கடந்த ஞாயிற்றுக்கிழமை மும்பையில் இருந்து மேற்கு வங்கத்தின் துர்காபூருக்கு சென்ற ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் குறைந்தது 40 பயணிகள் காயமடைந்தனர். அவர்களில், 12 பேர் படுகாயமடைந்தனர். போயிங் 737-800 விமானம், தரையிற்ங்கும் போது வலுவான புயலில் சிக்கிக்கொண்டது.
இந்தியாவின் விமானப் பாதுகாப்பு ஒழுங்குமுறை ஆணையம் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ), இச்சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள ஒழுங்குமுறைக் குழுவை நியமித்துள்ளது.
என்ன நடந்தது?
ஞாயிற்றுக்கிழமை மாலை மும்பையில் இருந்து மேற்கு வங்காளத்தில் உள்ள துர்காபூருக்குச் செல்லும் ஸ்பைஸ்ஜெட் விமானம் வலுவான புயலில் சிக்கிக்கொண்டது. அதில், பயணித்த 12 பேர் படுகாயமடைந்தனர். மாலை 5 மணிக்கு புறப்பட்ட விமானம், சுமார் 2 மணி நேரம் பயணித்திற்குப் பிறகு தரையிறங்கும் போது புயலில் சிக்கிக்கொண்டது. சுமார் 189 இருக்கை கொண்ட விமானம், இரவு 7.15 மணிக்கு தரையிறக்கப்பட்டது. காயமடைந்தவர்களுக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. பயணிகள் மட்டுமின்றி கேபின் குழுவினரும் பாதிப்படைந்தனர். தலை மற்றும் முதுகில் பயணிகளுக்கு காயம் ஏற்பட்டது.
விமானம் குலுங்கினால் என்ன நடக்கும்?
குறைந்தது ஏழு வகையான நிலைகளில், விமானம் குலுங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளது. ஒன்று இடியுடன் கூடிய மழை அல்லது அதிக மேகம் வழியாக பறக்கும் போது, மோசமான வானிலையால் விமானம் குலுங்கும். மற்றொருன்று வானம் கிளிரியாக இருக்கும் போது, காற்று அல்லது ஜெட் ஸ்ட்ரீம்களால் குலுங்க வாய்ப்புள்ளது. குலுங்குகிறது என்பது விமானம் பறக்கையில் அதன் இறக்கையில் சீரற்ற முறையில் காற்றோட்டம் இருக்கும். இது விமானம் செங்குத்து வடிவில் பறந்திட வழிவகுக்கும். மற்றொன்று, வேக் டர்புலன்ஸ். இது வளிமண்டலத்தில் ஏற்படும் ஒரு இடையூறு ஆகும். விமானம் காற்றின் வழியாக செல்லும் போது பின்னால் உருவாகிறது.
விமானம் குலுங்கினால் ஆபத்தா?
இது குலுங்கும் போது அதன் தன்மை மற்றும் தீவிரத்தைப் பொறுத்தது. விமானங்கள் சில வகையான குலுங்குலை சந்திக்கும். ஆனால், அதனை சமாளிக்க விமானிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டிருக்கும். அதே சமயம், பல நேரங்களில் விமான குலுங்குவதை நவீன பைலட்களாலும் கட்டுப்படுத்த முடியாமல் போன நிகழ்வுகளும் உள்ளன. அப்படியான சம்பவங்களில், தீவிரமான குலுங்குவதல் காரணம் விமானம் விபத்தை சந்தித்திருக்கிறது. சரியான பயிற்சி இல்லாமை, வானிலை அல்லது காற்று தொடர்பான தகவல்களை சரியாக பகிராதது போன்றவை விபத்துக்குள்ளாக காரணமாக அமைந்துள்ளது.
ஸ்பைஸ்ஜெட் சம்பவத்தின் விசாரணை எதில் கவனம் செலுத்தும்?
பொதுவாக, இச்சம்பவத்தால் ஏன் பயணிகளுக்கு காயம் ஏற்பட்டது என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளப்படும். அதில், விமானம் குலுங்கிய சமயத்தில் எதிர்கொண்ட காலநிலை அல்லது விமானிகள் புயலை எதிர்கொள்ள தயாராக இல்லாததா அல்லது விமானம் குலுங்குவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பது குறித்து கேபின் குழுவிட்டு முன்பே தெரிவிக்க தவறிவிட்டார்களா என்பது குறித்து விசாரிக்கப்படும்.
2019 ஆம் ஆண்டு சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் வழங்கிய பயணிகள் உரிமைச் சாசனத்தின்படி, உள்நாட்டுப் பயணத்திற்காக விமானத்தில் பயணித்தவர்களுக்கு மரணம் அல்லது உடலில் காயம் ஏற்பட்டால், விமான நிறுவனம் ரூ.20 லட்சம் வரை செலுத்த வேண்டியிருக்கும் என்று கூறுகிறது.
விமானம் குலுங்கும் சமயத்தில் பயணிகள் என்ன செய்ய வேண்டும்?
அமெரிக்க ஃபெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் (FAA) படி, பயணிகள் இருக்கை பெல்ட் அணிந்திருப்பது மூலம், விமானம் எப்போது குலுங்கலை சந்தித்தாலும் காயம் ஏற்படாமல் தடுக்கலாம். விமானப் பணிப்பெண்கள் வழங்கும் அறிவுறுத்தல்களை பயணிகள் பின்பற்ற வேண்டும். விமான பயணத்தை மேற்கொள்ளும்போதே, பாதுகாப்பு தொடர்பான அட்டையை படிக்க வேண்டும். எல்லா நேரங்களிலும் சீட் பெல்ட் அணியுங்கள். உங்கள் குழந்தை 2 வயதுக்கும் குறைவாக இருக்கும் பட்சத்தில், அங்கீகரிக்கப்பட்ட சீட் பெல்ட் அல்லது சாதனத்தை பயன்படுத்த வேண்டும்.
குலுங்கும் நிலையை விமான நிறுவனங்கள் எப்படி தவிர்க்கலாம்?
தகவல் தொடர்பு சேனல்களை முழுநேரம் திறந்து வைப்பதன் மூலம் கேரியர்கள் அனுப்பும் நடைமுறைகள் அதாவது வானிலையை குலுங்குவதற்கான வாய்ப்பு, பைலட் மற்றும் அனுப்பியவர் இடையே நிகழ்நேர தகவல் பகிர்வு, யிற்சி மூலம் விமான கேரியரின் தவிர்ப்பு கொள்கை, ஆட்டோமேஷன், டேட்டா டிஸ்பிளே, வளிமண்டல மாதிரியாக்கம் மற்றும் தரவுக் காட்சிகள் போன்றவற்றை மேம்படுத்த வேண்டும் என்று FAA பரிந்துரைக்கிறது.
விமானம் குலுங்குவதால் ஏற்படும் காயங்களை தவிர்க்கவும், விமானப் பணிப்பெண்ணின் தனிப்பட்ட பாதுகாப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதற்கும், தகவல் தொடர்பு மற்றும் ஒருங்கிணைப்பை ஊக்குவிப்பதற்கும், தரவுகளைச் சேகரித்தும், விமான குலுங்குதல் சந்திப்புகளும், காயங்களை மதிப்பாய்வு செய்வது தொடர்பான நடைமுறைகள் மற்றும் பயிற்சியைப் பயன்படுத்தவும் பரிந்துரைக்கிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil