இலங்கையின் தேசிய ‘உணவு அவசரநிலை’க்கு வழிவகுத்த மோசமான பொருளாதாரம்

உணவு மாஃபியாவால் உணவுப் பொருட்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களை பதுக்கி வைப்பதை தடுக்க அவசரநிலை தேவை என்று இலங்கை அரசாங்கம் கூறியது. ஆனால், இலங்கை அரசு தவறான நம்பிக்கையில் இருப்பதாக எதிர்க்கட்சிகள் தெரிவித்தன.

Sri Lankas national food emergency, Sri Lankas food emergency, sri lanka debt, sri lanka burden, இலங்கையின் தேசிய உணவு அவசரநிலை, இலங்கையின் மோசமான பொருளாதாரம், இலங்கை, sri lanka, sri lanka food emergency reason

இலங்கை நாடாளுமன்றம் அந்நாட்டின் அதிபர் கோட்டாபய ராஜபக்சேவால் ஆகஸ்ட் 30ம் தேதி அறிவிக்கப்பட்ட தேசிய அவசரநிலைக்கு திங்கள்கிழமை (செப்டம்பர் 6) ஒப்புதல் அளித்தது.

“உணவு மாஃபியாவால் உணவுப் பொருட்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களை பதுக்கி வைப்பதை சோதனை செய்வதற்காக இந்த அவசரநிலை தேவைப்படுகிறது என்று இலங்கை அரசாங்கம் கூறியுள்ளது. ஆனால், எதிர்க்கட்சிகள் இது தவறான நம்பிக்கையில், குடிமக்களின் அடிப்படை உரிமைகளை மேலும் கட்டுப்படுத்துதல் மற்றும் சர்வாதிகாரத்தின் திசையில் நகர்த்தும் உள்நோக்கத்துடன் இந்த அவசரநிலை அறிவிக்கப்படுகிறது என்கிறார்கள்.

இந்த அவசரநிலை இலங்கையின் உணவு நெருக்கடியின் நிச்சயமற்ற தன்மையை அதிகரித்துள்ளது, இது ஒரு முழுமையான மோசமான எல்லா அம்சங்களையும் கொண்டுள்ளது.

கடன், அந்நிய செலாவணி நெருக்கடி, பணவீக்கம்

இலங்கை பெரும் வெளிநாட்டு கடன் சுமையால் வளைந்துள்ளது. அந்நிய செலாவணி கையிருப்பு மிகவும் குறைவாக இருப்பதால் இந்த கடன்களை திருப்பிச் செலுத்த முடியவில்லை.

2019 ஈஸ்டர் தாக்குதலுக்குப் பிறகு சுற்றுலாத் துறை அழிக்கப்பட்டதால், தொற்றுநோய் வருவதற்கு முன்பே இலங்கை அதன் சிறந்த அந்நிய செலாவணிகளில் ஒன்றை இழந்தது.

தேயிலை மற்றும் ஆடைத் தொழில்களும் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதால் அது ஏற்றுமதியை பாதிக்கிறது.

2020ம் ஆண்டில் பணம் அனுப்புவது அதிகரித்தது, ஆனால் இலங்கையை அதன் நெருக்கடியிலிருந்து வெளியேற்ற போதுமானதாக இல்லை. ஜூலை மாத இறுதியில், நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு 2.7 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது. அதே நேரத்தில் அது சுமார் 4 பில்லியன் டாலர் வெளிநாட்டு கடன்களை திருப்பிச் செலுத்த வேண்டி இருந்தது.

இந்தியாவுடன் எதிர்பார்க்கப்படும் 400 மில்லியன் டாலர் நிதி பரிமாற்றம் இன்னும் நடைமுறைக்கு வரவில்லை. மார்ச் மாதத்தில், இலங்கை சீனாவிடம் இருந்து 1.5 பில்லியன் டாலர் பணப் பரிமாற்ற ஒப்பந்தத்தைப் பெற்றது. கடந்த மாதம், வங்களாதேசம் 250 மில்லியன் டாலர் கடன் பரிமாற்ற ஒப்பந்தத்தின் முதல் தவணையாக 50 மில்லியன் டாலர்களை வழங்கியது.

நாணய பரிமாற்றம் என்பது உள்ளூர் பணத்தில் வட்டியுடன் திருப்பிச் செலுத்துவதற்கான கடன் ஒப்பந்தமாகும். குறைந்த அந்நிய செலாவணி கையிருப்பு என்பது கடந்த காலத்தில் பயன்படுத்தப்பட்ட அளவுக்கு இலங்கையால் இறக்குமதி செய்ய முடியவில்லை என்பதாகும்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில், விலைமதிப்பற்ற அந்நியச் செலாவணியைச் சேமிக்கும் முயற்சியில் வாகனங்கள் மற்றும் சமையல் எண்ணெய்கள், மஞ்சள், டூத் பிரஷ்கள் உள்ளிட்ட பல பொருட்களின் இறக்குமதியை நிறுத்தியது. பருப்பு வகைகள், சர்க்கரை, கோதுமை மாவு, காய்கறிகள் மற்றும் சமையல் எண்ணெய் உள்ளிட்ட பல அத்தியாவசிய உணவு பொருட்களை இலங்கை இறக்குமதி செய்கிறது.

