆக உயர்ந்துள்ளது. (தரை தளத்தில் 160 தூண்களும் முதல் தளத்தில் 132 தூண்களும் இரண்டாவது தளத்தில் 74 தூண்களும் இடம்பெறும்);
முதல் மாடியில் உள்ள ‘ராமர் தர்பார்’படிக்கட்டுகளின் அகலம் 6 அடியிலிருந்து 16 அடியாக விரிவாக்கப்பட்டுள்ளது. கோயிலின் உயரம் 141 அடியில் இருந்து 161 அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கோயிலின் நீளம் 280 அடியில் இருந்து 360 அடியாகவும், அகலம் 160 அடியில் இருந்து 235 ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கம் அதிக அளவிலான மக்களுக்கு இடம் தேவை என்றதால் இந்த விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின்படி, ஒவ்வொரு தூணிலும் 16 சிலைகள் இருக்கும். அதில் தசவதார சிலைகளும் சிவனின் அனைத்து அவதாரங்களும், சரஸ்வதி தேவியின் 12 அவதாரங்களும் இருக்கும்.
விஷ்ணுவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோவிலுக்கு சாஸ்திரங்களில் வழங்கப்பட்ட வடிவமைப்பிற்கு ஏற்ப, ராமர் கோயிலின் தனித்துவமான அம்சமாக கருவறை எண்கோண வடிவமாக இருக்கும்.
ராமர் கோயில் எழுப்பப்படும் தளம் ஒரு பொதுவான இந்து கோவிலின் நான்கு அம்சங்களைக் கொண்டிருக்கும். வராண்டா, நிருத்ய மண்டபம், கூடல் மண்டபம் கர்ப கிரஹம் ஆகியவை ஒரே அச்சில் ஒழுங்கமைக்கப்பட்டிருக்கும். அது அசல் திட்டம் 3 லட்சம் கன அடி வரை மணல் கற்களைப் பயன்படுத்தப்படும். மேலும், கூடுதலாக 3 லட்சம் கன அடி தேவைப்படும். இதற்கான கற்கள் ராஜஸ்தானின் பன்சி பஹார்பூரில் வெட்டப்படும்.
சோம்பூரர்கள் ஆரம்பத்தில் மூன்றரை ஆண்டுகளில் கட்டுமானப் பணிகள் நிறைவடையும் என்று மதிப்பிட்டிருந்தனர். ஆனால், தொற்றுநோய் அதை மேலும் 6-8 மாதங்களுக்கு பின்னுக்குத் தள்ளக்கூடும். வி.எச்.பி மூன்று ஒப்பந்தக்காரர்களுக்கு கோயிலைக் கட்டியெழுப்ப ஆணையிட்டது. அவர்கள், இப்போது எல் அண்ட் டி நிறுவனத்தால் மாற்றப்பட்டுள்ளனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.