சிலந்திகள் உறக்கநிலையில் இருக்கும்போது மனிதர்களைப் போலவே கனவு காணலாம் என்பதற்கான ஆதாரங்களை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
ஜெர்மனியில் உள்ள கான்ஸ்டான்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நடத்தை சூழலியல் நிபுணர் டேனிலா சி. ரோஸ்லர், தனது சக ஊழியர்களுடன் சேர்ந்து குதிக்கும் பேபி சிலந்திகளை (Evarcha arcuata) அகச்சிவப்பு கேமராக்கள் மூலம் இரவு முழுவதும் பதிவு செய்தார். அப்போது அவை கால்களை அசைப்பது. திடீரென விழிப்பது, மற்றும் கண் அசைவு போன்ற (leg curling, twitching and eye movement) மனித தூக்க சுழற்சிகளைப் போன்ற பண்புகளை வெளிப்படுத்தியதைக் கண்டறிந்தார்.
குதிக்கும் சிலந்திகள்’ மனிதர்களும் பிற முதுகெலும்புகளும் அனுபவிக்கும் "REM தூக்கம் போன்ற நிலையை" அனுபவிப்பதாக, ஆகஸ்ட் 8 அன்று அமெரிக்காவின் தேசிய அறிவியல் அகாடமி ஆஃப் சயின்ஸ் (PNAS) இதழில் வெளியிடப்பட்ட தங்கள் ஆய்வில் ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.
REM அல்லது ரேபிட் ஐ மூவ்மென்ட் தூக்கம் என்பது கண்களின் அசைவு மற்றும் மூளையின் செயல்பாடு அதிகரிப்பதன் மூலம் வகைப்படுத்தப்படுகிறது.
அப்போது உடலின் தசைகள் செயலிழக்கத் தொடங்குகின்றன, பெரும்பாலான உடல் இயக்கங்களை நசுக்குகின்றன, ஆனால் கைகால்கள் சிறிது படபடக்க அனுமதிக்கின்றன.
பெரும்பாலான மக்கள் கனவு காணும் கட்டம் இதுவாகும், மேலும் கற்றல் மற்றும் நினைவகத்தைத் தக்கவைப்பதில் இது ஒரு முக்கிய பங்கு வகிப்பதாக கருதப்படுகிறது.
REM தூக்கத்தின் மிகவும் குறிப்பிடத்தக்க அறிகுறி கண்களின் இயக்கம் ஆகும், ஆனால் பூச்சிகள் மற்றும் பெரும்பாலான நிலப்பரப்பு ஆர்த்ரோபாட்களுக்கு (தேள், பூரான், சிலந்தி, தட்டான்பூச்சி, நண்டு) அசையும் கண்கள் இல்லாததால், விலங்கு இராச்சியத்தில் இது எவ்வளவு பரவலாக உள்ளது என்பதை ஆராய்ச்சியாளர்கள் தீர்மானிக்க கடினமாக உள்ளது.
குதிக்கும் சிலந்திகளின்’ தலையில் எட்டு கண்கள் உள்ளன, அவை நீண்ட குழாய்களைக் கொண்டுள்ளன, அதன் விழித்திரைகள் அவற்றின் முதன்மை கண்களின் பின்புறத்தில் நகர அனுமதிக்கின்றன.
குழந்தை சிலந்திகள் அவற்றின் வெளிப்புற எலும்புக்கூடுகளில் தற்காலிகமாக நிறமியைக் கொண்டிருக்கவில்லை, இது விஞ்ஞானிகளை உள்ளே உற்றுப் பார்க்கவும், விழித்திரைக் குழாய்களைக் கவனிக்கவும் அனுமதிக்கிறது.
REM தூக்கத்தின் போது ஏற்படும் கண் அசைவுகள், கனவு காட்சிகளின் பிரதிபலிப்பு என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர். ஆதாரம்: PNAS
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“