இது நெருக்கடியின் விநியோக பக்க பிரச்னை

பொருளாதார நெருக்கடியை எளிதாக்க தேவைக்கு மேல் கடந்த 18 மாதங்களில் இலங்கை மத்திய வங்கியால் 800 பில்லியன் ரூபாய் அச்சிடப்பட்டது. இது பொருளாதாரத்தில் பணப்புழக்கத்தை அதிகரித்துள்ளது. ஆனால், பணத்தின் இந்த உட்செலுத்துதல் மற்றும் அதற்கேற்ப விநியோகத்தில் அதிகரிப்பு இல்லாமல் தேவை அதிகரிப்பு, பணவீக்கத்தில் கூர்மையான அதிகரிப்புக்கு வழிவகுத்தது.

இது பணத்தை மதிப்பிழக்கச் செய்துள்ளது. இறக்குமதியை விலை உயர்ந்ததாக ஆக்கியது. கடனில் சேர்க்கப்பட்ட அந்நிய செலாவணி இருப்புக்களை அதிக அழுத்தத்திற்கு உள்ளாக்கியது.

அத்தியாவசிய பொருட்களின் விலையை நிர்ணயிப்பதற்கான அரசின் முடிவு, அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலைகளையும் மேலும் பாதித்துள்ளது. ஏனென்றால், வர்த்தகர்கள் உள்நாட்டில் சந்தைகளில் விற்பனையிலிருந்து வருமானம் கிடைக்கும் என்ற உத்தரவாதம் இல்லாமல் சர்வதேச அளவில் அதிக விலைக்கு வாங்க தயங்குகின்றனர். கூடுதலாக, அங்கே கட்டுப்பாட்டு இறக்குமதி உரிம ஆட்சி உள்ளது.

மற்றொரு அவசரநிலை, பழைய அச்சங்கள்

பொது பாதுகாப்பு அவசரச் சட்டம் (பிஎஸ்ஓ) சட்ட வரைவின் கீழ் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது. பொது பாதுகாப்பு அவசரச் சட்டத்தின் 2வது பிரிவின் கீழ் இரண்டு சூழ்நிலைகளில் அவசரகால நிலையை அறிவிக்க அதிபருக்கு அதிகாரம் அளிக்கிறது: ஜனாதிபதி அவ்வாறு செய்வது நல்லது என்று கருதும் போது a) பொது பாதுகாப்பு மற்றும் பொது சட்டம் ஒழுங்கை பாதுகாத்தல், அல்லது b) சமூகத்தின் வாழ்க்கைக்கு அத்தியாவசியமான பொருட்கள் மற்றும் சேவைகளை பராமரிப்பதற்காக அதிகாரம் அளிக்கிறது.

“ஆகஸ்ட் 30, 2021 அன்று அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டதன் மூலம், குடியரசுத் தலைவர் இப்போது எந்த விஷயத்தையும் எந்த நேரத்திலும் கையாளும் அவசரகால விதிமுறைகளை அறிவிக்க முடியும். இலங்கையின் வரலாற்றை அவசரநிலை, பிற பாதுகாப்பு தொடர்பான சட்டங்கள் மற்றும் அடக்குமுறையின் மரபு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, இது கடுமையான கவலைகளை எழுப்புகிறது”என்று கொழும்புவைத் தளமாகக் கொண்ட மாற்று கொள்கைக்கான மையம் ஒரு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும் அவசரச் சட்டம் புதுப்பிப்பதற்கக நாடாளுமன்றத்திற்கு எடுத்துச் செல்லப்பட வேண்டிய நிலையில், நாடாளுமன்ற மேற்பார்வை அல்லது ஒப்புதல் தேவையில்லாத விதிமுறைகளைக் கொண்டுவர அதிபருக்கு அதிகாரம் உள்ளது.

“இந்த அவசரகால விதிமுறைகள் மூலம் அசாதாரண அதிகாரங்கள் விதிமுறைகளால் அங்கீகரிக்கப்பட்ட குறிப்பிட்ட நோக்கங்களுக்காக முற்றிலும் பயன்படுத்தப்பட வேண்டும் என்பதை உறுதி செய்வதன் முக்கியத்துவம் நிர்வாகிகளுக்கு ஆணவத்தைக் கூட்டும்… கடுமையான நெருக்கடி காலங்களில் அரசாங்கத்திற்கான அசாதாரண அதிகாரத்தின் தற்காலிக ஒப்பந்தமாக அங்கீகரிக்கப்பட வேண்டும். இது ‘சாதாரண சட்ட ஆட்சிக்கு’ மாற்றாக கருதப்படக் கூடாது. எனவே, அவசரகாலச் சட்டம் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே அமலில் இருக்க வேண்டும்”என்று மாற்று கொள்கைக்கான மையத்தின் அறிக்கை கூறுகிறது.

