ஸ்பெக்ட்ரம் விற்பனைக்கு NCLAT விதிக்கும் கட்டுப்பாடுகள் என்ன?

Spectrum can be transferred what nclat order: ஸ்பெக்ட்ரம் அலைகற்றையை வைத்திருக்கும் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் திவாலாகும் நிலையில் இருக்கும்போது, அதை அந்த தொலைதொடர்பு நிறுவனம் இன்னொரு நிறுவனத்திற்கு விற்கவோ அல்லது மாற்றவோ முடியும்

ஸ்பெக்ட்ரம் அலைகற்றையை வைத்திருக்கும் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் திவாலாகும் நிலையில் இருக்கும்போது, அதை அந்த தொலைதொடர்பு நிறுவனம் இன்னொரு நிறுவனத்திற்கு விற்கவோ அல்லது மாற்றவோ முடியும். இருப்பினும் அரசாங்கத்தின் நிலுவைத் தொகை தொடர்பாக கூறப்பட்ட சொத்துகள் க்ளியராக இருக்க வேண்டும் என்று தேசிய நிறுவனங்கள் சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயம் (என்.சி.எல்.ஏ.டி) செவ்வாய் கிழமை அன்று  தீர்ப்பளித்துள்ளது.

ஸ்பெக்ட்ரம் வர்த்தகம் மற்றும் உரிமையின் பல்வேறு அம்சங்களில் NCLAT இன் கண்டுபிடிப்புகள் என்ன?

உச்சநீதிமன்றத்தின் செப்டம்பர் உத்தரவின்படி, என்.சி.எல்.ஏ.டி முக்கியமாக மூன்று அம்சங்களை தீர்மானிக்க வேண்டியிருந்தது, அவை, ஸ்பெக்ட்ரம் விதிகளின் கீழ் திவால் நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படலாமா, ஸ்பெக்ட்ரம் விற்பனையில் இருந்தால் தொலைத் தொடர்பு நிறுவனத்தால் எவ்வாறு பணம் செலுத்த முடியும், ஸ்பெக்ட்ரம் விற்பனையாளர் மற்றும் வாங்குபவரின் பொறுப்புகள் எப்படி தீர்மானிக்கப்படும்.

ஸ்பெக்ட்ரம் திவால்தன்மைக்கு உட்படுத்தப்படலாமா என்ற முதல் அம்சத்தில், ஸ்பெக்ட்ரம் தொலைத் தொடர்பு நிறுவனத்தின் ஒரு அருவமான சொத்து மற்றும் திவால் அல்லது பணப்புழக்க நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படலாம் என்றாலும், வாங்குபவர் அல்லது ஸ்பெக்ட்ரம் விற்பனையாளர் தொலைத்தொடர்பு துறையின் (DoT) அனைத்து நிலுவைத் தொகையையும் நீக்கியிருக்க வேண்டும்.

இது, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன், வீடியோகான், மற்றும் ஏர்செல் ஆகிய மூன்று தொலைத்தொடர்பு நிறுவனங்களின் திவாலாகும் செயல்முறைக்கு சிக்கல்களை உருவாக்கும் என்று வல்லுநர்கள் தெரிவித்தனர். ஸ்பெக்ட்ரம் வாங்கப்படுவதற்கு முன் விற்கும் நிறுவனத்தின் நிலுவைத் தொகைகளை நீக்கியிருக்க வேண்டும் என்ற விதி இவர்களுக்கு சிக்கலை ஏற்படுத்தும்.

தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு மட்டுமே ஸ்பெக்ட்ரம் பயன்படுத்த உரிமை உண்டு என்றும் அவை அவர்களுக்கு மட்டுமே சொந்தமானது இல்லை என்றும் என்.சி.எல்.ஏ.டி கருதியுள்ளதால், இது தொலை தொடர்பு நிறுவனங்களுக்கு கடன் வழங்குபவர்களுக்கு அந்த ஸ்பெக்ட்ரம் மீது எந்தவொரு கட்டணத்தையும் அல்லது உரிமைகோரலையும் உருவாக்குவதைத் தடுக்கிறது. இதன் பொருள் என்னவென்றால், DoT இந்த திட்டங்களில் கடன் வழங்குபவராக இருந்தபோதிலும், எந்தவொரு வருங்கால ஏலதாரரிடமிருந்தும் பணம் பெறுவதில் முன்னுரிமை பெறும், ஏனெனில் அந்த நிறுவனங்கள் செலுத்த வேண்டிய சட்டரீதியான நிலுவைத் தொகை கார்ப்பரேட் கடன் வழங்குபவர் அல்லது ஏலதாரர்களால் அகற்றப்பட வேண்டும்.

ஸ்பெக்ட்ரம் வர்த்தகம் மற்றும் வாங்குபவர்கள் மற்றும் விற்பனையாளர்களின் பொறுப்பு குறித்து என்.சி.எல்.ஏ.டி என்ன கூறியது?

என்.சி.எல்.ஏ.டி தீர்ப்பளித்த ஒரு முக்கியமான அம்சம் என்னவென்றால், ஸ்பெக்ட்ரம் ஒரு பற்றாக்குறை இயற்கை வளமாக இருப்பதால், அதை அனைத்து உரிமதாரர்களும் உகந்ததாகப் பயன்படுத்த வேண்டும். எனவே, மேல்முறையீட்டு தீர்ப்பாயம், நிலுவைத் தொகையை சரி செய்யாவிட்டால், எந்தவொரு தொலைத் தொடர்பு நிறுவனமும் அல்லது உரிமதாரர்களும் ஸ்பெக்ட்ரம்ஐ பயன்படுத்த முடியாது, என்று கூறியுள்ளது.

மேலும், நிலுவையில் உள்ள நிலுவைத் தொகையைத் தவிர்ப்பதற்காக “தவறான நோக்கத்துடன்”,  திவால்நிலைக் குறியீட்டின் 10 வது பிரிவின் கீழ் தங்களுக்கு எதிராக திவால்தன்மையைத் தூண்ட முயற்சிக்கும் எந்த தொலைத் தொடர்பு நிறுவனமும் அவ்வாறு செய்ய அனுமதிக்கப்படாது என்றும் NCLAT கூறியுள்ளது.

இத்தகைய திவால்தன்மை செயல்முறை, தூண்டப்பட்டால், உரிமக் கட்டணம் மற்றும் ஐபிசியின் விதிகளின்படி ஸ்பெக்ட்ரம் கொடுப்பனவுகளை நிறுத்தி வைக்க முடியும், இதனால் உரிமதாரர் அந்த நிலுவைத் தொகையிலிருந்து தப்பிக்க முடியாது.

இதன்படி, செயல்பாட்டு கடன் வழங்குநர்கள் ஐபிசியின் கீழ் நிதிக் கடனாளர்களுக்குக் கீழே வைக்கப்படுவதால், செயல்பாட்டு கடன் வழங்குநராக இருக்கும் DoT சொத்துக்கான மிகக் குறைந்த மதிப்பைப் பெறும் என்று மூன்று உறுப்பினர் பெஞ்ச் தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.

எனவே, தொலைத் தொடர்பு நிறுவனங்கள்  “கார்ப்பரேட் திவாலாகும் செயல்முறையை (சிஐஆர்பி) தூண்டுவதன் மூலம் அவற்றின் பொறுப்புகளில் இருந்து வெளியேற அனுமதிக்க முடியாது”.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Explained news here. You can also read all the Explained news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Spectrum can be transferred what nclat order

Next Story
உள்நாட்டு இயற்கை எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க ஓ.என்.ஜி.சி எடுத்திருக்கும் முடிவு சரியா?
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com