இந்த வருடத்திற்கான பருவமழை துவங்குவதில் தாமதம் ஏற்பட்டது ஏன்?

பருவமழைக்கான ஏதுவான சூழல் சனிக்கிழமை காலையில் தான் உருவாகியது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

By: Updated: June 9, 2019, 08:55:11 AM

Southwest Monsoon Delay 2019 : இந்தியாவில் ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரையிலான 4 மாதங்களில் பெய்யும் மழை தான் இந்தியாவின் 70% தண்ணீர் தேவைகளை பூர்த்தி செய்கின்றது.

இந்தியாவில் பருவமழையின் துவக்கமானது கேரளத்தில் இருந்து தான் துவங்கும். ஜூன் 1ம் தேதியே பருவமழை தொடங்கிவிடுவது வழக்கமான ஒன்றாகும். ஆனால் ஆரம்பத்தில் இந்த மழையானது ஜூன் 6ம் தேதி தான் துவங்கும் என்று நான்கு நாட்கள் தாமதானது. பின்னர் 6ம் தேதியும் மழை துவங்கவில்லை. மாறாக ஜூன் 8ம் தேதியான நேற்றே பருவமழை ஆரம்பித்துள்ளது.

மே 10ம் தேதிக்குப் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக கேரளா மற்றும் லக்‌ஷதீப் பகுதிகளில் மழை பெய்யத் துவங்கும். மே10க்கும் பருவமழைக்கும் இடைப்பட்ட நாட்களில் 60% மாநிலத்தின் நீர் தேவையை மழை பூர்த்தி செய்துவிடுவது வழக்கம். வெப்பநிலை மற்றும் காற்று போன்ற இதர தேவையான சூழல் உருவாகவும் பருவமழை துவங்கும்.

அந்தமான் மற்றும் நிக்கோபர் தீவுகளில் பருவமழையானது மே 15 முதல் 20 தேதிக்குள் துவங்கும். இந்த முறை எந்த மாற்றமும் இன்றி இந்த பகுதிகளில் மழை பெய்யத்துவங்கிவிட்டது.  அரபிக்கடலோரப் பகுதியில் அமைந்திருக்கும் கேரளத்தில், பருவமழைக்கான ஏதுவான சூழல் சனிக்கிழமை காலையில் தான் உருவாகியது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

மேலும் படிக்க : தென்மேற்கு பருவமழை எதிரொலி : அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகத்துக்கு மழை

கேரளத்தில் பருவமழை துவங்க கால தாமதம் ஆனதால் தென்னிந்தியாவில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெறுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஆனால் இந்த காரணத்தால் இந்தியா முழுவதும் பருவமழை தாமதம் ஆகும் என்று கூறிவிட இயலாது. கேரளத்தில் துவங்கி மெதுவாக அப்படியா மேற்கு நோக்கி பருவமழை நகர ஆரம்பிக்கும்.  இதற்கு காற்றழுத்த தாழ்வு நிலை உள்ளிட்ட நிறைய காரணங்கள் மிக முக்கியமான தேவையாக இருக்கின்றன.

பருவமழை இந்தியாவின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் ஜூன் இறுதி அல்லது ஜூலை ஆரம்பத்தில் தான் பெய்யும் என்பதையும் தெளிவாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துவிட்டது. ஆனால் மத்திய மற்றும் தென்னிந்தியாவில் இதற்கு முன்பாகவே மழை பெய்யத் துவங்கிவிடும். முதல் மூன்று வாரங்களுக்குள் பெரும்பான்மையான பகுதிகளில் மழை பெய்யத்துவங்கிவிடும்.

கேரளாவில் மழை தாமதமானது நீர் பற்றாக்குறையை அதிகரிக்கும் சூழலை உருவாக்கியுள்ளது. இந்த பருவகாலத்தில் இந்திய முழுவதும் சுமார் 89 செ.மீ வரை மழை பதிவாகும். பல்வேறு இடங்களில் வெப்பச்சலனம் காரணமாக மழை பெய்வதும் உண்டு. இது பருவமழைக்கான தொடக்கத்தால் பாதிக்கப்படுவதும் இல்லை எந்தவிதமான பாதிப்புகளையும் ஏற்படுத்துவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Explained News by following us on Twitter and Facebook

Web Title:Southwest monsoon delay 2019 what it means for india

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X