“கருத்து வேறுபாடுகளை நசுக்குவது, சிவில் உரிமைகளை குறைப்பது மற்றும் இலங்கையின் அரசியலமைப்பு ஜனநாயகத்தை அச்சுறுத்துவது” என்று எதுவாக இருந்தாலும் அதை நாட்டின் குடிமக்கள் ஜனநாயக ரீதியாக எதிர்க்குமாறு அதை மாற்று கொள்கைக்கான மையம் கேட்டுக் கொண்டது.

2011ல் காலாவதியாகும் வரை இலங்கை தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் போது மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக அவசரகால நிலையில் இருந்தது; பின்னர் 2018ல் முஸ்லீம் எதிர்ப்பு கலவரத்தின் போதும் 2019ல் ஈஸ்டர் குண்டுவெடிப்புக்குப் பிறகு குறுகிய காலத்திற்கு அவசரகால நிலை இருந்தது.

இலங்கை நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவசரநிலை தேவையில்லை என்று வாதிட்டனர். ஏனென்றால், பதுக்கல் மற்றும் உணவு விலையை கட்டுப்படுத்துவதற்கு பிற சட்டங்கள் உள்ளன என்று வாதிட்டனர்.

அத்தியாவசிய சேவைகளின் ஆணையர் ஜெனரலாக பணியாற்றும் மேஜர் ஜெனரலை நியமிப்பது, சிவில் நிர்வாகம் புறக்கணிக்கப்படுகிறது என்ற கவலையை எழுப்பியுள்ளது.

உணவு நெருக்கடியின் நினைவுகள்

1970 களில் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க அரசாங்கத்தின் சோசலிச சோதனையின் போது அந்நாடு கடைசியாக உணவு நெருக்கடியை சந்தித்தது.

அரசாங்கத்திற்கு சொந்தமான சதொச மளிகைக் கடைகளுக்கு வெளியே காணப்படும் நீண்ட வரிசைகள் அந்த நாட்களின் “கப்பலில் இருந்து நேரடியாக மக்களுக்கு என்ற பொருளாதாரம்” பற்றிய நினைவுகளைத் தூண்டியது. கொழும்பின் தி சண்டே டைம்ஸ் ஒரு தலையங்கத்தில், “ஒவ்வொரு குடும்பத்திற்கும் வரையறுக்கப்பட்ட விலைமதிப்பற்ற ரேஷன் கார்டு அளிக்கப்பட்டதை நினைவு கூர்ந்தது. அரிசி, சர்க்கரை, மண்ணெண்ணெய், மாவு மற்றும் பருப்பு ஆகியவற்றின் மானிய அளவுகள்; ரொட்டி மற்றும் துணிக்கு நின்ற முடிவில்லாத வரிசைகள்; மற்றும் கடுமையான அந்நிய செலாவணி கட்டுப்பாடுகள் மற்றும் வெளியேறும் அனுமதிகள். மூத்த குடிமக்கள் தங்கள் உணவோடு அடுத்த கப்பல் வரும்வரை எப்படி ஆவலுடன் காத்திருக்க வேண்டும் என்பதை நன்றாக நினைவு கூரலாம்.” என்று குறிப்பிட்டுள்ளது.

மார்ச் மாதத்தில் ரசாயன உரங்கள் மீதான தடை, இனிமேல் நாடு இயற்கை உணவை மட்டுமே வளர்க்கும் என்று ஜனாதிபதி ராஜபக்சே அறிவித்தபோது, பற்றாக்குறை அதிகரிக்கக்கூடும் என்று விவசாய நிபுணர்கள் கூறியுள்ளனர்.

இந்த உரங்களின் இறக்குமதியில் அந்நியச் செலாவணியைச் சேமிக்கும் நோக்கத்தில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. ஆனால், திடீரென நடுத்தர பயிர் மாற்றம், மண்ணை போதுமான அளவு தயார்படுத்தாது ஆகியவை காய்கறிகள் மற்றும் அரிசியின் விளைச்சலை மோசமாக பாதிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Explained news here. You can also read all the Explained news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Sri lankas national food emergency debt burden

Next Story
டி 20 உலகக் கோப்பை: இந்திய அணியின் வெற்றிக்கு அறிவுரையாளர் தோனி எப்படி உதவுவார்?How will mentor Dhoni help India’s prospects at T20 World Cup; Explained in tamil
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com