கொரோனா வைரஸ் ஊரடங்கு காலத்தில், மருத்துவமனையில் இருக்கும் பொது கழிவறையை நாம் பயன்படுத்தலாமா? கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட ஒருவர் பயன்படுத்தும் கழிவறையை நாம் பகிர்ந்து கொள்ளலாமா? கொரோனா தொற்றல் பாதிக்கப்பட்டவரின் கழிவு (அ) மலம் மூலம் தொற்று ஏற்படக்கூடிய ஆபத்து உள்ளதா? போன்ற கேள்விகள் நம் மனதில் எழுந்திருக்கலாம்.
சுருக்கமான பதில்: அறிவியில் கோட்பாட்டில் இது சாத்தியம் என்றாலும், நடைமுறையில் அவ்வளவு வாய்ப்பில்லை.
கோவிட்- 19 (அ) கொரோனா வைரஸ் நோயை ஏற்படுத்தும் SARS-CoV2 வைரஸ் தொடர்பான ஆய்வகங்கள், சில சந்தர்ப்பங்களில் இது சாத்தியம் என்று வாதாடுகின்றன. இந்திய சுகாதார அமைச்சகத்தின் ‘கொரோன வைரஸ் – அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்’ என்ற விளக்க குறிப்பில்,மனித கழிவுகள் வழியாக கொரோனா வைரஸ் பரவுவது இந்த பெருந்தோற்றின் முக்கிய அம்சம் இல்லை என்று குறிப்பிடப்பட்டிருந்தது. பாதிக்கப்பட்ட நபர் இருமல் அல்லது தும்மிலின் போது வெளிவரும் நீர்த்துளிகள் மூலமாக கொரோனா வைரஸ் முதன்மையாக பரவுகிறது. வைரஸ் பரவியிருக்கும் ஒரு மேற்பரப்பை நாம் தொடுவதால் (பின், நமது கை, மூக்கைத் தொடுகிறோம்) வரும் பரவலை விட, நீர்த்துளிகளின் வழியே பரவுவது மிகவும் பொதுவானது என்றும் தெரிவித்தது.
சில, கொரோனா வைரஸ் நோயாளிகளின் கழிவுகளில் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டதாக அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் (சி.டி.சி) குறிப்பிடுகிறது. இருப்பினும், மலத்தில் உள்ள வைரஸின் அளவு என்ன? (அ) மலத்தில் உள்ள வைரஸுக்கு தொற்றை பரப்பும் தன்மை உள்ளதா? போன்ற கேள்விகளுக்கு தெளிவான பதில் இல்லை. இதுநாள் வரையில், மனிதக் கழிவுகள் மூலம் கொரோனா வைரஸ் தொற்று பரவியதற்கான சாத்தியக்கூறுகள் உறுதிப்படுத்தப்படவில்லை. மேலும் , முந்தைய கொரோனா வைரஸ்கள் (சார்ஸ் மற்றும் மெர்ஸ்) நோய்ப் பரவல் காலத்தில் பெற்ற தரவுகளின் அடிப்படையில், ஆபத்து குறைவாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது …
ஆராய்ச்சிகள் தேவை: ஒருவேளை, வெளியேற்றப்படும் மலத்தில் கொரோனா வைரஸ் கிருமிகள் இருந்தாலும், தண்ணீரை ஃப்ளஷ் செய்வதன் மூலம் கிருமிகள் அப்புறப்படுத்தப் படலாம் என்று தோன்றுவது இயற்கை தான். ஆனால், இங்கு தான் “கழிப்பறைத் துகள்கள்” (toilet plumes) பற்றிய பேச்சு எழுகிறது. நாம் கழிப்பறையை ஃப்ளஷி செய்வதினால் (தண்ணீரின் சுழற்சி வேகம் முக்கிய காரணி), சில நுண்ணிய துகள்கள் உருவாக்கப்பட்டு, காற்றில் பரப்பப்படுகின்றன. ஆராய்ச்சியாளர்கள், கடந்த பல ஆண்டுகளாக கழிப்பறை துகள்கள் பற்றியும், அவை கழிப்பறை இருக்கையில் குடியேறி, எப்படி பிறருக்கு நோய் தொற்றை உருவாக்குகின்றன என்பது குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.
2013 ஆம் ஆண்டில் அமெரிக்கன் ஜர்னல் ஆஃப் இன்ஃபெக்ஷன் கன்ட்ரோல் எனும் நாளிதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வுக் கட்டுரையில், ஃப்ளஷிங் செய்யும் போது, அடுத்தடுத்து பயன்படுத்தும் மக்களுக்கு, நோய் தொற்றை பரப்பும் கழிவறை துகள்கள் (ஏரோசோல்கள்) கணிசமான அளவில் உற்பத்தி செய்யப்படலாம் என்பதை கண்டறிந்தனர். எந்தவொரு ஆய்வும், கழிவறை துகள்கள் தொடர்பான நோய்ப் பரவலை முழுமையாக நிரூபிக்கவில்லை என்றாலும், சாத்தியக் கூறுகளை இதுவரையில் யாரும் மறுக்கவில்லை. கூடுதல் ஆராய்ச்சி தேவை என்பதை இந்த கட்டுரை வலியுறுத்தியது.
ஃப்ளஷிங் செய்தவுடன் கழிவறையை மூடிவைப்பது நல்ல சுகாதாரமாக கருதப்படுகிறது. அவ்வாறு செய்வதினால், கழிவறை துகள்கள் காற்றில் தப்பிப்பது தடுக்கப்படுகின்றன. கழிவறையை வேறொருவர் பயன்படுத்தியதற்கு பின்பு சில நிமிடங்கள் காத்திருந்து பயன்படுத்துவது அர்த்தமுள்ளதாக கருதப்படுகிறது .
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Web Title:%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%95%e0%af%8d %e0%ae%95%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%b5%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d %e0%ae%ae%e0%af%82%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d %e0%ae%95%e0%af%8a