Advertisment

சிறுநீரை குடிநீராக மாற்றும் விண்வெளி உடை வடிவமைப்பு: இது எப்படி வேலை செய்யும்?

டூன் என்ற அறிவியல் சீரிஸில் காட்டப்பட்ட 'ஸ்டில்சூட்'களால் ஈர்க்கப்பட்டு, புதிய ஸ்பேஸ்சூட் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது 5 நிமிடங்களுக்குள் சிறுநீரைச் சேகரித்து சுத்திகரிக்க செய்கிறது.

author-image
WebDesk
New Update
spa suit

விண்வெளி வீரர்கள் நீண்ட விண்வெளி நடைப் பயணங்களைச் செய்ய உதவும் வகையில் சிறுநீரை குடிநீராக மறுசுழற்சி செய்யக்கூடிய விண்வெளி உடையை விஞ்ஞானிகள் வடிவமைத்துள்ளனர்.

Advertisment

வியர்வை மற்றும் சிறுநீர் கழிப்பதன் மூலம் உடலின் ஈரப்பதத்தை உறிஞ்சி, அதை குடிநீராக மாற்றும் வகையில் முழு உடல் "ஸ்டில்சூட்" வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த சூட் டூன் என்ற அறிவியல் சீரிஸில் இருந்து ஈர்க்கப்பட்டு தயாரிக்கப்பட்டுள்ளது. 

விண்வெளி வீரர்களின் கழுத்தில் டியூப் இருக்கும். அதன் மூலம் அவர்கள் இந்த தண்ணீரை குடிக்கலாம். விண்வெளியில் நீண்ட காலம் அவர்கள் இருப்பதற்கு  உதவுகிறது.

கார்னெல் பல்கலைக்கழகத்தின் விண்வெளி மருத்துவம் மற்றும் கொள்கை ஆராய்ச்சியாளரும், புதிய விண்வெளி உடையின் இணை வடிவமைப்பாளருமான சோபியா எட்லின், "எனக்கு நினைவில் இருக்கும் வரை நான் டூன் தொடரின் ரசிகனாக இருந்தேன்" என்று சயின்ஸ் நியூஸிடம் கூறினார்.  "நிஜ வாழ்க்கையில் ஸ்டில்சூட்டை உருவாக்குவது எப்போதுமே எனக்கு ஒரு கனவாகவே இருந்தது." என்றார்.

விண்வெளி உடையின் வடிவமைப்பு வெள்ளிக்கிழமை (ஜூலை 12) ஃபிரான்டியர்ஸ் இன் ஸ்பேஸ் டெக்னாலஜி இதழால் வெளியிடப்பட்டது.

நாசாவின் ஆர்ட்டெமிஸ் திட்டத்திற்கு 2030 ஆம் ஆண்டுக்கு முன் இதைப் பயன்படுத்த முடியும் என்று சூட்-ன் வடிவமைப்பாளர்கள் நம்புகிறார்கள்,

ஆனால் முதலில், தற்போதைய விண்வெளி உடைகளின் வரம்புகள் என்ன?

தற்போதைய ஸ்பேஸ்சூட்களில் ஒரு லிட்டர் தண்ணீரை மட்டுமே கையாளக்கூடிய பைகள் உள்ளன. இது விண்வெளி வீரர்கள் நீண்ட கால சந்திர விண்வெளி நடைப்பயணங்களில் செல்வதைக் கட்டுப்படுத்துகிறது, இந்த நடைப் பயணங்கள் 10 மணிநேரம் நீடிக்கும், சில அவசரகாலத்தில் 24 மணிநேரம் வரை கூட நீடிக்கும் என்று எட்லின் தி கார்டியனிடம் கூறினார்.

விண்வெளி வீரர்களுக்கு அதிகபட்ச உறிஞ்சக்கூடிய ஆடை (MAG) - 1970 களில் இருந்து விண்வெளி உடைகளில் பயன்பாட்டில் உள்ள கழிவு மேலாண்மை அமைப்பிலும் சிக்கல்கள் உள்ளன. தற்போது உள்ள விண்வெளி உடை பற்றி பல புகார்கள் எழுந்துள்ளது. சுகாதராமின்மை, முக்கியமாக டயப்பராக இருக்கும் MAG சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகள் (UTIs) ஏற்படுவதாக சிலர் புகார் கூறியுள்ளனர்.

புதிய ஸ்பேஸ்சூட் எப்படி வேலை செய்யும்?

புதிய ஸ்பேஸ்சூட்டில் சிறுநீர் கழிக்க ஏதுவதாக அங்கு  சிலிகான் சேகரிப்பு கோப்பையை (பெண்கள் மற்றும் ஆண்களுக்கு வெவ்வேறு வடிவம் மற்றும் அளவு கொண்டது) வைக்கப்படும். கசிவு இல்லை என்பதை உறுதிப்படுத்த, கப் பல அடுக்கு நெகிழ்வான துணியால் செய்யப்பட்ட ஒரு உள்ளாடைக்குள் உள்ளது.

சிறுநீர் பகுதியில் பொருத்தப்படும் கப் ஒரு வேக்கம் பம்புடன் இணைக்கப்படும், இது விண்வெளி வீரர் சிறுநீர் கழிக்கத் தொடங்கியவுடன் தானாகவே இயங்கும். 

தி கார்டியன் அறிக்கையின்படி, " சிறுநீர் ஒருமுறை சேகரிக்கப்பட்ட பிறகு, அது சிறுநீர் வடிகட்டுதல் முறைக்கு மாற்றப்படுகிறது, அங்கு அது 87% திறனுடன் சுத்தமான குடிநீராக மறுசுழற்சி செய்யப்படுகிறது" என்று கூறப்பட்டுள்ளது.

சிறுநீரை வடிகட்டுதல் என்பது இரண்டு படிகள் ஆகும். முதலில், reverse osmosis செய்யப்படும். அதன் பின்,  ஒரு பம்ப் பயன்படுத்தி இந்த தண்ணீரில் இருந்து உப்பு அகற்றப்படுகிறது. சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை உட்கொள்வதற்காக உள்ள-சூட் பானம் பையில் செலுத்துவதற்கு முன், அது எலக்ட்ரோலைட்டுகளில் செறிவூட்டப்படுகிறது. 

ஆங்கிலத்தில் படிக்க:   Scientists design a spacesuit that can turn urine into drinking water: How does it work?

500 மில்லி சிறுநீரை சேகரித்து சுத்திகரிப்பதற்கான முழு செயல்முறையும் ஐந்து நிமிடங்கள் மட்டுமே ஆகும் என்று புதிய விண்வெளி உடையை உருவாக்கியவர்கள் தெரிவிக்கின்றனர். இந்த அமைப்பு சுமார் 8 கிலோ எடையும், 38cm க்கு 23cm x 23cm அளவையும் கொண்டுள்ளது, இது விண்வெளி வீரர்கள் ஸ்பேஸ்சூட்டின் பின்புறம் பொருத்தி எடுத்துச் செல்ல கச்சிதமாக மற்றும் இலகுவாக இருக்கும் என நிபுணர்கள் கூறியுள்ளனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment