worldcup 2023 | bangladesh-vs-srilanka | sports-explained: 13-வது ஒருநாள் (50 ஓவர்) உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று (திங்கள்கிழமை) பிற்பகல் 2 மணிக்கு டெல்லியில் தொடங்கிய 38வது லீக் ஆட்டத்தில் வங்கதேசம் - இலங்கை அணிகள் மோதி வருகின்றன.
இந்தப் போட்டியில் இலங்கை அணியின் சமரவிக்ரமா-வின் விக்கெட்டுக்குப் பிறகு பேட்டிங் செய்ய களமிறங்கிய ஏஞ்சலோ மேத்யூஸ் 'டைம் அவுட்' முறையில் ஆட்டமிழந்ததாக அறிவிக்கப்பட்டார். பேட்டிங் செய்ய களம் புகுந்த மேத்யூஸ், கிரீசை தொட்டு கும்பிட்டு விட்ட தனது ஹெல்மெட்டை சரிசெய்தார். ஆனால், ஹெல்மெட் இறுக்க பயன்படுத்தப்படும் பட்டை கீழே அவிழ்ந்து விழுந்தது.
அதனால், பேட்டிங் செய்யாத மேத்யூஸ் டக்-அவுட்டில் உள்ள தனது அணியினரை அழைத்து வேறு ஹெல்மெட் எடுத்து வர செல்லி சைகை காட்டினார். அவர்கள் எடுத்து வர கால தாமதம் ஆனா நிலையில், பேட்டிங் செய்யாமல் அங்கேயே நின்று கொண்டிருந்தார். அதனால் ஆட்டம் 2 நிமிடங்களுக்கு மேல் தடை பட்டது.
ஆங்கிலத்தில் படிக்கவும்: Sri Lanka’s batter Angelo Mathews timed out: What is the rule?
அப்போது, வங்கதேச அணியின் கேப்டன் ஷாகிப் அல் ஹசன் கள நடுவர்களிடம் 'டைம் - அவுட்' அவுட் கொடுக்க அப்பீல் செய்தார். நடுவர்களும் கால தாமதம் கருதி டைம் அவுட் முறையில் மேத்யூஸ் அவுட் என அறிவித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த மேத்யூஸ் ஒருபந்து கூட விளையாடாமல் (0) ரன்னில் அவுட் ஆனார். 'டைம் - அவுட்' முறையில் ஒருவருக்கு அவுட் கொடுக்கப்படுவது கிரிக்கெட் வரலாற்றில் இதுவே முதல் முறையாகும்.
'டைம் - அவுட்' விதி சொல்வது என்ன?
ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பை 2023 விளையாடும் நிலைமைகளின்படி, “ஒரு விக்கெட் விழுந்த பிறகு அல்லது ஒரு பேட்டர் ஓய்வுக்குச் செல்வதாக அறிவித்த பிறகு, களத்திற்கு உள்ளே வரும் பேட்ஸ்மேன் அல்லது அவருக்கு எதிர்முனையில் இருக்கும் பேட்ஸ்மேன் அடுத்த 2 நிமிடங்களில் பந்தை எதிர்கொள்ள தயாராக இருக்கவேண்டும்." பேட்ஸ்மேன் அவ்வாறு செய்யத் தவறினால், அவர் அவுட்டாகக் கருதப்படுவார்."
இந்த விக்கெட்டு பந்து வீச்சாளர் வீழ்த்தியதாக அறிவிக்கப்படுமா?
இல்லை, விளையாடும் நிலைமைகளின்படி பந்துவீச்சாளர் விக்கெட்டை கைப்பற்றியதாக அறிவிக்கப்பட மாட்டார்.
நேரம் முடிவதற்கு அருகில் வேறு எந்த வீரர் களத்திற்குள் வந்துள்ளார்?
2007 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்கா-இந்தியா கேப்டவுன் டெஸ்ட் போட்டியில், அப்போதைய இந்திய கேப்டன் சவுரவ் கங்குலி டைம் - அவுட்டை நெருங்கினார் என்று விஸ்டன் இந்தியா அறிக்கை தெரிவித்துள்ளது.
ஆட்டத்தின் இரண்டாவது இன்னிங்ஸின் போது, இரண்டாவது ஓவரின் இரண்டாவது பந்தில் இந்தியா தனது தொடக்க பேட்ஸ்மேன்கள் இருவரையும் இழந்தது. வழக்கமான 4-வது இடத்தில் இருக்கும் சச்சின் டெண்டுல்கரால், களத்தில் நுழைய முடியவில்லை. ஏனென்றால், அவர் "மூன்றாவது நாளில் தென் ஆப்பிரிக்காவின் இன்னிங்ஸின் போது ஆடுகளத்தை விட்டு வெளியேறிய நேரம் காரணமாக அவரை உள்ளே விளையாட அனுமதிக்கவில்லை" என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இருப்பினும், இந்திய அணிக்கு இந்த உண்மை தெரியவில்லை. ஆன்-பீல்ட் அம்பயர் டேரில் ஹார்பர், டெண்டுல்கர் களத்தில் நுழைய அனுமதிக்கப்படவில்லை என்பதை இந்திய டிரஸ்ஸிங் அறைக்கு நினைவூட்டுமாறு டிவி நடுவர் மரியாஸ் எராஸ்மஸிடம் கேட்டிருந்தார். ஆனால் தகவல் எப்படியோ பெறப்படவில்லை.
இந்த நிலைமை குழப்பத்திற்கு வழிவகுத்தது, மேலும் அவரது ட்ராக்-சூட்டில் இருந்த கங்குலியை பேட்டிங் செய்ய களம் புகும்படி கூறப்பட்டது. அவர் மைதானத்தை அடையும் போது, 6 நிமிடங்கள் கழிந்திருந்தன. அப்பீல் செய்ய வேண்டாம் என்று முடிவு செய்த தென் ஆப்பிரிக்கா அணிக்கு நடுவர்கள் சம்பவத்தின் "விதிவிலக்கான சூழ்நிலைகளை" விளக்கினர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“